Wednesday, December 19, 2012

பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்யும் வீரர்கள் நிறைந்த பாரதம்!

ஒரு பக்கம் சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?னு ஒரு சிலர் நம்மூர்  பெருமை பேசும் பிதற்றல்! இன்னொரு பக்கம் நம்ம ஊர்ல லஞ்சம், ஊழல், விபச்சாரம், பிச்சைக்காரன்னு இருந்து கொண்டு இருக்குனு அதைப்பற்றிக் கவலைப்பட்டால்.. இப்போ தலைநகர் டெல்லியில் ஒரு 23 வயது யுவதியை ஓடும் பேருந்தில் நாங்கைந்து மனித மிருகங்கள்  பாலியல் வன்புணர்வு செய்துள்ளன!  அவளுடன் பயணித்து வந்த அவளுக்கு உதவ வந்த தோழனை பேருந்தில் இருந்து அடித்து தூக்கி எறிந்துவிட்டு! மேலும் பஸ் ட்ரைவர் இந்த மிருகங்களுக்கு உதவி பண்ணியிருக்கிறார்!

உலகமே நம்மைப் பார்த்து காறி உமிழும் ஒரு அவல நிலை இது. இந்த நிகழ்ச்சியால் நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டிய தருணம் இது! செய்தது ஆண்கள் னு வெட்கப்படனும்! அந்த மிருகங்கள் இந்தியர்கள் னு வெட்கப்படணும்.

 தப்பு செஞ்சவங்க யாருனு பார்த்தால் படிக்காதவங்க, உழைக்கும் வர்க்கம்போல தோணுது.

* பவன் குப்தா (குமார்)- வயது 19- பழம் விற்பவன்

* வினய் ஷர்மா- வயது 20- இவன் ஒரு ஜிம் இண்ஸ்ட்ரக்டராம்

* முகேஷ் -வயது 26- இவன் தான் ட்ரைவெர்னு சொல்றாங்க


பலியான பெண், ஒரு கல்லூரி மாணவி, மருத்துவக்கல்லூரில படிப்பவள்!

படிப்பில்லாதவனுக்கு அறிவு இருக்காதுனு சொல்வதற்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம்னு சொல்லலாம். ஆனால் படிப்புக்கும் பண்புக்கும் சம்மந்தம் இல்லை என்பதுதான் உண்மை!

 இன்னொன்னு இதுபோல் இவர்கள் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வது இதுதான் முதல் முறையா? என்பதும் பெரிய கேள்விக்குறி!

இதுபோல் நடக்கும்  மிருகங்கள நெறையவே இந்தியா முழுவதுமே, எல்லா இடத்திலும் பரவலாக இருக்காங்க. ஏன் தமிழ்நாட்டிலும்கூட  வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க. இந்தியாவில் பொதுவாக பல ஆண்கள், பெண்களை தங்களுக்கு இணையாக, சமமாக  நினைக்காமல், "தன்னிடம் அடங்கிப் போகணும்"  என்கிற சில்லறை மனோபாவத்துடன்தான் வாழ்றாங்க என்பதுதான் இந்தச் செய்திகள்மூலம் நாம் இன்னுமொரு முறை அறிந்துகொள்வது.

நீயா நானா? நிகழ்ச்சியில் கூட பெண்கள் ஆடையணிவது, கவர்ச்சியாக ஆடையணிவது போன்ற தலைப்புகளில் விவாதிக்கும்போது ஒரு சில "படித்த மைனர்கள்" என்னவோ பெண்கள் இவன் சொல்றபடிதான் நடக்கணும், இவன் சரினு நெனைக்கிறபடிதான் பெண்கள் ஆடை அணியணும், வாழனும். இல்லைனா நான் அவர்களை, நான் கேலி செய்வேன், அசிங்கமா விமர்சிப்பேன் என்பதுபோல் பேசியதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது! மேலும் பஸ்ஸில் பெண்கள் மேலே கை வைப்பது, உரசுவது, செல் ஃபோனை வச்சி அசிங்கமா ஃபோட்டோ எடுப்பது, கேவலமான காமெண்ட் பாஸ் பண்ணுவது, இதெல்லாம் பெரிய தவறுனே தெரியாமல் பெண்களை பலவகையில் சித்ரவதை செய்வது ஆண்களின் உரிமை என்பதுபோல் மிருகங்களா அறியாமையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க.

