Thursday, July 12, 2012

நீங்களும் வெல்லலாம் 3.2 லட்சங்கள்!

எப்படினு கேக்கிறீங்களா? மொதல்ல நீங்க ஒரு பிரபலமாக இருக்கனும்! இல்லையா? அப்போ உங்களுக்கு பொது அறிவு கம்மியாத்தான் இருக்கும். நீங்க ஒரு 10,000 ரூபாய்வரை வேணா வெல்லலாம்! அம்புட்டுத்தான்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஷோ  சாதாரண பொதுமக்கள் கலந்துகொண்டு நடக்கும்போது நம்ம "மிஸ்டர் ஜீனியஸ்" ஓரளவுக்கு மிகவும் நியாயமாக நடந்துக்கிட்டாரு. நான் பார்த்தவரைக்கும் நிச்சயமாக தரமான ஒரு ஷோ போலதான் இருந்தது. ஆனால் அதில் பிரபலங்கள் கலந்துகொண்டு அவர்கள் "மிஸ்டர் ஜீனியஸ்" கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது ஏதோ இடித்தது.

பிரபலங்கள் வெல்லுகிற பணம்,  இல்லாதவர்களுக்கும், தேவையானவர்களுக்கும்தான் போய் சேருகிறது. தான் வென்ற தொகையை இவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது பாராட்டவேண்டிய விசயமென்றாலும், அந்தப் போட்டியும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் பிரபலங்கள் கலந்து கொள்ளும்போதும் "மிஸ்டர் ஜீனியஸ்" நியாயமாக நடந்துகொள்கிறாரா?

பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது நிறையப் படித்தவர்கள்கூட சில சில்லி மிஸ்டேக்ஸ் செய்து 3000, 40,000 னு குறைந்த தொகையுடன் வெளியேறுவதை நீங்க பார்க்கலாம். பொது அறிவு மேட்டர்ல யாரு வேணா தடுமாறலாம், அதுதான் உண்மை! ஆனால் நம்ம பிரபலங்கள்  ஒரு 10,000 ரூபாய்க்கு குறைவாக வென்று, அந்தப் பணத்துடன்  வெளியேற்றப்பட்டுப் போவதை நீங்க பார்ப்பது அரிதிலும் அரிது. நான் இதுவரை பார்க்கவில்லை. அது ஸ்ருதிஹாசனாக இருக்கட்டும், இல்லைனா சத்யராஜாக இருக்கட்டும், இல்லைனா ராதாவாக இருக்கட்டும்,  இவர்கள் குறைந்தது ஒரு ரூ 3.2 லட்சங்கள்  ஈட்டிய பிறகுதான் வெளியேறுவார்கள்.
3.2 லட்சத்தொகை  வென்றபிறகுதான் நிஜமான போட்டியில் கலந்துகொள்ளும் த்ரில்லை நீங்க காணலாம்.

அது எப்படி??

எனக்கென்னவோ  இவர்கள் "ஞானசூனியம்" என்று பொதுமக்களிடம் அவமானப் படக்கூடாது என்று மெனக்கெட்டு  குறைந்த பட்சம் ஒரு பத்துக்கேள்விக்காவது பதில் சொல்லி, அவங்க மானத்தைக் காத்துக்கொள்ளனும் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு கேள்வித்தாள் முன்னாலேயே கொடுக்கப்படுகிறதுனு தோனுது. நீங்க அவர்கள் பதில் சொல்லும் விதத்தை கவனித்துப் பார்த்தால்  உங்களுக்கும் விளங்கும்.
ஏழைகளுக்கு அந்தப் பணம் போய் சேருகிறது என்கிற ஒரு காரணத்தால் பொதுமக்களும் அவர்கள் நல்லா ஆடனும்னுதான் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், விஜய் டி விக்கு அவங்க அழைத்துவரும் பிரபலங்களுடைய மானம் கப்பல் ஏறிவிடக்கூடாது என்பதுதான்  முக்கியமாக இருப்பதுபோல் தோனுது. இல்லைனா நம்மள வலிய அழச்சுண்டு வந்து  இங்கே உக்கார வச்சு, விஜய் டி வி காரனுக கேவலப்படுத்திடுவானுக பிரபலங்கள் இந்தப் போட்டியில் கலந்துக்க மாட்டாங்க.

எதைச் செய்தாலும் நம்மாளுக செய்றவிதம் ஒரு தனி விதமாகத்தான் இருக்கும்!

