Thursday, July 5, 2012

பசுமாடு வளர்ப்பது நாட்டைப் பாழாக்குவதா??

இப்போலாம் பார்ப்பனர்கள்கூட அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இவங்க ஆடு, கோழி,  மீன், முட்டை மட்டும்தான் சாப்பிடுவாங்க. பொதுவாக இவர்கள் வீட்டில் சமைப்பதில்லை! ஹோட்டல் தண்ணிப் பார்ட்டினு வரும்போது சாப்பிடுவாங்க. ஒரு சிலர் வீட்டிலே ஆச்சாரமாக இருந்துகொண்டு இப்படி "ஊர் மேய்வதும்" உண்டு! அதுவும் பெங்காளி ப்ராமின்ஸை கேக்கவே வேணாம்! மீன் இல்லாமல் இவங்களால சாப்பிட முடியாது! ஆனால் மாடு, பன்றிமட்டும் சாப்பிடமாட்டாங்க. அதுல பெங்காளிகளிடம்  பெருமை பீத்தல் வேற இருக்கும்.

இந்தியாவில் ஏன் மாடு மட்டும் சாப்பிடமாட்டேன்கிறாங்கனு ஒரு சில அதிசயமாகக் கேப்பாங்க.  இந்தியாவில் இந்துக்கள் மாடு சாப்பிடாததுக்கு காரணம் நிச்சயம் அவர்கள்  மதநம்பிக்கை கலந்த கலாச்சாரம்தான்னு வெளிநாடுகளில் பிற மதத்தவர்கள் நம்புறாங்க. இவங்க மாடு சாப்பிடாததைப் பார்த்து இவங்கள உயர்வாக எல்லாம் யாரும் பார்ப்பதுமில்லை, நினைப்பதில்லை!

இந்துக்கள் மாடு சாப்பிடாததுபோல இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் பன்றி சாப்பிடுவது கெடையாது! அது ஏங்கனு இவங்ககிட்ட கேட்டால் "பன்றி சுத்தமில்லாத ஒரு விலங்கு" அதனால காலங்காலமா நாங்க சாப்பிடுறது இல்லைனு ஒரு சிலர் சொல்றாங்க. இதில் பாவம் புண்ணியம் எல்லாம் இவங்க பேசுறதில்லை.

பசுவை நாம் உயர்வாகவும் தெய்வமாகவும் கருதுகிறோம் என்பதே காரணம் என்று பலரும் நம்புறாங்க. இதுவும் ஒரு மாதிரியான முட்டாள்த்தனம், அறியாமைதான்.

பசுவை நம்ம மதிக்கிறோமா?

தெய்வமா வணங்குறோமா?

இருங்க, இருங்க, பசு மாடு உங்களுக்காகவா பால் தயாரிச்சு கொடுக்கிது? அது அதனுடைய கன்றுக்காக அல்லவா பால் சுரக்குது? அதை ஏமாத்தி இல்லங்க நம்ம பால் கறக்கிறோம்? அதே பெரிய பாவம்தான். அதுட்ட பால் கறக்கிறது மட்டுமில்லாமல், அதுக்கு  சுதந்திரம் இல்லாமல்  இப்படி 24 மணி நேரமும் வீட்டில் சிறையில் அட்டைப்பதுபோலே கட்டி வச்சு இருக்கீங்களே? அது பாவம் இல்லையா? உங்களுடைய சுயநலனுக்காக, அதனுடைய  பாலை திருடிப்புட்டு, நன்றிக்கடன் மண்ணாங்கட்டினு ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கீங்களேனு கேட்டீங்கனா..அவங்களுக்கு கொஞ்சம் கோபம், எரிச்சல் எல்லாம் கலந்து வரும்! மேலும் இப்படியெல்லாம்  நீங்க கேட்பீர்கள்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும்.நம்மாளு என்னைக்கு தான் செய்ற தப்பை தப்புனு ஒத்துக்கிட்டு பேசாமல் இருப்பான்?

உடனே, தன் தவறை சரி செய்யாமல், பசுமாட்டை 24 மணி நேரமும் கட்டிப்போடுறது, பால் கறக்கிறதெல்லாம் ஒன்னும் பெரிய தப்பில்லை! அதைவிட  அவா எல்லாம் மாட்டை கொலை பண்ணுறா, மாட்டை சாப்பிடுறா, அதுதான் ரொம்பப்  பாவம்னு சொல்லி, பரிதாபமான ஒரு பலிகொடுக்கப்படுற மாட்டைக் காட்டுவாங்க! (என்னவோ, மாடு சாப்பிடுறவன் எல்லாம் அந்த மாடு கொலைசெய்யப்பட்டு சாகிறதைப் பார்த்து ரசிப்பதுபோல நினைத்துக்கொண்டு!) எப்படியோ இந்த பால் திருடர்கள் மற்றவர்களை குற்றவாளியாகக் காட்டி, தான் மட்டும் பெரிய யோக்கியர் என்பதை சொல்ல வருவதுபோலதான் தோனும். அதாவது, நான் வேற வழியில்லாமல் மாட்டை ஏமாற்றி பால் மட்டும்தான் குடிக்கிறேன், உன்னைப்போல அதைக் கொல்லுவது இல்லை! அதை சாப்பிடுவதும் இல்லை!னு பெரிய வியாக்யானம் சொல்ல வருவாங்க.

மாட்டுக்க்காக ரொம்பத்தான் உருகும் இவர்களிடம், கொஞ்சம் கீழே இறங்கி, சரிங்க,  நம்ம ஒண்ணு செய்வோம், நான் மாடு சாப்பிடுறதை நிறுத்திடுறேன், மாட்டுப்பால் குடிக்கிறதையும் நிறுத்திடுறேன். அதெல்லாம் அதனுடைய கன்றுக்குப் போவதுதான் சரி!  நான் செய்வது பெரிய தப்பு! தேவையான புரோதச் சத்து இல்லாமல் செத்துத்தொலைகிறேன். நான் வாழ்ந்தென்னத்த கிழிக்கப்போறேன்?  அதே மாதிரி "பால் திருடர்கள்" நீங்களும் பசும்பால் குடிக்கிறதை நிறுத்தினால் என்ன? பாலில் இருந்து தயாரிக்கும், வெண்ணை, நெய், தயிர், ஐஸ்க்ரீம் அனைத்தையும் உண்ணாமல் இருந்தால் என்ன? நான் விதண்டாவாதத்துக்காக சொல்லவில்லை! நீங்களும் செய்றீங்களா? னு கேட்டால் அதற்கு இந்த யோக்கியர்களிடம் பொதுவாக பதில் கெடையாது. ஏன் என்றால்  மாட்டை ஏமாற்றி பால் கறந்து இவர்கள் வாழவேண்டிய கட்டாயம்! மாட்டை ஏமாற்றித்தான் இவங்க வாழனும்னு நம்ம பகவான் செய்த கொடுமை!

ஒருவேளை பசும்பால் குடிப்பதை கேலி பண்ணுவதைப் பார்த்து, ரோசமாக, கன்றுக்கு சேர வேண்டிய பாலைக் குடிக்கிறதை, மோரைக் குடிப்பதை, பாலால் தயாராகும் எந்தப் பொருளையும் சாப்பிடுவதை  நிறுத்துவார்கள்னு நெனச்சுப்புடாதீங்க.  ஒருபோதும் மாட்டார்கள்! ஏன்? முடியாது! அதான் ஏன்? கேவலம் இவங்களும் மனுசங்கதான்!

ஆனால், இவங்களால முடியாது என்பதால், இவங்களைப் பொறுத்த வரையில் அப்படி மாட்டை ஏமாத்துறதெல்லாம் பெரிய தப்பில்லை! அதுவும் மாட்டுக்கு இதெல்லாம் புரியாது! இல்லையா? எப்படியோ மாட்டுக்காக கண்ணீர் வடித்து மாடு சாப்பிடுறவனை கேவலப்படுத்துவதுதான் இவங்க முயற்சினு இவங்களுக்கே தெரியாது. அம்பூட்டு அறியாமை!

