Wednesday, April 15, 2009

எஸ் எஸ் சந்திரனுக்கு இதய வலி-போட்டியாளர் மாற்றம்!



மத்திய சென்னையில் திரு. தயாநிதிமாறனுக்கு எதிராக எஸ் எஸ் சந்திரன் அ இ அ தி மு கழகத்தின் வேட்பாளராக போட்டி போட இருந்தார்.

அவருக்கு இதயவலி வந்ததால், தேர்தல் டென்ஷன் அவருக்கு உடல்நலகுறைவை உண்டு பண்ணும், மற்றும் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று வேறு வேட்பாளரை நிறுத்தவுள்ளார்கள்.

இந்த மாற்றத்தின்படி தயாநிதிமாறனை எதிர்த்து போட்டி இடப்போவது, எஸ் எம் கே. முகம்மது அலி ஜென்னா என்பவர் ஆவார்.

6 comments:

ரங்குடு said...

சே, அந்த இறைவனுக்குத்தான் என்ன ஒரு கல் நெஞ்சம். தமிழகத்தின் ஒரு மா மனிதரை, தலை சிறந்த தலைவரை தேர்தலில் நிற்க முடியாமல் செய்த அந்த இறைவனை சபிக்கிறேன்.

இறைவா, எங்கள் விடி வெள்ளியைத் தடுத்து நிறுத்திய நீ ஒரு இறைவன் தானா?

இது எங்கள் தலைவிக்கு நீ செய்த பச்சைத் துரோகம்.

தமிழகத்திற்குப் பேரிழப்பு.

வருண் said...

ரங்குடு!

நீங்க சீரியஸா சொல்றதுகூட கொஞ்சம் காமெடியா, சுவாரஸ்யமா இருக்கு:-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழகம் ஒரு உன்னத பாராளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டது.!

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தமிழகம் ஒரு உன்னத பாராளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டது.! ***

:-(((((

ரங்குடு said...

//ரங்குடு!

நீங்க சீரியஸா சொல்றதுகூட கொஞ்சம் காமெடியா, சுவாரஸ்யமா இருக்கு:-))) //

வருண்:
இதைக் காமெடியாகவும் எடுத்துக் கொள்ளலாம், சீரியசாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

காமெடி:

நான் சொன்னது தமிழில் 'வஞ்சப் புகழ்ச்சி அணி'.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களே தமிழ்நாட்டின் சாபக் கேடு என்ற நிலையில், எஸ்.எஸ்.சந்திரன் போன்றோர்கள் தான் நின்று வெல்ல முடியும்.
அடுத்த தலை முறையினர் வடிவேலு, விவேக் போன்றவர்களின் தேர்தலுக்குத் தயாராகலாம்.

கேனத்தனமான வேடங்களில் நடித்ததை விட எஸ்.எஸ்.சந்திரன் இந்த நாட்டிற்கு என்ன செய்து விட்டார்? அவரைப் போய் தேர்தலில் நிற்க வைத்தவரை என்ன செய்தால் தகும்?

சீரியஸ்:
தயாநிதி மாறன் போன்ற பச்சோந்திகளை விட எஸ்.எஸ்.சந்திரன் ஒன்றும் குறைந்தவர் இல்லை.
நேற்று வரை அடித்துக் கொண்டு விட்டு, இன்று சேர்ந்து கொண்டு, நாளை தேர்தலில் நிற்கப் போகும் தயாநிதி மாறனுக்கு எஸ்.எஸ்.சந்திரன் எவ்வளவோ மேல்.

எஸ்.எஸ்.சந்திரன் எம்.பி ஆனால் மக்களுக்கு ஒரு தண்டனை தான். அவர் மந்திரி ஆக மாட்டார். அப்படியே ஆனாலும், தயாநிதி மாறன் போனமுறை சுருட்டிய அளவுக்கு சுருட்ட மாட்டார். எனவே எஸ்.எஸ்.சந்திரனுக்கே என் ஓட்டு.

மத்திய சென்னையில் நிற்கப் போகும் இரண்டு தீய சக்திகளில் ஒன்று தான் ஜெயிக்கப் போகிறது.

அவற்றில் குறைந்த தீய சக்தி எஸ்.எஸ்.சந்திரன் என்பது என் பணிவான எண்ணம்.

வருண் said...

***மத்திய சென்னையில் நிற்கப் போகும் இரண்டு தீய சக்திகளில் ஒன்று தான் ஜெயிக்கப் போகிறது.

அவற்றில் குறைந்த தீய சக்தி எஸ்.எஸ்.சந்திரன் என்பது என் பணிவான எண்ணம்.

16 April, 2009 4:24 PM***

இப்போ சந்திரன் நிக்கலையாம், ரங்குடு. உங்க ஓட்டு ஜெ(ஜி)ன்னாவுக்குனு சொல்லுங்க :-))