18 comments:

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

இதுக்கே இப்படி ஆயிட்டா எப்படி......!! வடக்கே பாருங்க ரெண்டு அறிவு ஜீவிங்க ஒரு கோடி ஜெயிசுதுங்களாம் , நல்ல வேலை டைம் முடிஞ்சுதுன்னு சங்கு ஊதி ஆட்டத்தை முடிச்சான், இல்லாட்டி அது ரெண்டு கோடிக்கு போயிருக்கும்!! அந்த பணமும் ஏதோ Good Cause க்குத்தான் போச்சாம்.......... ஹி.........ஹி..........ஹி..........

Jayadev Das said...

ஏன் ஃ பிரண்டு ஒருத்தன் சொன்னான், சன் டி.வி யில சரத் குமார் நடத்துன ஒரு கோடி புரோகிராமில் எவ்வளவு ஜெயிச்சாலும் காசு முழுசா தருவதில்லையாம், ஏதோ சோத்தைப் போட்டு, entertainment பண்ணியதுக்கு தேங்க்ஸ், உங்க மூஞ்சி டி.வியல வர்றதே பெரிசுன்னு சொல்லி கை செலவுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பிடுவானுங்களாம், வெளியில சொன்னா உன் கதையே close-னு சொல்லி அனுப்புவானுங்களாம், கலந்துகிட்ட ஒரு ஆள் மூலமா அவனுக்கு இது தெரிய வந்துச்சாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.............

Jayadev Das said...

பிரபலங்களுக்கு மேல்மாடி காலியாத்தான் இருக்கும்கிறது உலகநாயகனைப் பாத்தாலே தெரியும். அவங்க வரும்போது கேள்வி பதிலை பார்க்காம, யாரை யாரு எப்போ இழுத்துகிட்டு ஓடினாங்க, யார் கூட யார் ப.......த்திருந்தாங்கன்னு சொல்ற கதையை மட்டும் பார்க்கணும். சாதாரண மக்கள் கலந்துக்கும் போது அப்படியே தலை கீழா மாத்திக்கணும். ஆனா, அதிலும் சிலர் கலக்கியிருந்தாங்க, இரசிக்கும்படியா இருந்தது என்பதயும் மறுப்பதற்கில்லை.

Jayadev Das said...

http://www.youtube.com/watch?v=Exr62_oTl38&feature=related

Jayadev Das said...

நீங்க பதிவு போட்ட நேரம், அவன் இந்த வாரத்தோட ஊத்தி மூடப் போறானுங்களாம்............ :((

வருண் said...

வாங்க ஜெயவேல்!

***Jayadev Das said...

ஏன் ஃ பிரண்டு ஒருத்தன் சொன்னான், சன் டி.வி யில சரத் குமார் நடத்துன ஒரு கோடி புரோகிராமில் எவ்வளவு ஜெயிச்சாலும் காசு முழுசா தருவதில்லையாம், ஏதோ சோத்தைப் போட்டு, entertainment பண்ணியதுக்கு தேங்க்ஸ், உங்க மூஞ்சி டி.வியல வர்றதே பெரிசுன்னு சொல்லி கை செலவுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பிடுவானுங்களாம், வெளியில சொன்னா உன் கதையே close-னு சொல்லி அனுப்புவானுங்களாம், கலந்துகிட்ட ஒரு ஆள் மூலமா அவனுக்கு இது தெரிய வந்துச்சாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.............***

இதெல்லாம் அநியாயம்ங்க! சன் டி வி இப்படி செய்திருந்தால் அவனுகள உயிரோட புதைக்கனும்!

வருண் said...

***Jayadev Das said...

நீங்க பதிவு போட்ட நேரம், அவன் இந்த வாரத்தோட ஊத்தி மூடப் போறானுங்களாம்............ :((****

அப்படியா!!

ஒருவேளை சூர்யாவுடைய காண்ட்ராக்ட் (கால்ஷீட்) முடிஞ்சு இருக்கும். அவரு, இதை நம்பி நடிப்புத் தொழிலை விட்டுப்புட்டா அவரு பொழைப்பும் கஷ்டம்தான். அதே போல் சூர்யா இடத்தில் யாரைக்கொண்டுவந்தாலும் அதுவும் பிரச்சினைதான். என்ன செய்றாங்கனு பார்ப்போம். :)

Kite said...

