Friday, February 26, 2010

ஜப்பானிய ஆண்களும் கேவலமானவர்கள்தான்!

பஸ்ல கூட்டமாக இருந்தால் பெண்கள் மேலே கை வைக்கும் கேவலமான ஆண்கள் நிறைந்தது நம் தமிழ்நாடு. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. பொதுவாக கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் நடக்கும். இந்த உலகத்தில் எந்த ஆம்பளையைத்தான் நம்புறதுனு தெரியலைனு பெண்கள் குழம்பி ஆண் இனத்தையே வெறுப்பதும் உண்டு.

ஜப்பான் என்றால் கார் தயாரிப்பு, சுறுசுறுப்பு போன்ற நல்ல விசயங்களுக்குத்தான் பேர் போனது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் ஜப்பானிய ஆண்கள் நம்ம மக்களைவிட கேவலமானவர்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜப்பானில் அதுவும் டோக்கியோவில் படுவேகமாகப் போகும் ரயிலில் பயங்கர கூட்டம் இருப்பதுண்டு. அதனால் இளம்பெண்கள், டீனேஜர்களை ஜப்பானிய ஆண்கள் “க்ரோபிங்” மற்றும் “மொலெஸ்ட்டிங்” செய்வது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோல் நடக்கும் குற்றங்களை ஜப்பானிய காவல்துறையினரால் இன்றுவரை முழுமையாக நிறுத்த முடியவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், ஒரு பெண் இதுபோல் கற்பழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் போகும் ஆண்கள் ஜப்பானில் மிகமிக அதிகமாம்!

இதில் பலியாவது, கொஞ்ச வயது டீனேஜர்கள், ஹை ஸ்கூலில் படிக்கும் மாணவிகள். 2006ல் எடுத்த ஒரு சர்வேயின் படி ரயிலில் பயண்ம செய்யும் 70% மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். 17% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

இதனால் சமீபத்தில் “பெண்கள் மட்டும்” பெட்டிகள் விடப்பட்டது! இதில் பயணம் செய்யும்போது இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இந்த பெண்கள் பெட்டி விட்டபிறகு இன்னொரு பிரச்சினை என்னவென்றால் பெண்கள் மட்டும் பெட்டியில் போகாமல் வேறு பெட்டியில் ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஏறிவிட்டால், அந்தப்பெண்ணை “க்ரோப்பிங்” “மொலெஸ்டிங்” “ரேப்பிங்” பண்ணுவது சர்வசாதாரணம்.

இது சம்மந்தமான ஒரு ஆர்ட்டிக்கிள் இந்த டைம் ல வந்துள்ளதையும் பார்க்கவும்!

விண்ணைத்தாண்டி வருவாயா-வெற்றி விமர்சனங்கள்!


ஒரு சில படங்கள்தான் விமர்சகர்கள் மற்றும் சகல ரசிகர்களும் நல்லாயிருக்குனு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்கும். கவுதம் மேனன், சிம்பு, ஏ ஆர் ஆர் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா?வில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது! தமிழ்ப்படத்திற்கு அடுத்த வெற்றிப்படம் இது. அனேகமாக சூப்பர் ஹிட் அல்லது ப்ளாக் பஸ்டராக வாய்ப்பிருக்குனு சொல்றாங்க!

Rediff Rating: கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!! இதுபோல் ஹை ரேடிங் சிம்பு படத்துக்குப்பார்த்து ரொம்ப நாளாச்சு

Sify: Verdict- Very Good ! கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!! ஆஹா ஓஹோனு புகழப்பட்ட சமீபத்திய சிம்பு ஸ்டாரெர்!

சிறுவயதிலேயே நடிக்க வந்த சிம்பு, ஜெனட்டிக்கல்லாவே ரொம்ப பேசுற டைப். ரொம்ப பேசினால் உள்றலாகத்தான் வந்து முடியும். இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா? வின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதுபோல் வெற்றியடையும்போது இவர் வெற்றி என்கிற மமதையில் ஆடாமல் இருக்கனும். இருப்பாரா, சிம்பு?