ஹரியானாவில் ஒரு  தலித் பெண்ணுக்கு அவலம் நடந்தபோது அதை யாரும் (அரசியல்வாதிகள்) பெரிதுபடுத்தவில்லை! இன்று  டெல்லியில் ஓடும் பஸ்சில் அதேபோல் அவலம் ஒரு மேட்டுக்குடி பெண்ணுக்கு நடந்துள்ளது. உடனே எல்லாரும் கண்ணைத் திறந்து உலகைப் பார்க்கிறாங்க!

இன்று இந்தப்பெண் பலியாகக் காரணம் என்ன?  நேற்று இவளைப்போலவே பலியான இன்னொரு பெண் தலித் என்பதால் நடந்த அநீதியை சட்டம் சரியாக தண்டிக்காமல் அசட்டையாக விட்டதால்தான். என்னைப்பொறுத்தவரையில், தலித் என்றோ மேட்டுக்குடி என்றோ இந்நேரம்  நாம் பார்க்கக்கூடாது.
 இது ஒரு ஆண் - பெண் பிரச்சினை! இந்த 21 நூற்றாண்டிலும் பெண்ணை, அறிவுகெட்ட ஆண்  என்னவேணா செய்யலாம்னு  மனப்பால் குடிக்கிறான்!

கடுமையான சட்டம் கொண்டுவந்து, எந்தப்பெண் இதுபோல் பாதிக்கப்பட்டாலும் கடுமையான தண்டனை வழங்கினாலேயொழிய இதுபோல் குற்றங்கள் நடப்பதை முழுவதும் அகற்றமுடியாது! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குற்றவாளிகளை இரக்கமே இல்லாமல் உலகறிய தூக்கில் போடணும்! கடுமையான தண்டனை வழங்கவில்லை என்றால், 2-3 வருடத்தில் மறுபடியும் வெளியில் நடந்தால், இதுபோல் குற்றங்கள் தொடரத்தான் செய்யும்!

21 comments:

Anonymous said...

Terrible stuff...Indians have become silent spectators to all these...It is a shame...

Having said that this stuff takes place all around the world... not just in India...

You might remember what happened in Central park a few years back that too infront of thousands in day light...

வருண் said...

Revere: It is true, wherever men are there, animals like these also there. It is not that it has happened only in India. But it is a shame that it happened in India!

சிரிப்புசிங்காரம் said...

முட்டாள்தனமான பதிவு....என்னமோ பாரதம் முழுக்க கற்பழிக்கினற மக்களே நிறைந்திருப்பதைப் போன்ற பதிவு..... எந்த நாட்டில் கறபழிப்பு நடக்கவில்லை...கற்பழிப்பு தண்டிக்கவேண்டிய தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..அதற்காக என்னமோ உலக நாடுகள் காறித்துப்பும்...அது இதுன்னு பெரிசா பீத்தவேண்டியதில்லை....மற்ற நாடுகளில் இதைவிட கேவலமான செயல்களெல்லாம் நடக்கின்றன ...எனவே ரொம்ப உணர்ச்சி வசப்படாம இருங்க....

SathyaPriyan said...

அண்ணே,

ஏதோ கண்ணை கட்டிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம். உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பிறகு எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது.

அமெரிக்காவில் ஒரு லூசு துப்பாக்கியால் 30 பேரை சுட்ட உடன் பலர் அமெரிக்கா முழுதும் அப்படி சைக்கோகள் தான் இருக்கிறார்கள் என்று எழுதிய போது நீங்கள் ஏன் சார் அதை முட்டாள் தன பதிவு என்று சொல்லவில்லை? சரி அது இந்த பதிவுக்கு தேவை இல்லாதது. கீழே உள்ள கேள்விகளுக்கு உங்களிடம் விடை இருக்கிறதா?

டெல்லியில் ஒவ்வொரு 40 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் என்று தெரியுமா?

சென்ற ஆண்டு மட்டும் 568 கற்பழிப்பு வழக்குகள் டெல்லியில் மட்டும். இவை பதிவு செய்யப் பட்டவை. பதிவு செய்யப் படாதவை எவ்வளவு? கடவுளுக்கே வெளிச்சம்.

கீழே உள்ளது உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன். இது இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்ட எச்சரிக்கை. இப்போது வெளியிடப்பட்டது அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு.
//
According to the latest figures by Indian authorities, rape is the fastest growing crime in India. Among large cities, Delhi experienced the highest number of crimes against women. Although most victims have been local residents, recent sexual attacks against female visitors in tourist areas underline the fact that foreign women are at risk and should exercise vigilance.
//

கீழே உள்ளது UN வெளியிட்ட பெண்களுக்கு எதிரான கொலை குற்றங்களின் தொகுப்பு.

Femicide – the murder of women because they are women

In the United States, one-third of women murdered each year are killed by intimate partners.

In South Africa, a woman is killed every 6 hours by an intimate partner.

In India, 22 women were killed each day in dowry-related murders in 2007.

In Guatemala, two women are murdered, on average, each day.

http://www.unifem.org/campaigns/sayno/docs/SayNOunite_FactSheet_VAWworldwide.pdf

போங்க சார், எங்களுக்கும் இந்தியா மீது பற்று பண்ணாடை, பாசம் புண்ணாக்கு எல்லாம் உண்டு.

Let us call a spade a spade.

வருண் said...

****சிரிப்புசிங்காரம் said...

முட்டாள்தனமான பதிவு....என்னமோ பாரதம் முழுக்க கற்பழிக்கினற மக்களே நிறைந்திருப்பதைப் போன்ற பதிவு..... எந்த நாட்டில் கறபழிப்பு நடக்கவில்லை...கற்பழிப்பு தண்டிக்கவேண்டிய தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..அதற்காக என்னமோ உலக நாடுகள் காறித்துப்பும்...அது இதுன்னு பெரிசா பீத்தவேண்டியதில்லை....மற்ற நாடுகளில் இதைவிட கேவலமான செயல்களெல்லாம் நடக்கின்றன ...எனவே ரொம்ப உணர்ச்சி வசப்படாம இருங்க....***

சிங்காரம்: என்ன செய்யணும்னு சொல்றீங்க???

உங்க கணிப்புப்படி..

இது உலகத்தில் நடக்காததில்லை. ஒரு சாதாரண விடயம்..அதனால் இதை அப்படியே விட்டுவிட்டு வேலையைப் பார்க்கவா???


இது மிருகத்தனம். இதுபோல் டெல்லியில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நம்ம ஊர்ல நடக்குது. கண்டனத்துக்குரியது! சும்மா கண்டுக்காம விட்டுட்டுப் போக முடியாது. இதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது நம் கடமை!

வருண் said...

***டெல்லியில் ஒவ்வொரு 40 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் என்று தெரியுமா?***

வாங்க, சத்யப்பிரியன்!

டெல்லியில் வாழ்வதைவிட யு எஸ்ல ஏதாவது சின்ன சிட்டில வாழ்வது சேஃப் தான்னு தோணுது. டெல்லி ஒரு மாதிரியான ரெவ்டிகள் நிறைந்த ஊராத்தான் தெரியுது!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள் வருண்.
என்னை பொருத்தவரை, இவர்களை தூக்கிலிடுவதை விட, நாயை சங்கிலியினால் கட்டி போடுவதை போல, இவர்களை வாழ்நாள் முழுவதும் நடு ரோட்டில் கட்டி போட வேண்டும். கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்களுக்கு, இரக்கமில்லாமல் தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

வருண் said...

வாங்க ஏலியன். மரண தண்டனை கொடுத்தால் தப்பில்லை!

------------

நான் நெனச்சது போலவே இந்தப் பொண்ணுதான் முதல் பலி கெடையாது. இதேபோல் இன்னொரு கேஸ்

Same bus, another man, another tale

Recounting his experience in the same bus in which the 23-year-old physiotherapy student was gang-raped on Sunday night, Ramadhar Singh on Wednesday described how he was robbed on the fateful night.

Ramadhar had left for home after finishing work at a shop in Munirka around 8-30 p.m. While he was waiting at a bus stop near Sabji Mandi in R. K. Puram, he saw a white bus approaching. As it slowed down, 35-year-old Ramadhar asked a boy sitting inside whether it will go towards Khanpur. The reply was affirmative and Ramadhar boarded the bus.

From there started his nightmarish experience. Minutes after the bus took a turn towards Hauz Khas, those sitting inside the bus started searching his pockets. As he protested, they allegedly started beating him up. All his money (he was carrying around Rs.1,500 then) was robbed and his mobile phone snatched.

During his journey, Ramadhar claimed to have heard one of the attackers screaming “..Ask Mukesh to drive faster”. A few minutes later, Ramadhar was dropped near the IIT flyover and the bus sped away.

