Tuesday, February 15, 2011

தன் மகளுக்காகத்தான் ரஜினியின் இந்த ராணா வா?


ரஜினியின் சம்பளம் ஒரு 30 கோடி அல்லது 35 கோடி இருக்குமா? அதெல்லாம் இண்கம் டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட்க்குத்தான் தெரியும். ரஜினி கோடி கோடியா தமிழர்கள் பணத்தை கொள்ளையடிச்சு வச்சு இருக்கார்னு ஒரு சில குற்றச்சாட்டுக்களை ஓரமா வச்சுட்டு, இன்னைக்கு நிலைமைக்கு ரஜினி நிலைமையைப் பார்ப்போம். இன்னைக்கு ரெண்டு வருடத்துக்கு ஒரு படம் ரஜினி பண்ணுவதால் விஜய், தனுஷ், சூர்யா ஒரு வருடத்துக்கு சம்பாரிக்கிற அளவுதான் ரஜினியும் ஒரு நடிகனா சம்பாரிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்னு ஒர் பேரு இருந்தாலும் நடிகனா வருமானம் என்பது ஒண்ணும் அள்ளி கொட்டப்போவதில்லை. ரஜினிக்கு வயது 60க்கு மேலாகிவிட்டதால் அதுவும் இன்னும் சில வருடங்களில் முடியாது.

இதற்கிடையில் அவரு ரெண்டாவது பொண்ணு என்ன பண்ணுறார்னு தெரியலை. சமீபத்தில் ஏதோ பணப்பிரச்சினைனு (எதோ செக் பவுண்ஸ் ஆனதாக) எல்லாப் பத்திரிக்கையில் வருமளவுக்கு கவனக்குறைவா இருந்து இருக்கமாதிரி இருக்கு. அதுபோக சுல்த்தான் த வாரியர் படத்தில் எவ்ளோ இண்வெஸ்ட் பண்ணினார்னு தெரியலை. இவர் "விளையாட்டு" முயற்சிக்கு விலை 10 கோடியா இருந்தாலும் படம் வெளிவந்தாத்தான் போட்ட காசையாவது எடுக்க முடியும். இதுபோல் கார்டூன் படங்களெல்லாம் எடுபடுமா?னு தெரியலை. இன்னும் அந்தப்படம் முடிந்த பாடில்லை. வீணாப்போன "கோவா" வும் ஒண்ணும் பெருசா வெற்றியடையவில்லை!

எந்திரனுக்கு அப்புறம் ரஜினி நடிக்கிறதை நிறுத்திவிடுவார்னு எதிர்பார்க்கப்பட்டது. நான் நிச்சயம் எதிர் பார்த்தேன். ஆனால் இப்போ ராணா அறிவிப்பைப்பார்த்தால், ரஜினி இப்போதைக்குள்ள நடிக்கிறதை நிறுத்தப்போவதில்லை போல இருக்கு. எந்திரனிலோ, சிவாஜியிலோ பி அண்ட் சி செண்டர் தியேட்டர் ஓனர்கள் சந்திரமுகி அளவுக்கு சம்பாரிச்ச மாதிரியும் தெரியலை. எந்திரன் படத்தில் 43 கோடி சன் நெட்வொர்க் சம்பாரிச்சதா கணக்குக் காட்டி இருக்காங்க. அவங்க ஒரு வழியா தப்பிச்சாங்க, ஷங்கர் கனவை நனவாக்கியதுடன்! படம் வெளியிட்ட ஒரு சில தியேட்டர் ஓனருக்கு நஷ்டம்கூட வந்து இருக்கலாம்.

இப்போதுள்ள நிலையில், ராணாவையும் சந்திரமுகி போலே ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுத்தால்தான் எல்லோரும் சம்பாரிக்க முடியும். பொதுவாக லோ பட்ஜெட் ரனினி படம் விழுந்தாலும் போட்ட காசை எடுத்து விடுவார்கள்- இதுவரைக்கும். இனிமே எப்படினு தெரியலை.

இப்போ, ரஜினி, சுல்த்தான் த வாரியரை (ஹாரா?)முடிக்கமுடியாமல் இருக்கும் தன் மகளுக்கு உதவி செய்வதற்காக இந்த வயதில் அடுத்த படம் பண்ணிக்கொடுக்க முடிவு செய்திருக்காரோ என்னவோ.

ராணா..கே எஸ் ரவிக்குமார் இயக்கம். தீபிகா படகோன் ஹீரோயின், ஏ ஆர் ரகுமான் இசைனு சொல்றாங்க! நிச்சயம் இது ஒரு சுமார் 40 கோடி பட்ஜெட் படமாத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். சந்திரமுகி போலே க்ளிக் ஆச்சுனா தியேட்டர் ஓனர்கள் அள்ளலாம்! இல்லை சுமாராப் போச்சுனா, எந்திரனுக்கு மாதிரி பெட்டிக்கு பெரிய தொகை கொடுக்காமல் வாங்கினால், நிச்சயம் இலாபம் வரும் என்பதுதான் இங்கே கணக்கு.

இந்த ராணா படம் பலர் சொல்வதுபோல சவுந்தர்யா தயாரித்தால், ரஜினி இந்தப்படம் செய்வதே தன் மகளுக்கு பண உதவி செய்யத்தான் (கல்யாண சீர் கொடுக்க?) னுதான் தோனுது. பார்க்கலாம், உண்மை என்னனு போகப்போக!

2 comments:

மதுரை சரவணன் said...

appadiyaa... pakirvukku nanri. vaalththukkal

வருண் said...

வாங்க, சரவணன்! :)

சுல்த்தான் த வாரியர் "எடுக்க" ஆரம்பிச்சு ரொம்பக் காலமாச்சுங்க! அது ஒழுங்கா ஷேப் அப் ஆகலைனு தோனுது