Sunday, November 15, 2009

நடிகை ஸ்ரீதேவி- அன்றும் இன்றும்!கமல்-50 கொண்டாடும் கமலுக்கு இணையான ஒரே ஒரு நடிகைனா, அது நடிகை ஸ்ரீதேவிதான். இவரும் கமலைவிட இளவயதில், 4 வயதிலேயே நடிக்க வந்துட்டார். இவர் இன்றைய பாலிவுட் இறக்குமதிகள் போலில்லாமல் தமிழ்நாட்டில் பிறந்தவர்.

தமிழில் கந்தன் கருணையில் நடிக்க ஆரம்பித்து, குழந்தை நட்சத்திரமாக நம் நாடு, வசந்தமாளிகை போன்ற படங்களிலும் நடித்தார். பிறகு தெலுங்கு மலையாளப்படங்களில் நடித்தார். கமல்-ரஜினிக்கு மாதிரியே தமிழில் இவருக்கும் பெரிய ப்ரேக்த்ரு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு தான். பிறகு 16 வயதினிலே மயிலு கேரக்டர் ரொம்ப பாப்புளர். அதன்பிறகு தமிழில் #1 ஆயிட்டார். பிறகு தெலுகு, பிறகு ஹிந்திக்கு போனவர் திரும்பி இந்தப்பக்கம் வரவில்லை.

தமிழில் கமல் ஜோடியாக நடித்த படங்கள்

* மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, சங்கர்லால், மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், குரு, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு. இவைகளில் தாயில்லாமல் நானில்லை, சங்கர்லால், மீண்டும் கோகிலா தவிர அனைத்துப்படங்களும் மிகப்பெரிய வெற்றி. கமல்-ஸ்ரிதேவி ஜோடிப்பொருத்தம் மட்டுமல்லாமல், கமர்ஸியல் வெற்றி காம்பினேஷன்!

ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள்

வணக்கத்துக்குரிய காதலியே, காயத்ரி, தர்ம யுத்தம், ஜானி, ப்ரியா, போக்கிரிராஜா, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை. இதில் தர்மயுத்தம், ப்ரியா, போக்கிரி ராஜா போன்றவை வெற்றிப் படங்கள். ரஜினி- ஸ்ரிதேவி ஜோடி, கமல்-ஸ்ரிதேவி அளவுக்கு அப்படி ஒண்ணும் பெரிய வெற்றிக் கூட்டணி இல்லை.

ஸ்ரீதேவி தமிழ் நடிகைகளில் முதன்முதலில் “நோஸ் ஜாப்” பண்ணியவர். பதினாறு வயதினிலே, மூன்றுமுடிச்சு, குரு, சிகப்பு ரோஜாக்கள், போக்கிரி ராஜா போன்ற படங்களில் உள்ள மூக்கு அழகா பெரிதா லட்சணமா இருக்கும்.திடீர்னு மூக்கை காசுகொடுத்து வெட்டிட்டு வந்துட்டார். அடுத்த வாரிசு, நான் அடிமை அல்ல போன்றவையில் இருக்கும் மூக்கு மாற்றப்பட்ட மூக்கு.ஆனால் இந்த மாற்றப்பட்ட மூக்குதான் பொதுவாக எல்லோரையும் கவர்ந்தது. முக்கியமாக ஹிந்தியில் இவர் சூப்பர் ஸ்டார் ஆக உதவியது. கமல், ரஜினியால் சாதிக்கமுடியாததை ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி சாதித்தார். ஹிந்தியில் கொடிகட்டி பறந்தவர் இவர்!

ஸ்ரீதேவி, இப்போ சினிமா உலகில் இருந்து ஒதுங்கி பானி கப்பூரை மணந்து கொண்டு (1996) இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இப்போது குடும்ப வாழ்வில், தன் கணவர், மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

6 comments:

நாஞ்சில் பிரதாப் said...

ஐ ஸ்ரீதேவி... அவங்க எப்பவுமே அழகுதான்.

வரலாற்று குறிப்புகளை அள்ளித்தந்த வருணுக்கு வாழ்த்துக்கள்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//காயத்ரி,//

நீங்க காயத்ரி பார்த்திட்டீங்களா...,

இணையத்தில் எங்காவது இருக்கிறதா தல..,

வருண் said...

***நாஞ்சில் பிரதாப் said...
ஐ ஸ்ரீதேவி... அவங்க எப்பவுமே அழகுதான்.

வரலாற்று குறிப்புகளை அள்ளித்தந்த வருணுக்கு வாழ்த்துக்கள்.

15 November, 2009 9:31 AM***

வருகைக்கு நன்றி பிரதாப்! :)

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
//காயத்ரி,//

நீங்க காயத்ரி பார்த்திட்டீங்களா...,

இணையத்தில் எங்காவது இருக்கிறதா தல..,

15 November, 2009 5:59 PM***

டிவிடி வச்சிருக்கேன், சுரேஷ். பிளாக் அண்ட் வைட் மூவி, அடல்ட்ஸ் ஒன்லி படம் இது. சமீபத்தில் பார்க்கவும் செய்தேன்.

ரஜினி ஒரு பயங்கரமான வில்லன் (anti-hero). இதுபோல் வில்லன் ரோல்கள் ஒருவருடைய ரெப்யூட்டேஷனையே காலி பண்ணிடும்.

ஜெய்சங்கர்தான் ஹீரோ (கெளரவ வேடத்தில்).

சுஜாதா எழுதிய கதைனு நினைக்கிறேன். It is a very disturbing movie :(

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பதின்ம வய்தில் பார்த்தது.., நன்றாக ரசிக்க முடியவில்லை

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
பதின்ம வய்தில் பார்த்தது.., நன்றாக ரசிக்க முடியவில்லை

15 November, 2009 6:54 PM***

இன்னைக்கும் என்னால ரசிக்க முடியவில்லை, சுரேஷ்! :(