Thursday, March 13, 2014

பழங்கள்! சாப்பிட்டவையும், சாப்பிடுபவைகளும்!

பழங்கள்! பழங்களில் நெறையா வைட்டமின்கள் உண்டுனு பொதுவாக பாமரர்களுக்கும் தெரியும். பழங்களின் சுவை எல்லோருக்கும் பிடிக்கும் இருந்தாலும் நம்ம ஊரில் எல்லாப் பழங்களையும் சாதாரண (என்னை மாதிரி) மிடில் க்ளாஸ் மக்கள் நினைத்த நேரம் வாங்கி சாப்பிட முடியாது! 

சாதம், கறிகாய்கள்,  பால், முட்டை,கீரைகள், பயறுகள் எல்லாம் ஓரளவுக்கு "affordable" னு சொல்லலாம். ஏழைகள் அவைகளில் இருந்து வைட்டமின்களை எடுத்துக்க வேண்டியதுதான்.

வைட்டமின்களுடன் பொட்டாஸியம் நிறைந்த வாழைப்பழம், வைட்டமின் சி நிறைந்த சாத்துகுட்டி (?), மாம்பழம் (சீசன் போது), கொய்யாப் பழம், தக்காளிப் பழம் (காயா?), நவாப் பழம், இழந்தைப் பழம், பலாப் பழம் போன்றவை நமக்கு மலிவாகக் கிடைக்கும்னு சொல்லலாம்.

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQNBsWYHaMgNMp05GGu7D2lCtZHTpoj8uM2gSm4PUX7yLvqGeYs
கொய்யாப் பழம் பிடிக்காது. காய்தான் சுவை என்பது என் கருத்து

சுவையான மாம்பழம்னா அது நம்ம ஊர்லதான் கிடைக்கும்

 ஆப்பில் திராட்சை போன்றவை வேறு இடங்களில் இருந்து கொண்டு வருவதால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

சப்போட்டா பழம், சீதா பழம், மாதுளம்பழம், போன்றவை ஓரளவுக்கு மலிவாகக் கிடைக்கும்னு சொல்லலாம்.

சீதாப் பழக்காய்

http://www.icrisat.org/what-we-do/satrends/02aug/custard%20apples.jpg
சீதாப் பழம் (சாப்பிட்டு பலவருடங்களாச்சு)

பப்பாளி, முந்திரிப் பழமெல்லாம் ஏனோ ஒரு மாதிரியான, எனக்கு  பழங்கள்னு சொல்லுவேன். சாப்பிட்டால் வம்புதான்,

நவாப் பழம் இங்கே கிடைப்பதில்லை! நல்ல நவாப் பழம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு!

நவாப் பழம்

அப்புறம் இந்த கொடுக்காய்ப்புளினு ஒண்ணு சாப்பிடுவோமே அது பழமா?

கொடிக்காய்ப்புளி

 சாப்பிடும்போது ஏனோ தொண்டையெல்லாம் அடைக்கும்..ஏன்னு தெரியவில்லை! சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு! :(

சப்போட்டா, சீதா பழங்களை காய்களாக எங்கேயாவது "திருடிட்டு" வந்து பழுக்க வைத்தால் பழுக்காமல் ஏதோ ஒரு மாதிரியா காய்ந்து போயிடும். ஒவ்வொரு சமயம் வைக்களோட சேர்த்து வைத்தால் பழுக்கும். என்ன காரணம்னு அப்போத் தெரியாது.இப்போத்தான் இதெல்லாம் புரியுது!

பழங்கள் என்றால் நம்ம ஊரில் கிடைப்பவைகள் இவைகள்தான் எனக்கு ஞாபகம் வருது. இவைகளில் எனக்குப் பிடிக்காதவைகள் என்றால் பப்பாளி, முந்திரிப் பழம்.

நம்மூரில் இருக்கும்போது சாப்பிடாமல் இப்போ இங்கே விரும்பி சாப்பிடும் பழங்கள்னா. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பீச்னு சொல்லலாம்.

Strawberries

Cherries

Peach

28 comments:

bandhu said...