***Jayadev Das said...

ஏன் ஃ பிரண்டு ஒருத்தன் சொன்னான், சன் டி.வி யில சரத் குமார் நடத்துன ஒரு கோடி புரோகிராமில் எவ்வளவு ஜெயிச்சாலும் காசு முழுசா தருவதில்லையாம், ஏதோ சோத்தைப் போட்டு, entertainment பண்ணியதுக்கு தேங்க்ஸ், உங்க மூஞ்சி டி.வியல வர்றதே பெரிசுன்னு சொல்லி கை செலவுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பிடுவானுங்களாம், வெளியில சொன்னா உன் கதையே close-னு சொல்லி அனுப்புவானுங்களாம், கலந்துகிட்ட ஒரு ஆள் மூலமா அவனுக்கு இது தெரிய வந்துச்சாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.............***//

இந்த வதந்திய நானும் சன் டி.வி.யில் வேலை செய்த ஒருவர் மூலமா கேள்விபட்டிருக்கேன். இது மட்டுமல்ல. தினகரன் அச்சு அலுவலகத்திற்கு தேவையான embedded systems ஐ என் நண்பர் ஒருவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வாங்கிட்டு payment தராம இழுத்தடிச்சதாகச் சொன்னார்.

Kite said...

ஒருவேளை சூர்யாவுடைய காண்ட்ராக்ட் (கால்ஷீட்) முடிஞ்சு இருக்கும். அவரு, இதை நம்பி நடிப்புத் தொழிலை விட்டுப்புட்டா அவரு பொழைப்பும் கஷ்டம்தான். அதே போல் சூர்யா இடத்தில் யாரைக்கொண்டுவந்தாலும் அதுவும் பிரச்சினைதான். என்ன செய்றாங்கனு பார்ப்போம்.//

வருஷத்துல ஆறு மாதம் நடத்துவாங்கன்னு நினைக்கறேன் season 2, season 3 மாதிரி.

அமர பாரதி said...

நன்றாக கவனித்திருக்கிறீர்கள். சில படங்களில் நடித்து விட்டாலோ அல்லது ஒன்றிரண்டு படங்களை இயக்கி விட்டாலோ உலகத்துக்கே அறிவுரை சொல்லும் அறிவும் உலகத்தையே வழி நடத்தும் திறமையும் நன் நடிகர்களுக்கு வந்து விடுமே.

நீங்கள் "Are You Smarter Than a 5th Grader?" டீ.வீ சீரியல் பார்த்திருக்கிறீர்களா? பெரிய பெரிய ஆட்கள் டாக்டரேட் வாங்கியவர்கள் எல்லாம் அசட்டுச் சிரிப்புடம் தோற்று திரும்புவார்கள். ஓரளவுக்கு உண்மையாக நடப்பது அந்த நிகழ்ச்சி.

நம் ஊரில் இது போன்ற அறிவு ஜீவி பிம்பங்கள் மிக மிக கவனமாக கட்டமைக்கப் படுபவை. சமீபத்தில் நடிகர் சிவா பேட்டியைப் படித்தீர்களா? அவருக்கு அரசியலில் ஆர்வமில்லையாம், கொடுமை. நடிகன் என்பவன் மிகப் பெரும் அறிவாளி, கருனையுள்ளவன், மாபெரும் தலைவன், உலகையே வழி நடத்தும் தகுதி பெற்றவன் போன்ற பிம்பங்கள் அனைத்து மீடியாக்களிலும் கட்டமைக்கப் படுபவை. தமிழில் இருக்கும் அளவுக்கு தெலுங்கில் இல்லை.

அமர பாரதி said...

இரண்டு படத்தில் நடித்த நடிகையை வைத்து எந்தப் பிரச்சினைக்கும் ஆலோசனை சொல்லும் பத்திரிக்கைள் இருக்கின்றன. தொடர் வேறு எழுதுவார்கள். நமக்கு இதுதான் விதி.

Sairam said...

பார்க்கிறவர்கள் எல்லோரும் உண்மை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்ளவும் செட் டப் . குத்து சண்டை மாதிரி

வருண் said...

/// ***Jayadev Das said...

ஏன் ஃ பிரண்டு ஒருத்தன் சொன்னான், சன் டி.வி யில சரத் குமார் நடத்துன ஒரு கோடி புரோகிராமில் எவ்வளவு ஜெயிச்சாலும் காசு முழுசா தருவதில்லையாம், ஏதோ சோத்தைப் போட்டு, entertainment பண்ணியதுக்கு தேங்க்ஸ், உங்க மூஞ்சி டி.வியல வர்றதே பெரிசுன்னு சொல்லி கை செலவுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பிடுவானுங்களாம், வெளியில சொன்னா உன் கதையே close-னு சொல்லி அனுப்புவானுங்களாம், கலந்துகிட்ட ஒரு ஆள் மூலமா அவனுக்கு இது தெரிய வந்துச்சாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.............***//

