"என்னங்க பானு நீங்க! நீங்களே கேள்விகேட்டு அதற்கு சரியான பதிலும் சொல்லிக்கிறீங்க?" என்று சமாளித்தான் கண்ணன்
"இங்க கேளுடி பிருந்தா!"
"என்ன சொன்னாரு?"
"உன்னை ரொம்பப் பிடிக்குமாம்! இவர்ட்ட நீ கவனமாவே இரு! ஐஸ் வச்சே உன்னை காலி பண்ணிடுவாரு போல!"
"ஏன்டி அவரைப்போட்டுப் படுத்துற? பிடிக்குமானு கேட்டா அபப்டித்தான் சொல்லுவாரு"
"நானா படுத்துறேன்!!"
"ஆமா, நீதான்"
"எல்லாம் என் நேரம்தான், போ!"
"ஆமா நீங்க எந்த ஊருங்க பானு?"
"நான் சென்னைதான், கண்ணன்."
"யாரோ ஃபோன்ல கூப்பிடுறாங்க உன்னை, பானு!"
"ஹாய்! கேன் யு ஹோல்ட் ஆண் ஃபார் எ மினுட்? பிருந்தா!
இது முக்கியமான கால்டி. நான் உன் டீ கப்போட அப்படியே புறப்படுகிறேன். தேங்க்ஸ்! ஹேவ் ஃபன் கண்ணன்."
"பார்க்கலாம்ங்க, பானு."
**************
"பக்கத்திலேயே பானு இருக்கிறது உனக்கு நல்ல கம்பெணிதான், பிருந்தா"
"இதுபோல் பானு ஜாலியாப்பேசி ரொம்ப நாளாச்சு, கண்ணன்"
"ஏன் அவங்க ரொம்ப சீரியஸ் டைப்பா?"
"லாஸ்ட் மந்த் இந்தியாவில் அவ கல்யாணம் நடக்க வேண்டியது, நின்னுபோயிடுத்து."
"என்ன ஆச்சு?"
"மாட்ரிமோனில பார்த்து பேசி, இங்கே அவர் இருக்கிற மினியாப்போலிஸ் போய் ஒருவரை ஒருவர் சந்திச்சு, பேசி, இந்தியாவில் ரெண்டுபேருடைய ஃபேரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணித்தான், கல்யாணமும் ஃபிக்ஸ் பண்ணினாங்க. போன மாசம் ஹைதராபாத் போய் கல்யாணம் செய்வதா எல்லாம் முடிவாயிருந்தது. கல்யாணத்தேதிக்கு ஒரு வாரம் முன்பு, திடீர்னு, அஷோக், அதாவது இவளோட எக்ஸ் ஃபியாண்ஸே, கால்ப் பண்ணி கொஞ்சம் வெடிங்கை போஸ்ட்போன் பண்ணனும்னு சொல்லி இருக்கான்."
"ஏனாம்?"
"அவன் ஏன் னு காரணம் சொல்ல மாட்டானாம். எவ்வளவு நாள் போஸ்ட்போன் பண்ணனும் அல்லது டேட் எதுவும் சொல்ல மாட்டானாம். என்ன விசயம்னு இவ கேட்டால், ரொம்ப பர்சனலான மேட்டராம்!"
"காரணம் சொல்லமாட்டானா?"
"ஆனா, இவள் அவனை நம்பனுமாம்."
"அவன இவளுக்கு கொஞ்ச நாளாத்தான தெரியும்? அப்புறம் என்ன ஆச்சு?"
"இவளுக்கு பல வகையில் சந்தேகம். வேற வழியே இல்லாமல் இந்தியா டிக்கட் கேன்சல் பண்ணிட்டு, பேரண்ட்ஸ்ட்ட என்ன சொல்றதுனு தெரியலை. ஒரே குழப்பம் இவளுக்கு. கடைசியில் இவளே இது சரிப்பட்டு வராதுனு முடிவுக்கு வந்துவிட்டாள், ஒரே அடியா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிவிட்டாள்"
"பர்சனல்னு சொல்லிட்டான். எப்படி ஃபோர்ஸ் பண்ணிக்கேப்ப? என்ன் பிரச்சினையோ"
"தட் வாஸ் வியேர்ட், கண்ணன்."
"ஸோ எல்லாம் ஓவெரா இப்போ? கல்யாணம் நின்றுச்சு. காரணம் என்னனு தெரியலை?"
"ஆமாம்."
"நமக்குத் தெரியாமல் நெறைய விசயம் இருக்கலாம், பிருந்தா. For some people life can be complicated, Brindha"
"கண்ணன்! இவ லைஃப் பார்ட்னெர் ஆகப்போறவ? சொன்னால்தான் என்ன?"
"மே பி இட் ஹாஸ் நத்திங் டு டு வித் தெம், பிருந்தா."
"எனிவே, இட் இஸ் ஆல் ஓவெர் நவ். பட் பானு வாஸ் வெர்ரி வெர்ரி அப்ஸெட், கண்ணன். அவளுக்கு ஏற்கனவே ஒருமுறை இது மாதிரி நடந்து இருக்காம்"
"ஏற்கனவே என்ன பிரச்சினை?"
"அவ காலேஜ்ல ஒருத்தனோட க்ளோஸாப் பழகி இருக்காள். ஆனா கடைசியில் அவனும் சும்மா ஃப்ரெண்டா பழகினேன்னு சொல்லிக் ஒதுங்கிட்டான் போல."
"ஒருதலைக்காதலா? இவளா கற்பனை பண்ணிக்கிட்டாளோ என்னவோ?"
"அப்படித்தானோ என்னவோ, தெரியலை. ஆனால் அவன் ஒரு ப்ராமினாம். இவ ப்ராமின் இல்லை. அதனாலதான் அவனோட பேரெண்ட்ஸ் ஒத்துக்கலை, அதான் திடீர்னு ஒதுங்கிட்டானு இவ சொல்றா. அதுவும் பாஸிபிள் கண்ணன், சம் ப்ராமிண்ஸ் ஆர் சீப். ஈவன் டுடே தே கேர் எபவ்ட் கேஸ்ட் அண்ட் ஆல்"
"ஷி டிட் நாட் கோ டூ ஃபார் வித் ஹிம், ரைட்? யு நோ வாட் ஐ மீன்? "
"புரியுது. அதான் ஃப்ரெண்டா பழகினேன்னு ஈஸியா ஒதுங்கி இருக்கான்."
"ஸோ, இது ரெண்டாவது தோல்வியா? "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்"னு சொல்லுவாங்க தெரியுமா?"
"என்னவோ போங்க. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா காண்பிடண்ஸ் போகுது."
"அவசரமாக் கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப் போறா? Let me tell you this. There are some good guys certainly out there, Brindha. She just has to wait till she meets a good guy."
"எப்படிச் சொல்றீங்க?" அவள் ஒரு மாதிரியா சிரித்தாள்.
"எனக்குத் தெரிய என் ஃப்ரெண்ஸே அது போல் முதல்ல ஃபெயிலாகி, கடைசியில் தே செட்ல்ட் வித் எ வொண்டர்ஃபுள் கை. தே டோண்ட் லுக் பேக். நவ் த கப்புள் இஸ் வெர்ரி வெர்ரி ஹாப்பி. அது மாதிரி, பானு ஹாஸ் டு மூவ் ஆண். தேர் ஆர் வொர்ஸ்ட் திங்ஸ் இன் த வோர்ல்ட், பிருந்தா"
"இட் இஸ் ஈஸி வென் வீ ஆர் தேர்ட் பேர்சன். அவ நிலைமையில் இருந்தால் கஷ்டம், கண்ணன். ஷி இஸ் ரியல்லி ஸ்கேர்ட்."
"ஆஃப் வாட்?"
"வில் ஷி எவெர் கெட் மேரிட் அண்ட் சச்"
"வெல் ஷி இஸ் ஸ்டில் யங். ஸ்டில் ஹாஸ் லாட்ஸ் ஆஃப் டைம். சரி என்ன சமைச்சு இருக்க, பிருந்த்?"
"பசிக்கிதா உங்களுக்கு, கண்ணன்?"
"பசிக்கிதாவா? என்ன நீ இப்படி கதைசொல்லியே நேரத்தை ஓட்டி அனுப்பிடாதே."
"உங்களை யார் அனுப்பப்போறா? இங்கேயே ஒரு வாரம் தங்கிட்டு போங்க!"
"ஏன் ஒரு வாரம்? பேசாமல் நான் இங்கேயே மூவ் இன் பண்ணிடுறேனே? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்கலாம். வி கேன் சேவ் சம் மணி" அவன் சிரித்தான்.
"நல்ல ஐடியா. இப்படி ஏதாவது உருப்படியான ஐடியாலாம் எப்படி வருது உங்களுக்கு?'
பிருந்தாவின் செல் ஃபோன் பாடியது.
"யாரு அது? ஆண்ட்டியா?"
"ஆமா. இருங்க கொஞ்சம் பேசிக்கிறேன், ப்ளீஸ்?"
"ஹல்லோ"
" ... "
"ஃப்ரெண்டா? வந்து விட்டாள். இங்கேதான் இருக்காள்.. பேசுறியா?"
".... "
"சரி, இன்னொரு நாள் அவளிடம் பேசு"
" ஏய் யார் அவள்? நானா?" என்றான் கண்ணன் அவள் இன்னொரு காதில். அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே லேசா அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் செய்கையால் அவள் இடது கை விரல்கள் அவன் வலது கை விரல்களுக்குள் போய் பின்னிக்கொண்டது. அவளால் அம்மா பேசுவதை கவனித்து கேட்கமுடியவில்லை.
"என்னம்மா சொன்ன?"
".... "
"இல்லை எனக்கு லைன் க்ளியரா இல்லை.. அதான்" என்று அம்மாவிடம் கூசாமல் பொய் சொன்னாள், பிருந்தா.
-தொடரும்
1 comment:
Thanks for your visit, tagskie! :)
Post a Comment