Monday, March 24, 2014

கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!

சரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிற? னு  வீம்புக்குக் கேட்டால்,
 
உடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு சொல்வாங்க.

மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக (திராவிட பொண நக்கி நாய்களும்தான்) கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.

உங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா? 

என்ன ஆளு நீங்க? ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!

அடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறானுக.

இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.

இப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!
அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?
 

சமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா? பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க!

சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!


என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?

ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge anybody's intelligence based on their taste!

இது ஒரு மீள் பதிவு!

1 comment:

காரிகன் said...

வருண்,
ஏறக்குறைய எனக்கும் இதே எண்ணங்கள்தான்.ஆனாலும் என்றுமே ஜாதி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்குள் நான் நுழைய விரும்பியதில்லை. கமல், சுஜாதா பற்றிய பொதுவான மக்களின் கருத்து நீங்கள் சொல்லியதுபடியே இருக்கிறது.