Sunday, May 11, 2014

என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா?

"இவன் ஒரு மெ ண் டலு! எதுவும் உருப்படியா எழுதமாட்டான்! இவன்லாம் எதுக்கு எழுதுறான்னே தெரியலை! ஒரு மட்டு மரியாதை தெரியாது! இவனால தமிழர்களுக்கு எல்லாம் தலைக்குனிவுதான்" என்ற எண்ணுத்துடந்தான் தற்போது இருந்தார் அந்தப் பெரியமனிதர். ஆனால், அவனுடைய பதிவை அவர் தொடர்பவர். மொதல்ல ஏதோ சுமாரா எழுதுறமாரி இருந்ததுனு தெரியாமல் தொடர்ந்தார். கொஞ்சநாள் ஆன அப்புறம்தான் அவன் தரம் தெரிந்தது! அவன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறினதும், "எதுக்கு இந்த சனியன் பிடிச்சவன் பதிவை எல்லாம் பின் தொடரணும்?"னு தெரியலை என்று மனதுக்குள்ளேயே புழுங்கினாலும், அவர் பெரிய மனிதன் என்பதால் திடீர்னு தொடர்வதை நிறுத்தினால் அநாகரிகமாக இருக்குமே என்று என்ன செய்வதென்றே தெரியவில்லை!

திடீர்னு ஒரு நாள் பாத்தால், அவன் பதிவை அவர் தொடர்பவராக இல்லை! "எப்படியோ ஆண்டவனாப் பார்த்து ஒரு நல்லது செஞ்சிருக்கான், சனியன் தொலைந்தது!" னு போயிருக்கலாம்தான். இருந்தாலும் அவருக்கு ஒரே மனக்குழப்பம்.. "எப்படி இது நடந்தது?"  என்று யோசனையுடன் தூங்கிப் போயிட்டார்.

இரவில், கனவில் வந்தார், பகவான்.

ஏதோ சண்டை நடப்பதுபோல் இருந்தது. பகவான் யாரோடையோ வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருந்தார்..யாருனு பார்த்தால்.."அந்த அயோக்கியன் தான்". பகவானையே எதிர்த்து எதோ சொல்லிக்கிட்டு இருந்தான்..அவர்கள் வாக்குவாதம் அரைகுறையாகதான் கேட்டது இருந்தாலும் புரிந்தது.

"நீயே ஒரு தரங்கெட்டவன் உனக்கு இவ்வளவு திமிரா?" என்றார் பகவான்.

"யோவ்! உன் பக்தனுகளுக்குத்தான் அறிவு இல்லை! உனக்குமா? என் பதிவை பெரிய மனிதர்கள் நல்லவர்கள் எல்லாம் வாசிக்கலைனாத்தான் அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். தெரியாமல் வந்து வாசிச்சுட்டா பரவாயில்லை! "தொடர்ந்து" வாசிப்பது அவர்களுக்கு சித்ரவதை! இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் நிம்மதியா வாழட்டுமேனு என்று அவர்களுக்கு என் மேல் உள்ள மரியாதை தெரிந்து, அவர்களை "பிளாக்" பண்ணி ஒரு நல்லது செய்தால், வந்து அதற்கு நன்றி சொல்லாமல் ஒளறிக்கிட்டு?" என்று பகவானையே எதிர்த்துப் பேசினான் அந்த நாதாரி.

"எனக்கா அறிவு இல்லை? நான் யாரு தெரியுமா?" பகவானே டென்ஷனாகிவிட்டார்.

"நீ மனிதர்கள் உணர்வுகள் புரியாத மரமண்டைனு எனக்குத் தெரியும். ஓடிப் போயிடு! உன் பொய் பக்தகோடிகள் காத்திருக்கா உனக்கு கால் அமுக்கி விட! போவியா?"னு கத்தினான் மெண்டலு.

"எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை?" என்று பகவான் அழுவது கேட்டு .....அவசரமாக கனவு கலைந்து எழுந்தார் அந்தப் பெரிய மனிதர்.

உடனே ஆண்லைன் போயிப் பார்த்தால், இவர் அந்தத் தளத்திருந்து "ஃபாலோவர் லிஸ்ட்"ல இருந்து  அந்த மெண்டலால் அகற்றப் பட்டுத்தான் (பிளாக் செய்யப்பட்டு) இருந்தார். உண்மை தெளிவானது. அதான் இந்தக் கனவு போல?

இருந்தாலும் அவருக்கு இன்னும் ஒரே குழப்பம். "நான் அவமானப் படுத்தப்பட்டு இருக்கேனா? இல்லைனா என்னை உயர்வாகக் கருதி அவன் தன்னையே இறக்கிக்கொண்டானா?" என்று குழம்பினார். வெள்ளிக்கிழமை பகவானுக்கு பெரிய பூஜை நடத்தி, உண்மை என்னனு அவரிடம் கேட்டால் சொல்லிறமாட்டாரா என்ன? னு மறுபடியும் தூங்க முயன்றார் அவர்.

-முற்றும்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு- இது பழமொழி!

நீங்க ஆறடி ஒதுங்கினால், நான் 100 அடி உங்களிடம்  இருந்து ஒதுங்குவேன், கவலையை விடுங்கள் பெரியவரே! :-) - இது வருண் மொழி!
************************

இன்றைய பொன்மொழி: 

உலகம் மிகப் பெரியதாம். இதில் தோன்றி மறையும் நாம், நமக்கு மட்டுமே முக்கியமான்வர்கள். இதில் இந்த "நமக்கு" ஒண்ணும் பெரிய எண் இல்லை!

கொஞ்சம் உலக கடிகாரத்தையும் கவனிக்கவும்!  நீங்களும்  இதில் ஒரு "ஒண்ணு"! அவ்ளோதான்.


3 comments:

Unknown said...

வருண் மொழி அருமை ,எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியது !

கும்மாச்சி said...

வித்யாசமான சிந்தனை, வரவேற்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

மகிழ்நிறை said...

பகவான் தான் முதல் கமெண்ட் போட்டிருக்கார்!!! அவர்க்கு தான் உள்குத்தொன்னு நினைத்தேன்:)