Monday, March 23, 2009

விஜய்காந்த் தேர்தலில் படுதோல்வியை தழுவுவார்!

விஜய்காந்த், மேடையில் கேட்டாராம்,

* நான் தி மு க வில் கூட்டணிசேரலாமா?

வேண்டாம்!!! (அவர் தொண்டர்கள்)

* அ தி மு க வில் கூட்டு சேரலாமா?

வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)

* காங்கிரஸ்ல சேரலாமா??

வேண்டாம்!! (அவர் தொண்டர்கள்)

இப்படி மேடையிலே கேட்டு மக்கள் தனியாக நில்லுங்கள், நீங்க "பெரிய இவரு" னு சொன்னதைக் கேட்டு தனியாக போட்டியிடப் போறாராம்!

இதோட சேர்த்து அவர் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கலாம்!

* நான் தனியாக நின்றால் டெப்பாசிட் இழப்பேனா?

"ஆமா!" என்று மக்கள் கூவி இருப்பார்கள்!!


தமிழக அரசியலில் இறங்கி விட்டால், எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்! இவர் பெரிய யோக்கியன் என்றால், அரசியல் சாக்கடையில் இருந்து ஒதுங்கி நிக்கனும்! இவருக்கும் முதல்வராகனும்னு பேராசை இருக்கு! அந்த வகையில் இவர் ஒரு சாதாரண சுயநலம்கொண்ட அரசியல்வாதிதான். பெரிய பெரியாரோ, காந்தியோ இல்லை இந்த நடிகர்!

இது வந்து பாராளுமன்ற தேர்தல். இதில் தனியாக போட்டியிட்டால் நிச்சயம் டெப்பாசிட் போகும் என்று தெரிந்துதான் எல்லோரும் காங்கிரஸ், பி ஜெ பி பின்னால் கேவலமாக அலைகிறார்கள்.

விஜய்காந்த் தன்னை எம் ஜி ஆர் னு சொல்லிக்கிறார்.

* இவர் சொல்லும் எம் ஜி ஆரே காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு 1980 ல் மரண அடி வாங்கினார். அந்த அடியை அவர் என்றுமே மறந்ததில்லை!

* குடிக்காதேனு படத்துக்கு படம் வெள்ளித்திரையில் அறிவுரை செய்த எம் ஜி ஆரே சாராயக்கடையை திறந்துவிட்டுத்தான் சத்துணவு கொடுக்க முடிந்தது!

இதுதான் தமிழ்நாட்டு அரசியல்!!!

வெள்ளை எம் ஜி ஆர் கே பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலைமைனா, இந்த கருப்பு எம் ஜி ஆர் நிலைமைய கேக்கவா வேணும்! உண்மை என்னனா, சும்மா பேருக்கு பாராளுமன்ற தேர்தலில் நிக்கிறார் விஜய்காந்த். இதில் படுதோல்வி வருகிறது என்று தெரிந்துகொண்டே! இது ஒரு மாதிரியான இவருடைய "ஒரிஜினாலிட்டி" கொள்கையை காட்டும் கண்துடைப்பு. இந்தக் கொள்கை, வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் உதவுமமென்று நம்புகிறார்! அதுதான் இவருடைய ஃபோக்கஸ்! பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் விஜய்காந்த் வெற்றுவேட்டு! சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம்!

14 comments:

குடுகுடுப்பை said...

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

அது சரி(18185106603874041862) said...

இது ஒரு பலமறியும் முயற்சி..திமுக கூட்டணியோ இல்லை அதிமுக கூட்டணியோ சேர்ந்தால் அடுத்து சட்டமன்ற தேர்தலில் என்ன செய்வார்? கூட்டணி நிலைப்பாடு எடுத்து தான் வைகோவின் பெயர் கெட்டுப் போனது..கட்சி வளர்ச்சியும் கீழே போனது...

விஜயகாந்துக்கும் இது நன்றாக தெரியும்...அவர் தனது ஓட்டு வங்கியை சோதிக்க முயற்சித்தால் அதில் தவறில்லை...

ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பதே மிகக் கடினம்...அதற்கே பல விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கும்...

இந்த நிலைமையில் குத்தாட்டம், கதாநாயகின் தொப்புள், மார்பு இன்ன பிற விஷயங்கள் இல்லாமல் படம் எடுப்பதற்கும், ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ, எம்.பி. ஆகாமல் தனித்து கட்சி ஆரம்பிப்பதற்கும் ஒரு தைரியமும், சரியோ தவறோ தன்னம்பிக்கையும் வேண்டும்...

இப்படி இருக்கையில், பாலா படம் ஃப்ளாப் ஆக வேண்டும் என்று சந்தோஷப்படுவதும், விஜயகாந்த் டெபாசிட் இழக்க வேண்டும் என்று பதிவிடுவதும்....உண்மையில் பாலாவுக்கோ விஜயகாந்துக்கோ உங்கள் பதிவால் எந்த நஷ்டமும் இல்லை...ஆனால் மற்றவர்கள் ஒழிய வேண்டும் என்று பதிவிடுவதை... என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை....

வருண் said...

வாங்க, அதுசரி! :)

****அது சரி said...

ஆனால் மற்றவர்கள் ஒழிய வேண்டும் என்று பதிவிடுவதை... என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை....****

ஏங்க நீங்க என்னைப்பத்தி சொல்ல வேண்டியதையெல்லாம் நல்லா வக்கனையா சொல்லிட்டு, என்ன சொல்வதென்று தெரியலைனு ஒரு பாவலா வேறயா?! LOL!

பலப்பரிச்சைலாம் இல்லைங்க! இவர் பலம் இவருக்கு நல்லாவே தெரியும்!

நான் யாரோடையும் சேரமாட்டேன், நான் கருப்பா இருந்தாலும் தனியா சிங்கம் மாதிரி வந்து உங்களை ஆளுவேன் னு வாயைவிட்டுப் புட்டாரு!

அப்படி விட்டதை மக்கள் மறந்தாலும், ஞாபகப்படுத்த நெறையப்பேர் இருப்பதால், இதுதான் (டெப்பாசிட் இழப்பது) நல்ல முடிவு!

வருண் said...

***குடுகுடுப்பை said...
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

23 March, 2009 2:42 PM***

வாங்க குடுகுடுப்பை! :-)))

நான் சொன்னது தவறானால் நீங்க சொன்னதும் தவறாயிடும்! நான் சொன்னது போல் நடந்தால்தான், வின் - வின் (எனக்கும், உங்களுக்கும் ) சிச்சுவேஷன் நமக்கு!
:-))))

ttpian said...

எல்லோருக்கும் பம்பரம்,தொப்புள்,சுகன்யா,வோட்டு போடுவீங்கலா மாட்டேன்னு....

சரவணகுமரன் said...

கூட்டணின்னாலும் திட்டுறீங்க... தனியா நின்னாலும் திட்டுறீங்க...

☀நான் ஆதவன்☀ said...

அப்படியே நான் எப்ப கம்பெனி தொடங்குவேன்னு என் கையை பார்த்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

ராஜ நடராஜன் said...

பலம் வாய்ந்த கட்சிகளைத் தவிர மற்றவைகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே மத்திய தேர்தல்.

கூடவே நீங்க சொன்ன மாதிரி சட்டமன்ற "போக்கஸ்" நினைப்பும் அவருக்கு இருக்கலாம்.திருமண மண்டபத்துல விட்ட காசெல்லாம் திரும்ப கறந்துறனுமுன்னு அவருக்கும் ஒரு இது இருக்கத்தானே செய்யும்?விடுங்கப்பு எல்லாரும் சம்பாதிக்கட்டும்:)

வருண் said...

****ttpian said...
எல்லோருக்கும் பம்பரம்,தொப்புள்,சுகன்யா,வோட்டு போடுவீங்கலா மாட்டேன்னு....

23 March, 2009 6:46 PM ****

என்னவோ போங்க!

இப்போலாம் நடிகர்களெல்லாம் அரசியல்வாதியாகித்தான் முன்னால் செஞ்ச பாவங்களை கழுவுறாங்க போல! :-)

வருண் said...

***சரவணகுமரன் said...
கூட்டணின்னாலும் திட்டுறீங்க... தனியா நின்னாலும் திட்டுறீங்க...

23 March, 2009 8:15 PM***

நீங்க நிச்சயம் அவரை நல்லாவே புகழலாம். அது உங்கள் உரிமை, தலைவா! :-)))

வருண் said...

***நான் ஆதவன் said...
அப்படியே நான் எப்ப கம்பெனி தொடங்குவேன்னு என் கையை பார்த்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

23 March, 2009 10:05 PM***

இப்போ நான் சொன்னது தப்புனு சொல்லாமல் சொல்றீங்களா?

சரிங்க, பார்ப்போம், உண்மை வெளிச்சத்துக்கு வரமலா போகும்? :-))

வருண் said...

***ராஜ நடராஜன் said...
பலம் வாய்ந்த கட்சிகளைத் தவிர மற்றவைகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே மத்திய தேர்தல்.

கூடவே நீங்க சொன்ன மாதிரி சட்டமன்ற "போக்கஸ்" நினைப்பும் அவருக்கு இருக்கலாம்.திருமண மண்டபத்துல விட்ட காசெல்லாம் திரும்ப கறந்துறனுமுன்னு அவருக்கும் ஒரு இது இருக்கத்தானே செய்யும்?விடுங்கப்பு எல்லாரும் சம்பாதிக்கட்டும்:) ***

அர்சியல் வியாபாரத்தில் சம்பாரிச்சவுங்களும் உண்டு, எல்லாத்தியும் விட்ட்வர்களும் உண்டு!

விஜய்காந்துக்கு பேரில் உள்ள வெற்றி அரசியலில் வருமானு இன்னும் தெரியலை.

அவர் சம்பாரிக்க அரசியல் வரலைங்க. சேவை செய்யனு சொல்றார்! :-)))

கயல்விழி said...

வருண்,

விஜயகாந்துக்கு ஒரு வாய்ப்புக்கொடுத்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. கூட்டணி வைத்து வைகோ போல காணாமல் போவதை விட, இது பெட்டர் இல்லையா?

வருண் said...

***கயல்விழி said...
வருண்,

விஜயகாந்துக்கு ஒரு வாய்ப்புக்கொடுத்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. கூட்டணி வைத்து வைகோ போல காணாமல் போவதை விட, இது பெட்டர் இல்லையா?***

பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் இவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது, கயல்.

ஆனா, வைகோ, ஜெ ஜெ யுடன் சேர்ந்தது படுமுட்டாள்தனம். விஜய்காந்து முடிவு நிச்சயம் பெட்டர்தான்.

தோல்விதான் விஜய்காந்த் வெற்றிக்கு முதல் படினு நம்புவோம்! :-)