மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? உன்னை எவண்டா சீரியல் பார்க்கச் சொன்னான்? பார்த்துட்டு வந்து பதிவெழுதுறேன்னு எழவைக் கூட்டுற? (இது நீங்க எல்லாரும் கொடுக்கும் "அர்ச்சனை" ! )
அதான்ப்பா விஜய் டி வி சீரியல் ஆஃபிஸ்ல வர்ர ஆண்ட்டி "ராஜி", தென்றல்னு இன்னொரு சன் டி வி சீரியல்ல வர்ர "துளசி"தான் இல்லையா? எனக்கு எவ்ளோ தமிழ் சீரியல் "நாலட்ஜ்" இருக்கு பாருங்க! ஏன் ஒரு சீரியல் முடிஞ்சதும் இன்னொண்ணுல கம்மிட் பண்ணினால் என்னவாம்? சன் டி வி ல அந்த சீரியல்ல பலகாலமா வருது, இந்த "ஆண்ட்டி". இப்போ விசைல வர்ர ஆஃபிஸ்லயும் "கீரோயினா" வருது. சரி, இந்த சீரியல் கொஞ்சம் ஐ டி ரிலேட்டெட்டா வேற மாதிரி கதையா இருக்கேனு பார்த்தால், கடந்த சில எபிசோட்கள்ல தாலி, அப்பா, அம்மா செண்டிமெண்ட்னு போட்டு கொல்லு கொல்லுனு கொல்லுறாணுகப்பா.
என்னதான் கார்திக்க்கு தாடியை வளர்த்து முதிர்ச்சியான இளைஞனாக்க இவனுக மெனக்கெட்டாலும், அந்தம்மா ராஜி ஒரு "ஆண்ட்டி" மாதிரியும் இவன் ஒரு "பங்க்" மாதிரியும்தான் இருக்கு.
இந்த ராஜி ஆண்ட்டிக்கு கார்திக் மேலே லவ்வாம்! ஆனால், முக்கியமான நேரத்தில் வீட்டை விட்டு வெளிய வரமாட்டேன்னு அடம் பிடிப்பாளாம்! வீட்டிலேயே உக்காந்து ஒப்பாரி வைப்பாளாம்!
ஆண்ட்டிக்கும் சின்னப் பையனுக்கும் கண்ணாலம் |
உடனே இவரு நண்பர்கள் எல்லாம் "ஏஞ்சலை" அழைத்துவந்து இவதான் காதலினு பொய் மேலே பொய் சொல்லி மாலை மாத்தி தாலியை அறுக்க இல்லை இல்ல தாலியைக் கெட்டப் போகும்போது ராஜி வந்து நிப்பாளாம்!
சீரியல்னா, "ட்விஸ்ட்" எல்லாம் இருக்கத்தான் செய்யணும். அதுக்காக "ட்விஸ்ட்டு பண்ணுறேன்"னு எல்லாரையும் கேணப்பயளுகளா ஆக்கித்தான் ஆகணுமா என்ன?
அப்பா அம்மா செண்டிமெண்ட், அவனுக வைக்கிற ஒப்பாரி, கல்யாண செண்டிமெண்ட், காதல் செண்டிமெண்ட், இப்படி ட்ராமா மேலே ட்ராமாப் போட்டு கொல்லு கொல்லுனு கொல்றாணுக!
----------------------
புதுக்கவிதைனு ஒரு புதுசா ஒரு புது எழவை ஆரம்பிச்சு இருக்காணுக. ஆமா விசய் டி வி ல! இருவர் உள்ளம் அல்லது மெளனராகம் போல கதையைக் கொண்டுபோகலாம்னு இருக்காணுகனு நெனைக்கிறேன்..
தாயுமானவன்னு வர்ர எழவு ல வர்ர ஒரு "கீரோயின்" அக்காவையேதான் இங்கேயும் காவியாவோ என்னவோ ஒரு எழவுனு சொல்லிக் கொண்டு வந்து "கீரோயினாக்கி " மறுபடியும் கொல்றாணுக!
என்னப்பா எந்த ஒரு கேரக்டரிலும் ஒரு "கண்சிஸ்டன்ஸி"யே இருக்க மாட்டேன்கிது. நெனச்சா புதுசா ஒரு வில்லனை கொண்டு வந்து கொஞ்ச நாள் கொல்லுறாணுக. அப்புறம் அவனை அனுப்பி வச்சுட்டு "கீரோவை" வில்லனாக்கி, வில்லனை நல்லவனாக்கி மாத்தி மாத்திப் போட்டு அரைச்சு கொல்லுறாணுக. அப்புறம் இந்த "தாயுமானவனுக்கு" தினமும் ஒரு புதுப் புது மகளாத் தேடித் தேடிக் கொண்டு வர்ராணுக! அப்புறம் "தாயுமானவனு"வுக்கும் அந்த டாக்டருக்கும் லவ்வு மாதிரி ஏதோவாம்!
நீ பதிவெழுதுற நேரம் போக முழு நேரமும் சீரியல் பார்த்து க்கிட்டு இருந்துட்டு வெக்கமே இல்லாமல் எல்லாரையும் திட்டிக்கிட்டு திரிகிற! கேவலமா இல்லை? அந்த சீரியல் எடுக்கிறவன் எவ்வளவோ பரவாயில்லை, உனக்கு! மூடுடா வருண்! (இது நீங்க எல்லாரும்தான்! :) )
2 comments:
//நீ பதிவெழுதுற நேரம் போக முழு நேரமும் சீரியல் பார்த்து க்கிட்டு இருந்துட்டு வெக்கமே இல்லாமல் எல்லாரையும் திட்டிக்கிட்டு திரிகிற! கேவலமா இல்லை? அந்த சீரியல் எடுக்கிறவன் எவ்வளவோ பரவாயில்லை, உனக்கு! மூடுடா வருண்! //
ஹி..ஹி..ஹி..
பின்னூட்டத்திற்கு, உங்க வாசகர்கள் எல்லாம் typing பண்ண கஷ்டப்பட வேண்டாமென்று, copy & paste பண்றதுக்கு வசதியா நீங்களே எழுதி வச்சிட்டீங்க. அப்படித்தானே!
ஆபிஸ் சீரியலை என்னோட ஆபிஸில் இருக்கும் எல்லாரும் ரெம்ப விரும்பி பார்க்கிறாங்க. நான் ரெம்ப பார்க்கிறது இல்ல. ஆனா என்னோட ஒய்ப்புக்கு டப் பண்ணிய விஜய் டீவி சீரியலை பார்க்குறாங்க. அதுல நடிக்கிறவங்களோட முக பாவனைகளை பார்த்தால் நம்ம ஊரு சிவாஜி தோத்திடுவாரு. சின்ன பிள்ளைகளில் இருந்து பெரியவங்க வரை முக பாவனைகளை அப்படி தான் வைத்திருக்கிறார்கள். அவர்களின் சோகமும், சிரிப்பும் ரெம்ப கிளிசோவாக இருக்கும். இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைச்சிருந்தேன்.
Post a Comment