சப்போட்டவை விட்டு விட்டீர்களே.. இங்கு கிடைக்கும் பெர்சிமன் -டியர் ட்ராப் வகை - நன்கு பழுத்தவுடன் நம் ஊர் சப்போட்டா பழ சுவையே!

யாரையும் திட்டாததால் இந்த பதிவு இனிக்கிறது!

வருண் said...

வாங்க பந்து!

லேசா சொல்லியிருக்கேன்.. படம் எல்லாம் கொடுக்கவில்லை!

யாரையும் திட்டலையா? பப்பாளிப் பழம் முந்திரிப்பழம் எனக்குப் பிடிக்காதுனு திட்டாமல் சொல்லியிருக்கேனே?

நான் பழ விசயத்தில் ரொம்ப "கண்சர்வேட்டிவ்"னு நெனைக்கிறேன். புதுசா எந்தப் பழத்தையும் "ட்ரை" பண்ணுவதில்லை (யாராவது நல்லயிருக்கும்னு சொன்னாலேயொழிய)! நீங்க சொன்னதால் "பெர்சிமன் -டியர் ட்ராப் வகை -" ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். :) நன்றி. :)

'பரிவை' சே.குமார் said...

எல்லாப்பழத்தையும் சொல்லிட்டீங்க...

கொடுக்காப்புளி எம்புட்டுத் தின்னிருக்கோம்....

bandhu said...

டியர் டிராப் பெர்சிமொன் பதம் மிக முக்கியம்.. தண்ணீர் நிரப்பிய பலூன் போல அந்த பழம் பழுக்கும் வரை காத்திருந்து பிறகு சாப்பிடவேண்டும். இல்லை என்றால் சாப்பிடும்போது வாய் நமைச்சல் எடுக்கும். அடுத்து நீங்கள் திட்டும் ஆள் நானாகிவிடுவேன்!

வருண் said...

பந்து: நான் என் சைனீஸ் கலீகிடம் பேசினேன். அவர் கொஞ்சம் "பதம்" பற்றி சொன்னார்.

ரெண்டு வகை இருக்கு, அதில் கொஞ்சம் சப்பையாக உள்ளது நல்லாயிருக்கும்னும் சொன்னாரு.

இந்த தொடுப்பும் பார்த்தேன்..

http://www.wikihow.com/Eat-a-Persimmon

நீங்க ரொம்ப "safe"! :))))புதுசா ஒரு பழம் ட்ரை பண்ண சொன்னதுக்கு நன்றி.

வருண் said...

***சே. குமார் said...

எல்லாப்பழத்தையும் சொல்லிட்டீங்க...

கொடுக்காப்புளி எம்புட்டுத் தின்னிருக்கோம்....***

வாங்க குமார். நான் கொடிக்காய்புளி எல்லாம் திருடித்தான் (எவன் தோட்டத்திலேயோ) சாப்பிடுவது! காசு க்கொடுத்து வாங்கினால் டேஸ்ட்டா இருக்காது! :))

Avargal Unmaigal said...

நான் தப்பான தளம் வந்துட்டேனா அல்லது வருண் தளத்தை யாராவது ஹேக் பண்ணி பதிவு போட்டு இருக்காங்களா?

Avargal Unmaigal said...

வருண் இந்த மாதிரி பதிவு எல்லாம் போட்டு எங்களுக்கு ஷாக் கொடுக்காதிங்க

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் நவாப் பழம் எனக்குறிப்பிடுவது,
நாவல் பழத்தையா?

Peppin said...

Persimmon is my favorite! Also cherries in summer! Appathan it is affordable and also we get them directly from the farms.

Peppin said...

Persimmon is my favorite! Also cherries in summer! Appathan it is affordable and also we get them directly from the farms.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் நவாப் பழம் எனக்குறிப்பிடுவது,
நாவல் பழத்தையா?***

நாங்கல்லாம் "colloquial thamizh" தாங்க பேசுவோம். நவாப் பழம்னுதான் சொல்லுவோம். அதை நாவல் பழம்னுதான் சொல்லணும்னு எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரியும். YES, you and I are talking about the same fruit, Jamun, they say in English! :)

வருண் said...

***Avargal Unmaigal said...

நான் தப்பான தளம் வந்துட்டேனா அல்லது வருண் தளத்தை யாராவது ஹேக் பண்ணி பதிவு போட்டு இருக்காங்களா?

வருண் இந்த மாதிரி பதிவு எல்லாம் போட்டு எங்களுக்கு ஷாக் கொடுக்காதிங்க***

என்ன என்னை ஞானப் பழமாயிட்டீங்கனு சொல்லாமல் சொல்றீங்களாக்கும்?

இந்த கொடிக்காப்புளியைப் பத்தி எழுதணும்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். அவ்ளோதான். :)

வருண் said...

***Peppin said...

Persimmon is my favorite! Also cherries in summer! Appathan it is affordable and also we get them directly from the farms.**

peppin: நான் இந்தப் பழம் பார்த்து இருக்கேன். ஆனால் புதுசா எதையும் அவ்ளோ எளிதா ட்ரை பண்ண மாட்டேன். இப்போ பந்து நீங்க ரெண்டு பேரும் சொன்னதால் நிச்சயம் இந்தப் பழத்தை சுவைத்துப் பார்த்து சொல்றேன். நன்றி. :)

குட்டிபிசாசு said...

//நான் பழ விசயத்தில் ரொம்ப "கண்சர்வேட்டிவ்"னு நெனைக்கிறேன். புதுசா எந்தப் பழத்தையும் "ட்ரை" பண்ணுவதில்லை (யாராவது நல்லயிருக்கும்னு சொன்னாலேயொழிய)! நீங்க சொன்னதால் "பெர்சிமன் -டியர் ட்ராப் வகை -" ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். :) நன்றி. :) //

பெர்சிமோன் பழுத்தால் மிகவும் இனிப்பாக இருக்கும். கொஞ்சம் காயாக சாப்பிட்டால் துவர்ப்பும் இனிப்புமாக ஒரு சுவை கிடைக்கும். கொய்யாவைப் போல. எனக்குக் காயாகத்தான் பிடிக்கும்.

கொடுக்காப்புளி சாப்பிட்டால் சற்று வாய் மணக்கும்.

மங்குஸ்தான், ரம்புட்டான், காக்டஸ், ட்ராகன் ப்ரூட் சாப்பிட்டதில்லையா?

உஷா அன்பரசு said...

எனக்கு நொறுக்குத்தீனியை விட ப்ரூட்ஸ் ரொம்ப புடிக்கும் அதிலும் மாதுளை,சீதா,தர்பூசணி,ஸ்ட்ராபெர்ரி, செர்ரி..ஆஸ்திரிலேயன் கிரேப்ஸ்

வருண் said...

***குட்டிபிசாசு said...

//நான் பழ விசயத்தில் ரொம்ப "கண்சர்வேட்டிவ்"னு நெனைக்கிறேன். புதுசா எந்தப் பழத்தையும் "ட்ரை" பண்ணுவதில்லை (யாராவது நல்லயிருக்கும்னு சொன்னாலேயொழிய)! நீங்க சொன்னதால் "பெர்சிமன் -டியர் ட்ராப் வகை -" ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். :) நன்றி. :) //

பெர்சிமோன் பழுத்தால் மிகவும் இனிப்பாக இருக்கும். கொஞ்சம் காயாக சாப்பிட்டால் துவர்ப்பும் இனிப்புமாக ஒரு சுவை கிடைக்கும். கொய்யாவைப் போல. எனக்குக் காயாகத்தான் பிடிக்கும்.

கொடுக்காப்புளி சாப்பிட்டால் சற்று வாய் மணக்கும்.

மங்குஸ்தான், ரம்புட்டான், காக்டஸ், ட்ராகன் ப்ரூட் சாப்பிட்டதில்லையா?***

வாங்க குட்டி "பிளாசஃபர்"! ("பிசாசு"னு நான் உங்களை விளைத்தால் உங்க அப்பா அம்மா என்னை வெட்டிப்புடுவாங்க! :))

காக்டஸ், ட்ராகன் ஃப்ரூட் எல்லாம் சாப்பிட்டதில்லை. மன்குஸ்தான் யாரோ வெளியூர் ட்ரிப் போயிட்ட வந்த ரிலேடிவ் வாங்கி வந்ததை சாப்பிட்டதா ஞாபகம். காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டதில்லை.