சரி, மாட்டை ஏமாத்தி  பால் கறக்கிறது, கொல்றது, சாப்பிடுறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த பசு மாடு இந்த நாட்டை "பொல்லூட்" பண்ணி சீரழிக்கிதுனு இப்போ கண்டுபிடிச்சு இருக்காங்கலாம். இதென்னங்க, பசு மாடென்ன காரா இல்லை பஸ்ஸா? அதெப்படி பொல்லூட்ட் செய்யும்?  அதாவது மாடுவிடும் ஏப்பத்தில் நெறையா மெத்தேன் வெளிவருதாம்! அதுக்கு ஏதோ நாலு வயிறு இருக்காம், மொதல் வயிற்றில் மொதல்ல சாப்பிட்ட்தை எல்லாம் பாதி அரச்சு அதை ரெண்டாவது வயித்துக்கு கொண்டு செல்லுமாம். அபப்டி செய்யும்போது மெத்தேன் வெளிவருமாம் (ஏப்பம் இடும்போது).

எம்பூட்டுங்கனு கேட்டால், 220 லிட்டர் மெத்தேன் ஒரு நாளைக்கு ஒரு மாடு வெளியேற்றுதுனு சொல்றாங்க!!! அதனால என்ன? அது மெத்தேன்! கொள்ளி வாயு! அதை நம்ம பிடிச்சு, ஏதாவது எரிபொருளாக்கிக்க வேண்டியதுதானே? அதெல்லாம் "காஸ்ட் எஃபக்டிவ்" கெடையாதாம். அந்த மெத்தேன் எல்லாம் நம்ம ஓசோன் லேயரைப் போயி காலி பண்ணுதாம். அதனால் நிறைய மாடுகளை நாம் பால் தேவைக்காக உருவாக்குவதுலகூட தப்பு இல்லையாம்! அதை கொன்னு சாப்பிடுவதற்காக அதை  உருவாக்குவது ரொம்ப ரொம்ப தப்பாம்.

என்னங்க இது, உங்க லாஜிக்ப்படி பார்த்தால் அதை சீக்கிரமே கொன்னால், அது ஒரு நாளைக்கு 220 லிட்டர் மெத்தேன் உருவாக்குவது நின்னுடுமே? அது நம்ம நாட்டுக்கு நல்லதுதானே? அது நம்ம ஓசோன் லேயரை காப்பாத்த உதவுமே? அதை வச்சு ஏமாத்தி அதுட்ட பால் கறந்துக்கிட்டே இருந்தால் இன்னும் நம்ம மெத்தேன் உருவாக்குவது அதிகமாகுமே?ரொம்ப குழப்பாதீங்கனு மொறைக்காதீங்க!

சரி, ஒரு மாடு ஒரு நாளில், 220 லிட்டர் மெத்தேன்னா கொஞ்ச அதிகமாகத் தெரியுதே?னு மண்டை காயாதீங்க.

22.4 லிட்டர் வாயு மெத்தேன் = 16 கிராம் மெத்தேன் என்பதை நீங்க உணரனும். ஒரு  வாயுவை லிட்டர் கணக்கில் சொல்வதால் இங்கே நீங்க கவனமாக இருக்கனும். 160 கிராம் (~220 லிட்டர்) ஒரு நாளைக்கு ஒரு மாடு வெளியிடுதுனு சொல்லலாம். அப்படி சொன்னா கொஞ்சம் சென்ஸிபிளா, அர்த்தமாகத்தான் இருக்கும்.

இந்த மாடு, மெத்தேன் தியரி எல்லாம் நான் நம்பவேயில்லை. மாடு வளர்த்து, அதுவிடும் ஏப்பத்திலிருந்து  நாடு பாழாப்போயிடும்னு அறிவியல் சொன்னால் அது அரைகுறை அறிவியல்னுதான் எனக்குத் தோனுது! 

என்ன சொல்ல வர்றேன்னா...

1) மாடு, மெத்தேன் (CH4) பற்றியெல்லாம் ஒரு பதிவு எழுதினால் மாற்றுக்கருத்து பின்னூட்டத்தையும் வெளியிட பழகிக்கனும். சும்மா genuine பின்னூட்டத்தை எல்லாம் தன் கருத்தை பாதிப்பதுபோல் இருப்பதால் வடிகட்டுவதில் என்ன நியாயம் இருக்கு? எங்க தளத்திலேயே நாங்க  சொல்ல வந்ததை சொல்ல முடியாதா என்ன?

2) மேலும் மாட்டை கொல்லுவதை மாடு சாப்பிடுறவன் எல்லாம் ரசிக்கவில்லை! அதை சரி என்று முழுமனதாக யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நீங்க எப்படி மாட்டை ஏமாத்தி பால் கறக்கிறீங்களோ, அதை பால் குடிக்கும்போது, சாக்லேட் சாப்பிடும்போது யோசிக்காமல் ருசிக்கிறீங்களோ அதே மாதிரித்தான்.

3) மாடும் ஒரு காலத்தில் வனவிலங்காகத்தான் இருந்து இருக்கும். அதை மனிதன் தன் தேவைக்காக பால் திருடுவதற்காக் "தெய்வமாக்கி" கொண்டான்னு நான் நம்புறேன்.

4) மாட்டுக்காக வக்காலத்து வாங்கும் நீங்க பால் திருடாமலும் வாழலாம்! ஏன் மாட்டை வளர்த்து அதை ஏமாத்தி வாழுறீங்க? எனிவே, உங்களைப் போலவே, மாடு சாப்பிடுறவங்க, பலமடங்கு குற்ற உணர்வுடந்தான் இருக்காங்க, இருப்பாங்க. நீங்க எப்படி திருட்டுப் பால் குடிப்பதை நிறுத்தமுடியலையோ அதேபோலதான் இங்கேயும்.

5) மற்றபடி ஏதாவது ஒருவகையில் இதையெல்லாம் காட்டி நீங்க மற்றவர்களைவிட உயர்ந்தவர்னு காட்டவேண்டிய அவசியமே இல்லை! அப்படி நீங்க செய்யும்போது நீங்க  மாடு கொல்றவா, திங்கிறவா எல்லாரையும்விட ரொம்ப கீழே போயிடுறீங்க என்பதே உண்மை!

47 comments:

Anonymous said...

dei venru . nee enna dhan katthinaalum pasumaadu dheivam dhaanda. edho ezhudha oru chance google kudutthuduchu. udane ulagathula nadakkaradha thatti ketkaren nu pudungi madhiri ezhudhura. nee maatu kari sapdra. adha india la peruvaariyaana makkal otthukkala. unakku kaduppu. andha kaduppula hindu kala thitra. mulu paalayum katrukuttiya kudikka vechu adhu enna aagudhu nu paaru. adhukku bedhi vandhudum, dei naaye. nee ellam maadu valartthu irukkaya da? naaayoda vaalra ungalukkellam eppudi datheriyum pasu maadoda punidham. yen? naaya saappuden. naai kari saapududa. yeli kari saapudu? edha thinradhunnu oru vevastthaye illayada? yen yeli yayum naayayum vittu vechurikkinga? adhayum saappida vendiyadhu dhana? dei loose. non-veg illama vaazha mudiyum. aana paal, thayir, more, nei, illama neeyum un kudumbatthilullavangalum iruppingalada? manidhanukku ivvalavu upakaaramaaga irukkum maadai kolgiravan tholai uritthaal dhaan andha valayai unnai ponra paavigalukku theriyum. nee mudhalla thirundhu apparam adutthan kuraiya thati ketkkalaam. vandhuttan pudungi, poda....

விருச்சிகன் said...

மனுஷன் நல்ல பல வகை பருப்புகளை தின்னுட்டு குசு உடறானே.. அதிலே மீதேன், கரியமில வாயு எல்லாம் இல்லிங்கள? அது ஒசான் லேயர்ல ஓட்டை போதாதா? அப்போ, மனுஷன கூட குசு உட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே கொன்னுடலாமா?

Anonymous said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு .. மாட்டுக் கறி உண்பது தவறென்றால், பால் கறந்துக் குடிப்பதும் தவறு தான் .... !!!

மாடு என்றில்லை விலங்குகள் இறைச்சிக்காக வியாபார மயமாக்கப் படும் போது எண்ணற்ற சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என்பதையும் மறுக்க முடியாத ஒன்று தான்..

வியாபார மயமாக்கப்பட்ட இறைச்சிகள் பல குப்பைகளில் தான் கடைசியில் போய் சேர்கின்றது .... !!!

மற்றப்படி மீதேன் வாயு மாடுகளால் மட்டுமல்ல பல்வேறு எண்ணற்றக் காரணங்களால் ஏற்படத் தான் செய்கின்றன. அனைத்தையும் தடுக்க அல்லது குறைக்க முயல்வது நல்லது ..

