Monday, November 2, 2009
வளர்ந்து "மறைந்த" நடிகர்கள்!
தமிழ் சினிமால சிவாஜி,எம் ஜி ஆர்,கமல், ரஜினி எல்லாம் ஏன் மிகப்பெரிய ஆட்கள் என்றால், இவர்கள் வளர்ந்தபிறகு, வயதான பிறகும், இவர்கள் காலத்தில்,
* இவர்களை கதாநாயகர்களாக வைத்துப்படம் எடுக்க எல்லா நேரங்களிலும் தயாரிப்பாளர்கள் ரெடி.
* இவர்களுடன் ஹீரோயினா நடிக்க இளம் (பேத்தி போன்ற) கதானாயகிகள் எப்போதும் ரெடி.
* இவர்களை வைத்து இயக்க இயக்குனர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
அதனால்தான் இந்த நால்வருக்கு மட்டும் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. மற்றவர்கள் பலர், வந்து, வளர்ந்து கொடிகட்டிப்பறந்து இப்போ மறைந்தும் விட்டார்கள்.
சில மறைந்த நடிகர்களை பார்ப்போம்
* மோஹன்:
இவர் ஒரு கன்னட நடிகர். தமிழில் முதல்ப்படம், நெஞ்சத்தை கிள்ளாதே. இவர் நடித்த படங்கள் பல வெள்ளிவிழா கொண்டாடியுள்ளது. இவருக்குனே இளையராஜா ஒரு தனி இசை அமைப்பார். மைக் மோஹன் னு சொல்லுவாங்க இவரை. மைக்க புடிச்சு பாடினார்னா படம் ஹிட் தான் போங்க!!!
இவரை வச்சு கோவைத்தம்பி ஆர் சுந்தர் ராஜனை இயக்குனராகப் போட்டு நெறையப்பாங்கள் எடுத்தார். * பயணங்கள் முடிவதில்லை, * நான் பாடும் பாடல், *உதய கீதம், * இதயக் கோயில் (மணி ரத்னம் இயக்கம்) எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
முக்கியமாக மணிரத்னத்தில் மெளனராகத்தில் எல்லோரையும் கவர்ந்தார். அமலா, ராதாவுடன் செய்த மெல்லத் திறந்தது கதவு இன்னொரு சூப்பர் ஹிட் படம், இவருக்கு.
இவர் சொந்தக்குரல் நல்லா இருக்காதாம். சுரேந்தர் குரல்தான் இவரை பெரியாளாக்கியதுனு சொன்னால் இவருக்கு பிடிக்காதாம். :)
இவர் ஒரு 70-80 படம் ஹீரோவாக நடித்துள்ளார். திடீர்னு ஒரு நாள் இவரை அனுப்பிட்டாங்க! உங்களை வச்சு யாரும் ஹீரோவா எல்லாம் படம் எடுக்க முடியாதுனு சொல்லி :(
இப்போ என்ன பண்றாரு நம்ம வெள்ளிவிழா ஹீரோ? ஒரு 10 வருசம் தமிழ்ல நடிக்காம இருந்துட்டு கடைசியில் சுட்டபழம்னு வந்து ஏதோ பண்ணினார். அதுவும் சொல்லிக்கிறாப்புல போகலை.
* கார்த்திக்:
1981 ல அலைகள் ஓய்வதில்லையில் பாரதிராஜாவால் அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட். பிறகு இளஞ்சோடிகள் அது இதுனு ஒரு 10-20 காதல் படம் நடித்தார். பாரதிராஜாவின் நாடோடித்தென்றல் சொல்லிக்கிறாப்புல போகலை.
மறுபடியும் மணிரத்னம் இயக்கிய மெளனராகத்தினால் இன்னொரு லெவெல் மேலே போனார். அப்புறம், அக்னி நட்சத்திரம், வருசம் பதினாரு, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் போன்ற வெற்றிப்படங்களையும் தந்தார். பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
இவரும் ஒரு 80 படங்களில் ஹீரோவாக நடித்து உளளார். அப்புறம் அப்படியே ஹீரோ ஸ்தானத்தில் இருந்து "மறைந்து" விட்டார். இப்போ இவருக்கு ஸ்டார் வால்யூ கிடையாது. மேலும் கார்த்திக் எதுவும் பெருசா சம்பாரித்து சேர்த்ததாக தெரியலை. இன்னைக்கு யாரும் இவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பாங்களானு தெரியலை. தன் பணத்தைப்போட்டு ஹீரோவாக நடிக்கும் அளவுக்கும் பணம் சேர்த்ததாகவும் தெரியலை. அரசியல்ல எவ்வளவு விட்டார்னு தெரியலை, பாவம்.
* அர்விந்த்சாமி
தளபதியில் அறிமுகமானார், ரஜினிக்கு தம்பியாக. எல்லோர் மனதையும் இந்த கலெக்ட்டர் அர்ஜூன் கவர்ந்தார். பிறகு, ரோஜா, பாம்பே போன்ற வெற்றிப்படங்களை தந்தார். அந்த நேரத்தில் இவர் ஒரு பெரிய ஸ்டாராகத்தான் மிளிர்ந்தார். பிறகு எ வி எம் மின் மின்சாரக்கனவு ஓரளவுக்கு போச்சு. அந்த என் சுவாசக்காற்று னு ஒரு படம் வந்தது, அது பெரிய ஃப்ளாப் ஆச்சு. அதோட இவர் நிறுத்திக்கிட்டார் ஹீரோவாக நடிப்பதை.
இவர் படித்தவர், மற்றும் பெரிய பணக்காரர் என்பதால் ஒதுங்கிக்கொண்டார்னு சொல்றாங்க. அலைபாயுதேல ஒரு சின்ன கெள்ரவ ரோல் பண்ணினார். சாசனம்னு ஒரு சமீபத்துப்படம் வந்தது. இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில். படம் ஃப்ளாப்!
Labels:
அனுபவம்,
சமூகம்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//திடீர்னு ஒரு நாள் இவரை அனுப்பிட்டாங்க!//
பல நடிகர்கள் ஃபிளாப் வரிசையாகக் கொடுத்துவிட்டுத்தான் அவுட் ஆனார்கள். இவர் மட்டுமே ஹிட் கொடுத்துக்கெண்டே அவுட் ஆனவர். இவர் ரீ எண்ட்ரீக்கு முயற்சி செய்த படங்கள் எல்லாமே தோல்வி
எண்பதுகளில் [என் கல்லூரிக் காலம்:)] வெளிவந்த மோகன் படங்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்திருக்கிறேன். [ஹி.. வீட்டில், அப்போதுதான் வீடியோ ப்ளேயர், கேசட் எல்லாம் வந்த புதிது:)]. மைக் பிடித்தால் ஹிட்தான். அவரது படப் பாடல்கள் யாவுமே அருமையானவை.
சில மேனரிசங்கள், ஹிந்தி நடிகர் ராஜேஜ் கன்னாவை ஒத்திருக்கும்.
சுரேந்தர் குரலால் மேலே வந்ததாக ஒத்துக் கொள்ளவில்லையெனினும் இதை பேட்டி ஒன்றில் ஒத்துக் கொண்ட நியாபகம்.
SUREஷ் (பழனியிலிருந்து) said...
*** //திடீர்னு ஒரு நாள் இவரை அனுப்பிட்டாங்க!//
பல நடிகர்கள் ஃபிளாப் வரிசையாகக் கொடுத்துவிட்டுத்தான் அவுட் ஆனார்கள். இவர் மட்டுமே ஹிட் கொடுத்துக்கெண்டே அவுட் ஆனவர். இவர் ரீ எண்ட்ரீக்கு முயற்சி செய்த படங்கள் எல்லாமே தோல்வி****
வாங்க, சுரேஷ் :)
இவருக்கு திடீர்னு மார்க்கட் இல்லாமல் போனது இன்னும் பலருக்கு புரியாத புதிர்தான் :)
****ராமலக்ஷ்மி said...
எண்பதுகளில் [என் கல்லூரிக் காலம்:)] வெளிவந்த மோகன் படங்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்திருக்கிறேன். [ஹி.. வீட்டில், அப்போதுதான் வீடியோ ப்ளேயர், கேசட் எல்லாம் வந்த புதிது:)]. மைக் பிடித்தால் ஹிட்தான். அவரது படப் பாடல்கள் யாவுமே அருமையானவை.***
ஆமாங்க இளையராஜா அவர்கள். கமல், ரஜினி படங்களுக்கு அமைத்ததைவிட இவர் படங்களுக்கு நல்ல இசை அமைத்துக் கொடுத்துள்ளார்
*** சில மேனரிசங்கள், ஹிந்தி நடிகர் ராஜேஜ் கன்னாவை ஒத்திருக்கும்.***
அபப்டியா? :)
அவர் படம் ஒண்ணே ஒண்ணு வீடியோவில் சமீபத்தில் பார்த்திருக்கேன். ஷர்மிளா தாகூருடன் நடித்த அராதனா! :)
****சுரேந்தர் குரலால் மேலே வந்ததாக ஒத்துக் கொள்ளவில்லையெனினும் இதை பேட்டி ஒன்றில் ஒத்துக் கொண்ட நியாபகம்.
2 November, 2009 6:29 PM***
நல்லவிசயம்ங்க, ஹானஸ்ட்டி இஸ் த பெஸ்ட் பாலிஸி, இல்லையா? :) :)
பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி :)
நானும் ராஜேஷ் கனனா படங்கள் அதிகம் பார்த்ததில்லை. பாடல்களுக்கான வாயசைப்பு, மற்றும் முகபாவங்கள் குறிப்பா தலையை (வெட்டி வெட்டி??) அசைப்பது போன்றவை அவரைப் போல.. என நினைவு:)!
*** ராமலக்ஷ்மி said...
நானும் ராஜேஷ் கனனா படங்கள் அதிகம் பார்த்ததில்லை. பாடல்களுக்கான வாயசைப்பு, மற்றும் முகபாவங்கள் குறிப்பா தலையை (வெட்டி வெட்டி??) அசைப்பது போன்றவை அவரைப் போல.. என நினைவு:)!
3 November, 2009 5:32 PM***
பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி :)
Post a Comment