"கொடிக்காய்ப்புளி சாப்பிட்டால் வாய் மணக்கும்"னு உணர்ந்து இருப்பேன். ஆனால் நீங்க சொன்னதும்தான் வாய் மணக்கும்னு புரியுது. நன்றி! :)

வருண் said...

*** உஷா அன்பரசு said...

எனக்கு நொறுக்குத்தீனியை விட ப்ரூட்ஸ் ரொம்ப புடிக்கும் அதிலும் மாதுளை,சீதா,தர்பூசணி,ஸ்ட்ராபெர்ரி, செர்ரி..ஆஸ்திரிலேயன் கிரேப்ஸ்***

மாதுளை இங்கே கலிஃபோர்னியால விளைந்து பெரிது பெரிதாக நல்லதா கிடைக்கும்ங்க. அதைப் பொறுமையாக உரித்து ஒரு கப்ல உதிர்த்துப் போட்டு அதில் ஸ்பூன் போட்டு எடுத்து சாப்பிடுற அந்த வேலை பிடிக்கும். இங்கே மாதுளை பழச்சாறு கிடைக்கும். அது எல்லா சீசனிலும் கிடைக்கும். எங்க வீட்டில் குளிர்சாதனப் பொட்டியில் எப்போவுமே ஒரு குடுவை இருக்கும் (பழச்சாறுடன் தான் :) . பார்க்க ரெட் வைன் மாதிரி இருக்கும். அது உடலுக்கு ரொம்ப நல்லதுனு வேற (ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கும்னு) சொல்றாங்க. அதனால அதை சுவைக்காக விரும்பி குடிக்கும்போதெல்லாம் என்னவோ மருந்து குடிக்கிறமாரி வேற நல்லதுனு நெனச்சுக்கிறது.

நம்ம ஊரில் இருக்கும்போது தர்பூசனி, செர்ரி, ஸ்ட்ரா பெர்ரி எல்லாம் நான் சாப்பிட்டதில்லைங்க. இங்கே சம்மர்ல தர்பூசனி பெரிது பெரிதாக (பலாப் பழ சைஸுக்கு) (விதை இல்லாதது) மலிவாகக் கிடைக்கும். என்ன பலருடன் பகிர்ந்து சாப்பிடலைனா வயிறு நெஜம்மாவே வலிக்கும். :)

ஆஸ்திரேலியன் க்ரேப்ஸ்னா என்னனு எனக்கு சரியாத் தெரியலை. இங்கே திராட்சை எல்லாமே விதையில்லாமல்தான் கெடைக்கிது. ஆனால் பல "வரையிட்டிகள்" கிடைக்கும். "கொடை" ஆரஞ்சும் அப்படித்தான். ஆப்பிளும் ஏகப்பட்ட வெரைட்டில கிடைக்கும். :)

நான் நொறுக்குத்தீணியும் சாப்பிடுவேன், பழங்களும் சாப்பிடுவேன். தக்காளிப் பழம்னா (செர்ரி டொமட்டோ அது இதுனு ஆயிரம் வெரைட்டி இருக்கு) கிலோ கணக்கில் சாப்பிடுவேன். :) அனால் சமீபத்தில் சாப்பாட்டை (சோற்றைத்தான் மெயினா) கன்னா பின்னானு குறைத்துவிட்டேன். அதனால் ரொம்ப "ஃபிட்" டாயிட்டு வர்ரேனாக்கும். :)

சாதத்தை மட்டும் குறைத்து அளவாக சாப்பிட்டால் இவ்ளோ எளிதா ஃபிட் ஆகிடலாம்னு எனக்கே இப்போத்தான் தெரியுது. :)

nila said...

