Monday, February 28, 2011

எனக்கும் தெரியும்! அவனுக்கும் தெரியும்!

"என்ன செல்வம் உன் சீனியர் சம்பத்தோட சுத்தமாப் பேசுறதில்லையா?"

"ஆமாங்க, அளவாத்தான் பேசிக்கிறது. அவரு குணம் நமக்கு ஒத்து வராதுனு ஒதுங்கிக்கிட்டேன். என் கலீக், ரஞ்சனியும் அவரும் எந்நேரமும் ஒண்ணா வேற சுத்திக்கிட்டு இருக்காங்க."

"ஆமா ரஞ்சனி வந்து உன் lab ல சேர்ந்ததும் 24 மணி நேரமும் அவன் அவ பின்னாலதான் சுத்துறான் சம்பத்!"

"ஒரே labல என்னை மாதிரி "கலீக்" கா இருந்தா அதைவிட தொல்லைதான். இவங்க பாடுற டூயட்டுக்கு நடுவிலேனு நம்ம எதுக்குனு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். நைட் நேரம் அந்தப் பக்கமே போறதில்லை. என்னென்னவோ நடப்பதா சொல்லிக்கிறானுக..பாதிக்கு மேலே புரளியாவும் இருக்கலாம் "

" சம்பத் என்னவோ உன்னைபத்தி வேறமாதிரி சொல்லிக்கிட்டு திரிகிறான்?"

"என்ன சொல்றீங்க, இளங்கோ?!"

"நீ இப்போ பண்ணுகிற ப்ராஜெக்ட் அவனோட ஐடியாவாம். அதை நீ திருடி பண்ணிட்டனு. அதனால்தான் நீ அவரோட பேசுறதில்லைனு சொல்றான் சம்பத்."

"இதென்ன புதுக்கதை? அவர் ஐடியானா அவர் ஏன் பண்ணலையாம்? நான் பண்ற ப்ராஜெக்ட் அவர் ப்ராஜெக்ட்க்கு ஓரளவு ரிலேட்டெட் தான் ஆனால் இது என்னுடைய ஒரிஜினல் ஐடியாங்க! என் பாஸே நான் பண்ணுறக்கு ஓ கே சொல்லிட்டாரு! இதுல இவரு என்ன?"

"உனக்கு ஒண்ணுமே தெரியாதா?"

"என்ன சொல்றீங்க?"

" இண்ஸ்டிடூட் முழுவதும் நீ அவன் ஐடியாவை திருடிவிட்டதாவும் அதனாலதான் நீ அவனோட பேசுறதில்லைனும் சொல்லிக்கிட்டு திரிகிறான், சம்பத்! இண்ஸ்டிடூட் முழுவது உன் பேரு நாறிப்போச்சு"

"போய் நாய் மாதிரி கொரைச்சிக்கிட்டு திரியட்டும்"

"ஏய் ஏன்ப்பா இப்படி திட்டுற?"

"பின்ன என்னங்க, நம்ம எல்லாம் பார்ப்பணர்களை எதுக்கெடுத்தாலும் திட்டுறோம். இதுபோல் பொய்சொல்லிக்கிட்டு திரிகிற ஈனப்பயலுகளும் நம்மில் இருக்கானுக . இவன் பண்ண முடியாத/ இவனுக்கு வராத ஐடியால நம்ம பண்ணிட்டா உடனே இவன் ஐடியாவை திருடியதா சும்மா பொய் சொல்லிக்கிட்டு திரிகிறான் அந்த ஆளு! என்ன இப்படி ஒரு ஈனத்தனமான ஈகோ இவனுக்கு! இவன்லாம் ஒரு ஆளு!"

"நீ சொல்ற விசயம் எனக்கு மட்டும்தான் தெரியும்! அப்போ நீ ஏன் ஆவனோட பேசுறதில்ல?"

"நான் இந்த வொர்க் ஆரம்பிக்க முன்னாலேயே ரொம்ப நாளா இந்தாளோட தேவையில்லாமல் பேசுவதில்லை! என்னங்க இந்தாஅளுக்கு மிருகத்தனமாக் கோவம் வருது."

"அவன் ரொம்ப short-tempered தான்! அதுமட்டும் எல்லாருக்கும் தெரியும்"

"இதைக் கேளுங்க, ஒரு நாள் இந்தாளோட நட்ராஜ்ல ஒரு தமிழ்ப்படம் பார்க்கப்போனோம். கொஞ்சம் லேட்டாத்தான் நாங்க போனோம் படம் போட்டுட்டான்.! இடம் தேடி இருட்டுல உட்கார தடவித் தடவி உக்காரப்போகும்போது பின்னால உள்ளவன் "உக்காருயா மறைக்கிது" னு கத்தினான். படம் மறைச்சா அவன் கத்தத்தான் செய்வான்! அவனை இவரு "செருப்பால அடிப்பேன்! பேசாமல் மூடுடா" ங்கிறார்!. எதுக்கு? படத்தை மறைக்கிற உக்காருனு சொன்னதுக்கு?"

"படம் மறைச்சா கத்தத்தான் செய்வான்."

"சரி, அதுக்காக செருப்பால அடிப்பேன்னா சொல்றது? கொஞ்சமாவது என்ன பேசுறதுனு தெரிய வேண்டாம்? அவன் ஒரு கூட்டமா கோஷ்டியா வந்திருந்தால் என்ன நடந்து இருக்கும்னு தெரியலை! இது மாதிரி எங்க ஊர்ல எவனிடமாவது செருப்பால அடிப்பேன்னு சொல்லியிருந்தால் அடிச்சு கொன்னேபுடுவானுக! He has an extremely bad temper! இதுமாதிரி வார்த்தையை விட்டால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் எவனிடமாவது இந்த ஆளு அடிவாங்கி சாக வேண்டியதுதான். இதுபோல ஒரு சில இண்ஸிடெண்ட்ஸ் பார்த்ததும்தான் நான் இவனிடம் இருந்து ஒதுங்கினேன். நானும் சொல்லிப்பார்த்தேன் உங்க மேலேதான் தப்புனு . அந்தாளு கேக்கிற மாதிரி இல்லை. நேத்து வந்த நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கிறது? ங்கிற ஒரு மாதிரி "டோன்" மாறுச்சு. நான் இவன் சகவாசம் நமக்கு ஒத்துவராதுனு பேசாமல் ஒதுங்கிக்கிட்டேன்."

"சரி, அவன் உன்னைப்பத்தி சொல்றது பொய்னு சொல்றியா? அப்போ அது பொய்யினு உனக்கும் எனக்கும்தான் தெரியும்!"

"அந்த ஆளுக்கும் தெரியும்! இது என் ஐடியானு! ஊருக்குத்தான் எதையோ சோடிச்சு சொல்லிக்கிட்டு இருக்கான்! அவன் மனசாட்சிக்குத் தெரியும். This is not his fucking idea!"

"என்னவோ போ. ஆனா, சம்பத் ஒரு bright guy னு எல்லாருக்கும் தெரியும்."

"அதனாலென்ன இப்போ?"

" அவன் சொன்ன பொய்தான் உண்மை என்றுதான் எல்லாரும் நம்புறானுக! நீ சொல்றதாலே நான் நம்புறேன்!"

"நீங்களும் நம்பலைனாலும் பரவாயில்லைங்க! எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நம்புறீங்க?"

"நான் அப்படி சொன்னேனா, செல்வம்?"

" இது என்னோட ஐடியானு எனக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும்! இந்த வொர்க்கை நல்ல இண்டர்நெஷனல்ல ஜேர்னலில் பப்ளிஷ் பண்ணியாச்சு ! நம்புறவன் நம்பட்டும்! I don't have any guilty feelings. That is all I care! இவன் ஊரெல்லாம் கொற அழுகை அழுது ஒப்பாரி வைக்கட்டும்!"

4 comments:

எல் கே said...

புனைவு ???

Robin said...

//"நீங்களும் நம்பலைனாலும் பரவாயில்லைங்க! எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நம்புறீங்க?"/ :)

வருண் said...

***எல் கே said...

புனைவு ???

28 February 2011 6:20 PM***

வாங்க எல் கே. ஆமாங்க புனைவுதான். சில உண்மையில் நடந்ததையும் வச்சு புனைந்தது :)

வருண் said...

***Robin said...

//"நீங்களும் நம்பலைனாலும் பரவாயில்லைங்க! எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நம்புறீங்க?"/ :)

28 February 2011 7:02 PM***

We should never go and beg someone to believe us! Our conscience is more important. :)