Monday, July 30, 2012

இந்தியா திரும்பிப் போகவேண்டியதுதான்! கடலை கார்னர்-77

 "என்ன பிருந்த்! அமெரிக்கா முழுவதும்  எங்கே பார்த்தாலும் "லே ஆஃப்"னு எல்லாருக்கும் வேலை போயிக்கிட்டு இருக்கு!"

"ஆமா ஃபைசர்ல நெறையா டிவிஷனை க்ளோஸ் பண்ணிட்டாங்களாம்ல?"

"ஃபைசர் மட்டும் இல்லை! பொதுவாக ஃபார்மஸ்யூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரி எல்லாமெ டவுண்சைஸ் பண்ணுறாங்க. முக்கியமா கெமிஸ்ட்ரி படிச்சவங்களுக்குலாம் இந்தியா, சைனாலதான் இப்போ வேலை! யு எஸ்ல இனிமேல் கெடையாது. ஏதாவது குவாலிட்டி கண்ட்ரோல் மாதிரி வேலை மட்டும்தான் இருக்கும்"

"நம்ம வேலையும் போயிடுமா, கண்ணன்?"

"யாருடைய வேலையும் போகலாம்! இதுதான் க்ரேட் அமெரிக்கா"

"குவாலிட்டி கண்ட்ரோல் வேலை எல்லாம் யார் பார்ப்பா? "போர்" அடிக்குமே?'

"என்ன பண்ணுறது? மாதாமாதம் பில் எப்படி "பே" பண்ணுறது? இதுதான் பார்ப்பேன்லாம் சொல்லமுடியாது, பிருந்த்"

"ஏன் இப்படி எல்லா வேலையும் இந்தியாவுக்கு அனுப்புறாங்க?"

" உனக்கு "பே" பண்ணுற அதே சம்பளத்தை வச்சு, இந்தியால இல்ல சைனால 3 பேரை வேலைக்கு எடுக்க முடியுதாம்! "சீப் லேபர்"தான் இவங்களுக்கு முக்கியம்!"

"நெஜம்மாவா? என் சம்பளத்துக்கு அங்கே 3 பேரு ஹயர்ப் பண்ணலாமா?"

"அப்படித்தான் சொல்றாங்க. உன் கையில் வருகிற சாலரி மட்டும் பார்க்கக்கூடாது, பிருந்த். பெனிஃபிட்ஸ், 401 கே, அது இது வரும்போது நெறையா "ஹிடென் காஸ்ட்"லாம் இருக்கு. அதையெல்லாம் கூட்டிப் பார்க்கனும். அதனால எல்லா பெரிய கம்பெணிகளும்  இப்போ இந்தியா இல்லை சைனால ஒரு ப்ரான்ச் ஆரம்பிக்கிறாங்க! முக்கியமா சிந்தெட்டிக் கெமிஸ்ட்ரி டிவிஷனை எல்லாம் ஓவசீஸ்லதான் வச்சுக்கிறது நல்லதுனு நினைக்கிறாங்க! "

"என்ன இருந்தாலும் இங்கே அதே வேலையச் செய்தால் "பெட்டெர் கண்ட்ரோல்" இருக்கும் இல்லை?"

"அங்கேதானே ஈஸியா குப்பையை கொட்டலாம், பிருந்த்! அதாவது வேஸ்ட் சால்வெண்ட்ஸ், பொல்லுஷன், இதெல்லாம் ஒரு காரணம்கூட! இந்தியா மற்றும் சைனாவை பயன்படுத்தி அமெரிக்காவை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் பாரு! நான் சொன்னதுபோல சீப் லேபர் என்பது இன்னொரு காரணம். ஆமா, இப்போ இந்தியாவுக்குப் போனால் என்ன? போயி நம்ம தாய்நாட்டில் நிம்மதியா வேலை பார்க்க வேண்டியதுதான்."

"ரொம்ப நாள் இங்கே வாழ்ந்தாச்சே? அங்க போயி எப்படி மறுபடியும் அட்ஜஸ்ட் செய்ய முடியும்?"

"நீ இங்கேயே இருக்கனும்னா ஏதாவது கேரியர் மாற்றம்தான் செய்யனும். பேசாமல் "ஐ டி"க்கு மாறிட வேண்டியதுதான். இல்லைனா ஏதாவது ஹெல்த் கேர் சம்மந்தமான வேலை."

"ஐ டி ஃபீல்ட்க்கா?"

"வேற வழி? அதுலயும் ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் கெடைக்காது. ஏதாவது "ட்ராவெலிங் ஜாப்" தான் கெடைக்கும். வாரம் முழுவதும் "க்ளையண்ட்" இருக்க ஊருக்கு டெய்லி பறந்துக்கிட்டே இருக்கலாம்"

"என்னவோ போங்க!"

"பிருந்த்! இந்தியானா ஏன் இப்படி பயப்படுற?"

"பயம் என்ன? ட்ராஃபிக்கை நினைத்தால் தலை சுத்துது!"

" இந்தியாவிலே எல்லாமே ஃப்ரீயாக் கெடைக்கும் பிருந்த், பஸ்லகூட செக்ஸ் ஃப்ரீயாக் கெடைக்கும். எவனாவது கையை வச்சு "க்ரோப்" பண்ணுவான், மாஸ்டர்பேட்கூடப்  பண்ணிவிடுவான்!"

"பட்டப்பகல் ரேப்னு சொல்லுங்க! ரொம்ப  பயமுறுத்தாதீங்க!"

"இந்தியா சூப்பர் பவராகப்போது தெரியுமில்ல?"

"அப்படியானால் ஏழைகளே இனிமேல் இந்தியால இருக்கமாட்டாங்களா?"

"ஏழைக்கும் சூப்பர் பவருக்கும் என்ன சம்மந்தம்? ஏழைகளும், சூப்பர் ஏழைகளும்  அதிகமாகிக்கிட்டேதான் போவாங்க!"

"அப்போ சூப்பர் பவர்னா என்ன?"

"எனக்கு நெஜம்மாவே தெரியலை. ஆனால் இந்தியா இன்னும் 30 வருடத்தில் சூப்பர் பவர் ஆயிடும். நம்ம ஜனத்தொகையும் ஒரு 1.5 பில்லியன் ஆகலாம்!"

"ஏன் இப்படி என்னை டிப்ரெஸ் பண்ணுறீங்க, கண்ணன்?"

"ஏய் உண்மையைத்தான் சொன்னேன். We have to seriously think about career change!"

"இந்த மாதிரி ஐ டி க்கு மாறினவங்களை எல்லாம் நீங்க கேலி பண்ணியிருக்கீங்க, கண்ணன். ஞாபகம் இருக்கா?"

"நான் இல்லைனு சொல்லலையே. இன்னைக்கு இங்கே "கெமிஸ்ட்" நிலைமை இதுதான்."

"சரி, யார் அந்த அம்மா?"

"எது?"

"யாரோ உங்களுக்கு கெஸ்ட் வந்திருக்கதா சொன்னீங்களே?"

"ப்ரியாவா? இன்னும் வரலை. நாளைக்கு  ஈவனிங்தான் வர்ராங்களாம்! பக்கத்திலேயே ஒரு ரெசிடென்ஸ் இன் ல புக் பண்ணியிருக்கேன்."

"ஹஸ்பண்ட்?"

"அவரு இந்தியாவிலே போயி ஏதோ கோர்ஸ் பண்ணிட்டு இருக்காராம்."

"உங்க ஃப்ரெண்டா?"

"ப்ரியாவை ரொம்ப நாளாத்  தெரியும். இப்போ டச் விட்டுப்போயியும்  ரொம்ப நாளாச்சு! எப்படியோ என் # கண்டுபிடிச்சி கால் பண்ணியிருக்காங்க."

"என்ன வயசு?"

"ஒரு 30-32 இருக்கும்.  ஏய்! கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு அவங்களுக்கு. சும்மா ஒரு மாரல் சப்போர்ட் அவ்ளோதான்."

"எனக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணி வைப்பீங்களா?"

"நீ யாருனு சொல்ல?"

"உண்மையைச் சொல்லுங்க!"

"சரி!"

"உண்மை என்ன?"

"ஹா ஹா ஹா! அது ஏன் இன்னொரு லேடி பத்தி சொன்னா உடனே  உன் கண்ணுல "க்ரீன் மான்ஸ்டர்" வந்துடுது?"


 

"அப்படியா?!"

"இல்லைனு சொல்றியா?"

"தெரியலை"

"யு லுக் பியூட்டிஃபுல் டுடே!"

"ஹா ஹா ஹா!"

"எதுக்குடி சிரிக்கிற?"

"வாட் டு யு மீன்?"

"தமிழ்ல சொல்லவா? நீ ரொம்ப அழகா இருக்கடி பிருந்தா!"

"அதனால?"

"அதனாலனா? சும்மா ஒரு காம்ளிமெண்ட்"

"ஸோ,  யு ஃபீல் லைக்  ஃபக்கிங் மி ஆர்  கிஸ்ஸிங்  மி?"

"இல்லை உன்னை வணங்கனும்னு தோணுது"

"நான் நேக்கடா உக்காந்து இருக்கேன். எனக்கு அபிஷேகம் எல்லாம் செய்து, பூ, மாலையெல்லாம் போட்டு, பூஜை செய்து , என்னை வணங்குறீங்களா?"

"என்ன ஆச்சு உனக்கு?"

"இல்லை நீங்கதான் நான் அழகா இருக்கேன், என்னை வணங்கனும்னு சொன்னீங்க இல்லையா? பிறந்தமேனியா இன்னும் அழகாயிருப்பேன்"

"இன்னைக்கு உன்னிடம் மாட்டினால் அவ்ளோதான் நான்!"

"நெஜம்மாவே உங்களுக்கு என்னைப் பார்த்தால் பயமா இருக்கா?"

"நீ இப்படிப் பேசும்போது, கொஞ்சம் பயம்மாத்தான் இருக்கு. ஏய் நான் உனக்கு டின்னர் செஞ்சு தரவா?"

"என் வீட்டிலேயா?"

"ஆமா."

"என்ன ஏதாவது ஃப்ரோசன் ஃபூட் வாங்கி மைக்ரோவேவ் பண்ணி தரப்போறீங்களா?"

"இல்லை, பாஸ்டா, ரைஸ், ஸ்பினாச், பொட்டட்டோ ஃப்ரைஸ், பட்டர் மில்க், பிக்கில்ஸ்! ஒண்ணுமே நல்லாயில்லைனா ரைஸ் பட்டர்மில்க் ஊறுகாய் வச்சு மேனேஜ் பண்ணிடலாம்!"

"ஓ கே! குட் டீல்!"

"ஈவ்னிங் பார்க்கலாம்!"


-தொடரும்

தொடர்புடைய முந்தைய பதிவு!

 வந்துட்டாளா ஒப்பாரி வைக்க?! கடலை கார்னர்-76 (18 பிளஸ் மட்டும்)

6 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு !!! பதிவுக் கதையில் சொல்லப்பட்டது போலத் தாங்க .. இங்க கனடாவின் நிலைமையும் .. நிரந்தர வேலை எல்லாம் பகல் கனவாகிவிட்டது .. எங்கே போனாலும் லே ஆஃப்.. இதில் இமிகிரண்ட்ஸ் ( நான் முன்னாள் இமிகிரண்ட்ஸ் ) வேற தினம் தினம் வறாங்க.. சாதாரண வால்மார்ட் வேலைக்குக் கூட மூன்றுக் கட்ட இண்டர்வியு அதுக்கும் எக்கச்சக்க கூட்டம் வருது ... !!! பில்கள் கட்ட வேண்டும் என்பதை நினைச்சாலே மண்டை வலிக்கும் .. கிரேடிட் கார்டை தேடி தேடி கொடுத்துவிட்டு இப்போ பில் பில்லா அனுப்புறாங்க..

நெஜமா நிறைய வேலை இந்தியா சீனாவுக்கு போய்விட்டது ... !!! அங்கே போய் வாழவேண்டும் என்றால் நெஞ்சில் ஒரு பயம் எழவே செய்கின்றது .. சொத்து சுகம் இருந்தா எங்காவது பாப்பநாயக்கன் பட்டியில் பண்ணைவீடு வச்சு வாழ்ந்துக்கலாம். எங்கத் தாத்தா இருந்த பரம்பரை சொத்துக்களையும் அழித்துவிட்டார் ... !!!

கண்டிப்பா இந்திய சிட்டிகளிலே போய் இனி வாழவே முடியாது .... !!! கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்கலாம் ஆனால் இங்கு மேற்கத்திய நாடுகளை மனம் அங்கு ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும் ...

ட்ராஃபிக், சிரிக்கத் தெரியாத கடைக்காரர்கள், காலை மிதித்துவிட்டு சாரி சொல்லாமல் போகும் மனிதர்கள், ரோட்டில் காறி உமிழ்ந்து எச்சில் துப்பும் தோழர்கள், மழை வந்தால் சாக்கடையும் குடிநீரும் ஒன்றாக கலந்து ஓடும் தெருக்கள் ... என்னவோ வெள்ளைக்காரன் கணக்கா ஃபீல் பண்றேனு கேட்கலாம் .. ஆனால் மனசு தானாகவே கஸ்டப்படும் .. இந்தியாவில் இனி வாழணும்னா சிட்டி லைஃப் முடியாது .. எங்காவது கிராமத்தில் இண்டர்நெட் கணெக்சனோடு கூடிய இடத்தில் ஆடு மாடு மேய்த்தாவது வாழ்ந்துவிடலாம் ..