கொய்யாக்காய் மாம்பழம் கொடுக்காய் புளி இதையெல்லாம் ஞாபகப்படுத்திட்டிங்களே :(

இந்த ஊர் மாம்பழத்துல வாசமே இல்ல.. இங்க வந்து நாலு வருஷத்துல ஒரு முறை கூட மாம்பழம் சாப்பிட்டதில்ல..

சூப்பர் பதிவு.. ஹ்ம்ம்ம்ம்ம்...ஸ்ட்ராபெர்ரி-ய சாக்லேட்ல முக்கி சாப்பிட்டா...!!!! நல்லவேளை.. இங்க ஸ்ப்ரிங் ஆரம்பிச்சிடுச்சு..

வருண் said...

வாங்க நிலா! மாம்பழம் இங்கேயும் மணமில்லாதவைகள்தான் கெடைக்கிது. மெக்ஸிகோவிலிருந்து கொண்டு வர்ராங்க. ஒரு சில வகை நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் நம்ம ஊர் மாம்பழம் போல வராது.

ஸ்ட்ராபெர்ரியை சாக்லேட்ல முக்கிதான் இங்கேயும் நெறையப்பேரு சாப்பிடுறாங்க. :)

Good citizen said...

விடுபட்ட பழங்களில் நான் விரும்புவது அல்லது சாப்பிட்டது எலந்தை, மாதுளம் ,பலா,அன்னாச்சி,சித்தா பழம்(சீதபேதிக்கு நல்லதாம், ரைம்மிங்கிக்கான்னு எல்லாம் தெரியாது) மற்றும் நூங்கு( இது எந்த வகையில் சேரும் காயா ? பழமா ) இதன் தோலை மேலே தேய்த்து குளித்தால் வேர்க்குரு வராதாம் ,பாட்டி வைத்தியமாரி, எங்கம்மா வைத்தியம் )

பிரான்சுக்கு வந்து நான் சப்பிடுகிற பழங்கள் சைனீஸ் வகைகளில் பெர்சிமோன்(Persimmon)லொங்கான் (Longan),லிச்சி (Lychee)மற்றும் துரியான் (Durian)உங்கள இப்படி திட்டுனா தான் உண்டு போல ! பழங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க

https://www.blogger.com/comment.g?blogID=7222634159758089089&postID=2155092736699453626

சரி பிரான்சு என்னைய்யா ஸ்பெஷல் கேட்குறது தெரியுது ,வேரென்ன உலகதுக்கே தெரியும், திராட்சை !(இது இல்லேனா சாம்பேய்ன் எப்படி )பிரம்புவாஸ் (Framboises)நம்ம ஊரு உனிப்பழமாதிரி இருக்கும்
சின்னவயசுல கொள்ளிக்கு போகும் போது பிச்சி சாப்பிடுவோம் !மிர்தி (Myrtilles)இதுவும் கருநீலக்கலர்ல இருக்கும், எங்க அப்பார்மெண்ட் கீழே வளருது !வெயில்காலத்துல போகும் போதும் வரும் போது பிச்சி தின்னுவேன் ! பொண்டாட்டி தலையிலேயே அடிச்சிக்கும்,, மானம் போகுதான்ம்பா !!ப்ரூய்ன் (Prunes)மஞ்சள் மற்றும் கருநீலத்துல இருக்கும் பிலம்ஸ் !

http://croqomiel.com/node/332

Anonymous said...

கொடிக்காப்புளியைப் பத்தி ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் எனக்கு ஞாபகம் வருது.
இந்த புளியை சாப்பிட்டது அனேகமாக நாம தான் கடைசி ஜெனெரேஷன்-ஆ இருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை.

லதானந்த் said...

அரிந்தால் சுவைக்கும் மாதுளம்; அறிந்தால் சுவைக்கும் மாது (உ)ளம்

லதானந்த் said...

இலக்கியச் சுவைக்கு novel;
இனிய சுவைக்கு நாவல்

லதானந்த் said...
This comment has been removed by the author.
லதானந்த் said...

தலையாய சுவை தருமே கொய்யாக் கனி: தலைவனுக்குத் தலவி இதழ் கொய்யாக்கனி (கொய்யாத கனி)