Wednesday, February 23, 2011

சின்னச் சின்ன அவமானங்கள்! (1)

"என்னடா ஸ்ரீகாந்த், ரொம்ப "dull" லா இருக்க?"

"பழைய ஃப்ரெண்டுடா! ரொம்ப நாள் தொடர்பு இல்லை. ஒரு வாரம் முன்னால ரெண்டு இ-மெயில் அனுப்பியும் பதிலையே காணோம். உயிரோட இருக்கானா இல்லையானு தெரியலை! இல்லைனா வேணும்னே பதில் அனுப்பலையானு தெரியலை"

"அவன் பேரென்ன?"

"எதுக்கு ஹிந்துவா, முஸ்லிமானு பார்க்கவா? அது எல்லாம் ரொம்ப அவசியமாடா?"

"ஏண்டா டேய்! பேரைத்தானே கேட்டேன்? சரி, உனக்கென்ன இப்போ திடீர்னு அவன்மேலே அக்கறை?"

"என்னனு தெரியலைடா. திடீர்னு பழைய நினைவுகள். ஒண்ணா பேசிய சில விசயங்கள்லாம் ஞாபகம் வந்தது. ஏதோ misunderstanding தான் தொடர்பு நின்னுச்சு ரொம்ப நாளானதுனால என்னனு சரியா ஞாபகம்கூட இல்லை. திடீர்னு just hi சொல்லனும்னு தோனுச்சு"

"நீ நிறுத்தினயா, அவனா?"

"நிச்சயம் நாந்தான்னு நினைக்கிறேன். It is more than a year now"

"இப்ப திடீர்னு நீ இ-மெயில் அனுப்பயியதும் அவன் பதிலனுப்பனும்? அப்படித்தானே?"

"Why not? ரெண்டு இ-மெயில்டா. I was his friend. Even now, I am his friend. I miss him!"

"May be he does not care about you any more. Does it hurt you?"

"Of course, such a thought hurts! ஆனால் as long as he is healthy and doing good..I am happy for him!"

"If he does not care about you anymore, why do you care?"

" I dont know why. நமக்கு வாழ்க்கையில் எத்தனை நல்ல நண்பர்கள் கெடைக்கிறாங்க? Not that many, right? "

"இந்தா பாரு! It is not always about you, Srikanth? "

"என்னடா சொல்ற?"

"நாளுக்கு நாள் எல்லாரும் மாறிக்கொண்டேதான் இருப்பாங்க. உன்னைவிட நல்ல நண்பர்கள் அவனுக்கு கெடச்சு இருக்கலாம். நீ எதுக்கு அப்புறம்? நீதான் உலகத்திலேயே best ஆ?"

"that is insulting.."

"அதான் காரணம்னு நான் நெனைக்கிறேன்."

"ஏன்டா ரஹீம், வாழ்க்கையில்தான் நமக்கு எத்தனை சின்னச் சின்ன அவமானங்கள்! ?"

"என்ன திடீர்னு தத்துவம்?"

"இல்லை யோசிச்சுப் பார்த்தேன். நம்ம சிறுவயதிலிருந்து எத்தனை அவமானங்களை சந்திச்சு இருக்கோம்னு. சின்னச் சின்ன தலைகுனிவுகள்..இன்று நெனச்சு வெட்கப்படும் அளவுக்கு செய்த சிறு தவறுகள்.. எல்லாரும் நம்மைப் பார்த்து சிரித்து கேலிபண்ணிய தருணங்கள்.."

"ஆரம்பிச்சுட்டியா?"

"எனக்கு ஒரு விசயம் சொல்றியா? நீ எல்லாம் எப்படிடா இது மாதிரி எதிலும் மாட்டாம இருக்க?"

"யார் சொன்னா?"

"இல்லை ஒரு நாளும் என்ன மாரிப் பொலம்பிப் பார்த்ததில்லையே!'

"I think we all get insulted like that now and then. That is life. I just dont think about it. That's all."

"சொல்லேன் எதாவது?"

"சொல்லனும்னா அந்த அவமானத்தை மனதில் கொண்டு வரனும். என் mood spoil ஆகும். I do think about such incidents sometimes"

"When?"

"ஏதாவது மோசமான moodல இருக்கும்போது.."

"Really?!"

"ஆமடா ஏதாவது மோசமான moodல இருக்கும்போதுதான் இது மாதிரி நினைவுகள் வந்து தொலைக்கும்!"

"என்னவோ போ! அவன் எங்கிருந்தாலும் வாழ்க!"

"விட்டுத் தொலைடா அவனை! "

12 comments:

பழமைபேசி said...

//சின்னச் சின்ன அவமானங்கள்! //

எந்த சின்னத்துக்குன்னு தெரியலையே? இரட்டை இலைக்கா? உதய சூரியனுக்கா?? கை?? மாங்கனிதான் கனிஞ்சு நிக்கிது...

ILA(@)இளா said...

better type in English for English words, that will be easy, PLZ

வருண் said...

OK ila, it is done! :)

நம்ம மணியண்ணா ஏதாவது பிரச்சினையைக் கிளப்புவாரு இப்போ! :)

என்னையா தமிழையே காணோம்னு! :)

கயல்விழி said...

Please check your email, Mister

வருண் said...

OK, I will do so, kayal! Hey! Thanks for stopping by! :)

பழமைபேசி said...

தளபதி, நமக்குத்தான் இல்லைங்றாய்ங்க!!

நசரேயன் said...

//தளபதி, நமக்குத்தான்
இல்லைங்றாய்ங்க!!//

ஆமாண்ணே .. வருண் எங்களையும் கவனியுங்க

வருண் said...

***பழமைபேசி said...

//சின்னச் சின்ன அவமானங்கள்! //

எந்த சின்னத்துக்குன்னு தெரியலையே? இரட்டை இலைக்கா? உதய சூரியனுக்கா?? கை?? மாங்கனிதான் கனிஞ்சு நிக்கிது...

23 February 2011 11:26 AM***

நம்ம விசயகாந்து சின்னத்த விட்டுப்புட்டீக!!இதெல்லாம் அநியாயம் :)

வருண் said...

***பழமைபேசி said...

தளபதி, நமக்குத்தான் இல்லைங்றாய்ங்க!!

23 February 2011 1:14 PM***

நான் இல்லைனு எப்போ சொன்னேன்? ஃபெட்னாவுக்கு வரும்போது உங்க கைலயே கொடுத்துட்டுறேன் :)

வருண் said...

***நசரேயன் said...

//தளபதி, நமக்குத்தான்
இல்லைங்றாய்ங்க!!//

ஆமாண்ணே .. வருண் எங்களையும் கவனியுங்க

23 February 2011 2:23 PM***

:)))

பழமைபேசி said...

//ஃபெட்னாவுக்கு வரும்போது//

அவசியம் வந்துடுங்க... Charleston, SC... கடற்கரை நகரம்... அப்புறம் உங்க நண்பர் இளைய தளபதியும் வர்றாரு... வாய்க்கா, வரப்பெல்லாம் நேர்லயே வெச்சுக்குலாம்...

லதானந்த் said...

கயல்!
மறப்பது அத்துணை எளிதான செயலா?