ILA (a) இளா said...

என்னடா இது, திடீர்னு ட்விஸ்டடிக்குது கதை, பொது நலன் பத்தி தனிப்பதிவாஆஆஆஆஆஆஆஅ

வருண் said...

***இக்பால் செல்வன் said...

நல்லதொரு பதிவு !!! பதிவுக் கதையில் சொல்லப்பட்டது போலத் தாங்க .. இங்க கனடாவின் நிலைமையும் .. நிரந்தர வேலை எல்லாம் பகல் கனவாகிவிட்டது .. எங்கே போனாலும் லே ஆஃப்.. இதில் இமிகிரண்ட்ஸ் ( நான் முன்னாள் இமிகிரண்ட்ஸ் ) வேற தினம் தினம் வறாங்க.. சாதாரண வால்மார்ட் வேலைக்குக் கூட மூன்றுக் கட்ட இண்டர்வியு அதுக்கும் எக்கச்சக்க கூட்டம் வருது ... !!! பில்கள் கட்ட வேண்டும் என்பதை நினைச்சாலே மண்டை வலிக்கும் .. கிரேடிட் கார்டை தேடி தேடி கொடுத்துவிட்டு இப்போ பில் பில்லா அனுப்புறாங்க..

நெஜமா நிறைய வேலை இந்தியா சீனாவுக்கு போய்விட்டது ... !!! அங்கே போய் வாழவேண்டும் என்றால் நெஞ்சில் ஒரு பயம் எழவே செய்கின்றது .. சொத்து சுகம் இருந்தா எங்காவது பாப்பநாயக்கன் பட்டியில் பண்ணைவீடு வச்சு வாழ்ந்துக்கலாம். எங்கத் தாத்தா இருந்த பரம்பரை சொத்துக்களையும் அழித்துவிட்டார் ... !!!

கண்டிப்பா இந்திய சிட்டிகளிலே போய் இனி வாழவே முடியாது .... !!! கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்கலாம் ஆனால் இங்கு மேற்கத்திய நாடுகளை மனம் அங்கு ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும் ...

ட்ராஃபிக், சிரிக்கத் தெரியாத கடைக்காரர்கள், காலை மிதித்துவிட்டு சாரி சொல்லாமல் போகும் மனிதர்கள், ரோட்டில் காறி உமிழ்ந்து எச்சில் துப்பும் தோழர்கள், மழை வந்தால் சாக்கடையும் குடிநீரும் ஒன்றாக கலந்து ஓடும் தெருக்கள் ... என்னவோ வெள்ளைக்காரன் கணக்கா ஃபீல் பண்றேனு கேட்கலாம் .. ஆனால் மனசு தானாகவே கஸ்டப்படும் .. இந்தியாவில் இனி வாழணும்னா சிட்டி லைஃப் முடியாது .. எங்காவது கிராமத்தில் இண்டர்நெட் கணெக்சனோடு கூடிய இடத்தில் ஆடு மாடு மேய்த்தாவது வாழ்ந்துவிடலாம் ..***

என்ன இக்பால் செல்வன்! அப்படியே உண்மையான உங்க உணர்வுகளை கொட்டிட்டீங்க! நம்ம ஊர்ல உள்ளவங்களுக்கெல்லாம் உங்க உணர்வுகள் புரியாது, சார். உங்களை தவறாத்தான் புரிஞ்சுக்குவாங்க! :)

வருண் said...

***ILA(@)இளா said...

என்னடா இது, திடீர்னு ட்விஸ்டடிக்குது கதை, பொது நலன் பத்தி தனிப்பதிவாஆஆஆஆஆஆஆஅ***

இந்தத் தொடர் எழுதி ரொம்ப டச் விட்டுப்போச்சுண்ணே! அதனாலேயா இருக்கும்! :))))

ஜோதிஜி said...

அச்சு அசலாக சுஜாதா எழுதிய கதையைப் போலவே இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கையில் வாழ்ந்து விட்டு மன உளைச்சலோடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்க நண்பர்கள் எவரேனும் இருந்தாலும் அவர்களின் தற்போதைய நிலையைப் பற்றி எழுதுங்க.

வருண் said...

வாங்க ஜோதிஜி!

***மன உளைச்சலோடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்க நண்பர்கள் எவரேனும் இருந்தாலும் அவர்களின் தற்போதைய நிலையைப் பற்றி எழுதுங்க.***

சரிங்க, பார்க்கலாம். :)

நெறையப் பேரு திரும்பிப் போயி, இந்தியால சந்தோஷமாகவும் இருக்காங்க! :)