Wednesday, November 25, 2009

நீயும் கன்னியா! பொய்தானே? -கடலை கார்னர் (32)

பிருந்தா, கண்ணன் விரல்களூடன் தன் விரல்களை பின்னிக்கொண்டே அவனை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள். ஏதோ இண்டெரெஸ்டா ஆண்ட்டி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணனுக்கு கொஞ்சம் போர் அடிச்சது , மெதுவாக பிருந்தா மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். அவள் பேசும் அழகை பார்த்து ரசித்தான். பிருந்தா பேசிக்கொண்டே அவன் தலைமுடியை கோதிவிட்டாள். ஆண்ட்டி, அடுத்த எண்ட்ல இருந்து பேசியது எல்லாம் ஒரே ஊர்ப்பொறணி! "அவ இப்படி சொன்னா" , "உங்க அப்பா அப்படி சொன்னாரு" , "கல்யாண வீட்டுக்கு இந்த பட்டுச்சேலை கட்டிப்போனேன்" னு அள்ளி விட்டுக்கொண்டு இருந்தாங்க. "இவளை விட்டா அவங்க அம்மாவோட நாள்க்கணக்கா பேசிக்கிட்டே இருப்பாள் போல" னு கடைசியில் பிருந்தா பேசுவதை எப்படி நிறுத்த வைப்பதென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான், கண்ணன். அதை உடனே செயல்ப்படுத்தினான்.

"சரிம்மா அடுத்த வாரம் பேசுறேன்... கெஸ்ட்டைக் கவனிக்கனும்மா" என்று ஒரு வழியாக அவசரமாகப் பேசி முடித்தாள்.

"எழுந்திரிங்க, கண்ணன்! இப்படியெல்லாம் மடியில் படுக்கக்கூடாது! "

"என்ன திடீர்னு?"

"மக்கு! திடீர்னு இப்படியெல்லாம் மடியில்முகத்தை வைத்துப் படுக்கக்கூடாது. அதுவும் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது"

"ஏன், பிருந்தா? இப்படி மடியில் படுத்தால் என்ன தப்பு?" என்றான் இன்னொசண்டா.

"ஏனா? இதெல்லாம் ஒரு கேள்வியா?"

"ஆமா என்ன ஆயிடும் பிருந்தா? ஏன் தப்புனு சொல்ற?"

" ஏன்னா, நான் கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணு இல்லையா? அதனாலதான்"

"நீயும் கன்னியா!! பொய்தானே?" அவன் சிரித்த்தான்.

"உங்களுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு! உங்களைமாதிரி ஊரைக்கூட்டி நான் வெர்ஜின் னு சிகாகோமுழுவதும் சொல்லிக்கொண்டு திரிவதில்லை அழகு."

"ஐயோ என்ன ஒரு அடக்கும்! எப்படி பிருந்தா இதெல்லாம்?'

"உங்ககிட்ட இருந்து கற்றதுதான்"

"உன்னை மாதிரி அடக்கம் எல்லாம் இல்லையே நான்."

"உங்களை மாதிரி இருக்கக்கூடாதுனு உங்ககிட்டயிருந்து கற்றுக்கொண்டது." அவள் அழகா சிரித்தாள்.

"ஏய் நீ ரொம்ப அழகா சிரிக்கிற, பிருந்த். உன் உடம்பெல்லாம் மணக்குது தெரியுமா? " என்று அவள் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.

"மணக்கிறேனா? இது வேறயா? பானு சொன்னது சரிதான். நீங்க என்னை ஐஸ் வச்சே ஒரு வழி பண்ணிடுவீங்க போல."

"நெஜம்மாத்தான்டா சொன்னேன்" என்று ரகசியமாக அவள் காதில் சொல்வதுபோல காது மடலை வருடினான்.

"நெஜம்மாவா? சரி.. என் காதிலே இப்படி கை வைக்காதீங்க. கூச்சமா இருக்கு"

"கூச்சமா இருக்கா? இல்லை வேறென்னவும் வேறெங்கவும் நடக்குதா?'

"வேறெதுவும்னா?'

"ஏதாவது கெமிக்கல் ரியாக்ஷன் நடக்குதா? ஆமா, நீ என்ன ரொம்ப மூடா இருக்கியா?"

"அதெப்படி இது மட்டும் உங்களுக்கு நல்லாப் புரியுது, மிஸ்டர் ட்யூப் லைட்?"

"எது?'

"இந்த மாதிரி விசயம் மட்டும் நல்லாப் புரியுது. மற்றதுல எல்லாம் ட்யூப் லைட்டா இருக்கீங்க. இதுலமட்டும் பெரிய ஆளா இருக்கீங்க, எப்படி அது?'

"நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்ற விதமே தனி அழகுதான் பிருந்த்."

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கண்ணன்."

"ஏய் உன் உதடு என்ன இவ்வளவு ட்ரையா இருக்கு? நான் வெட் பண்ணி விடவா?"

"அதெல்லாம் வேண்டாம்." என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்து அருகில் முகத்தை கொண்டு சென்றாள்

"ஒரு சின்ன உதவிகூட செய்யக்கூடாதா, பிருந்த்? நீ எனக்காக கஷ்டப்பட்டு சமைத்து இருக்க இல்லையா?"

"உதட்டை வெட் ஆக்கி விடுவது நன்றியா?"

"மாட்டினேனா? அப்படி சொல்லல"

"நல்லா மாட்டினீங்க!"

"சரி சரி, ஏன் சும்மா உங்கம்மாவோட பேசிக்கிட்டே இருந்த? நான் நல்லாயிருக்கேன்னு சொல்லி முடிக்க வேண்டியதுதானே?"

"திடீர்னு எப்படி வைக்க முடியும்? நான் ஒழுங்கா பேசலைனா மறுபடியும் 20 முறை கூப்பிடுவாங்க. நல்லா சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்கனும்."

"அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை.."

"இல்லையா? வேறென்ன காரணம்? நீங்களே சொல்லுங்க!"

"அது வந்து, உன் மனசைக் கேட்டுப்பார்."

"சும்மா நீங்களே கேட்டு சொல்லுங்க!"

"இது நல்லா ஐடியா பிருந்த்! காதை இதயத்தில் வச்சு கேக்கவா?" அவள் மார்பில் தன் முகத்தை சாய்த்து காதை வைத்தான்.

"உடனே இங்கே காதை வச்சுட்டீங்களா?"

"வேற எப்படி உன் இதயம் என்ன சொல்லுதுனு கேக்கிறது?"

"இதயம் பேசுதா?"

"ஸ்ஸ் இதைக்கேளு! உன் இதயம் என்ன சொல்லுதுனா, "டேய் மக்கு! டோண்ட் யு நோ, ஐ டாக்ட் மோர் அண்ட் மோர் பர்ப்பஸ்லி ?"

"அப்படியா சொல்லுச்சு என் இதயம், ஜீனியஸ்? நீங்க காதை வச்சு எதையும் கேக்கிற மாதிரி இல்லை"

"இதெல்லாம் அநியாயமான குற்றச்சாட்டு! இப்போ உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணினால் என்ன பண்ணுவ?"

"சும்மா சொல்லிண்டே இருங்க"

"அப்ப சரி! வித் யுவர் பெர்மிஷன்" என்று அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

"இப்போமட்டும் நல்லா வெட் ஆயிருச்சா என்ன? இன்னும் ட்ரையாத்தான் இருக்கு" என்றாள் இன்பமான குரலில்.

"யாருக்கு கொழுப்பு? உனக்கா எனக்கா??"

"ஸ்ஸ்ஸ் அங்கே எல்லாம் கிள்ளக்கூடாது"

"வலிக்குதாடா?'

