சனிக்கிழமை ஐந்து மணிக்கு யாரோ கதவை தட்டினார்கள். ஆவலுடன் கதவை திறந்தாள், பிருந்தா.
"நீயா? என்னடி வேணும் உனக்கு?"
"ஏன்டி வெறட்டுற? என்றாள் பக்கத்தில் வசிக்கும் தோழி பானு.
பானுவை இங்கே சந்தித்து இருக்கோம்
"ஒண்ணும் இல்லை, ஒரு கெஸ்ட் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்"
"யார் அது?"
"நீ ஒரு தர பார்த்து இருக்கயே? கண்ணன் தான்"
"ஓ அவரா? வந்துட்டு உடனே போயிடுவாரா?" அவள் சிரித்தாள்.
"எனக்கெப்படித் தெரியும்? எப்போ போறீங்க? னா அவர்ட்ட கேக்க முடியும்? சரி, சரி உள்ளே வா"
"ரொம்பதான் சலிச்சுக்கிற? கம கமனு வாசனை அடிக்குது! என்ன நெறையா சமச்சு இருக்கியா? நானும் இங்கேயே டின்னர் சாப்பிடவாடி, பிருந்தா?"
"அவர் ஓ கேனு சொன்னா எனக்கு ஓ கே தான்"
"உனக்கு ஓ கே இல்லைனு சொல்றியா? அவர் வரட்டும் நான் கேக்கிறேன்."
"இல்லடி, அப்படி சொல்லலை. அவருக்கு ப்ரைவஸி வேணும்னா என்ன பண்றது?"
"உனக்கு ப்ரைவஸி வேணுமா? ஆமா, என்ன பண்ணப்போறீங்க ரெண்டு பேரும்?"
"ஏன்டி போட்டு கொல்ற என்னை?"
"இல்ல டின்னர் சாப்பிட எதுக்கு ப்ரைவஸி?"
"இப்போ உன்னைப்பத்தி ஏதாவது பொறணி பேசனும்னு வச்சுக்கோவேன்? உன்னை வச்சுண்டு எப்படி பேசுறது? அதான் யோசிக்கிறேன்.."
பிருந்தாவின் ஃபோன் பாடியது
-------------------
"ஹாய் கண்ணன்!"
" "
"என்ன இன்னும் ஆளையே காணோம்? ட்ராஃபிக்ல மாட்டீட்டீங்களா? என்ன ஆச்சு?"
" "
"ஆக்ஸிடெண்டா? இருக்கும்னு நெனைக்கிறீங்களா?"
" "
"சரி சரி எக்ஸிட் எடுத்து மெதுவா வந்து சேருங்க, கண்ணன்"
" "
"ஓ கே"
-----------
"ஆமா, எதுக்குடி ஓ கே சொன்ன கடைசியில?"
"எதுக்குனா?"
"இல்லை, கடைசிலே "ஐ லவ் யு" னு சொன்னாரா?"
"நீ வேற! சொன்னால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் சொல்லலயே"
"அப்போ எதுக்கு ஓ கே சொன்ன?"
"போடி லூசு! ஐ லவ் யு சொன்னால், ஐ ல யு டூ ஸ்வீட் ஹார்ட்னு சொல்லாமல், எதுக்கு "ஓ கே" சொல்றேன்? நான் என்ன லூசா?"
"ஓ அப்படிப்போகுதா, கதை?"
"வாயை கிளறி அள்ளிட்டயா? ஏன்டி வந்து உயிரை வாங்கிற?"
"எப்போ வருவாராம் கண்ணன்?"
"ஃப்ரீவேல ஸ்டக் ஆயிட்ட்டாரம். எக்ஸிட் எடுத்து வர்றேன்னு சொன்னாரு"
"எவ்ளோ நேரம் ஆகுமாம்?"
"இன்னும் ஐந்து நிமிஷத்தில் வந்திடுவேன்னு சொன்னாரு"
"சரி, டின்னர் வேணாம்! எனக்கு ஒரு மைரோவேவ் டீயாவது போட்டுத்தாடி"
"உட்காரு, வர்ரேன். யூ ஆர் சச் எ பெய்ன் இன் த பட், பானு!"
காலிங் பெல் அடிச்சது..
"யாருனு பாருடி, பானு!"
"ஹல்லோ கண்ணன்! உள்ளே வாங்க"
"நீங்க பானுதானே?"
"கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க?"
"நீங்க பிருந்தா ரூம் மேட்டா ஆயிட்டீங்களா, பானு?"
"கிண்டல்தானே இது? இப்போ எதுக்கு இங்கே வந்தனு கேக்குறீங்களா?"
"சே சே. அதெல்லாம் இல்லைங்க"
"கவலைப்படாதீங்க! ஒரு டீயை குடிச்சுட்டு போயிடுவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் நல்லா.. சாப்பிடுங்க"
"வாங்க கண்ணன்! இந்தாடி டீ, பானு!"
"ஏங்க பானு! உங்களுக்கு பிருந்தா டீ தான் பிடிக்குமா?" என்றான் கண்ணன்
"ஆமா! உங்களுக்கு என்ன பிடிக்கும், கண்ணன்? பிருந்தாவா? " சத்தமாகச் சிரித்தாள் பானு.
-தொடரும்
No comments:
Post a Comment