Tuesday, December 28, 2010

சாருவைப் போல கமலும் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்!

சாருவின் மன்மதன் அம்பு விமர்சனம் எப்படி இருக்குமோ? என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஆமாம், சமீபத்தில் என் கணிப்பின்படி சாரு ஒரு "unpredictable critic"தான்! எந்தப்படத்தை எப்படி விமர்சிப்பார் இவருனு இவருக்கே தெரியுமா என்னனு தெரியலை. ஆமா சாருவின் ரசிகர்களுக்காவது தெரியுமா?னு கேக்கிறீங்களா? தெரியாட்டினாலும் தெரிஞ்ச மாதிரி நடிக்கத் தெரியும்!

சாரு ஒரு ஆத்திகவாதி என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்பவர். மனிதக் கடவுள்களையே வணங்கும் அளவுக்கு ஒரு Believer! நம்ம கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதி என்று தெரிந்து இருந்தாலும் , கமலஹாசன் என்கிற கலைஞனை என்றுமே சாரு மட்டம் தட்டியதில்லை.

ஆனால் இன்னைக்கு என்னடானா இந்துமதவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி, கமலை இறக்குகிறார், கண்டிக்கிறார். என்ன ஆச்சு இவருக்கு?

சாரு, எப்படிப்பட்டவர் என்று பார்பப்தைவிட, அவர் விமர்சனத்தில் என்ன சொல்கிறார்,
(இங்கே க்ளிக் செய்யவும்) அதில் உண்மை இருக்கானு பார்ப்போம்.

இன்னொரு வரி: ’காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட நின்றவன் உதவிட வேண்டும்’ இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெண் கடவுளை நோக்கி “சம்போகத்துக்குப் பிறகு உன் கணவர் உன் அந்தரங்க உறுப்பைக் கழுவி விடுகிறாரா?” இதே கேள்வியை கமல் மற்ற மதத்தின் கடவுள்களை நோக்கிக் கேட்பாரா? கடவுளை இழிவு படுத்தினால் கடவுளுக்கு ஒன்றும் நட்டமில்லை; ஆனால் அந்தக் கடவுளை வணங்கும் கோடானுகோடி மக்களை இழிவு செய்ததாகாதா? நாத்திக வாதம் என்பது மனித குலத்தின் மீதான அதீத அன்பினால் பிறப்பதே தவிர மனிதர்களை இழிவு படுத்துவதல்ல; பெரியார் செய்தார் என்றால் அவர் மனித இனத்தின் மீதான அன்பினால் செய்தார். மனிதர்களை இழிவு படுத்துவதற்காக அதைச் செய்யவில்லை. கமலோ மனிதர்களையும் மனித நம்பிக்கைகளையும் இழிவு படுத்துகிறார். மிகவும் கண்டிக்கத்தக்க செயல் இது.


திரு. சாரு நிவேதிதா புரிந்து கொள்ளவேண்டியது என்னனா..

கமல், செய்யும் இந்தச்செயலுக்குக் காரணம் (அதான்.. இந்து மதக்கடவுள்களை விமர்சிப்பது), தான் பிறந்த மதம் இந்துமதம், அதில் உள்ள குறைகளை விமர்சிக்க தனக்கு அதிக உரிமை இருக்கிறது, என்கிற எண்ணத்தில்தான் இப்படி விமர்சிக்கிறார். அதுவும் கமல் இந்து மதக்கடவுள்களை தாக்கி கவிதை எழுதும்போது அவர் மனதில் கொள்ளுவது இந்துமத வெறிபிடித்து அலையும் இந்து மதவாதிகளேயொழிய, அவர் சாடுவது ஒரு சாதாரண இந்துவையோ அவர்கள் நம்பிக்கையையோ அல்ல.

சினிமா என்கிற வியாபாரத்தில் கமல்ஹாசன் இந்த முட்டாள்த்தனத்தை இனிமேல் தவிர்க்கனும்...

நான் முன்பே சொன்னதுபோல கமலஹாசன் இந்துமதவாதிகளையும் இந்துத்தவாக்களையும் தாக்குவது, மெஜாரிட்டியான இந்துக்களின் நம்பிக்கையை கேலி செய்வது போல் முடியுது.. அதனால கமல் தலையில் அவரே மண் அள்ளிப்போட்டுக்கொள்வது போல ஆயிடுது. ஒரு வியாபாரி என்றுமே தன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை (மூட நம்பிக்கையையும்தான்) கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அவனைப் புறக்கணித்தால் அவன் பொழைப்பு அவ்வளவுதான். அதனால் நாதிகவாதி கமல்ஹாசனை தண்டிக்கவோ கண்டிக்கவோ வேண்டியதில்லை! கமல், தலையில் அவரே மண்ணள்ளிப்போட்டுக்கிறார்னு பரிதாப்படனும்.

ஏன் என்று தெரிய்லை மன்மதன் அம்பு பதிவுலகில் பல விமர்சகர்களிடம் (கமல் அபிமானிகளிடம் கூட) பயங்கர அடி வாங்கியுள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் அடி வாங்குவதால் காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான் இப்போ ஆயிடுச்சு என்றாலும், கமலுக்கு தானே அதிமேதாவித்தனம் செய்து இப்படி நம்ம படத்தை ஒப்பேத்திவிட்டோமா என்கிற எண்ணம் வரவே வராமலே போகலாம். அவரோட டைப் அப்படி!

சாருவைப்போல கமல் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்..


கமல் இந்தக்கவிதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் அது வேற விசயம். வெளியிட்டுவிட்டாரா? இல்லையா? இல்லைனா சாருவைப்போல ஒரு தளம் ஆரம்பித்து தன் கவிதைகளை வெளியிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் கமல் ஒரு பிரபலப் பதிவராகி இருப்பார் இன்னேரம்! அதை விட்டுப்புட்டு, இதுபோல் கவிதைகளை சினிமாவில் கலந்து இந்துக்களிடம் விற்க முயல்கிறார். அதுதான் கமல் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை அவர் தொடர்ந்து செய்யாமல் இருக்கனும்.

சமீபத்தில் கமல்ஹாசன் உ போ ஒ படத்தால் (இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல காட்டி) இஸ்லாமியர்களிடம் கெட்ட பெயர் வாங்கினார். எனக்குத் தெரிய ஒரு இஸ்லாமிய நண்பர், பெரிய கமலஹாசன் விசிறியா இருந்தவர், உ போ ஒ அப்புறம் கமலைப் பார்க்கும் விதமே மாறிவிட்டது. இப்போ அடுத்த படத்தில் இந்துமதக்கடவுளையும் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி பல இந்துக்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளார். அதனால மொத்தத்திலே இஸ்லாமியர்களோட சேர்ந்து இந்துக்களும் இவரை வெறுக்கும் அளவுக்கு வந்து நிக்கிது.

தயாரிப்பாளர்களே! தயவு செய்து உலக நாயகன் கமலை காப்பாத்துங்க...

அடுத்து கமலை வச்சு படம் எடுக்கிறவர்கள்தான் கமலையும் அவர் படத்தையும் காப்பாத்தனும்! எப்படினா...மொதல்ல படம் ஆரம்பிக்கும் முன்னாலேயே, இதுமாதிரி தேவையில்லாத மத சமமந்தமான வம்பை எல்லாம் கமல் விலைக்கு வாங்கக்கூடாது! அதையெல்லாம் (அவர் பகுத்தறியிற மேட்டரையெல்லாம்) கமல் அவர் வீட்டோட வச்சுட்டு வரனும் (ரிலிஜன் பர்சனல்னு இவர்தானே ஊருக்கு உபதேசம் செய்கிறார்?) னு கமலிடம் ஒரு அக்ரீமெண்ட் போட்டாத்தான் இவரை காப்பாத்த முடியும் போல இருக்கு! செய்வார்களா?

9 comments:

Philosophy Prabhakaran said...

// தான் பிறந்த மதம் இந்துமதம், அதில் உள்ள குறைகளை விமர்சிக்க தனக்கு அதிக உரிமை இருக்கிறது, என்கிற எண்ணத்தில்தான் இப்படி விமர்சிக்கிறார். அதுவும் கமல் இந்து மதக்கடவுள்களை தாக்கி கவிதை எழுதும்போது அவர் மனதில் கொள்ளுவது இந்துமத வெறிபிடித்து அலையும் இந்து மதவாதிகளேயொழிய, அவர் சாடுவது ஒரு சாதாரண இந்துவையோ அவர்கள் நம்பிக்கையையோ அல்ல. //

நீங்கள் போல்டு லெட்டர்களில் எழுதியிருக்கும் இந்த வரிகள் உண்மையிலேயே போல்டான கருத்துக்கள்...

உன்னைப்போல் ஒருவன் படத்திலும் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்லப்படவில்லை... தவறாக புரிந்துக்கொண்ட அந்த இஸ்லாமிய நண்பரின் நிலை பரிதாபத்துக்குரியது...

வருண் said...

***உன்னைப்போல் ஒருவன் படத்திலும் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்லப்படவில்லை... தவறாக புரிந்துக்கொண்ட அந்த இஸ்லாமிய நண்பரின் நிலை பரிதாபத்துக்குரியது...

28 December 2010 4:49 PM***

நீங்க சொல்றது புரியுதுங்க. நான் கண்டதைட்த்தான் சொன்னேன். மிகைப் படுத்தவில்லை! :(

Unknown said...

:-) வித்தியாசமான பார்வை சார்

குடுகுடுப்பை said...

+1

idroos said...

U.P.O islamiyarkalidam erichchalai aerppaduththiyadhu muttrilum unmai.

வருண் said...

***இரவு வானம் said...

:-) வித்தியாசமான பார்வை சார்

28 December 2010 9:43 PM**

நன்றிங்க, இரவு வானம் :)

வருண் said...

***Blogger ஐத்ருஸ் said...

U.P.O islamiyarkalidam erichchalai aerppaduththiyadhu muttrilum unmai.

29 December 2010 4:53 AM***

உங்க கருத்துக்கு நன்றிங்க,ஐத்ருஸ் :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த வலைத்தளத்திற்கு சாருபோல , மறுமொழிப் பொட்டியை மூடி வைப்பதும் நன்று.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த வலைத்தளத்திற்கு சாருபோல , மறுமொழிப் பொட்டியை மூடி வைப்பதும் நன்று.
29 December 2010 2:36 PM ***

:-)))