நம்ம ஊர் முன்னேறிவிட்டதா? இல்லையா பின்னே? அந்தக் காலம் போலில்லாமல் ஒரு பெண் தாய்மையடைலை, அல்லது அவருக்கு கர்ப்பப் பையில் அல்லது கர்ப்பம் அடைவதில் ஏதோ சிறு குறை என்பதால் குழந்தை பிறக்கலைனா டாக்டரிடம் போயி என்னனென்னவோ செய்து ஒரு பிள்ளையைப் பெத்து எடுத்துட்டு வந்துடுறாங்கப்பா! என் சொந்தத்திலேயே பலருக்கு இப்படி குழந்தை பிறந்து கொண்டு இருக்கிறது. அப்படியும் முடியலைனா யாராவது ஒரு வாடகைத் தாயை பணம் கொடுத்து வாங்கிட்டு வந்து குழந்தை பெத்துக்கிறாங்க. என்னுடைய சித்தி, அம்மாவின் கஸின் (தங்கை) ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இன்று (55 வயதுக்கு மேலான பிறகு) குறையுள்ள பலருக்கும் "இந்த நவீன வழியில்" குழந்தை பிறப்பதைப் பார்த்து, "அப்போ, என் காலத்தில்
இதுபோல் வைத்திய வசதியெல்லாம் இல்லாமல்ப் போய்விட்டதே" என்று இப்போ வயதான காலத்தில் அழுதழுது
கிடக்கிறார்.
பை பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோப்ளாஸ்ட் சர்ஜெரி எல்லாம் சாதாரணமாப் பண்ணுறாங்க.
ஹெல்த் காண்சியஸ்னெஸ் வந்து வாக்கிங், ஜாகிங்னு கிராமங்களில்கூட ஆளாளுக்கு காலையில் எழுந்து குடும்ப சகிதமாக நடக்க ஆரம்பிச்சுட்டாணுக!
கிட்னி பழுதடைந்தால், யாராவது ஒரு ஏழையிடம் ஒரு விலை கொடுத்து கிட்னி வாங்கிட்டு வந்து பொழைச்சுக்கிறாங்க.
இதெல்லாம் நம்ம ஊரில் மெடிக்கல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்கள்தானே?
சரி, தலைப்புக்கு வருவோம்..
எதார்த்தமாக நீயா நானா பார்த்தால் ..
பொண்ணுங்க, சிறுமிகள் எல்லாம் "லவ் லவ்"னு காதல், தன் காதலன், அவர் கொடுக்கிற முத்தம்னு எல்லாவற்றையும் ஊரறியப் பேச வந்துட்டாங்கப்பா!
இதில் ரெண்டு க்ரூப்பா உக்காந்து இருந்தாங்க. மொதல்ல எனக்கு சரியாப் புரியலை, காதல் சரினு ஒத்துக்கொள்ளும் இந்த இரண்டு குழுவும் எப்படிப்பா எதிர் எதிரணி என்று.
அப்புறம் நான் புரிந்துகொண்டது..
* காதலனுக்காக எதை வேணா விட்டுக் கொடுப்பேன், என்னை எப்படிவேணா மாத்டிக்குவேன்னு ஒரு அணி (உணர்ச்சி வசப்படும் காதலிகள் அணி போல)!
* காதலன்னா என்ன? என்னுடைய தனித்துவத்தை, சுயமரியாதையை, தனி விருப்பங்களை, ("கணக்கு கணக்கா இருக்கணும்") எல்லாவற்றையும் எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது னு கொஞ்சம் பகுத்தறிதலுடன் காதலிக்கும் பெண்கள் இன்னொரு பக்கம் போல!
அட அட அட என்னமா லவ் பண்ணுறாங்க! ஓரக்கண்ணில் பார்க்கிறதிலே இருந்து, கட்டிப் பிடிக்கிறது, முத்தம் கொடுப்பது எல்லாத்தையும் "பச்சை பச்சையா"ப் பப்ளிக்காப் பேசுறாங்கப்பா!!!
பொதுவாக காதல், இளம்பெண்கள் காதலில் விழுவது என்பதெல்லாம் நம்ம சமுதாயத்தில் காலங்காலமா இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாட்டி பாட்டன் காலத்திலிருந்தே காதல், காதலிப்பது என்பது இருக்கத்தான் செய்யுது. அந்தக்காலத்துப் பாட்டிகள்கூட யாரையாவது காதலிச்சுத்தான் இருப்பாங்க! 99% காதல் கைகூடாமல் போயி, யாரையாவது படிச்சவர், பசையுள்ளவர், நம்ம சாதிக்காரர்னு ஜாதகம் பார்த்து ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டு, பழசை மறந்து கற்பு வாழ்க்கை வாழ்ந்து இருப்பாங்க. ஆனால் அதைப் பத்தி ஊரெல்லாம் பார்க்கிறாப்பிலே, கேக்கிறாப்பிலே என்றுமே பேசமாட்டாங்க.