Robin said...

//பசு மாடு உங்களுக்காகவா பால் தயாரிச்சு கொடுக்கிது? அது அதனுடைய கன்றுக்காக அல்லவா பால் சுரக்குது? அதை ஏமாத்தி இல்லங்க நம்ம பால் கறக்கிறோம்? அதே பெரிய பாவம்தான்.// சரியான கேள்வி.

Jayadev Das said...

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாமா வேண்டாமா என்று தயங்கினேன், இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் மட்டும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் மேல் துவேஷம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்கு வெளியில் வந்து நின்று இந்த பிரச்சினையைப் பாருங்கள். தங்களுகளுடைய தாய் தந்தையரை கடைசி வரை வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கும் என நினைக்கிறேன். என்ன காரணம், தாய் ஈன்றெடுத்து பால் புகட்டியவள். தந்தை உழைத்து தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர். அவர்கள் செய்தற்கு நாம் ஒரு போதும் கடனை அடைக்க முடியாது, ஆனால் நன்றியோடு இருக்க முடியும். இன்றைக்கு 90 % பிள்ளைகள் தாய்ப் பாலை நம்பிப் பிறப்பதில்லை, தாயிடம் பாலில்லை, பசுவின் பாலை நம்பியே பிறக்கின்றன. எத்தனையோ மிருங்கங்கள் பால் கொடுத்தாலும் பசுவின் பாலை ஏன் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். மேலும், நாமும் பால், பால் பொருட்கள் உட்கொள்ளாமல் வளர்ந்துவிடவில்லை. நம்மை ஈன்றேடுத்தவள் மட்டும் தாய் இல்லை. நமக்கு உணவு வழங்கும் நிலம், மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவச்சி, பசு, ஆசிரியரின் மனைவி இவர்களும் நமக்கு தாய் போலத்தான். நமக்கு தந்தை உழைப்பதைப் போல நிலத்தில் உழுவதற்கு, விலை பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, நெர்ப்பயிரில் இருந்து தானியத்தைப் பிரிபதர்க்கு என எண்ணற்ற வழிகளில் எருது உழைக்கிறது. அந்த வகையில் ஒரு தந்தையைப் போல என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல பசுவின் சாணத்தில் கிரிமி நாசினி குணம் இருக்கிறது அதை பூசி மெழுகும் இடத்தில் கிருமிகள் இன்றி சுத்தமாக இருக்கும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. பசுவின் கோமியம், சாணம், அதை எரித்தால் கிடைக்கும் சாம்பல், நெய் இவை அத்தனையிலும் மருத்துவ பயன்பாடுகள் உள்ளன, அவை மருந்துப் பொருட்களாகவும் கிடைகின்றன. எத்தனையோ மிருகங்கள் இருந்தாலும் நமக்கு இந்த அளவுக்கு ஜீவாதாரமாக இருக்கும் பசுவுக்கும், எருதுவுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் அவற்றை வெட்டி தின்னுவதுதானா?

Jayadev Das said...

\\மாட்டுப்பால் குடிக்கிறதையும் நிறுத்திடுறேன். அதெல்லாம் அதனுடைய கன்றுக்குப் போவதுதான் சரி!\\ நீங்கள் உண்ணும் பழங்கள் கூட உங்களுக்காக இல்லை, அதன் உள்ளே இருக்கும் மரத்தின் விதைக்கு முளைப்பதற்கு வேண்டிய சக்திக்காகத்தான், அதே மாதிரி எந்த தானியமும் அதன் இன விருத்திக்காகத்தன் உள்ளது, அப்போ பழங்கள், தானியங்கள் உண்ணவே கூடாது என்றாகி விடுமா? இறைவன் படைப்பில் [உங்கள் மொழியில் இயற்கையில்] உங்களுக்கான உணவு அவ்வாறு கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு மாமரம் தன் வாழ்நாளில் லட்சக் கணக்கில் கூட காய்க்கும், அவை எல்லாமும் மரமாக முடியுமா? பின்னர் ஏன் அவ்வளவு காய்க்கிறது? மற்ற ஜீவன்கள் உன்னத்தான். பசு நேரிடையாக உங்களிடம் வந்து பாலை எடுத்துக் கொள் என்று சொல்லாது. அதன் கன்றுக் கொஞ்சம் தந்தாள் போதும் அதுவும் ஆரோக்கியமாக வளரும், மீதம் மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், ஒரு ஜீவனையே கொன்று உண்ணுவது சரி என்று எண்ணமிருந்தால், அதன் பாலை எடுப்பதற்கு கூக்குரளிடலாமா? பாலை எடுத்துக் கொண்டால் அந்த ஜீவன் உயிர் போய் விடுமா?

Jayadev Das said...

\\இந்த பசு மாடு இந்த நாட்டை "பொல்லூட்" பண்ணி சீரழிக்கிதுனு இப்போ கண்டுபிடிச்சு இருக்காங்கலாம். இதென்னங்க, பசு மாடென்ன காரா இல்லை பஸ்ஸா? அதெப்படி பொல்லூட்ட் செய்யும்? அதாவது மாடுவிடும் ஏப்பத்தில் நெறையா மெத்தேன் வெளிவருதாம்! அதுக்கு ஏதோ நாலு வயிறு இருக்காம், மொதல் வயிற்றில் மொதல்ல சாப்பிட்ட்தை எல்லாம் பாதி அரச்சு அதை ரெண்டாவது வயித்துக்கு கொண்டு செல்லுமாம். அபப்டி செய்யும்போது மெத்தேன் வெளிவருமாம் (ஏப்பம் இடும்போது).\\

நீங்கள் சுவாசிக்கும் போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறீர்கள், உங்களுக்கே தெரியும் இந்த வாயு வலி மண்டலத்தில் அதிகமாவது சுற்றுப் புறச் சூழலுக்கு உகந்ததல்ல. அதற்காக மனிதர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளி விடலாம் என்று அர்த்தம் கொள்ளலாமா? இயற்கையில் [இறைவன் படைப்பில்] ஒன்று செய்யும் அசுத்தத்தை இன்னொன்று சுத்தம் செய்யும். நீங்கள் வெளியிடும் CO2 எடுத்துக் கொண்டு O2 ஆக மாற்றத்தான் மரங்களை ஆண்டவன் படைத்திருக்கின்றானே!! பசுக்கள் காலம் காலமாக இருந்துதான் வந்தன. ஆனால் ஓசோனில் ஓட்டையை எற்ப்படுத்தினவா? அவை வெளியிடுவதை மாற்ற இயற்கையில் வேறொன்று இருக்கும், நீங்கள் அளவுக்கு மீறி கார்கள், ஃ பிரிஜ்கள் பயன்படுத்தியதால் வந்த வினை இது.

Jayadev Das said...

இன்றைக்கு எருதுகளா நமக்கு பயன் படுகின்றன, டிராக்டர் தானே விவசாயம் பார்க்கிறது என நீங்கள் கேட்கலாம்? இந்த டீசல், பெட்ரோல் இன்னும் பத்து இருபது வருடங்களுக்கு மேல் வராது, அப்புறம் என்ன செய்வீர்கள்? இயற்க்கை வழி நடப்பதுதான் என்றைக்கும் மனிதனைக் காக்கும். மனிதன் கண்டுபிடித்த வழிகள் அவனுக்கே ஆபத்தாகத்தான் முடியும்.

இறுதியாக, பசுவின் இரத்தம் வேண்டுமென்றால், அதனுடைய பாலை எடுத்துக் கொள்ளுங்கள், பால் இரத்தத்தின் உருமாற்றம் தான், அதில் நூற்றுக் கணக்கான பதார்த்தங்களைச் செய்ய முடியும், இவை மாமிசத்தை விட ஆயிரம் மடங்கு சுவையாகவும் இருக்கும். அப்படியே அதன் மாமிசம் வேண்டுமென்றால், அவை செத்த பின்னர் சாப்பிடுங்கள். என்ன கெட்டு போச்சு?

கண்ணன் சந்திரன் said...

பசுவிடம் இருந்து நீங்கள் என்னதான் முயன்றாலும் பாலை திருட முடியாது. அதுவா கொடுத்தால் தான் உண்டு. பால் கொடுப்பதற்க்கும் திருடுவதற்க்கும் கூட வித்யாசம் தெரியாத நீங்கெள்ளாம் ஏன் பதிவு எழுதுறிங்க.