It is learnt that the bus made a U-turn and took the Outer Ring Road towards Munirka from where they picked the 23-year-old girl and her friend, and drove towards Mahipalpur.

Ramdhar, bereft of his money and mobile, started looking for a police station when he saw two bike-borne policemen passing by. He stopped them, narrated the incident and asked for help. They told him that the area came under the jurisdiction of Vasant Vihar police station and they were from somewhere else. The victim, unable to get a mode of transport to the police station decided to return home. Later as he was walking, a three-wheeler driver going towards his house in Sangam Vihar agreed to drop him.

Ramadhar approached one Sanjeev who runs an NGO in South Delhi. Sanjeev told The Hindu that after the arrested person’s purported confession of robbing him, a case of robbery was registered at the Vasant Vihar police station on Tuesday.

http://www.thehindu.com/news/cities/Delhi/same-bus-another-man-another-tale/article4220805.ece

அஜீம்பாஷா said...

மரண தண்டனை எல்லாம் சரிப்படாது , எய்ட்ஸ் ஊசி போட்டு தனிமை சிறையில் அடைத்து விடனும் , அவனின் மீதி உள்ள வாழ்க்கையை அவன் நரக வேதனையுடன் அனுபவிக்க வேண்டும்.

வருண் said...

அதென்னங்க எயிட்ஸ் ஊசி? அதெல்லாம் அவனுகளை அவ்வளவு கொடூரமாக கொல்லாது!

Easy (EZ) Editorial Calendar said...

அவன்களுக்கு மரண தண்டனை எல்லாம் ஒத்தே வராது......முழு மணி நேரமும் ரோட்டிலேயே நிற்க வைத்து ஒரு பெரிய ஆயுதத்தால் அவன் இறக்கும் வரை விடாமல் அடித்து கொண்டே இருக்க வேண்டும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

ராஜ நடராஜன் said...

சிரிப்பு சிங்காரம்!சிரிக்காத படி பின்னூட்டம் போடுறீங்களே!ஒரு தவறைப் பற்றி சுட்டிக்காட்டும் போது இன்னொரு தவறோடு ஒப்பிட்டு நியாயம் பேசுவது சரியானதல்ல.

ஒன்று பாதிக்கப்பட்ட பெண்,அவரது நண்பர் நிலையில் உணர்ந்து பேசவேண்டும்.இல்லையென்றால் மனிதாபிமான நிலையில் யோசிக்க வேண்டும்.அப்படியுமில்லாமல் இந்திய தேசம் சார்ந்து பேசினாலும் இன்னுமொரு தவறு நிகழாத வண்ணமாவது உண்ரவேண்டும்.

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

Deleted my previous comment which published twice.

மின் வாசகம் said...
This comment has been removed by the author.
Jayadev Das said...


\\படிப்பில்லாதவனுக்கு அறிவு இருக்காதுனு சொல்வதற்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம்னு சொல்லலாம். \\ இது தவறு. படித்தவன்தான் படிக்காதவனைக் காட்டிலும் பெரிய அயோக்கியனாக இருப்பான்.

வருண் said...

***ரெவெரி said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...***

நன்றி ரெவெரி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

வருண் said...

***ராஜ நடராஜன் said...

சிரிப்பு சிங்காரம்!சிரிக்காத படி பின்னூட்டம் போடுறீங்களே!ஒரு தவறைப் பற்றி சுட்டிக்காட்டும் போது இன்னொரு தவறோடு ஒப்பிட்டு நியாயம் பேசுவது சரியானதல்ல.***

அவரை விடுங்க நடராஜன். அவரு பின்னூட்டமெல்லாம் இப்படித்தான் குதற்கமா இருக்கு. அவருக்கும் என் பதிவுகள் குதற்கமா இருக்கலாம். :)

வருண் said...

***Jayadev Das said...


\\படிப்பில்லாதவனுக்கு அறிவு இருக்காதுனு சொல்வதற்கு இது ஒரு க்ளாசிக் உதாரணம்னு சொல்லலாம். \\ இது தவறு. படித்தவன்தான் படிக்காதவனைக் காட்டிலும் பெரிய அயோக்கியனாக இருப்பான். ***

உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம், ரெண்டுமே (நீங்க சொன்னதும் நான் சொன்னதும்) தவறுகளுள்ள தவறான "ஸ்டேண்ட்மெண்ட்"கள்தான். :)))