Saturday, November 21, 2009

கமல்-பாலசந்தர் உறவு!


கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்துல அறிமுகமானார்னு உலகத்துக்கே தெரியும். கமல், படித்துக்கொண்டே பகுதி நேரம் ல தொடர்ந்து நடித்ததாக தெரியவில்லை. இளவயதிலேயே படிப்பை ஒரேயடியாக தலைமுழுகிட்டு சினிமாவைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரத்திலிருந்து வளர்ந்த ஹீரோவாக வயது வேணுமில்லையா? பெரிய நட்சத்திரமாகுமுன்னர் பதின்ம வயதிலே அவர் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்து இருக்கிறார். காதல் இளவரசனாகுமுன்னே "நான் ஏன் பிறந்தேன்" போன்ற படங்கள் ல எல்லாம் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார் கமலஹாசன்.

பிறகு, பாலச்சந்தர்தான் கமலுக்கு நிறையப்படங்களில் சரியான வாய்ப்புக் கொடுத்து கமல் திறமையை வெளிக்கொண்டு வந்தார். முதலில், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாலசந்தர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க ஆரம்பித்தார், கமல். அந்த சமயத்தில் பாலசந்தர் படத்தில் பொதுவா பல முக்கிய பாத்திரங்களைச் சுற்றி கதை இருக்கும். அதில் கமல் திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு சில நல்ல ரோல்கள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் கமலுக்கு நிறைய புகழை அள்ளித்தந்தது.




கமல், பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தமிழ்ப் படங்கள். (ஒரு சில படங்களை விடுபட்டு இருக்கலாம்! )

* சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

* அரங்கேற்றம் (1973)

* அபூர்வ ராகங்கள் (1975)

* மூன்றுமுடிச்சு (1976)

* மன்மதலீலை (1976)

* அவர்கள் (1977)

* அவள் ஒரு தொடர்கதை (1978)

* நிழல் நிஜமாகிறது (1978)

* நினைத்தாலே இனிக்கும் (1979)

* வறுமையின் நிறம் சிகப்பு (1980)

* புன்னகை மன்னன் (1986)

* உன்னால் முடியும் தம்பி (1988)



பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த பிற மொழிப்படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் இரண்டை கட்டாயம் சொல்லியாகனும்.

* மரோச்சரித்ரா (தெலுகு, 1978)

* ஏக் துஜே கே லியே (ஹிந்தி, 1981)


இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை. இன்று பாலசந்தருக்கு வய்து 79 ஆகிவிட்டதாம். தமிழ் திரையுலகில் பாலசந்தர் ஏற்படுத்திய மாற்றம் கமல் மற்றும் ரஜினியின் பங்கைவிட பன்மடங்கு உயர்ந்தது. வாழ்க அவர் இன்னும் நூறு ஆண்டுகள்!

10 comments:

Rajakamal said...

இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை
it is 100% true this is cinima world - very correct varun

M.Thevesh said...

உலகில் உயர்த்திவிட்டஏணியையோ
ஆற்றைக்கடக்க உதவிய தோணியையோ யாரும்
நினைப்பதும் இல்லை
மதிப்பதும் இல்லை இதுதான்
உலகம்.

ராமலக்ஷ்மி said...

'நிழல் நிஜமாகிறது' இன்றைக்கும் ஒளிபரப்பாகையில் ரசிக்க முடிகிறது.

//இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். //

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள், உண்மைதான்.

ராஜ நடராஜன் said...

//இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான்//

சினிமாவுக்கு இந்த ஒப்புமை சரியாக இருக்குமா?சினிமாவில் வெற்றி பெற்றால் மட்டுமே உறவுகள்.பாலசந்தர் போட்டு விட்ட பெல்பாட்டம் இப்போதைய கமலுக்கு சரிப்பட்டு வருமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

வருண் said...

***Rajakamal said...
இன்று கமலுக்கு உள்ள பெயர், ஸ்டார் வால்யூ எல்லாம் இவரை மேலே கொண்டுவந்த பாலசந்தர் பாரதிராஜாவுக்கு கிடையாது என்பது கசப்பான உண்மை
it is 100% true this is cinima world - very correct varun***

வருகைக்கும் பகிர்தலுக்குக்கும் நன்றிங்க, ராஜாகமல்! :)

வருண் said...