பெரியதனக் காக்கா பீ திங்கப் போச்சாம் இறகெல்லாம் பீயாச்சாம் - பழமொழி.

Sasi Kala said...

மாட்டுக் கறி உண்பது தவறு என்பதே என் கருத்து.

வருண் said...

OpenID e956f06c-c70d-11e1-b7bd-000bcdcb5194 said...

அண்ணே

ரொம்ப டென்சன் வேணாம். உங்க உணர்ச்சிகள் எனக்குப் புரியுது. ஆனால் மேலை நாட்டில் பலர், நீங்க மாட்டுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பால் குடிப்பதை நிறுத்தினால் நல்லதுனு சொல்லுவாக. அவங்க சொல்றதும் நியாயம்தானே

அப்புறம் கொரியாவில் நாயும் சாப்பிடுறாங்க.

நம்ம ஊர்லயே ஏழைகள் எலி சாப்பிடுவதை டி வி ல காட்டுறாக

உங்க கருத்துக்கு நன்றி. )

வருண் said...

***விருச்சிகன் said...

மனுஷன் நல்ல பல வகை பருப்புகளை தின்னுட்டு குசு உடறானே.. அதிலே மீதேன், கரியமில வாயு எல்லாம் இல்லிங்கள? அது ஒசான் லேயர்ல ஓட்டை போதாதா? அப்போ, மனுஷன கூட குசு உட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே கொன்னுடலாமா?***

உண்மைதாங்க, விருச்சிகன்!


The major components of the flatus, which are odorless, by percentage are:[4]

Nitrogen: 20–90%
Hydrogen: 0–50%
Carbon dioxide: 10–30%
Oxygen: 0–10%
Methane: 0–10%
The gas released during a flatus event frequently has an unpleasant odor. For many years, this was thought to be due to skatole and indole, which are byproducts of the digestion of meat. However, gas chromatography testing in 1984 revealed that sulfur-containing compounds, such as methanethiol, hydrogen sulfide (rotten egg smell) and dimethyl sulfide, were also[2] responsible for the smell.[3]

மனுசனை எல்லாம் கொன்னுப்புட்டா இவ்வுலகம் சொர்க்கபூமியாகிவிடும்! -)

மாயன்:அகமும் புறமும் said...

கேள்விகளெல்லாம் சரியான கேள்விதான். கேட்டவிதம் ஜெயதேவதாஸ் சொன்னமாதிரி ஏதோ தனிப்பட்ட தாக்குதல் மாதிரி கேட்கிறீர்கள்.

அவர் சொன்ன எருது உதாரணம் மாதிரி நாம் நிரந்தரமாக பெட்ரோலையே பயன்படுத்தப் போவதில்லை.நிச்சயம் பழைய முறைக்கு கணிசமான அளவு போகத்தான் போகிறோம்.எரிபொருளின் அளவு குறைந்துகொண்டேதான் வருகிறது.

வருண் said...

***இக்பால் செல்வன் said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு .. மாட்டுக் கறி உண்பது தவறென்றால், பால் கறந்துக் குடிப்பதும் தவறு தான் .... !!!

மாடு என்றில்லை விலங்குகள் இறைச்சிக்காக வியாபார மயமாக்கப் படும் போது எண்ணற்ற சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என்பதையும் மறுக்க முடியாத ஒன்று தான்..

வியாபார மயமாக்கப்பட்ட இறைச்சிகள் பல குப்பைகளில் தான் கடைசியில் போய் சேர்கின்றது .... !!!

மற்றப்படி மீதேன் வாயு மாடுகளால் மட்டுமல்ல பல்வேறு எண்ணற்றக் காரணங்களால் ஏற்படத் தான் செய்கின்றன. அனைத்தையும் தடுக்க அல்லது குறைக்க முயல்வது நல்லது ..
5 July 2012 8:55 PM ***

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, இக்பால் செல்வன்! :)

வருண் said...

***Robin said...

//பசு மாடு உங்களுக்காகவா பால் தயாரிச்சு கொடுக்கிது? அது அதனுடைய கன்றுக்காக அல்லவா பால் சுரக்குது? அதை ஏமாத்தி இல்லங்க நம்ம பால் கறக்கிறோம்? அதே பெரிய பாவம்தான்.// சரியான கேள்வி.

5 July 2012 8:56 PM***

வயக்காட்டில், மந்தையில் திரிகிற மாடுகளுக்கு நம்ம வீட்டில் வளர்க்கும் மாடுகளைவிட சுதந்திரம் அதிகம்ங்க. பாவம், 24 மணி நேரமும் அதை கட்டிப்போட்டு, அதுக்கு சாப்பாடு போட்டு, நமக்குத் தேவையானதை அதனிடம் இருந்து எடுத்துக்கொண்டு அதை வணங்கினால் அதற்கு தெய்வ மரியாதை கொடுப்பதாக ஆகிவிடுமா?

அது சுதந்திரம் உள்ள சாதாரண விலங்காகத்தான் இருக்க ஆசைப்படும். நிச்சயமாக கட்டிப்போடப்பட்டிருக்கும் தெய்வமாக அல்ல!

வருண் said...

***Jayadev Das said...

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாமா வேண்டாமா என்று தயங்கினேன், இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் மட்டும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் மேல் துவேஷம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்கு வெளியில் வந்து நின்று இந்த பிரச்சினையைப் பாருங்கள். தங்களுகளுடைய தாய் தந்தையரை கடைசி வரை வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கும் என நினைக்கிறேன். என்ன காரணம், தாய் ஈன்றெடுத்து பால் புகட்டியவள். தந்தை உழைத்து தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர். அவர்கள் செய்தற்கு நாம் ஒரு போதும் கடனை அடைக்க முடியாது, ஆனால் நன்றியோடு இருக்க முடியும். இன்றைக்கு 90 % பிள்ளைகள் தாய்ப் பாலை நம்பிப் பிறப்பதில்லை, தாயிடம் பாலில்லை, பசுவின் பாலை நம்பியே பிறக்கின்றன. எத்தனையோ மிருங்கங்கள் பால் கொடுத்தாலும் பசுவின் பாலை ஏன் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். மேலும், நாமும் பால், பால் பொருட்கள் உட்கொள்ளாமல் வளர்ந்துவிடவில்லை. நம்மை ஈன்றேடுத்தவள் மட்டும் தாய் இல்லை. நமக்கு உணவு வழங்கும் நிலம், மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவச்சி, பசு, ஆசிரியரின் மனைவி இவர்களும் நமக்கு தாய் போலத்தான். நமக்கு தந்தை உழைப்பதைப் போல நிலத்தில் உழுவதற்கு, விலை பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, நெர்ப்பயிரில் இருந்து தானியத்தைப் பிரிபதர்க்கு என எண்ணற்ற வழிகளில் எருது உழைக்கிறது. அந்த வகையில் ஒரு தந்தையைப் போல என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல பசுவின் சாணத்தில் கிரிமி நாசினி குணம் இருக்கிறது அதை பூசி மெழுகும் இடத்தில் கிருமிகள் இன்றி சுத்தமாக இருக்கும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. பசுவின் கோமியம், சாணம், அதை எரித்தால் கிடைக்கும் சாம்பல், நெய் இவை அத்தனையிலும் மருத்துவ பயன்பாடுகள் உள்ளன, அவை மருந்துப் பொருட்களாகவும் கிடைகின்றன. எத்தனையோ மிருகங்கள் இருந்தாலும் நமக்கு இந்த அளவுக்கு ஜீவாதாரமாக இருக்கும் பசுவுக்கும், எருதுவுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் அவற்றை வெட்டி தின்னுவதுதானா?

5 July 2012 10:14 PM***

பசு எருதுகளை நாம் நம் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதால் (பாலுக்கும், உழவு செய்யவும்), அதற்கு நன்றியுடன் இருக்கனும்னு நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க.

நீங்க கவனித்துப் பார்த்தால் மனிதனின் சுயநலம்தான் இதிலும் இருக்குனு தெரியும்.

நிச்சயமாக பசு தன் பாலை மனுஷனுக்கு கொடுக்கவோ அல்லது மனுசன் வயலில் உழுது வொர்கவ்ட் செய்யவோ ஆசைப்படாதுனு நான் நினைக்கிறேன்.

மனிதர்கள் தங்கள தேவைக்கு அவைகளை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மனதிருப்திக்கு அந்தப் பாவத்தைக் கழுவ அதை தெய்வமாக்கிறார்கள் என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோனுது.

