Friday, March 21, 2014

கவிதாவின் தகாத உறவு!

கவிதாவுக்கு, அவளுக்கு மணமான பிறகு அவனிடம் இருந்த நட்பை எப்படி தொடர்வதென்று தெரியவில்லை. சிங்கிளாக இருந்தபோது மணமான அவனிடம் விளையாடுவாள், கேலி செய்வாள், ஏன் அதற்கு மேலுமே நடந்துகொள்வாள். அவனுடைய  மனைவி இந்த நாட்டிலேயே இல்லை என்பதால் இது ஒரு மாதிரியான உறவுதான் என்றும் ஊர் உலகம் சொல்லும். இருவரும் நண்பர்கள், நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வாள் -ஆனால் அரை நம்பிக்கையுடன்தான். அவனுடன் படுக்கைக்கு போகவில்லை என்றால் சுத்தமான உறவா? என்கிற கேள்விக்கெல்லாம் அவள் பதில் சொல்வது கடினம். கசப்பான அப்பகுதியைப் பத்தி யோசித்ததில்லை அவள்.

கவிதாவுக்கு இன்று யோசிக்க வேண்டிய கட்டாயம். அவளுக்கு மணமாகிவிட்டது இப்போது. அவளுக்கு அன்பு செலுத்த, அவள் அன்பை முழுமையாக பரிமாறிக்கொள்ள ஒரு நம்பிக்கையான அழகான ஆண்மகன் கிடைத்துவிட்டான். இந்த ஒரு சூழலில் அவனிடம் அவள் முன்புபோல் விளையாடுவது தவறு என்று அவளுக்குத் தெளிவாக உணர முடிந்தது. இருந்தாலும் நன்கு பழகிவிட்ட  அவனை முழுமையாக அவளால் தவிர்க்க முடியவில்லை. அவனைத் தூக்கி எறியவும் முடியவில்லை. அது ஏனோ தன் கணவனைப் பத்தி அவனிடம் பேசவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. கணவனை உயர்வாகவும், அவன் நற்பண்புகளையும் அவனிடம் சொன்னால் அவனுக்கு "போர்" அடிக்கும் என்று உணர்ந்தாள்- அவன் அவளுடைய  நலம் விரும்பியாக இருந்தும்கூட. பலவிதமான குழப்பம் அவளுக்கு.

கடைசியில் ஒரு தெரப்பிஸ்ட்டை அணுகினாள். தெரப்பிஸ்ட் தெளிவாக சொல்லிவிட்டாள், நீ உன் நட்பை கழட்டிவிடுவதுதான் சரி என்று. அதெப்படி என்னால் முடியும்? இவ்வளவு நாள் அவன் மணவானவன் என்று தெரிந்தும் அவனிடம் அளவுக்கு மீறி நடந்துள்ளேன், இன்று என் கணவன் கிடைத்தவுடன் அவனை, அவன் நட்பை தூக்கி எறிவது என்று. தெரப்பிஸ்ட் தெளிவாக சொல்லிவிட்டாள் " யு மஸ்ட் ச்சூஸ் ஒன்" என்று. அவளுக்கு ஒரே குழப்பம் என்ன செய்வதென்று தெளிவாகத் தெரியவில்ல.

அன்று காலையில் ஆபிஸ் காண்டீனில் அவனைப் பார்த்தாள்.

"Hey, I am moving to Denver. Found a new job there. Will have to take up the job next week" என்றான் விடாமல் தொடர்ந்து.

"ரியல்லி?" என்றாள் வருத்தத்துடன். வாழ்த்தக்கூடத் தோணவில்லை அவளுக்கு.

"புது இடம். புதுமையான சேலஞ்ச்கள். I am excited! I need to make new friends and move on. Life goes on kavitha!" என்றான் செயற்கைப் புன்னகையுடன். He did not even say, he will miss her! He abruptly left pretending that he has an "appointment now"!

