Monday, February 7, 2011

சாருவை ஹீரோவா வச்சு மிஸ்கின் படம் எடுத்தால்?

பதிவர் ஆர் கே சதீஷ்குமாருடைய சமீபத்திய சாதனை என்னனா, சாருவுடைய நல்மதிப்பைப் பெற்று ரொம்பப் பிரபலமாகிவிட்டார். அது எப்படி நன்மதிப்பை பெறுவது? அதுக்கு நீங்க தரமான ஒரு நாவல் எழுதனும்னு இல்லை! தரமான கட்டுரை எழுதனும்னும் இல்லை! ஒரே சிம்ப்பிள் ஃபார்முளாதான்! சாருதான் தமிழ்ல இன்னைக்கு தலைசிறந்த இலக்கியவாதி! சாரு இல்லைனா தமிழ் எப்போவோ செத்து இருக்கும்னு ஒரு புளுகு புளுகி ஒரு ஜால்ராப் பதிவு போடனும்! அம்புட்டுத்தான்!

பதிவுலகில் எப்படி வாழ்றது,வாழத்தெரியாத மக்குப் பதிவர்கள் எப்படி சாகிறாங்கனு எல்லாம் தெரிந்த இவருக்கு, சாருக்கு ஜால்ரா அடிக்கத் தெரியாதா என்ன?

இவர் எழுதிய பதிவைப்போல் சமீபத்தில் யாருமே இப்படி ஒரு தலைசிறந்த சாரு ஜால்ராப் பதிவு எழுதலை! அன்பர் சாருவும் மனம் குளிர்ந்து, உருகி, வழக்கம்போல் பெரியமனசுடன் இவர் பதிவை அவர் தளத்தில் "சைட்" (தொடுப்பு கொடுத்து) பண்ணிவிட்டார். இவரும் அதுக்கு நன்றி சொல்லி இன்னொரு ஜால்ராப்பதிவு போட்டுவிட்டார்! :)

இதில் இன்னொரு விசயம் என்னனா திடீர்னு மிஸ்கின் என்கிற ஒரு ஆளு தமிழ் சினிமாவை பாழ் படுத்துறான், அவன் ஒரு ஒரிஜினாலிட்டி உள்ள கலைஞனே இல்லைனு ஆர் கே சதீஷ்குமார் கண்டுபுடிச்சுப்புட்டாரு! அதுமட்டுமல்ல, சாருவுடைய தேகம் நாவல் இவரு இன்னும் படிக்கலையாம்! படிக்கலைனாலும் அது உலகத்தரம் வாய்ந்ததாகத்தாக்கும் னு கண்டுபிடிச்சுட்டாரு மனுஷன்!

குமுதத்தைப் பத்தி திட்டித் திட்டி எழுதிய சாருவும் குமுதமும் சமரசமாகப் போனது போல, நாளைக்கு மிஸ்கின் சாருவுக்கு ஏற்ற ஒரு ஹீரோ ரோலை உருவாக்கி, பழசை எல்லாம் மறந்துடுவோம்னு சொல்லி சாருவை வச்சு ஒரு படம் இயக்கினால், ஆர் கே சதீஷ்குமார் என்ன செய்வாரு? அதெல்லாம் நடக்காதா? ஒருவேளை அப்படி நடந்தால் பதிவுலகை விட்டு ஓடிருவாரோ? இல்லைனா சாருவுடைய மன்னிக்கும் குணத்தைப் பாராட்டி இன்னொரு ஜால்ராப்பதிவு போட்டு, மிஸ்கினை இன்னொரு முறை அனலைஸ்ப் பண்ணி உன்னதக் கலைஞனாக்கிவிடுவாரா? நமக்கெப்படி இதெல்லாம் தெரியும்? அவருக்குத்தான் தெரியும்!

என்னவோ போங்கப்பா! வரவர இந்த மாதிரி ஜால்ராப் பதிவுகளைப் பார்த்தாலே எரிச்சலாத் தான் இருக்கு!

திரு ஆர் கே சதீஷ்குமார் அவர்கள் பதிவர்கள் செய்யும் 10 தவறுகளோட சேர்த்து, சாரு ஜால்ராப் பதிவையும் அப்பப்போ போடலைனா அது பெருந்தவறுனு 11 வதா ஒரு பாயிண்டு ஒண்ணும் போட்டு இருக்கலாம்!

விரைவில் வரப்போகிற தேகம் பற்றிய இவருடைய விமர்சனம் படிக்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். புக் வாங்கிட்டாரா இன்னும் கெடைக்கலையானு தெரியலை! :(

2 comments:

பழமைபேசி said...

தளபதி, அப்பவும் காசை வெளில எடுக்க மாட்டார்னு நான் நம்பலை!

வருண் said...

வர வர உங்க பின்னூட்டம் என் பதிவை திரும்ப என்னையே வாசிக்க வைக்குது. இதுவும் ஒரு திறமைதான் மணீயண்ணா! :))))