வருண் said...

***Jayadev Das said...

\\மாட்டுப்பால் குடிக்கிறதையும் நிறுத்திடுறேன். அதெல்லாம் அதனுடைய கன்றுக்குப் போவதுதான் சரி!\\ நீங்கள் உண்ணும் பழங்கள் கூட உங்களுக்காக இல்லை, அதன் உள்ளே இருக்கும் மரத்தின் விதைக்கு முளைப்பதற்கு வேண்டிய சக்திக்காகத்தான், அதே மாதிரி எந்த தானியமும் அதன் இன விருத்திக்காகத்தன் உள்ளது, அப்போ பழங்கள், தானியங்கள் உண்ணவே கூடாது என்றாகி விடுமா?***

தாவரங்களை எப்படி குற்ற உணர்வு இல்லாமல் பயன்படுத்துகிறோமோ, அதேபோல்தான் விலங்குகளையும் ஒரு சிலர் கொன்று உண்று வாழ்றாங்க. அவர்களைப் பொருத்தவரையில் தாவரங்களும் விலங்குகளும் இவர்களுக்காக கடவுள் படைத்துக் கொடுத்தவை. எல்லாத்தையும் செஞ்சுட்டு கடவுளிடம் மன்னிப்பும் கேட்டு வாங்கிக்கிறாங்க! இவர்கள்தான் மனிதர்கள்!

வருண் said...

***நீங்கள் சுவாசிக்கும் போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறீர்கள், உங்களுக்கே தெரியும் இந்த வாயு வலி மண்டலத்தில் அதிகமாவது சுற்றுப் புறச் சூழலுக்கு உகந்ததல்ல. அதற்காக மனிதர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளி விடலாம் என்று அர்த்தம் கொள்ளலாமா?***

நீங்க என்ன சொல்லுங்க, 6 அறிவு படைத்த மனிதன்ந்தான் உலகில் மிகவும் அசிங்கமானவன். இவனுக (மனித இனம்) ஒழிந்தால் இந்த உலகம் சொர்க்கபூமியாக இருக்கும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! They did not do anything good to this world. All they do is BAD to the world!

வருண் said...

***கண்ணன் சந்திரன் said...

பசுவிடம் இருந்து நீங்கள் என்னதான் முயன்றாலும் பாலை திருட முடியாது. அதுவா கொடுத்தால் தான் உண்டு.***

நீங்க சீரியஸாத்தான் சொல்றீங்களா, சார். எந்த மாடும் உங்களுக்கு சொம்புல பால் கொண்டு வந்து கொடுப்பதில்லை. நீங்கதான் உங்க் தேவைக்காக, அதை தெய்வமாக்கி, அதனிடம் உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கிறீங்க!

என்ன சார், நீங்க! சின்னப்புள்ளத்தனமாக! :(

வருண் said...

***Sasi Kala said...

மாட்டுக் கறி உண்பது தவறு என்பதே என் கருத்து.

6 July 2012 2:14 AM***

மாட்டுக்கறி மட்டுமில்லங்க எந்தக்கறி சாப்பிடுவதும் தப்புத்தான்! தங்கள் கருத்துக்கு நன்றிங்க, சசிகலா! :)

ரங்குடு said...

தம்பி வருண் (இல்லை வருண்அண்ணா):
இதெல்லாம் மனசப் பொருத்த விஷயம். ஒர் உயிரக் கொன்னு அதைச் சாப்பிடுவது சிலருக்குச் சரியாகப்படலாம். சிலருக்குத் தப்பாகப் படலாம். அதனால இவிங்க அவங்களைப் போட்டுத்தாக்குறதும், அவிய்ங்க இவங்களக் கடையறதும் தேவையில்லாத வேலை.


ஒரு (பச்சையான உதாரணம் சொல்றேன்). என்னதான் பொம்பளங்க ஆனாலும், ஒங்க தாயையோ, சகோதரியையோ பொண்டாட்டி மாதிரி நினைப்பீங்களா? (அப்படியும் சிலர் இருக்காங்க). ஏன் அந்தப் பசுமாடு மாதிரி அவங்களை ஒரு பொண்ணாப் பாக்கக் கூடாது?

ஆனா, முதலில் பிறந்த ஆணும், பொண்ணும் அப்படி நினத்திருந்தால் இன்னிக்கு நீங்களும், நானும் இருக்க முடியாது.

புரியும்னு நினக்கிறேன்.

வருண் said...

***மாயன்:அகமும் புறமும் said...

அவர் சொன்ன எருது உதாரணம் மாதிரி நாம் நிரந்தரமாக பெட்ரோலையே பயன்படுத்தப் போவதில்லை.நிச்சயம் பழைய முறைக்கு கணிசமான அளவு போகத்தான் போகிறோம்.எரிபொருளின் அளவு குறைந்துகொண்டேதான் வருகிறது.***

பாவம் எருதுகள். :-( மறுபடியும் மனிதன் அவைகளை சித்ரவதை செய்யப்போகிறான். :-(

வருண் said...

***ரங்குடு said...

தம்பி வருண் (இல்லை வருண்அண்ணா):
இதெல்லாம் மனசப் பொருத்த விஷயம். ஒர் உயிரக் கொன்னு அதைச் சாப்பிடுவது சிலருக்குச் சரியாகப்படலாம். சிலருக்குத் தப்பாகப் படலாம். அதனால இவிங்க அவங்களைப் போட்டுத்தாக்குறதும், அவிய்ங்க இவங்களக் கடையறதும் தேவையில்லாத வேலை.***

ஆமாண்ணா, மனதை அதற்க்கேற்றார்ப்போல் (செய்ற பாவத்திற்கேற்றார்போல) கடவுள் துணையுடன் பக்குப்படுத்திக்கிறான் மனிதன்!

ராவணன் said...

சமஸ்கிருதத்தில் பசு என்றால் விலங்கினம். நீங்கள் கூறுவதுபோல் நினைப்பது போல் கிடையாது. பசு என்றால் வெறும் பசுமாடு மட்டும் இல்லை.

பிராமணர்கள் பசு என்றால் பசுமாட்டை மட்டுமே இப்போது பிடித்துத் தொங்குகிறார்கள்.

விலங்கினங்களின் கொழுப்பிலிருந்தே எண்ணெய், நெய், வெண்ணெய் என்று உருவாக்கி உண்டனர். அதை அதிகமாக உண்டு கொழுத்த பிரிவினிரே பிராமணர்.

நீ என்ன பசுவா..இல்லை மனிதனா? என்றே தெலுங்கு கன்னட மொழிகளில் பேசுவார்கள். அதாவது நீ என்ன விலங்கா...இல்லை மனிதனா?

நம்பள்கி said...

யாரோ ஒருவர் பசுவிடம் இருந்து பால் பக விருப்பப் படாமல் எடுக்க முடியாது ஏன்று சொல்பவது ஒரு தாமாஷ்!

இங்க ஏது கன்னுக்குட்டி, மெஷினை மாட்டுனா பால் தான வந்து கொட்டும்! முன்பு சென்னையில் மாடுகள் இருந்த பொது, கண்ணுக்குட்டியை கொன்று, அதில் வைக்ககோலை அடைத்து, மாட்டை நக்க விட்டா பால் தான கொட்டும்; இது திருட்டு மற்றும் இல்லை ஏமாற்றும் வேலை; அதுவும் ஒரு மிருகமிடம்!

வருண் said...

ஜெயவேல் & அகமும் புறமும்:

சொல்ல மறதுட்டேன். அப்புறம் தெய்வமான "எருதுகளை" காயடிக்கிறீர்க்ளே இவர்கள் தேவைக்காக! அதெல்லாம் மனிதனுடைய வடிகட்டின சுயநலம்! தேவைக்கு காளையை காயடித்துக்கொள்வார்கள், இந்தப்பக்கம் தெய்வம்னு சொல்லிக்குவாங்க! என்ன இரட்டை வேடம்!!!

வருண் said...

***ராவணன் said...

சமஸ்கிருதத்தில் பசு என்றால் விலங்கினம். நீங்கள் கூறுவதுபோல் நினைப்பது போல் கிடையாது. பசு என்றால் வெறும் பசுமாடு மட்டும் இல்லை.***

வாங்க ராவணன். சஸ்கிரதத்தில் பசுனா விலங்குனு நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுக்கிறேன். நன்றி :)

வருண் said...