ஒருமுறை அவன் அவளிடம் யாரையோ அவனுடைய இன்னொரு நண்பன்  பற்றி சொல்லும்போது, "என்னிடம் இருந்து அவன் நாலு அடி ஒதுங்கணும்னு நினைத்தால் நான் அவனிடம் இருந்து  நூறு அடி தள்ளிப் போயிடுவேன், கவிதா.  வாழ்க்கையில் நம்ம யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாது. முடிந்தால் ஒருவருக்கு ஒருவர் உதவணும். அந்த உதவி தொந்தரவாக எதிர்முனையில் எடுக்கப்பட்டால், அது எனக்குப் புரிந்துவிட்டால்,  நான் ரொம்ப சிம்ப்பிள்,  சுத்தமாக ஒதுங்கிவிடுவேன். அதுதான் மனிதாபமுள்ள மனிதன் இன்னொரு மனிதனக்கு செய்யும் தன்னலமற்ற சிறு உதவி என்று நம்புபவன் நான்" என்று. அன்று அவன் சொன்னபோது அவளுக்கு அவன் என்ன சொல்றான், ஏதோ உளறுவதுபோல  இருக்கே என்றுதான் தோன்றியது. ஆனால் இன்று அதை நினைத்து அசைபோடும்போது அப்படித் தோணவில்லை.

அதன் பிறகு ஃபார்மலாக "செண்ட் ஆஃப்" கூட அவனுக்கு அவளால் கொடுக்க முடியவில்லை. அதற்கு சந்தர்ப்பம் வாய்க்க முடியாதபடி அவன் நடந்து கொண்டான். பல வருடங்களாகிவிட்டது இப்போது.  அவனிடம் இருந்து இ-மெயில் கெடையாது, ஃபோன் கால் கெடையாது. ஏன் அவன் உயிருடன் இருக்கானா என்றே கவிதாவுக்குத் தெரியாது.

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் கவிதாவைப் போன்ற பெண்களும் உள்ளனர் என்பதை பத்திரிகை செய்திகளில் காண முடிகிறது. விலகி சென்ற காதலனை பாராட்டத் தான் வேண்டும். பெண்களின் பலவீனங்களை பயன்படுத்திக் கொண்டு அப்படியே தொடர நினைத்தால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உண்டு.

காமக்கிழத்தன் said...

படுக்கையில் பங்கு பெறாவிட்டாலும், பழகியவனைப் பற்றிய ’நினைப்பில்’ மூழ்கிக் கிடப்பதும் ’தகாத உறவு’தான் என்பதைக் கதை அழுத்தமாகச் சொல்கிறது.


’இருவரில்’ ஒருவருக்கேனும் எதிர்வரும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இருப்பது நல்லது என்பதை உணர்த்தும் தரமான படைப்பு.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இப்படிப்பட்ட ஆண்களும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்த காதலன் ஒதுங்கிச் சென்றானே..அதுவரைக்கும் நல்லது.

ஜீவன் சுப்பு said...

//அவனுடன் படுக்கைக்கு போகவில்லை என்றால் சுத்தமான உறவா? //

இது கேள்வி ...

வருண் said...

தோழர் தோழியர், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

நம்முடைய இன்றைய "முன்னேறிய" கலாச்சாரத்தில் இவையெல்லாம் சாதரணமாக நடக்கிறது என்பதே நித்ர்சனம். ஆனால், அதை கற்பனை கதைகளில் படிக்கும்போதுகூட நமக்கு மன உளைச்சல் மனக்கூசல் தரலாம்.

ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ளணும் "காதலில் விழுத்து தத்தளிப்பவர்களுக்கு" (முதலாமவர், இரண்டாமவராக) தங்கள் உணர்ச்சிமிக்க நிலைமையில் தான் செய்யும் தவறான ஒன்றைக்கூட "அழகான" "புனிதமானதாக"த்தான் உணர வைக்கும், இந்த "காதல் சனியன்". தவறு செய்யும் அதே காதலன் காதலி, தங்கள் நிலையையே சுயநினைவுடன் இன்னொரு கதையில் படிக்கும்போது அதைத் தவறு என்று உணருவார்கள். ஆனால் அவர்களே முதலாமவர் இரண்டாமவராக இருக்கும்போது அதை அவர்கள் உணரமுடியாது என்பதே உண்மை.