Wednesday, September 28, 2011

ஜானகிராமனின் சாக்கடையில் சந்தனம்

ஜானகிராமனின் சிறுகதை ஒன்று.. ஒரு கல்யாணம் ஆகாதவன், மணமான இன்னொருத்தி மேல் காதல் கொண்டு காமம் கொள்ள ஆசைப்படும் ஆபாசமான ஒரு கருவைக்கொண்ட கதை. இப்படிப்பட்ட ஒரு கதையில் வரும் சில அழகான விசயங்கள்.


“டெல்லியில் படித்தமடையர்கள் எத்தனை லக்ஷம் பேர் இருக்கிறார்கள் என்று கணக்குப் பண்ணிக்கொண்டே வருகிறேன்” என்றான் திடீரென்று.

“என்னது!”

“ஆமாம், ஒரு மணி நேரமாக பஸ், டாக்சி ஏதும் கெடைக்காமல் நின்றேன். ஒரு சீக்கியன் ஸ்கூட்டரை நிறுத்தி “போறபோது நின்றீர்கள், வரும்போதும் நிற்கிறீர்கள்”னு என்னை ஏற்றிக்கொண்டான். உள்ளே அவன் பெண்டாட்டி, குழந்தைகள் பெட்டிகள் பிரசவத்திற்குப் போய் திரும்புகிறவளை ரயிலடியிலிருந்து அழைத்து வருகிறான். அவள் பக்கத்திலேயே என்னை உக்கார்த்தி என்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போனான். சீக்கியர்கள் புத்தி இல்லாதவர்கள் விகடத்துணுக்குகிற டெல்லி முட்டாள்களின் ஞாபகம் வந்துகொண்டேயிருக்கிறது. பண்பாடு வளர்ச்சி என்ற பாபங்களை வளர்த்து அதிலே உழல்கிற பன்றி இந்த நகரம்” என்றான் அவன். குரல் உயர்ந்து கொண்டிருந்தது.

“உண்மைதான். டெல்லியில் வேலை குறைச்சல். யாரைக்குறை சொல்லலாம் என்று கண்ணில் எண்ணை போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். சீக்கியன் தன் வேலையைத்தான் செய்துகொண்டிருப்பான். மற்ற சோம்பேறிகளைப் பார்க்க அவனுக்கு நேரமும் இல்லை, மனசும் இல்லை. அதுதான் அவன் தலையில் மிளகாயை வைத்து அறைக்கிறார்கள். ஆனால் அவன் இவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. என் தங்கை ஒரு தடவை பிரேஸ்பூர் போய்க்கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு ஒரு பாக்கைக் கடித்தவளுக்கு புரைஏறி, மாரடைப்பு வந்துவிட்டது. மூச்சுமுட்டி, உயிர்போய்விடும் போலாகிவிட்டது. மேலே படுத்திருந்த சீக்கியன் குதித்து தலையைத் தட்டி, மார்பைத் தடவி, எப்படியோ மூச்சை சுய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டான். அவளுக்கு மேலெல்லாம் வியர்த்துக்கொட்டி, களைத்துவிட்டது. இரண்டுமணி நேரம் அவளுக்கு பணிவிடை செய்து தைரியப்படுத்தினானாம் அவன். அவர்கள் நிஜமான மனிதர்கள்” என்றாள் மாலி.

ஜானகிராமனின் "மனநாக்கு" நீங்க படிக்கலைனா கட்டாயம் படிங்க!

6 comments:

IlayaDhasan said...

ஸ்கூ ட்டர் உள்ளே எப்படி ஏற முடியும் ..மேல தான ஏற முடியும் ...மத்த வாக்கியங்கள் படிச்சு தலை சுத்துது பாசு..முடிவா என்ன சொல்ல வர்றாரு?


எந்திரனை வசூலில் மிஞ்சும் ஒரியப் படம்

வருண் said...

வாங்க இளையதாசன்!

நானும் யோசிச்சேன். ஆனால் அவரு இங்கே ஸ்கூட்டர்னு சொல்றது ஏதோ "ஆட்டோ" மாரி வாகனம்னு நம்புறேன். :)

சேக்காளி said...

//ஸ்கூ ட்டர் உள்ளே எப்படி ஏற முடியும் ..மேல தான ஏற முடியும்//
சின்ன வீடு படத்தில் பாக்யராஜுக்கு அவரது மாமனார் வாங்கிக் கொடுப்பாரே(ஸ்கூட்டரோடு பக்கவாட்டில் மற்றவர்கள் உட்கார இணைக்கப் பட்டிருக்கும்) அது போன்றதாக இருக்கும்

சுதா SJ said...

புத்தகத்தை படிக்கும் ஆவலை தந்து விட்டீர்கள் பாஸ்.

வருண் said...

***சேக்காளி said...

//ஸ்கூ ட்டர் உள்ளே எப்படி ஏற முடியும் ..மேல தான ஏற முடியும்//
சின்ன வீடு படத்தில் பாக்யராஜுக்கு அவரது மாமனார் வாங்கிக் கொடுப்பாரே(ஸ்கூட்டரோடு பக்கவாட்டில் மற்றவர்கள் உட்கார இணைக்கப் பட்டிருக்கும்) அது போன்றதாக இருக்கும்

29 September 2011 4:44 AM***

வாங்க சேக்காளி! நிச்சயமா அவரு அது மாதிரி ஏதாவது வாகனத்தைத்தான் சொல்லியிருக்கார்னு நம்புறேன். :)

வருண் said...

***துஷ்யந்தன் said...

புத்தகத்தை படிக்கும் ஆவலை தந்து விட்டீர்கள் பாஸ்.***

அவருக்கு ரொம்ப நல்ல எழுத்துங்க. இது ஒரு சிறுகதைதான். முடிஞ்சா படிங்க! :)