Friday, March 16, 2012

அப்பாடக்கர்! புது தமிழ் வார்த்தை கண்டுபிடித்தல்!

"மச்சி" என்கிற வார்த்தை என் இஸ்லாமிய நண்பன் அவங்க அண்ணியை விளிக்கும் வார்தையாகத்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானது. அத்தாச்சி, அண்ணி, மன்னி இதுபோல் மச்சி என்கிற வார்த்தை அவர்களுக்கு என்று நெனைத்துக்கொண்டு இருக்கும்போது, நண்பர்கள் இடையில் "மச்சி" னு ஒருவரை ஒருவர் ஆண்பாலை அழைக்கும் ஒரு "ட்ரெண்ட்" உருவானது. இதெப்படி பெண்பாலை குறிக்கும் ஒரு வார்த்தை ஆண்களை அழைக்கும் வார்த்தையாக மாறியது என்பது எனக்கு இன்னும் புரியாதது.

"மொக்கை" என்கிற வார்த்தையும் திடீரென பரவலாகப் பேசப்பட்டு எனக்கு அறிமுகமானது. சுத்தமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும் இந்த வார்த்தையை நான் இந்த அர்த்தத்தில் அறிய பல ஆண்டுகளாச்சு . தமிழ்மணத்திலேயே இதை பயன்படுதுவதால் இது பழைய தமிழ் வார்த்தை என்று நம்புகிறேன் ?

"டபாய்க்கிற" "காலாய்க்கிற" "தோடா" "பீட்டர் விடுவது" போன்ற சென்னை வார்த்தைகளலெல்லாம் பழக்கமே இல்லாமல் இருந்தவை. அவைகளை ரசித்ததும் இல்லை, ஆனால் நாளடைவில் நானே ஒவ்வொரு தர பயன்படுத்துவதும் உண்டு.

ஆமா, "அப்பாடக்கர்" என்கிற வார்த்தை யாருப்பா கண்டுபிடிச்சா? இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தமே இன்னும் புரியலை?

இதுபோல் புதுப் புது தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிப்பவர்கள் யாரு? I mean someone should have started (முதன் முதலா) these words as they did not exist sometime ago ? யாருக்கு க்ரிடிட் கொடுக்கலாம்? சரி, இப்போ "அப்பாடக்கரை"
யாரு கண்டுபிடிச்சானு சொல்லுங்கப்பா!

16 comments:

சீனு said...

அப்பாடக்கர்? சந்தானம் in பாஸ் (எ) பாஸ்கரன்?

வருண் said...

வாங்க சீனு! :)

சந்தானத்துக்கு க்ரிடிட் கொடுத்துடலாம்னு சொல்றீங்களா? வசனகர்த்தா யாரும் சண்டைக்கு வராமல் இருந்தால் சரிதான். :)

பாலா said...

மொக்கை என்ற வார்த்தை காலம் காலமாக தென் தமிழகத்தில் வழங்கப்படும் ஒரு வார்த்தை. அதன் அர்த்தம் 'மிகப்பெரிய' என்பது. இம்மாம் பெரிய சுவறு என்பதற்கு இத்த மொக்க சுவறு என்று கூறுவார்கள். ஆனால் சென்னையில் அதை மொன்னை அல்லது கூர் மழுங்கிய என்ற அர்த்ததில் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இன்னமும் எங்க ஊரில் மொக்கை என்றால் பெரிய என்றே அர்த்தம்.

அப்பாடக்கர் என்பது ஒரு சில காமெடி சிறுகதைகளில் கதாபாத்திரங்களின் பெயராக பயன்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதை பிரபல படுத்தியவர் சந்தானம்தான். வசனகர்த்தா கூட அவர்தான்.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***பாலா said...

மொக்கை என்ற வார்த்தை காலம் காலமாக தென் தமிழகத்தில் வழங்கப்படும் ஒரு வார்த்தை. அதன் அர்த்தம் 'மிகப்பெரிய' என்பது. இம்மாம் பெரிய சுவறு என்பதற்கு இத்த மொக்க சுவறு என்று கூறுவார்கள். ஆனால் சென்னையில் அதை மொன்னை அல்லது கூர் மழுங்கிய என்ற அர்த்ததில் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இன்னமும் எங்க ஊரில் மொக்கை என்றால் பெரிய என்றே அர்த்தம். ***

நீங்க தென்மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கனும். இதே அனுபவம்தான் எனக்கும். நன்றி, பாலா! :) இதே கதையை நான் ஒரு வட தமிழ் மாவட்டத்தவரிடம் சொன்னேன். அவருக்கு நான் சொல்றது சுத்தமாகப் புரியலை. மொக்கை என்பது பெரிய என்று அவர் கேள்விபட்டதே இல்லை என்றார்!! நான் அதோட விட்டுவிட்டேன் :)

--------

வாழ்க அப்பாடக்கர் புகழ் சந்தானம்! :)))

நாடோடி said...

சென்னையில் தக்கர் பாபா என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் பல்வேறு கலைகளில் வித்தகராக இருந்ததாகவும் ஒரு சாரர் கூறுவது உண்டு. அவரை அப்பா என்று முன் அடைமொழி இட்டு அப்பா தக்கர் என்று அழைப்பது வழக்கமாம்..

யாராவது நான் முடியாததை செய்கிறேன் என்று கிளம்பினால், நீ என்ன அப்பா தக்கரா,இதை செய்வதற்கு என்று கூறுவது உண்டாம். அதுவே நாளடைவில் திரிந்து அப்பாடக்கர் என்று ஆகிவிட்டதாம்.

இவர் நினைவாக சென்னையில் அப்பா தக்கர் வித்தியாலயம் என்று ஒரு பள்ளியும் உள்ளதாம். ஒரு நண்பர் இதை என்னிடம் எப்போதோ சொல்ல கேள்வி. யார் சொன்னது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சென்னைவாசிகள் யாரும் உண்டெனில் அந்த அப்பா தக்கர் வித்தியாலயம் பொய் முழு விவரமும் தெரிந்து கொள்ளவும்..

நாடோடி said...
This comment has been removed by the author.
நாடோடி said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

அப்பாடக்கர்

இது ஒரு சுய விளம்பரம்தான். புதுகை அப்துல்லா சொன்ன விளக்கத்தையும் இணைச்சிருக்கு இங்கே

வருண் said...

***Nadodi said...

சென்னையில் தக்கர் பாபா என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் பல்வேறு கலைகளில் வித்தகராக இருந்ததாகவும் ஒரு சாரர் கூறுவது உண்டு. அவரை அப்பா என்று முன் அடைமொழி இட்டு அப்பா தக்கர் என்று அழைப்பது வழக்கமாம்..

யாராவது நான் முடியாததை செய்கிறேன் என்று கிளம்பினால், நீ என்ன அப்பா தக்கரா,இதை செய்வதற்கு என்று கூறுவது உண்டாம். அதுவே நாளடைவில் திரிந்து அப்பாடக்கர் என்று ஆகிவிட்டதாம்.

இவர் நினைவாக சென்னையில் அப்பா தக்கர் வித்தியாலயம் என்று ஒரு பள்ளியும் உள்ளதாம். ஒரு நண்பர் இதை என்னிடம் எப்போதோ சொல்ல கேள்வி. யார் சொன்னது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

சென்னைவாசிகள் யாரும் உண்டெனில் அந்த அப்பா தக்கர் வித்தியாலயம் பொய் முழு விவரமும் தெரிந்து கொள்ளவும்..

16 March 2012 12:51 PM***

நன்றி, நாடோடி :)

வருண் said...

***ILA(@)இளா said...

அப்பாடக்கர்

இது ஒரு சுய விளம்பரம்தான். புதுகை அப்துல்லா சொன்ன விளக்கத்தையும் இணைச்சிருக்கு இங்கே

16 March 2012 1:13 PM***

ஓ, நீங்க உங்க தளத்தில் சொன்ன குறும்படம் இதுதானா!!!!

ஆமா, அந்த நடிகர்கள் ரெண்டு பேரும் யாருங்க? நீங்க நடிச்சு இருக்கீங்களா? :)

வீடியோவை வூட்டுல போயிதான் நிதானமாக "கேக்கனும்"!

வருண் said...

***ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். முதல் நாள் வெளிப்புற படப்பிடிப்பில் மூவருமே பேந்த பேந்த முழித்தோம். ***

அவங்க ரெண்டு பேரும்தான் நடிச்சு இருக்காங்களா??? :)

சிவக்குமார் said...

ஏண்டாப்பா ஏய்க்கிறாய் (ஏனப்பா ஏமாற்றுகிறாய்) என்பது ஏண்டாப்பாய்க்கிற என மாறி டபாய்க்கிற என்பதாக சுருங்கிவிட்டது

வருண் said...

Ila: Finally I watched YOUR short film, appaadakkar. You guys must have put lot of effort to bring this to this level. Seems like it was completely filmed in US.

Both Sriram and Jeyavelan have done good job but I am only learning about IT industry. Fortunately I did not have to lie about anything in my resume ever! :)

Friend of mine just took up an IT course> When she went to job market, her "instructors" (one who places her) insisted her to claim as if she has 7 years experience in the field (in her resume), she said. She only had 6 months experience! I can't understand how one could ever do that!!! But she says that that how how things work in IT and she found a job too by doing so! Well..

வருண் said...

**தமிழானவன் said...

ஏண்டாப்பா ஏய்க்கிறாய் (ஏனப்பா ஏமாற்றுகிறாய்) என்பது ஏண்டாப்பாய்க்கிற என மாறி டபாய்க்கிற என்பதாக சுருங்கிவிட்டது

17 March 2012 12:41 AM***

நன்றி, தமிழானவன்! :)

Unknown said...

புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்க்கப்படுகின்றன.