நாத்திகனை பொறுத்தவரையில் கடவுள் இல்லை. அவரை விட்டுட்டு வேற வேலையைப்பாருங்கனுதான் சொல்றாங்க! ஆனா, கடவுளை வச்சு பொழைப்பு நடத்திய மனிதர்களையும், கடவுளுக்கு நாங்கதான் ரொம்ப க்ளோஸ்னு சொல்லிக்கொண்டு திரிந்த சில பார்ப்பனர்களையும்தான் நாத்திகர்கள் திட்டினார்கள்.
அப்படி திட்டலைனா பார்ப்பனர்கள் தானாவே திருந்தி இருப்பார்களா என்ன? கடவுளே கனவுல வந்து திருந்தச்சொன்னாலும் திருந்தி இருக்க மாட்டார்கள் இவர்கள்! இவர்களுக்கு சொந்தப்புத்தி இருந்து இருந்தால் கண்டவனும் ஏன் வந்து திட்டுறான்? தன் சாதியையும், தன்னையும் மற்றவர்களைவிட பெரிதாக ஏன் நினைத்தார்கள்? இவர்கள் கூடவே பிறந்து வாழ்ந்த பாரதிக்கே இவர்கள் அட்டகாசம் தாங்கமுடியலை. மற்றவர்கள் என்ன செய்வார்கள்?
ஆத்திகர்கள் பொதுவா கடவுளை நல்லா துதிபாடி, புகழ்ந்து நீதான் எங்களை காப்பாத்தனும். நாங்க என்ன அயோக்கியத்தன்ம் செய்தாலும் எங்களை மன்னித்து அருள்புரியனும்னு கடவுளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து ஐஸ் வைப்பார்கள்.
ஆனால், திடீர்னு, வாழ்வில் தாங்கவே முடியாத துயரம் ஏற்படும்போது உணர்ச்சிவசப்பட்டு கடவுளை, "இரக்கமில்லாதவன்" "கொடுமைக்காரன்" என்று திட்டுபவர்களும் ஆத்திகர்கள்தான்! அப்புறம் உணர்ச்சி வேகத்தில் திட்டிவிட்டு என்ன இப்படி செய்துவிட்டோம்னு, பின்னால போயி அதுக்கும் ஏதாவது சாக்குச்சொல்லி கடவுள்ட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்வார்கள்.
கடவுள் என்னைக்கு மன்னிக்க மாட்டேன்னு வாய் திறந்து சொன்னாரு? இவங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டு கல்லாத்தானே இருக்காரு?
No comments:
Post a Comment