Tuesday, July 3, 2012

தீபிகா படகோன், சோனாக்ஷிக்கு கமல் அறிவுரை?

 கமலஹாசனுடைய விஸ்வரூபம் ஸ்டன்னர் வெளியாகிவிட்டது! சும்மா சொல்லக்கூடாது, ட்ரைலெரும் சரி, ஸ்டன்னரும் சரி, ரொம்ப நன்னாவே வந்திருக்கு! படம் ரொம்ப ஹைஃபையாக இருந்தால் எவ்வளவு வெற்றியடைந்தாலும்  பி அண்ட் சி செண்டர்ல பொதுவாக எடுபடாது. கமலின் சகலகலாவல்லவன் போன்றவைதான் பட்டி தொட்டியெல்லாம் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இன்று கமல், நான் ஏன் அதுபோல (சகலகலாவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே) மட்டமான படங்களெல்லாம் பண்ணினேன்? என்று சொல்லி சொல்லி ஒப்பாரி வைக்கிறார். இப்போ அவர் எடுக்கும் படங்கள் ஹாலிவுட் தரத்தை நோக்கிப்போவதால் சி செண்டரை கமல் மறந்துட்டாருனுதான் சொல்லனும்.

தமிழ்ல இந்தப்படம், விஸ்வரூபம் வெற்றியடையுதோ இல்ல தோல்வியடையிதோ என்பது முக்கியம் இல்லை. ஹிந்தி மக்களிடம் இந்தப்படம் எப்படிப்போகுது என்பது மிகவும் முக்கியம்! இந்தப் படத்தின் வெற்றி/தோல்வி கமலுக்கு ஒரு மிகப்பெரிய மானப்பிரச்சினைனுகூட சொல்லலாம். அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை இந்தியில் கமலின் திறமைமேல் உள்ள பொறாமையால், கமலை கவுத்துறதுக்குன்னே பெரிய கூட்டமே இருக்குனு சொல்லலாம். சமீபத்தில் வெளியான தசாவதாரம்கூட ஹிந்தியில் படுத்துவிட்டது. மும்பை எக்ஸ்ப்ரெஸ், ஹே ராம் பற்றியெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை!

விஸ்வரூபம் எடுப்பதாக அறிவித்தவுடன், சோனாக்ஷி ஷினா மற்றும் தீபிகா படகோனையும் கமல் தரப்பு  அனுகியபோது, இருவரும் தங்கள் கால்ஷீட் தேதிகள் பிரச்சினையைக் காட்டி முடியாதுனு சொல்லீட்டாங்க!

 
இதனால யாருக்கு நஷ்டம் என்பது வேற விஷயம். ஆனால் இப்போது நடித்துள்ள ஆண்ரியாவையும், பூஜா குமாரையும்விட இவர்கள் இருவரும் ஹிந்தி ஓப்பனிங்கை பெரிதாகக் கொடுக்க வாய்ப்புனு சொன்னால் அது மிகை அல்ல!

ரஜினி, எந்திரனுக்காக ஐஸ்வர்யா ராயை விடாது முயன்று, கெஞ்சி, கூத்தாடி  அவரை நடிக்க வைத்ததாலதான் ஹிந்தியில் இந்தளவுக்காவது எந்திரன் வெற்றியடைந்தது என்பது என்னுடைய எண்ணம். அதேபோல் இந்தியில் ஹாட் கேர்ள்ஸ்னு இன்னைக்கு சொன்னால் இவங்க ரெண்டு பேரும்தான். என்ன காரணத்தாலோ அவர்கள் முடியாது என்றவுடன் கமல்மேலே பொறாமையுடன் இருக்கும் ஹிந்தி மக்கள் எல்லாம் அதை  கொண்டாடினார்கள்னு சொல்லலாம்.

உங்களுக்கு இதுபத்தி சந்தேகம் எதுவும் இருந்தால் இந்த லிங்க்கை க்ளிக் செய்து பாருங்க!

சரி, அது முடிஞ்ச கதைனு விட்டுத் தொலையாமல் இன்னைக்கும் அதைப்பத்தி பேசுறானுக! கீழே உள்ளதை வாசிச்சுப் பாருங்க!
 Sonkashi Sinha and Deepika Padukone irked with Kamal Haasan?

Looks like someone doesn’t mind speaking his mind! Not even if his comments can disappoint the two most talked about actors in Bollywood – Sonakshi Sinha and Deepika Padukone. To many, Kamal Haasan may come across as a cynical actor, but the fact that he showed no qualms about telling a daily that actors Sonakshi Sinha and Deepika Padukone, who have opted out of his project “Vishwaroopam”, should read scripts before rejecting films. For the unitiated, Sonakshi Sinha was earlier considered for “Vishwaroopam”, but she opted out. Later there were reports suggesting Deepika Padukone was also an option. But she too turned down the offer.

In his recent interview to a daily, he said, “Actors have the right to refuse. I suppose it gives them a sense of position. It is their prerogative and I suppose it gives you great copy. However, let me clarify that, yes some names were indeed suggested to us, but their dates did not work out. As an actor, I have myself refused many good films. It is because I didn’t realise how good the film was till it released. That’s why actors should read scripts before rejecting films.” It is undoubtedly a sarcastic comment meant against we know who! We are sure the comment must have not gone down well with them, but should they pay heed to what he said?


This is not the first time that Kamal has reacted in such an intense way. He made headlines when he said he didn’t need Shah Rukh Khan and Salman Khan to sell his films.
He was quoted as saying, “However, there is a role in Amar Hai that suits Saif, but we haven't approached him yet. We will do so soon." Kamal Haasan had a harrowing time, when almost all Bollywood A-listers backed out of “Vishwaroopam”. Besides SRK, who decided to not do Kamal's remake of the South superhit “Vettayadu Villayadu”, there was news that Salman wouldn’t do the remake of Armour of God.

Kamal, we can understand the problems you are facing, but will such extreme reaction help you? It might only help you draw ire from other actors in the industry. Don’t make them grow wary of you!
இதில் கமல் சொன்னதை திரித்து, தீபிகாவையும், சோனாக்ஷியையும் கமல் சாடுவதாகவும், ஸ்க்ரிப்ட்டை படிச்சுப் பார்த்துட்டு முடியாதுனு சொல்லியிருக்கனும்னு எழுதியிருக்கான் இந்த பாஸ்கர் முண்டம்!

என்னதான் கமல்மேலே விருப்பு அல்லது வெறுப்பு நமக்கு இருந்தாலும், இதுபோல வீண் வம்பு ஆர்ட்டிக்கிளை ஒரு வடக்கத்தான் எழுதும்போது, கமல் ஒரு தமிழன், இவனுக என்ன அவரைக் கவிழ்த்துவது? னுதான் எரிச்சல் வருது. ஆமா, எனக்கும்தான்.  இவனுகளுக்கு கமல் மேல் உள்ள வெறுப்பைப் பார்க்கும்போது கமல், ஹிந்தியில் எடுக்கும் விஸ்வரூப் மிகப்பெரிய வெற்றியடைந்து இவனுக மூஞ்சில எல்லாம் கரியைப் பூசனும்னு எனக்கே தோனுது . Let us hope he wins this time to make us all proud! Let us hope he will make all these big mouth morons to shut up forever!

4 comments:

Jayadev Das said...

தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்.

Jayadev Das said...

தீப்ஸ்......... படம் செம கிக்கா இருக்கு.............

வருண் said...

jeyavel:

நெஜம்மாவே தீபுக்குட்டி பேரழகுடன் ரொம்ப கவர்ச்சியா இருக்கா!

I could not take my eyes off her! :)))

safi said...

கண்டிப்பா படம் ஹிட்