பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?
எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்! நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?
சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)
கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க.
பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!
பண்டாரத்துட்ட விவரிப்போம்..
இனிப்புனா என்ன?
அது "சுகர்" கலந்தது?
சுகர்னா?
அது ஒரு கார்போஹைட்ரேட்!
கார்போ ஹைட்ரேட்னா?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.
என்ன வேதிப்பொருளா?
எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.
ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண சர்க்கரையை இப்படி புரியாதமாரி பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி இதெல்லாம் புரியும்?
கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?
சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!
இப்போ புரிஞ்சிருச்சா? பேசாமல் போவியா?
இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..
ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு, இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..
பண்டாரத்துக்கு லட்டு |
பண்டாரம் அதை திண்ணுபுட்டு
இப்போ புரியுது.அட இதுதானா? னு சொல்லும.
இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.
ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்! ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?
இப்போ ஆன்மீகம்னா என்ன?
இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.
சரியா?
சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?
அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.
பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்!
அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???
இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..
பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..
இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.
இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்..
எப்போ??
ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?
யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.
என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.
அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.
மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..
இருடா பண்டாரம்!
ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?
கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது. புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.
அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன? கடவுள்னா என்ன? கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..
இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!
14 comments:
சிரிக்க சிந்திக்க வைப்பதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை போல. என்னவொன்று வார்த்தைகள் கடுமையாக வந்து விட்டது. நன்றி வருண்.
செம குத்து.. நாத்திகர்கள் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாளாக நல்ல பிள்ளை வேடம் போட்டவர்களின் சாயங்கள் வெளுத்துவிட்டன போலும்... !
சிலருக்கு தக்க வகையில் பதிலளிக்க ஒரு வருண், ஒரு வவ்வால், ஒரு சார்வாகன் ரொம்ப அவசியம் .. !
***ஜோதிஜி திருப்பூர் said...
சிரிக்க சிந்திக்க வைப்பதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை போல. என்னவொன்று வார்த்தைகள் கடுமையாக வந்து விட்டது. நன்றி வருண்.***
ஆன்மீகத் தேடலில் உள்ள "பண்டாரம்" உங்க கேள்விக்கு பதில் சொறதை விட்டுவிட்டு ஏன் தேவையே இல்லாமல் சும்மா கெடக்கிற நாத்திகவாதியை விமர்சிக்கணும்னு எனக்கு விளங்கவில்லை!
****இக்பால் செல்வன் said...
செம குத்து.. நாத்திகர்கள் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாளாக நல்ல பிள்ளை வேடம் போட்டவர்களின் சாயங்கள் வெளுத்துவிட்டன போலும்... !***
அவன் கணக்கு என்ன தெரியுமா? ஆத்திக பண்டாரங்கள்தான் மெஜாரிட்டி என்பதால் இவன் ஒளறலுக்கு எல்லாரும் சேர்ந்து "ஆமாஞ்சாமி" போடுவானுக.. நம்ம பெரிய ஆத்திக சண்டியராயிடலாம் என்பது!
பெரிய பெரிய ஆன்மீகவாதிகளே பொத்திக்கிட்டு இருக்கான், இவன் முந்தாநாள் மழையில் நேத்து மொளச்ச காளான்! துள்ளிப் பார்க்கிறாரு, ஆத்திக வீரரு!
Dai Naye... blog - la sori nayee mathiri ippadi thirey...(gowndamani mathiri solliparu)varun your words are disgusting.
//...உட்கார்ந்து யோசித்தால்...வெறுமைதான் தெரியும்.//
இதை முழுமையாகப் புரிந்துகொண்டால், சின்னச் சின்ன விசயங்களுக்கு மட்டுமல்ல, பெரிய பெரிய விசயங்களுக்குக்கூட அடித்துக்கொள்ள மாட்டோம்.
Mr pandaram appadikarathu oru jaathi.. neenga pandaram nu thiturathu oru jaathi pera solli thiturathu.. ungaluku venumna vera varthaiya use pannunga.. pandaram nu solli oru inatha asingapadu tha teenga
////...உட்கார்ந்து யோசித்தால்...வெறுமைதான் தெரியும்// - இதென்னமோ உண்மைதான். இந்த டாபிக் ல நீங்க கடுமையா பேசினாலும் நீங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது கஷ்டம்தான்.. வருண் உங்களை மாதிரிதான் என் கணவரும் 100% நாத்திகவாதி... ஆனால் என் பிறந்த வீட்டில் கடவுள் நம்பிக்கை அதிகம்.. அப்படியொரு சூழலில் வளர்ந்துவிட்டேன். என்னிடம் நிறைய விவாதம் பண்ணுவார். எல்லாரும் அவரை ஆமா இப்ப வயசுல இப்படிதான் இருப்பாரு.. வயசாயி கீழ விழுந்தா அப்ப கடவுளை கூப்பிடுவாருன்னு..சொல்வாங்க. அதுக்கு அவர் சாகிற நிலமை வந்தா கூட காப்பாத்த மனுஷந்தான் வருவான்.. அவனைத்தான் கூப்பிடுவேன்னு சொல்வாரு. அவர் நாத்திகவாதி என்பது எனக்கு பிரச்சினையில்லை.. நல்லவராக நேர்மையாக இருக்கிறார்.. அதுதான் என் வாழ்க்கைக்கு தேவை! நான் நாத்திகம் பேசுவதில்லை என்றாலும் என்னிடம் மூட நம்பிக்கைகள் கிடையாது. ஆன்மீக விஷயத்தில் என்னிடம் அதிகம் தலையீட்டு பேசுவதில்லை என்றாலும் அவர் மகளை அவர் வழிக்கு கொண்டு வர குறிக்கோளாயிருப்பார்.. குட்டீஸ் சாமி கும்பிடறதை பார்த்துட்டாருன்னா.. அவ்வளவுதான்.. அவ கிட்ட இருந்து பென், பென்சில் எல்லாம் பிடுங்கி வச்சிக்கிட்டு இதெல்லாம் சாமிகிட்ட வாங்கிகிட்டு ஸ்கூலுக்கு போ என்று திட்ட ஆரம்பித்து விடுவார்.. இந்த விஷயத்துல ஏகப்பட்ட காமெடி கலாட்டா இருக்கும் எங்க வீட்ல.. !
சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு பத்திரிக்கையாளரும் நாத்திகவாதி.. அவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதிலுள்ள நூறு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் ஒரு லட்சம் பரிசு என்றார்.. அந்த புக்கை உங்களுக்கு தரனுமே..
அதிலுள்ள கேள்வியில் சாம்பிளுக்கு ஒண்ணு..
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா.. ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகறதும் விதிப்படிதானே? அப்புறம் ஏன் அவன் ஆயுசு முடியுற வரை ஆவியா அலைவான்னு ஒரு கதை?
இப்படி நிறைய்ய...
***aravindan ranganathan said...
Dai Naye... blog - la sori nayee mathiri ippadi thirey...(gowndamani mathiri solliparu)varun your words are disgusting.***
அரவிந்தன் ரங்கநாதன்:
ஆன்மீகம் உம்மைப்போல் மனநோயாளிக்கு உதவும். நீ என்ன பண்ணனும்னா ஆன்மீகத்தில் மூழ்கி மூழ்கிச் சாவு! :)))
***காமக்கிழத்தன் said...
//...உட்கார்ந்து யோசித்தால்...வெறுமைதான் தெரியும்.//
இதை முழுமையாகப் புரிந்துகொண்டால், சின்னச் சின்ன விசயங்களுக்கு மட்டுமல்ல, பெரிய பெரிய விசயங்களுக்குக்கூட அடித்துக்கொள்ள மாட்டோம்.***
நீங்க திருவள்ளுவர் மாதிரி அப்பப்போ ரெண்டுவரி பின்னூட்டத்தில் அழ்கான ஒரு கருத்தை சொல்லிடுறீங்க! நன்றி :)