"இதை சாக்கு வச்சு மறுபடியும் கை வைக்கிறீங்க? சரி, சும்மா சொல்லுங்களேன், ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல?"

"அம்மாட்ட நான் ஏன் வளவளனு பேசிண்டே இருந்தேனாம்?"

"நீ பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் போராடிக்குதா? நீ ரொம்ப ரொம்ப அழகா கவர்ச்சியா ஒரு மாதிரியா வேற இருக்கியா? அதனால எனக்கு போர் அடிக்காமல் இருக்க நான் உன்னை அங்கே இங்கே பார்த்து உன் அழகை ரசிக்க ஆரம்பிச்சுடுறேனா?.."

"அதனால?"

"உன்னிடம் ஏதாவது சேஷ்டை பண்ணனும்னு தோனுது. உன்னை அங்கே இங்கே தொட்டு ஏதாவது சில்மிஷம் பண்ணுறேன். ஆனால் அது மாதிரி லேசா சிமிஷம் உனக்கு ரொம்பப் பிடிக்குதுதா.. அதான் நீ சும்மா ஆண்ட்டியோட பேசிக்கிட்டே இருக்கயாம்.. எப்படி இருக்கு என் தியரி?"

"ரொம்ப நல்லா இருக்கு, கண்ணன், உங்க தியரி."

"இதையும் ஏதாவது ஜேர்னல்ல பப்ளிஷ் பண்ணிடுவோமா?"

"லவ் ஜேர்னல்லயா?"

"ஆமா"

"யாரு எடிட்டர்?"

"நீ தான்"

"நீங்க எழுதிஅனுப்புவீங்களாக்கும். நான் ரிவியூ பண்ணி, பப்ளிஷ் பண்ணனுமாக்கும்?

"ஆமா உனக்குத்தானே என் தியரி சரியானு தெரியும்? காதல்ல கதைலாம் விடக்கூடாது. உண்மையைத்தான் எழுதனும். நாலு பேர் பண்ணிப் பார்க்கனும் இல்லையா?"

"அது சரி"

"இங்கே பக்கத்தில் வா, பிருந்த்"

"வந்துட்டேன்"

"பயம்மா இல்லையா உனக்கு?"

"ஹுஹூம்... ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு"

"எனக்கு பயம்மா இருக்கு"

"ஐயோ பாவம்!"

"என்ன சமச்சு இருக்க?"

"இதை கேக்கத்தான் பக்கத்தில் வரச்சொன்னீங்களா?"

"ஆமா"

"அப்போ ஏன் கடைசில பேசுவவதை நிறுத்தினேனாம்?"

"லேசா சில்மிஷம் பண்ணினால் நீ பேசிக்கிட்டே இருக்கயா? அதனால கொஞ்சம் அளவுக்கு மீறிப் பார்த்தேன்.. நான் நெனச்சது மாதிரி உன்னால தொடர்ந்து பேச முடியலை. அதான்.."

"அளவுக்கு மிஞ்சுதுனு தெரிந்தே செய்தீங்களா?'

"எனக்கு ரிசல்ட் தெரியாது. சும்மா எக்ஸ்பெரிமெண்ட்தான். ஆனால் ஒரு மாதிரி நெனச்ச ரிசல்ட்தான் வந்தது"

"எனக்கு உதடு மறுபடியும் ரொம்ப ட்ரையா இருக்கா, கண்ணன்?"

"இரு கொஞ்சம் நல்லா கவனிக்கிறேன் இப்போ" அவள் உதட்டில் தன் இதழ்களை பதித்தான். அவள் அவனை கட்டி அணைத்துக்கொண்டாள்.

"இப்போ வெட் ஆயிடுத்து" என்று இதழ்களைப் பிரித்துவிட்டு சொன்னான், கண்ணன்.

கதவை யாரோ தட்டினார்கள்.

"இந்த பானுவை என்ன செய்யலாம்?" என்று எரிச்சலாக எழுந்தாள் பிருந்தா.

- தொடரும்

No comments: