Thursday, April 2, 2009

இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்காம்?

டாக்டர் ராமதாஸின் "ரஜினி அட்டாக்" கினால் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்கள் பா. ம. க வுக்கு எதிராக ஓட்டுப்போட்டார்கள். கடந்த முறை காங்கிரஸுடன் கூட்டணியா இருந்ததால் ஒரு பெரிய இழப்பும் டாக்டர் ராமதாசுக்கு ஏற்படவில்லை. ஆனால் இந்த முறை பா.ம.க நிலைமை கொஞ்சம் வேறு என்று சொல்லலாம்.

ரஜினி ரசிகர்களின் ஓட்டு பா.ம.க - அ.இ.அ.தி,மு,க வை கொஞ்சம் பாதிக்கலாம். ஏன்னா ரஜினி ரசிகர்கள் பா ம க கூட்டணியான அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் ஓட்டு போடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. பொதுவாக விஜய்காந்துக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டுப் போடுவதில்லை. அதனால் ரஜினி அபிமானிகளால் இந்த முறை பயன்பெறப்போவது காங்கிரஸ்-திமுக கூட்டணியாகத்தான் இருக்கும்.

ரஜினி ரசிகரகளுக்கு டாக்டர் ராமதாஸினால் ஏற்பட்ட நாவினாற் சுட்ட வடு இன்னும் ஆறி இருக்க வாய்ப்பில்லை. எத்தனை ரஜினி ரசிகர்கள், அபிமானிகள் ராமதாஸின் தாக்குதலை யெல்லாம் மறந்து இருப்பார்கள்? ரஜினி ரசிகர்களுக்கு டாக்டர் ராமதாஸ் என்றாலே ஒரு வெறுப்பு உண்டாகும் அளவுக்கு ஆகிவிட்டது என்றுகூட சொல்லலாம்.

நான் சொன்னதுபோல என்னுடைய கணக்குப்படி பார்த்தால் இந்த முறை ரஜினி ரசிகர்கள் ஓட்டு காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்குத்தான் போகும். ரஜினி ரசிகர்கள் ஓட்டு எந்தவிதமான பெரிய விளைவையோ, தேர்தல் முடிவை மாற்றம் செய்யும் ஃபேக்டர் இல்லை என்று விவாதிக்கலாம். அது ஒருபுறமிருக்க, யாருக்கு இவர்கள் ஓட்டுக்கள் போகும் என்றால் பெரும்பாலும் அவைகளைப் பெறப்போவது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிதான்!

இல்லைனு சொல்றீங்களா? ஏன்? :-)

5 comments:

ttpian said...

தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!

வருண் said...

***ttpian said...
தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!

2 April, 2009 6:25 PM***

எல்லோரும் அப்படி இல்லைங்க.

உதாரணமா உங்களையே எடுத்துவோம். நீங்களும் தமிழ்ர்தானே?

எத்தனை பொறுப்பா இருக்கீங்க? ;-)))

ரங்குடு said...

ரஜினி ரசிகர்கள் ஒரு பொழுது போகாத கூட்டம். ரஜினிக்கு வயதாகிற மாதிரியே அவர்களின் ரசிகர்களுக்கும் சுமார் 40 வயதிற்கு மேல் இருக்கும்.

இந்த முறையாவது ரஜினி சொல்வதை நம்பாமல் அறிவு பூர்வமாக வாக்களித்தால் நாட்டிற்கு நல்லது.

(ரஜினி ரசிகர்களுக்கு ஏது அறிவு என்று திருப்பிக் கேட்டால் நான் ஜூட்).

Srinivas said...

//(ரஜினி ரசிகர்களுக்கு ஏது அறிவு என்று திருப்பிக் கேட்டால் நான் ஜூட்).//

உங்க கிட்ட கொட்டி கெடக்குது போல...கொஞ்சம் இருந்த கொடுக்க வேண்டியது தானே ...

//ரஜினிக்கு வயதாகிற மாதிரியே அவர்களின் ரசிகர்களுக்கும் சுமார் 40 வயதிற்கு மேல் இருக்கும்.
//
அப்ப தி மு க தொண்டர்களுக்களுக்கெல்லாம் வயசு 80 i தொட்டுருச்சா?
முதலில் உங்கள் ஓட்டை நீங்கள் ஒழுங்காக போடுங்கள் ...மற்றவர்களுக்கு அப்புறம் அறிவுரை சொல்லலாம் ..

//இந்த முறையாவது ரஜினி சொல்வதை நம்பாமல் அறிவு பூர்வமாக வாக்களித்தால் நாட்டிற்கு நல்லது.
//

ரஜினி இந்த முறை ஒன்றுமே சொல்லவில்லை என்று கூட தெரியாமல் பிதற்று பவர்களிடமா இவ்வளவு நேரம் வீணடித்து கொண்டிருக்கிறேன்????

வருண் said...

வாங்க ரங்குடு!

வாங்க ஸ்ரீனிவாஸ்!

ரெண்டுபேரும் அழகா விவாதிக்கிறீங்க. நான் சொல்ல ஒண்ணுமில்லை :-)))