இந்த வதந்திய நானும் சன் டி.வி.யில் வேலை செய்த ஒருவர் மூலமா கேள்விபட்டிருக்கேன். இது மட்டுமல்ல. தினகரன் அச்சு அலுவலகத்திற்கு தேவையான embedded systems ஐ என் நண்பர் ஒருவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வாங்கிட்டு payment தராம இழுத்தடிச்சதாகச் சொன்னார்.
12 July 2012 8:37 AM ///

என்னங்க இது, சன் டி வியை வச்சு கோடிகோடியா சம்பாரிக்கிறானுக, ஏன் இந்தப் பிச்சக்காரத்தனம்?

வருண் said...

***Jagannath said...

ஒருவேளை சூர்யாவுடைய காண்ட்ராக்ட் (கால்ஷீட்) முடிஞ்சு இருக்கும். அவரு, இதை நம்பி நடிப்புத் தொழிலை விட்டுப்புட்டா அவரு பொழைப்பும் கஷ்டம்தான். அதே போல் சூர்யா இடத்தில் யாரைக்கொண்டுவந்தாலும் அதுவும் பிரச்சினைதான். என்ன செய்றாங்கனு பார்ப்போம்.//

வருஷத்துல ஆறு மாதம் நடத்துவாங்கன்னு நினைக்கறேன் season 2, season 3 மாதிரி.**

பொறுத்திருந்து பார்ப்போம். :)

வருண் said...

***அமர பாரதி said...

நன்றாக கவனித்திருக்கிறீர்கள். சில படங்களில் நடித்து விட்டாலோ அல்லது ஒன்றிரண்டு படங்களை இயக்கி விட்டாலோ உலகத்துக்கே அறிவுரை சொல்லும் அறிவும் உலகத்தையே வழி நடத்தும் திறமையும் நன் நடிகர்களுக்கு வந்து விடுமே.

நீங்கள் "Are You Smarter Than a 5th Grader?" டீ.வீ சீரியல் பார்த்திருக்கிறீர்களா? பெரிய பெரிய ஆட்கள் டாக்டரேட் வாங்கியவர்கள் எல்லாம் அசட்டுச் சிரிப்புடம் தோற்று திரும்புவார்கள். ஓரளவுக்கு உண்மையாக நடப்பது அந்த நிகழ்ச்சி.

நம் ஊரில் இது போன்ற அறிவு ஜீவி பிம்பங்கள் மிக மிக கவனமாக கட்டமைக்கப் படுபவை. சமீபத்தில் நடிகர் சிவா பேட்டியைப் படித்தீர்களா? அவருக்கு அரசியலில் ஆர்வமில்லையாம், கொடுமை. நடிகன் என்பவன் மிகப் பெரும் அறிவாளி, கருனையுள்ளவன், மாபெரும் தலைவன், உலகையே வழி நடத்தும் தகுதி பெற்றவன் போன்ற பிம்பங்கள் அனைத்து மீடியாக்களிலும் கட்டமைக்கப் படுபவை. தமிழில் இருக்கும் அளவுக்கு தெலுங்கில் இல்லை.***

வாங்க அமரபாரதி!

சாதரண மக்களை வச்சு நடத்தினாலே நல்லாத்தான் போகும். ஒரு பிரபலம் சூர்யா போதாதா?

எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு அவர்களை அழச்சுட்டு வந்து ஷோ வின் தரத்தை குறைக்கனும்னு தெரியலை!

பல விசயங்கள் பகிர்வுடன் உங்க கருத்துக்கு நன்றிங்க, அமரபாரதி! :)

வருண் said...

***Sairam said...

பார்க்கிறவர்கள் எல்லோரும் உண்மை என்று நினைக்கிறார்கள். ஆனால் அவ்ளவும் செட் டப் . குத்து சண்டை மாதிரி

13 July 2012 6:45 AM***

இதையெல்லாம் நிரூபிக்கிறது கஷ்டம்னு வச்சுக்கோங்க. ஆனால் அவன் அவன் மனசாட்சிக்கு மட்டும் நிச்சயம் தெரியும். :)

Anonymous said...

உங்க பார்வை என் பார்வையை விட மாறுதலாக இருந்தாலும் நியாயமாக இருக்கிறது. குறைவான தொகை வென்ற ஒரே பிரபலம்! சிவகார்த்திகேயன் மட்டுமே!! இதையும் கொஞ்சம் பாருங்களேன்: சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை