Monday, November 16, 2009
ரஜினி- எஸ் பி முத்துராமன்! வெற்றிக்கூட்டணி!
எஸ் பி முத்துராமன் அவர்கள், *கனிமுத்துப்பாப்பா படத்தில் இயக்குனர் தகுதியை அடைந்தார். பிறகு *துணிவே துணை போன்ற படங்களை ஜெய்சங்கர் வைத்து இயக்கியுள்ளார். ஆனால் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.
1992 வில் இவர் இயக்கிய * பாண்டியன் வரை 24 படங்கள் இயக்கி இருக்கார் ரஜினியை வைத்து! எ வி எம்-ரஜினியை வைத்து இயக்கிய படங்களில் *எஜமான், *சிவாஜியைத்தவிர அனைத்துப் படங்களுமே இவர் இயக்கியதுதான்!
மேலும் பஞ்சு அருணாச்சலத்தின் பி ஏ ஆர்ட் ப்ரடக்ஷன்ஸ் மற்றும் பாலசந்தரின் கவிதாலயாவும் ரஜினியை ஹீரோவாக வைத்து எடுக்கும் படங்களில் எஸ் பி முத்த்ராமன் க்கு இயக்குனர் பதவி தவறாமல் கொடுக்கப்பட்டது!
* 1) புவனா ஒரு கேள்விக்குறி
* 2) ஆடு புலி ஆட்டம்
* 3) ப்ரியா
* 4) 6 லிருந்து 60 வரை
* 5) முரட்டுக்காளை
* 6) கழுகு
* 7) நெற்றிக்கண்
* 8) ரானுவ வீரன்
* 9) போக்கிரிராஜா
* 10) புதுக்கவிதை
* 11) எங்கேயோ கேட்ட குரல்
* 12) பாயும் புலி
* 13) அடுத்த வாரிசு
* 14) நான் மஹான் அல்ல
* 15) நல்லவனுக்கு நல்லவன்
* 16) ஸ்ரீ ராகவேந்திரா
* 17) மிஸ்டர் பாரத்
* 18) வேலைக்காரன்
* 19) மனிதன்
* 20) குரு சிஷ்யன்
* 21) தர்மத்தின் தலைவன்
* 22) ராஜா சின்ன ரோஜா
* 23) அதிசயப்பிறவி
* 24) பாண்டியன்.
மேலே கொடுக்கப்பட்ட படங்களில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்கள். கமர்ஷியலாக எந்தப்படமும் விழுந்ததாக பெரிய குற்றச்சாட்டு எதுவுமே இல்லை. எஸ் பி எம் ரஜினி ஒரு மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியானதற்கு காரணம், படம் பூஜை போட்டமா, எடுத்து முடித்தோமா, 4 சண்டை, 5 பாட்டுனு சிம்ப்பிள் ஃபார்ம்ளா! 4 வார ஓட்டத்திலேயே போட்ட காசை எடுத்தார்கள் தயாரிப்பாளர்கள்! படம் வெற்றியடையவில்லையென்றாலும் கமர்ஷியலாக போட்ட காசை எடுத்தார்கள் என்பதை, விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் உங்களுக்கு சொல்வார்கள்!
Labels:
அரசியல்,
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment