Wednesday, December 29, 2010

மிஷ்கின் என்ன கொஞ்சம் லூசா?

நட்பு என்பது என்றுமே நிரந்தமானது இல்லை என்பதே என் கணிப்பு, என் நம்பிக்கை என் அனுபவம். இன்றைய நண்பன், நாளை எதிரியாகிறானோ இல்லையோ நண்பனா இருக்கனும்னு அவசியம் இல்லை! அதுக்காக நட்பாயிருந்தபோது ஒருவர் தன் நண்பரிடம் அவரை நம்பிச் சொன்ன அவருடைய குடும்ப, பர்சனல் மேட்டர்கள் மற்றும் வீக்னெஸையெல்லாம் நட்பு முறிந்த பிறகு, "பழைய நண்பனை" ப்பத்தி எல்லாத்தையும் ஊரறியச் சொல்லி அவமானப்படுத்துவது படு மட்டமான செயல். மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் அதை செய்யமாட்டான்!

மிஷ்கின், சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து, புத்தகத்தை பத்தி "சரோஜாதேவி புத்தகம்" போலனு சொன்னது என்ன மாதிரியான ஒரு செயல்னு எனக்கு மொதல்ல தெரியலை. போஸ்ட் மாடெர்ன் எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தை விமர்சிப்பவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா இருக்கலாம். அவங்க (மிஷ்கின்) பேசுறதெல்லாம் நமக்கெங்க புரியப்போதுனு விட்டுட்டேன். சாரு நிவேதிதா அதற்ககாக இப்போ மிஷ்கினை பழிக்குப் பழிவாங்குவதால்தான் அது ஒரு "insulting remark" என்று எனக்குத் தெரிகிறது. நான் என்னவோ எனக்கு புரியாத வினோதமான "பாராட்டோ" என்ன "எழவோ"னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். சீரியஸாத்தாங்க சொல்லுறேன்!

சரி, மிஷ்கின் என்ன ஒரு மாதிரியான எக்ஸெண்ட்ரிக்கா (eccentric) இல்லை லூசா? ஒரு மேடையில், அந்த எழுத்தாளர் இருக்கும்போதே இதுபோல எப்படி அவர் எழுதிய ஒரு புத்தகத்தை காமெண்ட் அடிக்கலாம்? புத்தகத்தைப்பத்தி இவர் வேறு எங்கேயாவது விமர்சித்தால்க்கூட பரவாயில்லை. புக் ரிவியூ எழுதும்போது சொன்னால்க்கூடப் பரவாயில்லை. இப்படி அதை வெளியிடம் இடத்தில், மேடையிலே போய் நாலு நல்ல வார்த்தை சொல்லாமல் எவனாவது ஒரு கேவலமான "காமெண்ட்" கொடுப்பார்களா? எனக்கு உண்மையிலேயே புரியலை. மிஷ்கின்க்கு எங்கே என்ன பேசுறது எப்படிப் பேசுறதுனே தெரியாதா? அப்படிப்பட்ட ஒரு ஆளை என்ன எழவுக்குப்பா இதுபோல மேடையில் ஏத்துறீங்க? இல்லை உங்களுக்கே அந்தாளு லூசுனு தெரியாதா?

இப்போ சாரு, மிஷ்கினை என்னதான் அதைச்சொல்லி இதைச் சொல்லி கேவலப்படுத்தினாலும், மிஷ்கின் சொன்ன அந்த காமெண்ட்டை சாரு ஒருபோதிலும் அழிக்கவே முடியாது. "என்னை அவமானப்படுத்திட்டடா நீ! நான் உன்னை எவ்வளவு அவமானப்படுத்துறேன் பாரு! "னு இவர் செய்றவேலை சிறுபிள்ளைத்தனம்னு சொல்வதைவிட ஒரு மஹா மட்டமான ஒரு செயல்னு சொல்லனும்!

சாரு, ஒருவனுடைய தவறுகளை மன்னிக்கக் கத்துக்கிட்டா நல்லது. பழிக்குப் பழி வாங்குவதால் அவரை அவரே இன்னும் கொஞ்சம் இறக்கிக்கொள்வது போல தான்.

ஆமா, இதைக்கேக்க மறந்துட்டேன், ஒரு வேளை மிஷ்கின் குடிபோதையில் நிதானமில்லாமல் இதுமாதிரி எதுவும் உளறிவிட்டாரா? அப்படித்தான் என்றால், போதையில் உளறியதையெல்லாம் சாரு எதுக்கு சீரியஸா எடுத்துக்கிட்டு..

ஆக மொத்தத்தில் கேவலமா இருக்கு சாரு செய்கிற இந்த செயலும். ஆமா சாரு இப்போ என்னத்தை செஞ்சிட்டாருனு கேக்கனுமே? . இந்த தொடுப்பைப் பாருங்கப்பூ!

11 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இப்போ சாரு, மிஷ்கினை என்னதான் அதைச்சொல்லி இதைச் சொல்லி கேவலப்படுத்தினாலும், மிஷ்கின் சொன்ன அந்த காமெண்ட்டை சாரு ஒருபோதிலும் அழிக்கவே முடியாது. "என்னை அவமானப்படுத்திட்டடா நீ! நான் உன்னை எவ்வளவு அவமானப்படுத்துறேன் பாரு! "னு இவர் செய்றவேலை சிறுபிள்ளைத்தனம்னு சொல்வதைவிட ஒரு மஹா மட்டமான ஒரு செயல்னு சொல்லனும்!//

இதுவே என் கருத்தும், வெகுவிரைவில் சாரு- ராமகிருஸ்ணன், மனுச புத்திரன் லடாலும் அரங்கேறினாலும் ஆச்சரியமில்லை.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இப்போ சாரு, மிஷ்கினை என்னதான் அதைச்சொல்லி இதைச் சொல்லி கேவலப்படுத்தினாலும், மிஷ்கின் சொன்ன அந்த காமெண்ட்டை சாரு ஒருபோதிலும் அழிக்கவே முடியாது. "என்னை அவமானப்படுத்திட்டடா நீ! நான் உன்னை எவ்வளவு அவமானப்படுத்துறேன் பாரு! "னு இவர் செய்றவேலை சிறுபிள்ளைத்தனம்னு சொல்வதைவிட ஒரு மஹா மட்டமான ஒரு செயல்னு சொல்லனும்!//

இதுவே என் கருத்தும், வெகுவிரைவில் சாரு- ராமகிருஸ்ணன், மனுச புத்திரன் லடாலும் அரங்கேறினாலும் ஆச்சரியமில்லை.

29 December 2010 2:33 PM***

சாரு நிவேதிதா என்பவருக்கு என்ன தெரியுதோ இல்லையோ, நட்புனா என்னனே தெரியாத ஐந்தறிவு கொண்ட ஜந்துதான் இவர். தன் எழுத்துக்காக யாரை வேணா எப்படி வேணா விமர்சிப்பார்! எல்லாத்தையும் உதிர்த்தவனுகதான் இவரோட "நண்பரா" வேஷமிட்டுப் பழகுவார்கள்!

நசரேயன் said...

மாப்பள உங்களுக்குன்னே எப்படியும் ஆள் சிக்கிருதாங்க

வருண் said...

***நசரேயன் said...

மாப்பள உங்களுக்குன்னே எப்படியும் ஆள் சிக்கிருதாங்க
29 December 2010 4:40 PM ***

ஆமா,தள!

நான் செஞ்ச புண்ணியம் இல்ல! அவனுக செஞ்ச பாவம்! :)

Yoga.s.FR said...

எல்லாமே ஒரே குட்டை தான்,மட்டை தான்!

ADMIN said...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை..!

வருண் said...

***Yoga.s.FR said...

எல்லாமே ஒரே குட்டை தான்,மட்டை தான்!

29 December 2010 11:19 PM

-------------
Blogger தங்கம்பழனி said...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை..!

30 December 2010 12:12 AM***

தங்கள் கருத்துக்கு நன்றி, யோகா அண்ட் தங்கம்பழனி :)

குடுகுடுப்பை said...

நசரேயன் said...
மாப்பள உங்களுக்குன்னே எப்படியும் ஆள் சிக்கிருதாங்க

+1

பழமைபேசி said...

குடுகுடுப்பை said...
நசரேயன் said...
மாப்பள உங்களுக்குன்னே எப்படியும் ஆள் சிக்கிருதாங்க

+1+1

வருண் said...

***பழமைபேசி said...

குடுகுடுப்பை said...
நசரேயன் said...
மாப்பள உங்களுக்குன்னே எப்படியும் ஆள் சிக்கிருதாங்க
+1+1***

+1+1+1

Madurai pandi said...

சொல்வதற்கு
எனக்கும் ஒன்றும் இல்லை..