***நம்பள்கி said...

யாரோ ஒருவர் பசுவிடம் இருந்து பால் பக விருப்பப் படாமல் எடுக்க முடியாது ஏன்று சொல்பவது ஒரு தாமாஷ்!

இங்க ஏது கன்னுக்குட்டி, மெஷினை மாட்டுனா பால் தான வந்து கொட்டும்! முன்பு சென்னையில் மாடுகள் இருந்த பொது, கண்ணுக்குட்டியை கொன்று, அதில் வைக்ககோலை அடைத்து, மாட்டை நக்க விட்டா பால் தான கொட்டும்; இது திருட்டு மற்றும் இல்லை ஏமாற்றும் வேலை; அதுவும் ஒரு மிருகமிடம்!***

வாங்க நம்பள்கி. அது மிருகம் இல்லைங்க, தெய்வம்னு வேற சொல்லிக்கிறாங்க!!!!

Jayadev Das said...

\\பசு எருதுகளை நாம் நம் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதால் (பாலுக்கும், உழவு செய்யவும்), அதற்கு நன்றியுடன் இருக்கனும்னு நீங்க சொல்றது எனக்குப் புரியுதுங்க.\\ மாடாய் உழைத்தேன் என்ற சொல்வழக்கில் வரும் அளவுக்கு உழைப்பது எருது, தன் வாழ் நாள் பூராவும் இரத்தைத்தை பாலாகக் கொடுத்து, தாய் ஸ்தானத்தில் இருப்பது பசு. இதுக்கு நீங்க நன்றி கூட சொல்ல வேண்டாம், அவைகளிடமிருந்து இத்தனையும் எடுத்துக் கொண்ட பின்னர், அவற்றை கொன்று தின்பேன் என்ற என்னத்தை மட்டும் விட்டாலே போதும், அதுவே நீங்கள் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

\\நீங்க கவனித்துப் பார்த்தால் மனிதனின் சுயநலம்தான் இதிலும் இருக்குனு தெரியும்.

நிச்சயமாக பசு தன் பாலை மனுஷனுக்கு கொடுக்கவோ அல்லது மனுசன் வயலில் உழுது வொர்கவ்ட் செய்யவோ ஆசைப்படாதுனு நான் நினைக்கிறேன்.

மனிதர்கள் தங்கள தேவைக்கு அவைகளை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மனதிருப்திக்கு அந்தப் பாவத்தைக் கழுவ அதை தெய்வமாக்கிறார்கள் என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோனுது.\\

இயற்கையில் ஒவ்வொரு உயிரும் வாழ இன்னொன்றைச் சார்ந்து தான் இருக்கின்றன. மனிதனும் அதற்க்கு விதி விலக்கல்ல. எவை எவற்றிடமின்று எதைப் பெற வேண்டும் என்பது தான் கேள்வி. எந்த மிருகமும் மற்றவர்களுக்கு உழைக்க ஒப்புக் கொள்ளாதுதான். தாவரங்கள் கூட தானியத்தையோ, பழங்களையோ நமக்காக உற்பத்தி செய்ய வில்லை, ஆனாலும் இயற்கையின் ஏற்ப்பாடு நமக்கு பயன் படுகிறது. எல்லா மிருகத்தையும் மனிதனின் தேவைக்கு ஏற்ப tame செய்ய முடியாது. சிலவற்றை மட்டுமே பழக்க முடியும். இதுவும் இயற்கையின் ஏற்ப்பாடு தான். தாவரங்களிடமிருந்து உணவைப் பெற்றுக் கொள்வதைப் போல, பசு, எருதுகளிடமிருந்து உழைப்பை எடுத்துக் கொள்ளுங்கள். மாமிசம் வேண்டுமா, ஆடோ, கோழியோ உண்ணுங்கள். அப்படியே பசுமாட்டின் மாமிசம் தான் வேண்டுமென்றால் அவை தானாக செத்த பின்னர் உண்ணுங்கள். அவற்றை கொன்று உண்ணுவது தவறல்ல என்று ஒரு புறம் வாதாடும் நீங்கள், அவற்றிடமிருந்து உழைப்பையோ, பாலையோ கூட பெறக்கூடாது என்றும் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டு extreme தான். அதற்க்கு சரியாக கோடு கிழிக்க வேண்டும். அவைகளும் வாழ்ந்து சாகட்டும், நீங்களும் அவற்றின் பயனைப் பெற்று உங்கள் வாழ்வை மேம்படுத்தி கொள்ளுங்கள்,என்பது இந்திய மறை நூல்கள் வழி காட்டுகின்றன. உங்களுக்கு பிராமணர்களைப் பிடிக்காது என்றால் திருக்குறளை பின் பற்றுங்கள். கொல்லாமை, ஊன் உண்ணாமை, நன்றி மறவாமை குறித்து என்ன சொல்கிறாரோ அதையாவது பின்பற்றுங்கள். அவர் பிராமணர் அல்ல, சமஸ்கிரதத்திலும் எழுதவில்லை. தமிழர் தமிழில் எழுதியுள்ளார். அதையாவது ஏற்று நடக்கக் கூடாதா?

Jayadev Das said...

ஒரு திரைப் படத்தில் கொலையாளிகளைப் பார்த்து போலீஸ்காரை, "ஏன்டா கொலை பண்ணி பாவ மூட்டை சேர்த்துக்கிறீங்க" என்று கேட்பார். அதற்க்கு அவர்கள், "நீ வாரம் ஆனால், உன் வீட்டில் கறிக்குழம்பு வேக ஆட்டை போட்டுத் தள்ளுகிறாயே, அது மட்டும் நியாயமா?, அப்ப இதுவும் நியாயம் தான்" என்பான். நீங்கள் மாட்டை ஏன் கொள்ளக் கூடாது என்று Quantum Mechanics வைத்து நிறுவ முடியுமா என்று கேட்கிறீர்கள். எங்களால் அது முடியாது தான். வலியவர்களான நீங்கள் கேட்பாரற்ற ஒரு ஜீவனை, அதுவும் உங்களுக்கு தாய் தந்தையரை இருந்த ஜீவனை கொல்வது சரிதான் என்றால் அது Quantum Mechanics படி தவறல்ல என்றால், தன்னுடைய சுய நலனுக்காக அப்பாவி மக்களை பலியாக்கும் சமூக விரோதி தான் செய்ததும் சரி என்று அந்த திரைப் படத்தில் சொல்கிறானே அதை உங்களால் மறுக்க முடியுமா?

Jayadev Das said...

மாட்டின் கன்றுக்கு பால் தரக்கூடாது என்று அதைக் கொன்று, மாட்டின் பால் சுரக்க ஹார்மோன் ஊசிகளைப் போட்டு பால் கறக்கும் வேலை சென்னையில் நடக்கிறது. அந்த மாடு நோஞ்சானாக இருக்கும், பல முறை இதை நினைத்து நான் அழுததுண்டு. இக்கணம் கூட அதை நினைக்கும் போது என் நெஞ்சு கனக்கிறது. ஆனால் கிராமப் புறங்களில் அவ்வாறு செய்ய மாட்டோம், கன்றுக்கு பால் குடிக்க வைத்து பின்னர் தான் கரைப்போம், கன்றும் நன்றாக வளரும், அது வைக்கோல் புல் உண்ண ஆரம்பித்த பின்னர் அதற்க்கு ஒதுக்கப் படும் பாலின் அளவு குறைக்கப் படும்.

மாட்டுக்கு காயடிப்பதும் தவறுதான், ஆனால் அதைக் கொள்வதை விட மிக மிக குறைவான தவறு.

இறுதியாக, ஒரு பசுவின் முகத்தைப் பார்த்த பின்னர் அதை கொன்று உண்ண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஐயா வருகிறது?

Jayadev Das said...

மாட்டை கொன்று தின்ன அஞ்சா நெஞ்சங்கள் போல, மாட்டின் கன்றை கொன்று, அது பால் சுரக்க ஊசி போடுபவனும் அஞ்சா நெஞ்சனுங்க தான் வேறுபாடு இல்லை.

வருண் said...

நான் மாட்டைக் கொன்று சாப்பிடுவது சரி, அல்லது அப்படி செய்வதில் தவறில்லைனு எங்கேங்க சொல்லியிருக்கேன்??

Jayadev Das said...

