Saturday, November 7, 2009

கிரிக்கெட் இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடா?

"அமெரிக்கா வந்தும் ஏன்ப்பா கிரிக்கட் கிரிக்கட்னு இந்த வெள்ளைக்காரன் விளையாட்டை கட்டி இன்னும் அழறானுக? உலகத்தில் வேற விளையாட்டே இல்லையா இந்த பாழாப்போன கிரிக்கட்டைத் தவிர?"

"ஏன் பேஸ்பால் பார்க்கனும்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லல கிரிக்கட்டை இங்கே வந்தும் கட்டி அழறவனுகளைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு"

"அப்போ அமெரிக்கா வந்தும் ஏன் இன்னும் தமிழ்ப்படம் பார்க்கிற?"

"அது தமிழ் சம்மந்தப்பட்டது. கிரிக்கட்க்கு மொழி கிடையாது!"

"கலாச்சாரக் காவலர் ராமதாஸோட சேர்ந்துட்டியா நீ?'

"இல்லையே. நான் கபடி வெளையாட சொல்லல"

"கிரிக்கட்ல என்ன பிரச்சினை?"

"எனக்கென்னவோ கிரிக்கட்டை ஒழிச்சா நம்ம நாடு ஓரளவுக்கு முன்னேறும்னு தோனுது. கிரிக்கட் பார்த்துப் பார்த்து அவன் அவனுக்கு புத்தி மழுங்கிப்போச்சு. ஒரு டென்னிஸ் விளையாடலாம், கால்ப்பந்து, கூடைப்பந்து, பாட்மிண்டன் இதெல்லாம் அழிஞ்சே போயிருச்சு இந்த வீணாப்போன கிரிக்கட்டாலே. நம்ம ஆளு ஒண்ண பிடிச்சா உடும்புப்பிடிதான்! இது ஒரு சாபம்!"

"மேலை நாடுகளிலும் அப்படித்தானே?"

"இல்லையே, இங்கிலாந்துலகூட கால்ப்பந்துதான் முதன்மையான விளையாட்டுனு நெனைக்கிறேன். கிரிக்கட் அல்ல!"

"யு எஸ்ல எப்படி?"

"இங்கேயும், அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ் பால், பாஸ்கட் பால், கால்பந்து, ஐஸ் ஹாக்கி, டென்னிஸ், எல்லா ஸ்போர்ட்ஸ்க்கும் ஒவ்வொரு சீஸன் இருக்கு. நம்ம கிரிக்கட்டை மட்டும் கட்டி அழற மாதிரி இவர்கள் ஒரு விளையாட்டை மட்டும் காலம்பூராம் கட்டி அழல"

"இதை வச்சு நீ என்ன சொல்ல வர்ற?"

"நம்மட்ட ஏதோ ஒரு பெரிய குறை இருக்கு. அதனால்தான் நம்மளலால எதிலையுமே சாதிக்க முடியலை. நம்மகிட்ட ஒரு மாதிரியான மழுங்கிய புத்தி இருக்கு. ஏதோ மூளைவளர்ச்சியில்லாதவர்கள் போல ஒண்ண பிடிச்சா நம்ம விடுறதே இல்லை. The way we obsessed with ONLY CRICKET clearly shows lots of things about us. It shows our weakness. It shows our inability or incapability for having diversity or creativity or broader view"

"உனக்கே இதெல்லாம் அதிகமா இல்லையா?"

"இல்லை, நம்ம கிரிக்கட்டை மட்டும் கட்டி அழறதுதான் அதிகம்!"

7 comments:

யுவன் பிரபாகரன் said...

ஹி..ஹி...விளையாட்டு மட்டுமா ? விளையாடுறவனும் சாபக்கேடு தான்...

வெண்ணிற இரவுகள்....! said...

கிரிக்கெட் என்பது ஒரு வியாபாரம் ....................அதற்க்கு எதற்கு மரியாதை

வெண்ணிற இரவுகள்....! said...

கிரிக்கெட் என்பது ஒரு வியாபாரம் ....................அதற்க்கு எதற்கு மரியாதை

உதயம் said...

கிரிக்கெட்டில் இந்திய தோல்வி,அதிர்ச்சியில் தலைமை ஆசிரியர் சாவு , மாரடைப்பால் மயங்கி விழுந்தார் .

http://no-bribe.blogspot.com/2009/11/blog-post_23.html

வருண் said...

***யுவன் பிரபாகரன் said...

ஹி..ஹி...விளையாட்டு மட்டுமா ? விளையாடுறவனும் சாபக்கேடு தான்...

7 November, 2009 8:10 PM**

:-))))))

வருண் said...

***வெண்ணிற இரவுகள்....! said...

கிரிக்கெட் என்பது ஒரு வியாபாரம் ....................அதற்க்கு எதற்கு மரியாதை

7 November, 2009 9:11 PM***

கிரிக்கெட்னா திட்டலைனா இவர்களூக்கு பொழுதுபோகாதுனு ஒரு சிலர் முனுமுக்கிறார்கள் :))

வருண் said...

***லஞ்சம் said...

கிரிக்கெட்டில் இந்திய தோல்வி,அதிர்ச்சியில் தலைமை ஆசிரியர் சாவு , மாரடைப்பால் மயங்கி விழுந்தார் .

http://no-bribe.blogspot.com/2009/11/blog-post_23.html

8 November, 2009 11:07 AM***

இது உண்மையா இருந்தால், போய் சேரட்டும்! இந்த ஆளு உயிரோட இருந்தா பூமிக்குத்தான் பாரம் !