***Thevesh said...
உலகில் உயர்த்திவிட்டஏணியையோ
ஆற்றைக்கடக்க உதவிய தோணியையோ யாரும்
நினைப்பதும் இல்லை
மதிப்பதும் இல்லை இதுதான்
உலகம்.

21 November, 2009 9:07 AM***

கமல் மற்றும் ரஜினி தங்களால் இயன்றவரை கே பி க்கு நன்றியோடுதான் இருந்தாங்கனு நினைக்கிறேன்.

However it is true in general, motivated individuals dont pay too much attention to the people who helped them in the past :(

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
'நிழல் நிஜமாகிறது' இன்றைக்கும் ஒளிபரப்பாகையில் ரசிக்க முடிகிறது.

//இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான். //

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள், உண்மைதான்.

21 November, 2009 9:08 AM***

சமீபத்தில் இந்தப் படம் பார்க்கவில்லைங்க. ஆனால் சுமித்ரா-கமலஹாசன் மோதலும் (கம்பன் ஏமாந்தான்) பின்பு காதலும் (இலக்கணம் மாறுதோ) ஓரளவு ஞாபகம் இருக்கிறது.

இன்னொரு சிறப்பு நடிகை ஷோபா! அவர்போல் நடிக்க இன்னொரு நடிகை இன்னும் பிறந்து வரவில்லை! அவர் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு! :(

பகிர்தலுக்கு நன்றிங்க, ராமலக்ஷ்மி :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...
//இயக்குனர்கள் எல்லாம் பள்ளி வாத்தியார்கள் போலதான்//

சினிமாவுக்கு இந்த ஒப்புமை சரியாக இருக்குமா?சினிமாவில் வெற்றி பெற்றால் மட்டுமே உறவுகள்.பாலசந்தர் போட்டு விட்ட பெல்பாட்டம் இப்போதைய கமலுக்கு சரிப்பட்டு வருமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

21 November, 2009 9:29 AM***

நான் கமலஹாசனை எதுவும் தப்பா சொல்ல வரலைங்க! அந்த இயக்குனர்கள் சிச்சுவேஷன்ல என்னை வைத்து யோசித்தேன். கஷ்டமாத்தான் இருக்கும் பழச நினைத்தால்! :(

பகிர்தலுக்கு நன்றிங்க, நடராஜன் :)

Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு வ‌ருண். இந்த‌ உற‌வை விட‌ க‌ம‌ல்‍ அனந்து ந‌ட்பு இன்னும் நெருக்க‌மான‌துன்னு கேள்விப்ப‌ட்டிருக்கேன்.. அதைப் ப‌த்தி தெரிஞ்சா சொல்ல‌வும்.

-Toto
www.pixmonk.com

வருண் said...

*** Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு வ‌ருண். இந்த‌ உற‌வை விட‌ க‌ம‌ல்‍ அனந்து ந‌ட்பு இன்னும் நெருக்க‌மான‌துன்னு கேள்விப்ப‌ட்டிருக்கேன்.. அதைப் ப‌த்தி தெரிஞ்சா சொல்ல‌வும்.

-Toto
www.pixmonk.com

22 November, 2009 2:38 AM***

வாங்க Toto! :)

அனந்து-கமல் உறவு பற்றி பலர் சொல்லிக்கேட்டிருக்கேன். முக்கியமாக கமலுடைய குடும்ப வாழ்வில் பிரச்சினை வந்தபோதுகூட அனந்து அவருக்கு எல்லா வகையிலும் மாரல் சப்போர்ட்டாகவும் நல்ல ஆலோசகராகவும் இருந்ததா சொல்றாங்க. கே பி க்கும் கமலுக்கும் இடைய ஒரு buffer மாதிரி இருந்ததும் அனந்துனு சொல்றாங்க! மேலும், அனந்ததான் கமல் என்கிற கலைஞனை வெளியே கொண்டுவந்ததாக சொல்றாங்க.

இதெல்லாம அங்கே இங்கே கேட்டது படிச்சதுதான். :)