Tuesday, March 11, 2014

மேதாவி வே மதிமாறன் ஒரு சீக்காளியா?!

ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஆகிப் போனது. ராணா படப்பிடிப்பு நின்றது. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக மாற்றி கடைசியில் சிங்கப்பூரில் ஏதோ மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் நுரையீறல் போன்றவை பழுதுபட்டுவிட்டதுனு அதற்கு தேவையான ட்ரீட்மெண்ட் எடுத்து வந்து சேர்ந்தார் மனுஷன். உடல் நலக்குறைவால் பலவீனமாக இருப்பதால் முற்றுமாக ராணா நின்றுவிட்டது.

இப்போது தன் உடல்நிலை கருதி  கோச்சடையான் என்னும் கார்ட்டூன் படத்தை வெளியிடுகிறார்.

அதை எந்த நாயும் போயி யு ட்யூபில் மோப்பம்விடணும்னு எவனும் எதிர்பார்க்கவில்லை!

ஒருவன் நோய்வாய்ப்படுவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதான். நோய்வாய்பட்டு திரும்ப வந்தவனை "சீக்காளி"னு எழுதி பொழைப்பு நடத்துபவன் ஒரு ஈனத்தமிழன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!

வே மதிமாறன்னு ஒரு பதிவர் எம் ஜி ஆர் பேரைச் சொல்லி  "தடி" அடி அது இதுனு தலைப்பு  வச்சு நாலு பதிவு போட்டு பதிவுலகில் சில பதிவுகளை சூடாக்கினார்.

  இப்போ புதுசா ரஜினியின் உடல்நலக் குறைவை கேவலமான முறையில் "சீக்காளி"னு அடை மொழி கொடுத்து அசிங்கமாக விளித்து ஈனப்பொழைப்பு நடத்துக்கிறார்.

தெரியாமல்த்தான் கேக்கிறேன்.. இவனுக ஆத்தா அப்பன் நோய்வாய்பட்டு இருந்து உயிருக்குப் போராடி திரும்பி வந்தால், சீக்காளி அப்பன், சீக்காளி ஆத்தானு சொல்லிப் பதிவு எழுதுவானுகளா?
 நோய்வாய்பட்டபோது ரஜினிக்காக அவர் ரசிகர்கள், தன் உயிரையும் உடலையும் தருகிற அளவிற்கு தயாராக இருந்தார்கள்.

ஆனால் இவரோ ஒரே ஒரு ‘குஸ்கா’ பொட்டலம் கொடுப்பதற்குக்கூட தயாராக இல்லை.

ரஜினி தன் ரசிகர்களுக்கு, ‘உடல் பொருள் ஆவி’ எல்லாம் தரத் தேவையில்லை.

ஆமா, கண்ட நாய்களும் ரஜினி தன் ரசிகர்களுக்கு என்ன செய்யணும்னு ஏன் குரைத்துக்கொண்டு திரிகினறன?? இது ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. நீங்க ஏண்டா இடையில் புகுத்து சும்மா ஒப்பாரி வைக்கிறீங்க?.


 அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.

 ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.

அதான் படம் ஃப்ளாப் ஆகப்போதுனு சொல்லிட்ட  இல்ல முண்டம்? அப்புறம் ஏன் போட்டு பினாத்திக்கிட்டு இருக்க?


உண்மையில் யார் சீக்காளி? 

என் பார்வையில்.. எம் ஜி ஆர் சடலத்தையும் உடல்நலக்குறைவு இல்லாமல் இருந்த ரஜினியை வச்சும் பதிவுலகில் ஈனப் பொழைப்பு நடத்தும் வே மதிமாறன்தான் மரைகழண்டுபோன ஒரு மன நோயாளி! ஒரு சீக்காளி! இவன் ஊரில் உள்ளவனையெல்லாம் சீக்காளினு சொல்லிட்டுத் திரிகிறான்!!

18 comments:

Good citizen said...

இந்த பேதிமாறனை எனக்கு எப்போதுமே பிடிக்காது !பகுத்தறிவுக்கு பரட்டை அடிப்பதாய் சொல்லி திமூகாவுக்கு ஜிங்ஜக் அடிப்பான்!இந்த நாயை அடிக்கடி நடுவிட்டில்(விஜெய் டீவியில்)உட்கார வைப்பார்கள் பற்றிக்கொண்டு வரும்!என்றாலும் இங்கே அவர் ரசிகர்கர்களை பார்த்து கேட்டிருக்கும் கேள்வியில் நியாயம் இருப்பதாய் படுகிறது !எந்த நடிகணும் தன் சொந்த வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளவே நடிக்கிறான் , இதில் ராஜினி மட்டும் விதிவிலக்கா என்ன ?

அதுசரி சமீப காலமா நீங்கள் அதிலமாக பீப்பியை ஏற்றிகொள்வது போல் தெரிகிறது! Have you passed 40 ?! Cool down Varun !

வருண் said...

****எந்த நடிகணும் தன் சொந்த வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளவே நடிக்கிறான் , இதில் ராஜினி மட்டும் விதிவிலக்கா என்ன ?***

ரஜினி ஒரு வியாபாரிதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை!

இவன் ஒரு வேர்ட் ப்ரெஸ் தளத்தை வச்சுக்கிட்டு, "சீக்காளி" "தடி"னு எழுதி ஈனப் பொழைப்பு நடத்துறான்.

இவன் பதிவுலகில் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கான்னு நாங்க விமர்சிக்கக் கூடாதாக்கும்?!

வருண் said...

***அதுசரி சமீப காலமா நீங்கள் அதிலமாக பீப்பியை ஏற்றிகொள்வது போல் தெரிகிறது! Have you passed 40 ?! Cool down Varun ! ***

நீங்க வேற, இப்படிப் பதிவெழுதித்தான் பி ப்பி யை இறக்க முடியும்- வொர்க் அவ்ட் டுடன் சேர்த்து. :)

kevin said...

காவிரி நதி நீர் பிரச்சனையில் ரஜினி அடித்த பல்டியையும், பால்தாக்ரே தனக்கு கடவுள் மாதிரி என்று சொன்னதையும் நினைத்துப்பாருங்கள் இன்னும் பீப்பி ஏறும்.

itisme Billa said...

வருண் control your emotions!!
விடுங்க உங்களுக்கு ரஜினி பிடிக்கும் என்றல் இன்னொருவருக்கு அவரை பிடிக்காமல் போகலாம், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், உங்க ரெண்டு பேரால்
ரஜினி நடிபிலுருந்து விலக போவதில்லை.

ARAN said...

ஒருவன் நோய்வாய்ப்படுவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதான். நோய்வாய்பட்டு திரும்ப வந்தவனை "சீக்காளி"னு எழுதி பொழைப்பு நடத்துபவன் ஒரு ஈனத்தமிழன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! well said Varun

ARAN said...

ஒருவன் நோய்வாய்ப்படுவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதான். நோய்வாய்பட்டு திரும்ப வந்தவனை "சீக்காளி"னு எழுதி பொழைப்பு நடத்துபவன் ஒரு ஈனத்தமிழன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! சரியாக சொன்னீர்கள் வருண் எந்த ரஜினி ரசிகனும் ரஜினி சோறு அழுவதில்லை நாலு பேருக்கு சோறு போடும் நிலையில் தான் இருக்கிறான் ரஜினி ரசிகன். ஆனால் இந்த ஓநாய்கள் ஊளையிட்டுகொண்டேதான் இருக்கின்றன.

sunaa said...

தம்பி வருண் ,
'ரிலாக்ஸ் ப்ளீஸ்' னு தலைப்பு வச்சிக்கிட்டு ரொம்ப நாளா நீ இப்டியே தான் எழுதி உன் 'பீப்பி' ய ஏத்திக்கிட்டு இருக்க..சீக்கிரம் ஒனக்கு 'பீப்பி' ஊதவேண்டியதுதான்னு நெனக்கிறேன் ராஜா ..

Arasu said...

தலைப்பிலேயே மதிமாறன் திட்டப்பட்டிருந்ததா்ல், இந்தப் பதிவினைப்படித்தேன். ஏனிந்த தனிமனிதத்தாக்குதல்?
இந்தப்பதிவினைப்படித்தபிறகே, மதிமாறன் உங்களால் விமர்சனத்துக்குள்ளான பதிவினைப்படித்தேன். ரஜனியை “சீக்காளி” என சொல்லாமலேயே அவர் கருத்துக்களை சொல்லியிருக்கலாம். அவரது கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் உண்டு. உதாரணமாக இளையராஜா மீது அவரின் விமர்சனம் மிக மிக மென்மையானதாகவே இருக்கும்.

தமிழ் சினிமா கலைஞர்களைப்பற்றிய உங்களது கருத்துக்களை அறிய விரும்பியபோது, விஸ்வரூபம் படம் பற்றிய உங்கள் விமர்சனத்தைப் படித்தேன். நீங்களும் ரஜனியை சற்றேரக்குறைய மதிமாறனைப்போலத்தானே விமர்சித்திருக்கிறீர்கள். பின் ஏனிந்த கடுஞ்சொற்கள்?வருண் said...
வாங்க மருதநாயகம்!

ஆனால் ஒண்ணுங்க, கமல், ரஜினியை விட நல்ல கலைஞன்னு நான் இந்த ஒரு விசயத்தில் ஒத்துக்குவேன். ரஜினி படத்துக்கு இவனுக அடிக் கிற கொள்ளை இருக்கே, அது உலகமகா கொள்ளை. இவரு , ரஜினி என்னனா, நான் 13% வரி கட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டு அலையிறாரு.

He should seriously work on fixing this kind of robbing from even poor people!

It is a shame on Rajnikanth!
February 13, 2013 at 11:11 AM

வருண் said...

****ரஜனியை “சீக்காளி” என சொல்லாமலேயே அவர் கருத்துக்களை சொல்லியிருக்கலாம். அவரது கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் உண்டு. உதாரணமாக இளையராஜா மீது அவரின் விமர்சனம் மிக மிக மென்மையானதாகவே இருக்கும்.***

Mr. Arasu:

I am not able to write any responses in his blog, he protects his behind carefully. Seems like criticisms hurt his feelings so badly.

I am not going to give my e-mail id to share my thoughts there which wont be published anyway.

Anyway, He claims that he has published several books. People say that he shows up in Vijay TV as well.

Now, having said all these qualifications of his, I think he is a public figure just like Rajinikanth. Let us "respect" him as a writer and a critic and a public figure, honorable ve madhimaaRan!

If his outrageous attack on Rajinikanth is not personal, then my comments on him is not personal either as he is a public figure now.

R.Gopi said...

Just ignore these kind of idiots... There are so many MathiMORONs everywhere....

If somebody is happy, they will not sleep for one week....

காரிகன் said...

வருண்,
மதிமாறன் கண்ணதாசனுக்கு கவிதையே எழுதத் தெரியாது என்று சொல்பவர். எம் ஜி ஆர் பற்றி சகட்டு மேனிக்கு வீடு கட்டுவார். சிவாஜியை ஜாதி வெறி பிடித்தவர் என்று புதிய தகவல் சொல்லி நம்மை அதிரடிப்பார். (தேவர் மகன் படத்தின் நான் தேவன்டா வசனத்தை உதாரணம் கொண்டு) ஆனால் அதற்க்கு இசை அமைத்த (தேவர் காலடி மண்ணே) இளையராஜாவை வானம் வரை புகழ்வார். ரஜினி கமல் என்று எல்லோரையும் ஜாதி வைத்து விமர்சனம் செய்யும் அவர் இளையராஜா என்றால் மட்டும் அவரை விமர்சனக் கோட்டுக்கு மேல் வைத்துவிடுவார். இப்போதுதான் அவரைப் பற்றி அறிகிறீர்கள். அவர் எழுதியதை படித்தால் கேனத்தனமாகவும் மலிவான சிந்தனைக்கு உரமிடுவது போலவும் இருக்கும்.

Amudhavan said...

மதிமாறன் கருத்துப்படி பாரதியும் கவிஞரில்லை என்பதை விட்டுவிட்டீர்களே காரிகன்

வருண் said...

*** R.Gopi said...

Just ignore these kind of idiots... There are so many MathiMORONs everywhere....

If somebody is happy, they will not sleep for one week....***

Thanks for your opinion. Sometimes we should not let it go. We all get sick including this moron madhimaarRan. We recover and come back and dont want to think about the "terrible time". This idiot might go through the same situation . How would he like if we label him as "SICK madhimaaRan"?

We need to tell these idiots like madhimaaRan to shut the fuck up!

வருண் said...

***காரிகன் said...

வருண்,
மதிமாறன் கண்ணதாசனுக்கு கவிதையே எழுதத் தெரியாது என்று சொல்பவர். எம் ஜி ஆர் பற்றி சகட்டு மேனிக்கு வீடு கட்டுவார். சிவாஜியை ஜாதி வெறி பிடித்தவர் என்று புதிய தகவல் சொல்லி நம்மை அதிரடிப்பார். (தேவர் மகன் படத்தின் நான் தேவன்டா வசனத்தை உதாரணம் கொண்டு) ஆனால் அதற்க்கு இசை அமைத்த (தேவர் காலடி மண்ணே) இளையராஜாவை வானம் வரை புகழ்வார். ரஜினி கமல் என்று எல்லோரையும் ஜாதி வைத்து விமர்சனம் செய்யும் அவர் இளையராஜா என்றால் மட்டும் அவரை விமர்சனக் கோட்டுக்கு மேல் வைத்துவிடுவார். இப்போதுதான் அவரைப் பற்றி அறிகிறீர்கள். அவர் எழுதியதை படித்தால் கேனத்தனமாகவும் மலிவான சிந்தனைக்கு உரமிடுவது போலவும் இருக்கும். ***

வாங்க, காரிகன்!

அவர் தளத்துக்கு நான் அதிகம் போவதில்லை. வேர்ட் ப்ரெஸ் தளங்களில் பின்னூட்டமிட முடியாது. எனக்கு கண்டவனுக்கும் என் இ-மெயில் அட்ட்ரெஸை கொடுக்கப் பிடிக்காது. இவரு பெரிய புடுங்கி, புத்த்கம் எல்லாம் எழுதி இருக்காரு, டி வி ல எல்லாம் வருவாரு என்பதெல்லாம் இப்போத்தான் தெரியும். இந்தப் புடுங்கி இளையரஜாவுக்கு மட்டும் ஒரு "ஸ்பெஷல் தராசு" வச்சிருப்பாருனு இப்போ வரும் அரசு மற்றும் உங்கள் மற்றும் அமுதவன் பின்னூட்டங்களில் இருந்துதான் தெரிகிறது.

இவன் பண்னுறதெல்லாம் அயோக்கியத்தனம், இவன் ஒரு முட்டாள்னு இவன் தளத்தில் சொல்ல முடியாததால், இப்படி சொல்ல வேண்டி வருகிறது.

இவன் ஒரு லூசுப்பய, சும்மா ஒளறுவான்ன்னு இப்போவாவது நாலு பேருக்குத் தெரியட்டுமே!

இல்லைனா என்னைப்போலவே ப்லரும் அறியாமையில்தான் "இவன் ஏதோ யோக்கியன்"னு நினைத்து வாழ்வார்கள்!

உங்க கருத்துக்கு நன்றி, காரிகன்! :)

வருண் said...

***Amudhavan said...

மதிமாறன் கருத்துப்படி பாரதியும் கவிஞரில்லை என்பதை விட்டுவிட்டீர்களே காரிகன்>***

வாங்க அமுதவன் சார்! இது வேறயா?
சரியான அடிமுட்டாள் போல இந்தாளு, வெளக்கெண்ணை மதிமாறன்! :(

Vinoth Kumar said...

வருண் அவர்களே.
மதிமாறனின் ரஜினி பற்றிய கருத்துகளை கொஞ்சம் அதிகமாக திரும்ப திரும்ப கூறினார் என்றாலும்....

அவை உண்மையே...
திரை படத்துக்கு தமிழர்கள் கிட்டத்தட்ட அடிமைகளாகவே இருக்கின்றனர். கிரிகட்டிலும் டாஸ் மாக்கிலும் அப்படியே தான். இதை தெரிந்து வைத்துள்ள சம்பந்தபட்ட துறையினர், இதை பயன்படுத்தியே பணம் குவிக்கின்றனர்.

ரஜியினின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கின்றானர். இப்படி சம்பாத்திருக்கும் ரஜினி, அதை கொடுத்த ரசிகர்களுக்கு எதாவது செய்யலாம் தான். உண்மையை சொன்னால், இப்படி எதாவது கொடுத்தால், ரசிகர்கள் இன்னம் அதிக உற்சாகத்துடன் படம் பார்க்க வருவர். அது அழிந்து கொண்டிருகும் சினிமாவுக்கு நல்லது ஆனால் மக்களுக்கு கெட்டது.

சினிமா வலுப்படுவது மக்களூக்கு நல்லதல்ல. எனவே மகள் திருமணத்துக்கு விருந்து தருகிறென், நதி நீர் இணைப்புக்கு கோடி தருகிறேன் என்று ஏமாற்றிய ரஜினி மக்களுக்கு நல்லது செய்திருக்கின்றார்.

ஆனால் மதிமாறன் ஏமாற்றியதை மட்டும் காட்டுகின்றார் அவ்வளவே.

இன்னம் சரியாக சொன்னால் , ரஜினியின் ஒவ்வொறு வினாடியும் பண மதிப்புடையது, அதை வியாபரமாக்க பார்க்கின்றார் என்கிறார் மதிமாறன். ஆனால் கம்ப்யூட்டர் கிராபிஸ்சில் பலர் இணைந்தே படத்தை உருவாக்கவேண்டும், அதில் ரஜியினின் பங்கு வெறும் போட்டோ அல்லது வீடியோ மட்டுமே,

இன்னம் சொன்னால், ஒரு குழு சண்ணை காட்சியை வரையும்போது, இன்னொரு குழு காதல் காட்சியை வரைய முடியும், இதற்கும் ரஜினியின் நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல குழுக்கலை ஒருங்கிணைக்க முடிந்தால் ஒரே 8 மணி நேர சிப்டில் ரஜினி 1 ஆண்டு நடித்து தர வேண்டிய படத்தை கொடுத்துவிட முடியும்.
இந்த புரிதல் மதிமாறனிடம் இல்லை போலும்.

//அவர் வியர்வை எல்லாம் சிந்தவில்லை. உண்மையில் அவரின் ஒவ்வொரு மணித்துளியும் ஆயிரமல்ல லட்சங்களுக்கு மேல் வியாபார மதிப்பீடு உள்ளது. கணக்குப் பார்த்தால் தூங்குவதும் கழிவறைக்கு போவதும்கூட அவருக்கு வீணாக போகும் நேரங்கள்தான்.

அதனால்தான் தனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாதபோது பல மாதங்கள் வீணாக போகிறதே என்கிற புலம்பலில் பிறந்ததுதான் இந்த ‘கோச்சடையான்’//

http://mathimaran.wordpress.com/2014/03/11/kochadaiyaan-790/

அவரின் இளையாராஜா பாராட்டுவது சரியே சினிமா பின்னனி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து சுய உழைப்பால் உயரிய இடத்தை அடைந்தததை பாரட்டுவது சரியே.. ஆனால் அதை தெய்வ ஆராதனை போல செய்வது தான் சரியில்லை.

ரஜினியை மட்டும் அல்ல எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறைகூறி மக்களின் சினிமா மயக்கத்தை தெளிவிப்பது என்பது கடினம்

வருண் said...

வினோத்: ரஜினியை அவர் விமர்சிப்பதில் தவறே இல்லை!

ரஜினியை, சீக்காளி என்ற அடைமொழியுடன் அவர் விமர்சித்தது கீழ்த்தரமான செயல்!

Someone should tell him!

அதைச் சொல்லவே இப்பதிவு! புரிதலுக்கு நன்றி