என் அபிமான இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகும் யோகி வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான "TSOTSI " யின் காப்பி என்கிறது உலக சினிமா அறிந்த உலகம்! :(
ஸோட்ஸி படத்தின் Plot
அவன் அம்மா கொடியவியாதியால் சாகிறாள். அவனுடைய அப்பா அவனை அப்யூஸ் பண்ணுகிறார். சிறுவயதிலேயே டேவிட் அப்பாவிடம் இருந்து தப்பி ஓடி, மற்ற அனாதைக்குழந்தைகளுடன் பெரிய காங்க்ரீட் குழாய்களில் வாழ்கிறான். பிறகு அவன் பெயர் ஸோட்ஸி ஆகிறது. பிறகு அவன் தன் சகாக்களின் (3-4 பேர்) தலைவனாகிறான். தன் சகாக்களில் ஒருவன் திருடும்போது ஒரு கொலை செய்தவுடன் , இவனும் இவ்ன் இன்னொரு நண்பனும் ஒரு சண்டை போடுறாங்க, அதில் அவன் நண்பன் காயமடைகிறான்.
பிறகு ஒரு காரை திருடும்போது ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொல்ல முயல்கிறான். அவளை தாக்கிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போகிறான். காரில் அந்த மூன்று மாத கைக்குழந்தை இருக்கிறது. அதையும் கடத்திக்கொண்டு போகிறான் தன் இடத்திற்கு. அந்தப்பெண் அவன் முகஅடையாளத்தை போலிஸிடம் சொல்கிறாள், அதைவைத்து இவன் படம் தினசரியில் வருகின்றது. பிறகு தன்னால் அந்த கைக்குழந்தையை வளர்க்கமுடியாதுனு ஒரு இளம்பெண்ணை மிரட்டி அதை வைத்து குழந்தையை பார்க்கச்சொல்லுகிறான். நண்பர்கள் துரோகியாகிறார்கள். ஒரு நண்பனையே கொல்லுறான். கடைசியில் குழந்தையை திருப்பிக்கொடுக்கிறான். இதுதான் அந்த ஃபாரின் ஸோட்ஸி படத்தின் கதை.
இது "பெஸ்ட் ஃபாரின் படம்" ஆஸ்கர் வின்னர் என்பது குறிப்பிடதக்கது.
யோகி படத்தின் Plot
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் வலைதளங்களில் படித்த விமர்சனத்துப்படி, ஸோட்ஸி போல் யோகி ஒரு அனாதை, அதேபோல் ஒரு gang-related ஹீரோ. ஸோட்ஸி படத்தின் ப்ளாட் போலவே ஒரு குழந்தையைச்சுற்றி கதை என்று சொல்லப்படுகிறது.
அமீரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, அவர் இதை காப்பி என்றோ, இல்லை இண்ஸ்பிரேஷன் என்றோ ஒத்துக்கொண்டதாக தோனவில்லை. ஆனால் ரெண்டு படத்தின் கதையைக்கேட்டால் ஏதோ நெருடுகிறது.
5 comments:
//அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?"//
வெறும் காப்பில்லை அட்ட காப்பி. குறைந்த பட்சம் அதை ஒத்துக்கொள்ளவாவது வேனும். எல்லாரும் சுட்டி காட்டிய பின்பும் இவர் அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லைன்னு சொல்லறது டூ மச். இவ்வளவு தான் இவங்க சரக்கு போல
தற்செயலாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதன் பின் தான் தமிழில் எவ்வளவு நல்ல பதிவுகள் இருக்கிறது என்பது தெரியவந்தது. அதற்கு உங்களுக்கும், கனிமொழிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். அதன் பின் தமிழ் பதிவுகளை தினமும் படிக்கிறேன். வால்பய்யன், பரிசல்காரன் பதிவுகளும் அருமையாக உள்ளது :-) வாழ்த்துகள் :-))))
அமிரின் படம் ஏமாற்றமே!!!! அதுவும் கதை-சுப்பிரமணியம் சிவா என்று
போடுகிறார்கள். You Too அமீர் :-( (
நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று அமிரை நம்பினால் அவர்
ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி இர்ருகிறார் :-(
மன்னிச்சிகோங்க
கனிமொழி அல்ல கயல்விழி :-))
***damildumil said...
//அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?"//
வெறும் காப்பில்லை அட்ட காப்பி. குறைந்த பட்சம் அதை ஒத்துக்கொள்ளவாவது வேனும். எல்லாரும் சுட்டி காட்டிய பின்பும் இவர் அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லைன்னு சொல்லறது டூ மச். இவ்வளவு தான் இவங்க சரக்கு போல
30 November, 2009 10:53 PM***
அமீர் மேலே நல்ல ஒப்பீனியன் வைத்திருந்தேன். எல்லாம் போச்சு! :(
***தமிழச்சி said...
தற்செயலாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதன் பின் தான் தமிழில் எவ்வளவு நல்ல பதிவுகள் இருக்கிறது என்பது தெரியவந்தது. அதற்கு உங்களுக்கும், கயல்விழிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். அதன் பின் தமிழ் பதிவுகளை தினமும் படிக்கிறேன். வால்பய்யன், பரிசல்காரன் பதிவுகளும் அருமையாக உள்ளது :-) வாழ்த்துகள் :-))))
அமிரின் படம் ஏமாற்றமே!!!! அதுவும் கதை-சுப்பிரமணியம் சிவா என்று
போடுகிறார்கள். You Too அமீர் :-( (
நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று அமிரை நம்பினால் அவர்
ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி இர்ருகிறார் :-(***
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், பகிர்தலுக்கும் நன்றிங்க, தமிழச்சி! :-)
Post a Comment