"மறைத்தல்"தான் காதலுக்கு தனி அழகு என்று காலங்காலமாக நம்ம சமுதாயத்தில் நம்பப்பட்டது. ஒரு பெண் நிர்வாணமாக தன் அழகைக்காட்டி அலைவதைவிட, அவளுடைய வளைவு, சுழிவுகளை, கவர்ச்சியான உடலை மறைத்தால்தான் அதற்கு "இன்னும் கவர்ச்சி" "மேலும் அழகு" என்று இன்றும் நம்புவதுபோல், காதலையும், காமத்தையும் அந்தரங்கமாகவோ, மனதுக்குள் புதைத்தோ, அல்லது நாலு சுவர்க்குள்ளே வைத்தோப் பேசுவதுதான் அழகு என்றுதான் நம்பினார்கள்.
அப்படி மறைப்பதுதான், தம் காதலை, காதலனை தமக்குள்ளேயே வைத்திருப்பதுதான் காதலுக்கும், காமத்திற்கும் அழகு என்று நம்பி இவைகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டாடிக் கொள்வார்கள், கொண்டார்கள். ஊரறிய இதைப் பத்தி ஒருபோதும் பேசமாட்டார்கள்!
ஆனால் இன்று?
அடேங்கப்பா!!!
Honestly, naked women never look attractive to me. So are the girls who come forward and talk about their personal matters like "love" and "lovers" "sex" and "intimacy" to the world.
It was kind of ticklish to me! For some reason I did not like that at all. May be like-minded women, enjoyed such an episode? I dont know!
4 comments:
//Honestly, naked women never look attractive to me///
எனக்கும் அப்படிதான் .மறைக்க மறைக்கதான் மனசு பார்க்க துடிக்குது அதனால்தான்
வாங்க உண்மைத்தமிழன்!
ஊரறிய இதையெல்லாம் பேசுவதில் என்ன பிரச்சினைனா..
* இன்னைக்கு இவர்கள் "அன்பே" "ஆருயிரே" "என் அத்தான்" முத்தம் ஒன்ரு கொடுங்கள்னு ஏங்கியவன் எல்லாம் இன்னும் 10-15 வருசத்தில் நிச்சயம் பொறுக்கியாகிடுவான். இதே வீடியோவைப் பார்த்து என்னமாரி முட்டாளா இருந்து இருக்கோம்னு ஒப்பாரி வைப்பார்கள்!
* ரெண்டாவது இன்னைக்கு உருகி உருகி காதலிக்கிறவனை நாளைக்கு கழட்டிவிட்டுட்டு (50%க்கு மேலே அதுதான் நடக்கப்போது- இதுதான் நம்ம கலாச்சாரம்)புதுசா வந்த ஆத்துக்காரனோட உக்காந்து கூனிக் குறுகிக்கொண்டு இந்த வீடியோவைப் பார்க்க நேரிடும்(எவனாவது மறு ஒளிபரப்பு செய்யும்போது)
* இதுக்கிடையில் தன்னால ஆக்ஸிடெண்ல தன் காதலன் இறந்துவிட்டான்னு குற்ற உணர்வுடன் அவன் நினைவில் வாழும் ஒரு பொண்ணு வந்தாங்க.
"நான் இப்படியே அவர் நினைவில் வாழப்போறேன்னு" சொன்னால் விட வேண்டியதுதானே இது அவர் பிரச்சினைனு?
நடுவர் பெண்மணிகள் எல்லாம் அவங்க இன்னொரு காதலனைத் தேடிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னத்துக்கு கேணத்தனமா ஒரு அறிவுரை??? Let her live and learnனு விட்டுட்டுப் போக வேண்டியதுதானே? நடுவரா வரும் உனக்கு இது அவளுடைய பர்சனல் மேட்டர்னு தெரியாதா? நீ என்னத்துக்கு கல்யாணம் பண்னிக்கோ, இன்னொரு நல்லவர் உனக்கு கெடைப்பார் மண்ணாங்கட்டினு? அறிவுரை???
The problem here is she is never going to find a "lover" or "partner" who can match his qualifications or qualities. Because he is NO MORE! As he is dead he is not going to change and show his true color! But the new partner is another human being, who is going to live. So he will change and so he can never match a person who is dead.
மன்னிக்கவும், உங்களை மதுரைத்தமிழன்னுதான் சொல்லணும்.. உண்மைத்தமிழன்னு சொல்லிப்புட்டேன்போல! உங்க தளப்பேரு எப்படியோ நம்ம "அப்பன் முருகன் மகன் சரவணன் அண்ணாச்சி" பேரை திருடி உங்களுக்கு கொடுத்து "விளிக்க" உதவிப்புடுச்சு போல! :)
நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பெண் குழந்தை வைத்திருக்கிற பெற்றோர் கொஞ்சம் மிரண்டுதான் போய் இருப்பார்கள்.
காதலன் இறந்து போனதால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று எடுத்த முடிவு சினிமாத் தனமாக உள்ளது போல் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டு செய்யப் பட்ட இந்த முடிவை காலம் மாற்றும். ஆனால் இளமை இருக்க வேண்டுமே.அப்போது அவர் நினைத்தாலும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஒரு வேளை காதலன் உயிரோடிருந்து திருமணம் செய்து கொண்டிருந்தால் கூட இவனை போய் கதளிச்சமே என்று வருந்தும் நிலை வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.
காதலில் இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பது நீங்கள் சொல்வது போல பிற்காலத்தில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்
Post a Comment