***உஷா அன்பரசு said...
////...உட்கார்ந்து யோசித்தால்...வெறுமைதான் தெரியும்// - இதென்னமோ உண்மைதான். இந்த டாபிக் ல நீங்க கடுமையா பேசினாலும் நீங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது கஷ்டம்தான்.. வருண் உங்களை மாதிரிதான் என் கணவரும் 100% நாத்திகவாதி... ஆனால் என் பிறந்த வீட்டில் கடவுள் நம்பிக்கை அதிகம்.. அப்படியொரு சூழலில் வளர்ந்துவிட்டேன். என்னிடம் நிறைய விவாதம் பண்ணுவார். எல்லாரும் அவரை ஆமா இப்ப வயசுல இப்படிதான் இருப்பாரு.. வயசாயி கீழ விழுந்தா அப்ப கடவுளை கூப்பிடுவாருன்னு..சொல்வாங்க. அதுக்கு அவர் சாகிற நிலமை வந்தா கூட காப்பாத்த மனுஷந்தான் வருவான்.. அவனைத்தான் கூப்பிடுவேன்னு சொல்வாரு. அவர் நாத்திகவாதி என்பது எனக்கு பிரச்சினையில்லை.. நல்லவராக நேர்மையாக இருக்கிறார்.. அதுதான் என் வாழ்க்கைக்கு தேவை! நான் நாத்திகம் பேசுவதில்லை என்றாலும் என்னிடம் மூட நம்பிக்கைகள் கிடையாது. ஆன்மீக விஷயத்தில் என்னிடம் அதிகம் தலையீட்டு பேசுவதில்லை என்றாலும் அவர் மகளை அவர் வழிக்கு கொண்டு வர குறிக்கோளாயிருப்பார்.. குட்டீஸ் சாமி கும்பிடறதை பார்த்துட்டாருன்னா.. அவ்வளவுதான்.. அவ கிட்ட இருந்து பென், பென்சில் எல்லாம் பிடுங்கி வச்சிக்கிட்டு இதெல்லாம் சாமிகிட்ட வாங்கிகிட்டு ஸ்கூலுக்கு போ என்று திட்ட ஆரம்பித்து விடுவார்.. இந்த விஷயத்துல ஏகப்பட்ட காமெடி கலாட்டா இருக்கும் எங்க வீட்ல.. !***
உங்கள் குழந்தைகளுக்கு நான் வளரும்போது கிடைத்த ஒரு "சூழ்நிலை" கிடைத்து இருக்கு. அவங்க அதிர்ஷ்டசாலிதான். ஏன் என்றால் தாம் மதிக்கும் அம்மா அப்பா, இரண்டுவிதமான சிந்தனைகளையும் முன் வைப்பதால், அவர்கள் இரண்டையும் பகுத்தறிந்து எது அவர்கள் மனதுக்கு சரி எனப்படுகிறதோ அப்பாதையில் போகலாம். இதைப்போல் எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒருபக்கச் சிந்தனைகளையே "மனச்சலவை" செய்யப்பட்டு இன்னொருபக்கம் என்னனு தெரியாமல் போய்விடமாட்டாங்க பாருங்க! :)
***உஷா அன்பரசு said...
சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு பத்திரிக்கையாளரும் நாத்திகவாதி.. அவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதிலுள்ள நூறு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் ஒரு லட்சம் பரிசு என்றார்.. அந்த புக்கை உங்களுக்கு தரனுமே..
அதிலுள்ள கேள்வியில் சாம்பிளுக்கு ஒண்ணு..
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா.. ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகறதும் விதிப்படிதானே? அப்புறம் ஏன் அவன் ஆயுசு முடியுற வரை ஆவியா அலைவான்னு ஒரு கதை?
இப்படி நிறைய்ய... ***
எல்லாக் கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் கேளுங்கனு சொல்கிற வகை இல்லைங்க நான் உஷா. :)))
எனக்கும் நெறையக் கேள்விகளுக்கு பதில் தெரியாதுங்க. என்ன தெரியலைனா "தெரியலைங்க உஷா" அல்லது "தெரியலைங்க பகுத்தறிவுவாதி"னு நிறுத்திக்குவேன்.
அதை விட்டுவிட்டு என் பரம்பொருளுக்குத்தான் எல்லாம் தெரியும், அவரை வழிபட்டால் எதற்குவேண்டுமானாலும் பதில் கிடைக்கும்னு எனக்கு எல்லாம் தெரிந்தமாதிரி நான் எதுவும் உளறவில்லைதானே? :))))
//யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.//
நச்ச்...
Post a Comment