Thursday, February 3, 2011

அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட விஜய்!

சமீபத்தில் காவலன் ப்ரமோஷன்க்கு, ஜெயா டி வி ல, அசின்-விசை நேர்முக ஒளிபரப்பில் வந்தபோது யாராவது அசினை கவனிச்சீங்களா? ஏதோ இருளடிச்ச மாதிரி உக்காந்து இருந்தார், அசின். காரணம்? "தயவு செய்து என்னை எதுலயும் மாட்டி விட்டுறாதீங்க" "எனக்கும் காவலன் ரிலீஸ் பிரச்சினைக்கும் சம்மந்தம் இல்லை" னு அசின் விஜயிடம் தெளிவாக சொல்லிவிட்டார்னு தோனுச்சு. அதனால இந்தப் பிரச்சினையை விஜய் வாயிக்குள்ளேயே மென்னு முழுங்குவது அழகாத் தெரிந்தது.

காவலன் படம் ரிலீஸ்ப் பண்ணி ஓடி முடிந்துவிட்ட நிலையில் இப்போ விகடன் பேட்டியில் ஆளுங்கட்சி மற்றும் தி மு க வை தன் காவலன் பிரச்சினைகளுக்கு முழுக்காரணம்னு நேரிடையாக குற்றம் சாட்டியுள்ளார் விஜய்.

ஏன் இவருக்கு பிரச்சினை கொடுக்கிறாங்க? அதாவது விஜயாகிய நான் அரசிலில் இறங்கி பெரிய ஆளாயி கிழிச்சுடுவேன்னு ஆளுங்கட்சி பயப்படுறாங்கனு சொல்லி தன்னைத்தானே பெரிய ஆளாக்கி பீத்தி இருக்கார் இந்தக் குட்டி எம் சி ஆர்.

எம் சி ஆர், ஜெயா, விசய் காந்து வரிசையில் தன்னையும் சேத்து தனக்குதானே பெருமை சேர்த்து இருக்கார் இன்றைய அரசியல்வாதி விஜய்!

இதையெல்லாம் பார்த்து எம் சி ஆர் ஆவியா வந்து "என்னப்பா இதெல்லாம்? என்னை உன்னோட சேர்த்து கேவலப்படுத்துற?" னு வருத்தப்பட்டுட்டுப் போனாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை!

அதோட விடல, "இதுபோல் தான் குற்றம் சாட்டியதால என் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம்"னு சேர்ந்து விட்டு இருக்கார். இந்த ஒரு ஸ்டேண்ட்மெண்ட்டே இவர் அரசியல் சாக்கடையில் விழுந்து, தமிழ்நாட்டை சுத்தம் செய்ய தயாராகிவிட்டதை அழகாக் காட்டுது.

திடீர்னு இவருக்கு எப்படி வீரம் வந்துச்சுனா.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அது இதுனு ஆகி திமுக ஆட்சி முடியப்போது, இனிமேல் தி மு க செத்த பாம்புதான்..அடுத்த ஆடசி நம்ம அம்மாதான் என்கிற நம்பிக்கையில் இருக்கார் விசயும் அவர் அப்பாவும்.

சரி, தி மு க தோத்து அம்மா ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்னு விஜயும் அவர் அப்பாவும் நம்புறாங்கனு பார்ப்போம்.

* இனிமேல் விஜய் படங்கள் எல்லாம் (குப்பையா இருந்தாலும்) 175 நாள் ஒரு 100 திரையரங்குகளில் ஓடும். தி மு க தான் இனிமே இவர் படம் ஓடுறதை தடுக்க முடியாதே!

* அம்மாவே தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விசய் தான்னு எல்லாருக்கும் சொல்லி கூடிய சீக்கிரம் விசையை முதல்வராக்கிவிடுவார். அப்போ அம்மா என்ன செய்வார்? அவரு விசையை சி எம் ஆக்கிவிட்டு இவர் அப்பா உதவியுடன் தன்னை பி எம் ஆக்க முழு மூச்சா முயற்சியில் இறங்கி வெற்றியும் அடைவார்!

* எம் சி ஆர்க்கு அப்புறம் இந்த குட்டி எம் சி யார் உங்களுக்கும் ஏன் எனக்கும்கூட "தலைவர்"னு அம்மா மேடை மேடையாப் போயிச் சொன்னாலும் அதிசயப்பட ஒண்ணும் இல்லை!

* ஆக, அரசியல் சாக்கடையில் விழுந்த விஜயும் அவர் அப்பாவும் அ தி மு க ஆட்சியின் போது நீந்தி நீந்தி அதில் உள்ள அழுக்கையெல்லாம் மீன்களை போல சுத்தப்படுத்தி தமிழ்நாட்டை பெருசா முன்னேத்திடுவாங்க!

இதெல்லாம் நடக்கப்போவதாக கனவு காண்கிறாங்க!

-----------

ஆனால் உண்மையில் தி மு க தோத்து அம்மா ஆட்சிக்கு வந்தால் எதையும் கிழிக்க முடியாது! தி மு க திரும்ப ஆட்சிக்கு வந்தால்தான் விஜய் அரசியல் கனவுக்கு நல்ல காலம் பொறக்கும்!

* அப்போத்தானே, தன் படம் விழுந்தாலும் தி மு கவை கொறை சொல்லியே தன் அரசியல் நாடகத்தை இதே மாதிரி எம் சி ஆர், ஜெயா, கேப்பிட்டனுனு சொல்லித் தொடரலாம்?

* சப்போஸ், கார்த்தி, சூர்யா, தனுஷ் படங்களோட மோதி தன் படம் படுத்தால் யாரை குறை சொல்லுவார் விசை, பாவம்? ஆட்சியில் இருக்கும் அம்மாவையா? அப்படி செய்தால் எல்லாரும் இவரை லூசைப் பார்ப்பதுபோல பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க இல்லையா?

ஆக, இந்த எலக்ஷனில் தி மு க வெற்றியடைந்தால்தான் விஜய், அரசியல் சாக்கடையில் இன்னும் நல்லா நீந்த முடியும்! அதனால் விசய் ரசிகர்கள் எல்லாம் தி மு க வுக்கு ஓட்டுப்போட்டு மறுபடியும் தி மு கவை "மைனாரிட்டி கவண்மெண்ட்டாகவாவது" ஆட்சிக்கு கொண்டு வந்து, "என் படத்தை ரிலீஸ் பண்ண ஆளுங்கட்சி விடலை இல்லைனா என் படம் ஓடிக்கிட்டே இருக்கும்"னு சொல்லி கொறைஅழுகை அழுது ஒப்பாரி வச்சு எப்படியாவது விசயை அடுத்த முதல்வராக்கிப் புடுங்கப்பா!

8 comments:

ஹாய் அரும்பாவூர் said...

எல்லாம் தமிழ்நாட்டின் தலை எழுத்து மக்களுக்கு உதவி செய்வதை விட தன நலனை நாடும் நடிகர்கள் இவர்கள்

Philosophy Prabhakaran said...

நேற்றிரவு கலைஞர் டிவியில் விஜய் தோன்றினார்... பார்க்கவில்லையா...?

நசரேயன் said...

//எப்படியாவது விசயை அடுத்த
முதல்வராக்கிப் புடுங்கப்பா//

சரி மாப்ள

வருண் said...

***ஹாய் அரும்பாவூர் said...

எல்லாம் தமிழ்நாட்டின் தலை எழுத்து மக்களுக்கு உதவி செய்வதை விட தன நலனை நாடும் நடிகர்கள் இவர்கள்
3 February 2011 12:34 PM ***

இவரு சினிமால நடிக்க வந்ததே தேசத் தொண்டு செய்யவாம்.

ஆனால் வெக்கேஷனுக்கு மட்டும் "லண்டன்" தான் போவார். ஏன் ஆண்டிப்பட்டிக்கு போக வேண்டியது தானே?

வருண் said...

***Philosophy Prabhakaran said...

நேற்றிரவு கலைஞர் டிவியில் விஜய் தோன்றினார்... பார்க்கவில்லையா...?

3 February 2011 2:10 PM***

அப்படியா?!! அரசியல் சாக்கடையில் இறங்கி இருக்கும் வருங்கால முதல்வரை பார்க்காமப் போயிட்டேனே! :(

Chitra said...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ........ முடியல.....

வருண் said...

***நசரேயன் said...

//எப்படியாவது விசயை அடுத்த
முதல்வராக்கிப் புடுங்கப்பா//

சரி மாப்ள

3 February 2011 2:46 PM***

வாங்க தளபதி! :)

வருண் said...

***Chitra said...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ........ முடியல.....

3 February 2011 6:11 PM***

என்ன பண்றதுங்க? இவரு பெரிய அரசியல் வாதி மாதிரி அரசியல் பேசுறது என்னாலயும் தாங்க முடியலை! :-)