\\எப்படியோ மாட்டுக்காக கண்ணீர் வடித்து மாடு சாப்பிடுறவனை கேவலப்படுத்துவதுதான் இவங்க முயற்சினு இவங்களுக்கே தெரியாது. அம்பூட்டு அறியாமை!\\

\\அதை கொன்னு சாப்பிடுவதற்காக அதை உருவாக்குவது ரொம்ப ரொம்ப தப்பாம்.\\


ஆங்கிலத்தில் reading between lines என்ற ஒரு சொல்லாடல் உண்டு. நீங்க எழுதியிருப்பதில் இருந்து அனுமானம் என்ன இருக்க முடியும் என்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் **மாட்டைக் கொன்று சாப்பிடுவது சரி, அப்படி செய்வதில் தவறில்லைனு** சொல்லவில்லை என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

வருண் said...

ஜெயவேல்: நீங்க காட்டிய வரிகளை மட்டும் பார்த்தால் அபப்டித்தான் தோனும்.

இதையும் பாருங்க..

***2) மேலும் மாட்டை கொல்லுவதை மாடு சாப்பிடுறவன் எல்லாம் ரசிக்கவில்லை! அதை சரி என்று முழுமனதாக யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நீங்க எப்படி மாட்டை ஏமாத்தி பால் கறக்கிறீங்களோ, அதை பால் குடிக்கும்போது, சாக்லேட் சாப்பிடும்போது யோசிக்காமல் ருசிக்கிறீங்களோ அதே மாதிரித்தான்.

3) மாடும் ஒரு காலத்தில் வனவிலங்காகத்தான் இருந்து இருக்கும். அதை மனிதன் தன் தேவைக்காக பால் திருடுவதற்காக் "தெய்வமாக்கி" கொண்டான்னு நான் நம்புறேன்.

4) மாட்டுக்காக வக்காலத்து வாங்கும் நீங்க பால் திருடாமலும் வாழலாம்! ஏன் மாட்டை வளர்த்து அதை ஏமாத்தி வாழுறீங்க? எனிவே, உங்களைப் போலவே, மாடு சாப்பிடுறவங்க, பலமடங்கு குற்ற உணர்வுடந்தான் இருக்காங்க, இருப்பாங்க. நீங்க எப்படி திருட்டுப் பால் குடிப்பதை நிறுத்தமுடியலையோ அதேபோலதான் இங்கேயும்.***

மாட்டை ஒரு விலங்காக மதிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம்ம அதை தெய்வம்னு சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்படி "தெய்வம்"னு சொல்ற நம்ம காயடிப்பது, 24 மணி நேரமும் கட்டிப்போடுவது, பொய்கன்னுக்குட்டி காட்டி பால் கறக்கிறது எல்லாம் தப்புனு சொல்ல வர்றேன். நீங்க அதை சின்னத் தப்புனு சொல்றீங்க. நான், அபப்டியில்லை, அவைகள் நம்மால் தவிர்க்கமுடியாத, சரி செய்யமுடியாத தப்புக்கள்னு சொல்றேன்.

நம்மை நாம் சரி செய்ய முயலாமல், மற்றவர்களை எதுக்கு ஏசனும்னு சொல்றேன். அவ்ளோதான்! :)

Jayadev Das said...

நம்ம அதை தெய்வம்னு சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்படி "தெய்வம்"னு சொல்ற \\நம்ம காயடிப்பது, 24 மணி நேரமும் கட்டிப்போடுவது, \\ காயடிப்பது தவறுதான், மாடுகளை கிராமப் புறங்களில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். வண்டி மாடு என்றால் எந்நேரமும் எங்காவது போய்க் கொண்டு இருக்கும்.


\\பொய்கன்னுக்குட்டி காட்டி பால் கறக்கிறது எல்லாம் தப்புனு சொல்ல வர்றேன். \\ இது நகரங்களில் உள்ள கல் நெஞ்சக் காரர்கள் செய்வது, கிராமங்களில் இல்லை.

\\நான், அபப்டியில்லை, அவைகள் நம்மால் தவிர்க்கமுடியாத, சரி செய்யமுடியாத தப்புக்கள்னு சொல்றேன்.\\ மாமிச உணவு மனிதனுக்கு உகந்ததல்ல என்று அறிவியல் சொல்கிறது, அகவே இது தவிர்க்கக் கூடிய ஒன்றுதான்.

http://michaelbluejay.com/veg/natural.html
http://www.eatveg.com/anatomy.htm


\\நம்மை நாம் சரி செய்ய முயலாமல், மற்றவர்களை எதுக்கு ஏசனும்னு சொல்றேன். அவ்ளோதான்!\\ நான் யாரையும் ஏசவில்லை, இறைஞ்சுகிறேன், அவற்றை கொள்ளாதீர்கள் என்று. கடவுளை நேரில் பார்த்தாலும் கூட பசுக்கள் இப்போதுள்ள கொடுமையை அனுபவிக்காத வரம் தா என்று தான் கேட்பேன்.

சுவனப் பிரியன் said...

உடலுக்கு புரத சத்து தருவது மாமிசங்கள் தான். ஏழை குடியானவன் தனது வருமானத்துக்கு தக்க வாரம் ஒரு முறை மாட்டுகறி சாப்பிட்டு தனது ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறான். பால் தராத பசுக்களை கவனிப்பாரற்று ரோட்டோரங்களில் இறந்து சுற்று சூழலை கெடுப்பதை விட மாமிசமாக உட்கொள்தல் நல்லதே!

மாட்டை அறுத்ததற்காக மனுசனையே நான்கு பேரை வட நாட்டில் கொன்றார்களே கொலை செய்த அந்த மாபாதகர்கள் முதலில் திருந்த வேண்டும்.

நம்பள்கி said...

சரி! மாடு சாப்பிடுவது தப்பு என்று நாம் எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்லலாம்; ஆனால், மாட்டுப் பீ + மூத்திரம் மருந்து என்று கொடுத்து "அவர்கள், R.S.S" எமாற்றுகிரார்களே? அது சரியா?

பாருங்கள் என் அப்திவை; முக்கியமாக அந்த இரண்டு வீடியோக்களை.

இடுகையின் பெயர்:
இதோ Dr. அன்புமணி ராமதாசுக்கு எனது கேள்விகள்!
link
http://www.nambalki.com/2012/07/dr.html

அங்க வாங்க! நாம் பேசுவோம்!

♔ம.தி.சுதா♔ said...

சகோ பலர் ஊருக்குதானடி உபதேசம் உனக்கில்லடி என்று தானே வாழ்கிறார்கள்...

Jayadev Das said...

அன்பர்கள் சிலரது பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, பிராமண சாதியினர் எதைச் சொன்னாலும், அதை நல்லதா கெட்டதா என்று கூட யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிராமணர்களிடம் நிறைய குறைகள் இருகிறது, அவர்களால் மற்றவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதற்காக அவர்கள் சொல்வது அத்தனைக்கும் ஏட்டிக்குப் போட்டியாக வேறு எதையாவது சொல்லி எதிர்ப்பேன் என்பது சரியானதாக எனக்குப் படவில்லை. நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வீட்டை மெழுக பசுவின் சானத்தைதான் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் பிராமணர்கள் இல்லை. பசுவின் சாணத்தில் கிரிமி நாசினித் தன்மை இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. எருமைச்சானத்தில் கூட அந்தப் பண்புகள் இல்லை. [நீங்கள் வேண்டுமானால் உங்கள் பீயையோ அல்லது நீங்கள் வளர்க்கும் நாயின் பீயையோ உங்கள் வீட்டில் மெழுகி விட்டு காய்ந்த பின்னர் அங்கே உட்கார்ந்து உணவு உண்டு பாருங்களேன்?]. இன்றைக்கு உங்களிடம் பணம் இருப்பதால், எதைஎதையோ வாங்கி வீட்டை சுத்தம் செய்கிறீர்கள், ஆனால் அன்றைய ஏழை மக்களுக்கு பசுவின் சாணம் தான் உதவியது.

Jayadev Das said...

பசுவின் கோமியம், சாணம் [படித்த நாகரீகமானவர் மொழியில் மூத்திரம், பீ] போன்றவற்றில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிப்பதை அரசு அனுமதிக்கலாமா? சட்டம் தூங்கிக் கொண்டிருக்கிறதா?

மக்கள் நலனுக்கு ஊரு விளைவிக்கக் கூடிய எதையுமே செய்யாத தங்கமான அரசு இங்கே நடப்பதாக நம்பும் ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன். அப்படிப் பட்ட எண்ணம் இவர்களுக்கு இருந்தால், மக்கள் உடல் நலனைப் பாதிக்கும் என்று வெளிநாடுகளில் தடை செய்யப் பட்டு நிறுத்தப் பட்ட பல மருந்துகளை என் இந்தியாவில் விற்க அனுமதிக்கிறார்கள் என்று நீங்கள் யோசித்ததுண்டா? வெளிநாட்டுக் கோலாக்கள், ரிபைனுடு ஆயில்கள், மைதா, வனஸ்பதி, பழங்களில் வைக்கப் படும் கார்பைடு கற்கள் ........ etc., என்று ஊருபட்ட அயிட்டங்கள் மக்கள் உடல் நலனுக்கு ஊரு விளைவிப்பவை. வயிற்ருப் புண்ணில் இருந்து கேன்சர் வரை எது வேண்டுமானாலும் வரும், இந்த அரசு இவற்றைத் தடுக்கிறதா? ஆயிரக்கணக்கான டன்கள் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள், எல்லாத்துக்கும் மேலாக தமிழகத்தில் சாராயம், வருஷத்துக்கு 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை. அது கல்லீரலுக்கு ரொம்ப உகந்ததாம். இதெல்லாம் உங்க கண்களுக்கு தெரியவே தெரியாதா? பசு சாணம், கோமியம் போன்றவற்றில் இருந்து ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப் பட்ட பக்க விளைவுகள் இல்லாத மருந்துப் பொருட்களைப் பார்த்து பொங்கி எழுரீங்கலேப்பா?

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

நீங்கள் எதை வேண்டுமானாலும் நிரூபணம் இல்லாமல் Postulate ஆக எடுத்துக் கொண்டு தியரிகளை உருவாக்கலாம், பரிசோதனை முடிவுகளை அது விளக்குவாத்க இருந்தால் போதும். இது அறிவியல் நடைமுறை. ஒருத்தர் வெறும் தண்ணீரை கொடுத்து உங்கள் நோயைக் குணப்படுத்தினால் கூட அதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றே. மாட்டின் மூத்திரம், பீ என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தனிப் பட்ட முறையில் நீங்கள் தவிர்க்கலாம், ஆனால், அதனால் பயனடைந்தவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்களே? அவர்கள் உட்கொள்வது அவரவர் விருப்பம் அல்லவா? வேண்டாம் என்று வெளியே தள்ளப் பட்ட ஒரு ஜீவனின் கழிவு, எப்படி இன்னொரு ஜீவனின் உணவாக முடியும்? நல்ல கேள்விதான். நீர் யானையின் கழிவுகளை மீன்கள் உன்னுகின்றனவே அது எப்படி? மனிதன் கழிவை பன்றிகள் உடல் ஏற்றுக் கொள்கிறதே அது எப்படி? அவை தின்ற பின் மீண்டும் மனிதன் அவற்றை வெட்டி தின்னுவது எப்படி? பசுவின் சாணம், கோமியம் இவ்வளவு அருவருக்கத் தக்கவை அல்லவே? அவற்றை மருந்தாக இஷ்டப் பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், அதனால் தவறென்ன?

வருண் said...

***சுவனப் பிரியன் said...

உடலுக்கு புரத சத்து தருவது மாமிசங்கள் தான். ஏழை குடியானவன் தனது வருமானத்துக்கு தக்க வாரம் ஒரு முறை மாட்டுகறி சாப்பிட்டு தனது ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறான். பால் தராத பசுக்களை கவனிப்பாரற்று ரோட்டோரங்களில் இறந்து சுற்று சூழலை கெடுப்பதை விட மாமிசமாக உட்கொள்தல் நல்லதே!***

சுவனப்பிரியன்: ஆனஸ்ட்டாக உங்க கருத்தை சொல்லியதற்கு நன்றி. மாட்டை நம் தேவைக்காக கொன்று, உண்பது உங்களுக்கு அது தவறாக தோனவில்லை என்பது தெளிவாக உங்க பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கு. அது சட்டவிரோதமும் கெடையாது. உங்க கடவுள் நம்பிக்கை மற்றும் மதநூல்கள் அதை தவறுனும் சொல்லவில்லை. உங்களை நான் புரிந்துகொள்கிறேன். அதுபோல் பலரும் புரிந்துகொண்டால் நல்லது.

---------------------

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கெடையாதுங்க. ஆனால் எந்த ஒரு உயிரையும் கொல்வது சரினு நான் சொல்லமாட்டேன். எனக்கு அப்படி தோனவில்லை. ஆனால் மனிதர்கள் விலங்குகளை, கொல்கிறோம் சாப்பிடுகிறோம். ஒரு சில நேரம் சில கொலைகள் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கு. இதைப்பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு பொதுவாக மனித இனத்தின்மேல்தான் கோபம் வரும். நம்ம வாழ்வதற்காக என்னென்னவெல்லாம் செய்றோம்?

தப்புனா நிறுத்திட வேண்டியதுதானே?னு நீங்களும் சொல்லலாம்.

தப்புத்தான் ஆனால் அதை நிறுத்தமுடியவில்லை. சில தப்புக்களை சாகிறவரை செய்துகொண்டேதான் இருக்கப்போறோம். நான் அந்தத் தப்பை செய்வதால அதை சரி என்றோ அல்லது கடவுள் துணையுடன் அதை சரி என்பது என்பதுபோல ஜோடிச்சோ நான் பேசப்போவதில்லை. நான் செத்தால்த்தான் நான் செய்துகொண்டிருக்கும் அந்தத் தப்பு செய்வது நிற்கும் எனபதுதான் உண்மை. :-)

வருண் said...

***நம்பள்கி said...

சரி! மாடு சாப்பிடுவது தப்பு என்று நாம் எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்லலாம்; ஆனால், மாட்டுப் பீ + மூத்திரம் மருந்து என்று கொடுத்து "அவர்கள், R.S.S" எமாற்றுகிரார்களே? அது சரியா?***

பொதுவாக உங்க கருத்துடன் என் கருத்து ஒத்துப்போவதால் உங்க தளம் வந்து உங்களோட விவாதிக்க தூண்டுதல் எதுவும் இல்லை.

இதைப்பத்தி நான் வாசிச்சுப் பார்த்தேன். நம்ம மக்கள் மட்டும்தான் இதை சரினு சொல்றாங்க. உலகம் இதை இன்னும் ஏற்றுக்கவில்லை என்பதைதான் நான் காண்கிறேன். :)

வருண் said...

***♔ம.தி.சுதா♔ said...

சகோ பலர் ஊருக்குதானடி உபதேசம் உனக்கில்லடி என்று தானே வாழ்கிறார்கள்...***

நம்ம செய்றதையும் தப்புத்தான்னு ஏற்றுக்கொண்டால் என்ன குடிமுழுகிப்போயிடும்னு தெரியலை.

சிகரெட் குடிக்கிறவங்க, தண்ணியடிக்கிறவங்க எல்லாம் சிகரெட், தண்ணியெல்லாம் உடல்நலத்துக்கு நல்லதுனு விவாதிக்கனுமா என்ன? தப்புத்தான் ஆனால் என்னால தவிர்க்க முடியலைனு pleading guilty தான் "சரியான வழி" னு எனக்குத் தோனுது.

வருண் said...

***பிராமணர்களிடம் நிறைய குறைகள் இருகிறது, அவர்களால் மற்றவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதற்காக அவர்கள் சொல்வது அத்தனைக்கும் ஏட்டிக்குப் போட்டியாக வேறு எதையாவது சொல்லி எதிர்ப்பேன் என்பது சரியானதாக எனக்குப் படவில்லை. நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. ****

ஜெயவேல்: பிராமனர்களை நம்ம திறந்த மனதுடன் பார்க்கத்தான் செய்யனும். ஆனால், அவங்க என்னைக்குமே திறந்த மனது உள்ளவர்களா மாற வாய்ப்பே இல்லைனு மறுபடியும், மறுபடியும் கற்கும்போதுதான் அவங்களுக்காக திறந்த நம்ம மனசும் மூடிடுது.

மாடுகொல்லுறதை கேலி செய்யும் பிராமனர்கள் "அபார்ஷன்" செய்றதை நீங்க பார்க்கலையா என்ன??? வாங்க நான் ஒரு லிஸ்டே தர்றேன்.