அதுக்குள்ள என்ன வெற்றி வெற்றி என்கிறாய்? னு கேக்கிறீங்களா. இந்தப்படம் "வேர்ட் ஆஃப் மவ்த்" அதாவது படம் பார்த்தவர்களுடைய ஒப்பீனியன், "படம் நல்லாயிருக்கு" என்பதுதான். விமர்சகர்களை வைத்துப் படத்தின் வெற்றியை நிர்ணயிப்பது கடினம். ஆனால் பலதரப்பட்ட மக்கள் படத்தை ரசிக்கிறார்க ளென்றால், படம் வெற்றிதான்!

இந்தப்படத்தின் வெற்றியின் முழு க்ரிடிட் கவுதம் மேனனுக்கு கொடுக்கப்பட வேண்டும்! ஹரிஸ் ஜெயராஜிலிருந்து, ஏ ஆர் ரகுமானுக்குத் தாவி, கமல், சூர்யா போன்ற நடிகர்களை விலக்கி வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் சிம்பு மற்றும் ட்ரிஷாவை வைத்து ஒரு சாதாரண காதல் கதையை அழகாக ப்ரெசெண்ட் பண்ணி வெற்றியடைந்துள்ளார்!

So, I am going to give 99% of the credit to just Gautam Menon for coming up with a successful formula again!

Thursday, February 25, 2010

நடிகை ப்ரியாமணி ஏன் கவர்ச்சியில் குதித்துவிட்டார்?


பருத்திவீரனில் நடித்து நேஷனல் அவார்ட் பெற்றவர் ப்ரியாமணி. ஆனால் திடீர்னு இவருக்கு என்ன ஆச்சுனு தெரியலை, கவர்ச்சிகாட்டும் மூனாந்தர நடிகைகள் படங்களைவிட இவருடைய அசிங்கமான ஸ்டில்கள் பல உலவுகின்றன. I was SHOCKED to see some stills!

இவர் இப்போ மலையாளம், தெலுகு, கன்னடப் படங்களில் வெற்றி நாயகியாகியுள்ளார். மணிரத்னத்தின் ராவணன் ல நடிக்கிறார் என்கிறார்கள். ஏன் இவருக்கு திடீர்னு இப்படி ஒரு ஆசை?

நான் இங்கே கொடுத்துள்ள ஸ்டில் எல்லாம் ஒண்ணுமே இல்லை. இவருடைய பல ஸ்டில்கள் உண்மையிலேயே "வரம்பு மீறி" உள்ளன! அதையெல்லாம் இங்கே கொடுக்க முடியாது என்கிற அளவுக்கு இருக்கிறது இவர் கொடுத்துள்ள போஸ்கள்.

எப்படியோ பணம் சம்பாரிச்சு முன்னுக்கு வந்தால் சரினு ஆயிட்டாரா? இல்லை நடிப்புனு வந்துட்டா இதிலெல்லாம் என்ன தப்பு? திறந்த உடம்புதான் திறந்த மனதுனு சொல்றாரா?

Wednesday, February 24, 2010

சும்மா ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு!

முகிலன் என்னை பெரிய கிரிக்கெட் விசிறினு நெனச்சுக்கிட்டு அன்பா அழைத்ததனால இந்தத் தொடர்பதிவுல நானும் கலந்துக்குறேன் .அவருக்கு என் நன்றிகள்!

1) பிடித்த கிரிக்கெட் வீரர்கள்: கபில் தேவ், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் வா

2) பிடிக்காத கிரிக்கெட் வீரர் : இன்சமாம் உல் ஹக், ரவிசாஸ்திரி, ஜாவிட் மியாண்டட், சொஹீப் அக்தர்.

3) பிடித்த வேகப் பந்து வீச்சாளர்- க்லென் மெக்ராத் , கபில் தேவ்

4) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்- சொஹீப் அக்தர்

5) பிடித்த சுழல் பந்து வீச்சாளர்- ஷேன் வார்ன்

6) பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்- அப்துல் காதிர், மணிந்தர் சிங்

7) பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்- சச்சின்

8) பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்- சுனில் கவாஸ்கர் (ஒன் டே மேட்ச்சில்)

9) பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்- கங்குளி

10) பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்- ரவி சாஸ்திரி

11) பிடித்த களத்தடுப்பாளர்-ரிக்கி பாண்டிங்

12) பிடிக்காத களத்தடுப்பாளர்- ரவி சாஸ்திரி

13) பிடித்த ஆல்ரவுண்டர்- கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆலென் பார்டெர், ஸ்டீவ் வா

14 & 15) பிடித்த நடுவர் & பிடிக்காத நடுவர்- நடுநிலைமை னா என்னனு தெரியாமல் திணறும் சில இந்திய பாக்கிஸ்தானிய நடுவர்களைத் தவிர்த்து அனைவரையும் பிடிக்கும்.

16) பிடித்த நேர்முக வர்ணனையாளர்- ரவி சாஸ்திரி

17) பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்- சித்து

18) பிடித்த அணி- ஆஸ்திரேலியா (அவங்க ப்ரஃபஷனலிஸம் பிடிக்கும்!)

19) பிடிக்காத அணி- பாக்கிஸ்தான் (எதுக்கெடுத்தாலும் அழுமூஞ்சி ஆட்டம் ஆடுவதுபோல தோனும்)

20) விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி- ஆஸ்திரேலியா vs இந்தியா (I want us to beat them like they have beaten us several times. But, it is yet to happen. Unless they meet again and again, it will not happen. So.. :-))) )

21) விரும்பாத அணிகளுக்கான போட்டி- இந்தியா vs பாகிஸ்தான் (too much of emotions like a war or something)

22) பிடித்த அணித்தலைவர்- ஆலென் பார்டர், ஸ்டீவ் வா

23) பிடிக்காத அணித்தலைவர்- சுனில் கவாஸ்கர்

24) பிடித்த போட்டிவகை- ஒன் டே மேட்ச்

25) பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- சச்சின் - கங்குளி, ஆடம் கில்க்ரச்- டேவிட் பூன்

26) பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- நெறையா ஜோடி பிடிக்காது

27) சிறந்த டெஸ்ட் வீரர்- சச்சின், கவாஸ்கர்

28) கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்- ஆலென் பார்டெர், கபில்தேவ், ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், ஸ்டீவ் வா, (இவங்க எல்லாம் உலகக் கோப்பை வின் பண்ணி இருக்காங்க இல்லையா?)

சரி யாரை இப்போ மாட்டிவிடலாம்?


நண்பர் கிரி, அப்புறம் நம்ம கனவுகளே சுரேஷ்
ரெண்டு பேரும் மாட்டினாங்க!

Tuesday, February 23, 2010

பாக்ஸ் ஆபிஸில் அசல் சறுக்கியது


சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் போனவாரம் #1 ஆக இருந்த அசல், #3 இடத்துக்கு தள்ளப்பட்டது! இதற்கும் தல அஜீத் பிரச்சினைக்கும் சம்மந்தமில்லை.

தமிழ்ப்படம் இன்றும் ஸ்ட்ராங்காக போகிறது. இந்த வாரம் #1 இடத்தை எட்டிப்பிடித்தது.

தீராதவிளையாட்டுப்பிள்ளை #2 இடத்திலேயே இந்த வாரமும் நிற்கிறது. அடுத்த வாரம் எங்கே இருக்குமோ!

கோவா #4 லயும், ஆயிரத்தில் ஒருவன் #5 இடத்திலும், குட்டி #6 இடத்திலும் இருக்கின்றன.

மற்றபடி, தெலுகு டப்பிங் ஆயிரத்தில் ஒருவன் (Yuganiki Okkadu) ஓரளவுக்கு நல்லாப் போகுது. இரண்டு வாரமாக ஹைதராபத்ல ஒரு 2 டசன் தியேட்டர்களில் நல்லா ஓடிக்கொண்டு இருக்கிறது .

ஹிந்திப் படமான "மை நேம் இஸ் கான்" யு கே (£ 1960349) யிலும், யு எஸ் ($ 3253168) ஸிலும் பல சாதனைகள் செய்தாலும், இந்தியாவில் இதனுடைய எதிர்கால சாதனை எப்படி இருக்குமென்று சரியாகத் தெரியவில்லை. ஒரு சிலர் இது லாங் ரன் ல விழுந்துவிடும்னு சொல்றாங்க!


Monday, February 22, 2010

அஜீத்தின் காட்ஃபாதர் ரஜினியா?


அஜீத்துக்கும் ரஜினிக்கும் எப்போ நட்பு ஏற்பட்டதென்று தெரியவில்லை. பில்லா படத்தில் நடித்தபிறகு அஜீத் ரஜினியின் நல்ல புத்தகத்தில் குடிபுகுந்துவிட்டார். மனதைத்திறந்து உண்மையை பளிச்னு பேசிவிடுவார் அஜீத் என்று விஜய் முதல்க்கொண்டு சொல்கிறார்கள்.

இன்றைய நிலையில் ரஜினிதான் அஜீத்தின் காட்ஃபாதராக இருக்கிறார் என்பதென்னவோ உண்மைதான். தான் கைதட்டியதுடன் கழண்டுகொள்ளாமல் முதல்வரிடம் பேசி இதை "மறப்போம் மன்னிப்போம்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இருந்தும் இதைப்பெரியவிசயமாக ஊதிக்கொண்டிருப்பதால் ஒரு "பரிதாப அலை" உருவாகி அஜீத் மற்றும் ரஜினிக்கு சாதகமாக முடியப்போவதென்னவோ உண்மைதான்!

அஜீத் பேசியதில் தவறு இருப்பதாக சொல்லும் கழக்கண்மணிக்களுக்கு பொதுமக்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகள்.

* அஜீத் சினிமாக்காரகள் கூடிய மேடையில் சினிமாக்காரனுக்கு உள்ள பிரச்சினையை முதல்வர் முன்னிலையில் பேசியது தப்புனா, பல கல்யாணங்களுக்கு போய் கல்யாணம் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திவிட்டு வராமல் அரசியல், சாதிப்பிரச்சினையை எல்லாம் பேசிவரும் அரசியல்வாதிகளை என்ன செய்வது? இதயெல்லாம் யாரும் மறக்கவில்லை! என்று நாக்கைப்புடுங்கிக் கொள்ளும அளவுக்கு கேள்வி கேக்கிறார்கள்! அரசியல்வாதி எல்லாம் என்னமோ கல்யாணத்துக்கு வந்தா மணமக்களை வாழ்த்திவிட்டுப் போகும் உத்தமர்கள் போலவும், என்னவோ அஜீத்தான் ஏதோ பேசக்கூடாத பேசியதுபோல் உளறும் சிலர் மேலே கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை என்று சொல்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

* சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர வழிவகுத்ததே நம் அரசியல்வாதிகளின் சின்னப்புள்ளத்தனமான மற்றும் கேவலமான அரசியல்தான் காரணம் என்பதை நாம் என்றுமே மறக்க வேணாம்.

Saturday, February 20, 2010

தல அஜீத்க்கு நேரம் சரியில்லையா?

நடிகர் அஜீத் உணர்ச்சிவசப்பட்டு பேசியது ரொம்ப நல்லாத்தான் இருந்தது. ஆனால் இது பல பிரச்சினைகளை கிளப்பியுள்ளது. ரஜினி, கைதட்டியதுடன் இன்றுவரை அஜீத்க்கு முடிந்த அளவு மாரல் சப்போர்ட் தருகிறார். ஆனால் மற்ற நடிகர்கள் சப்போர்ட் தரவில்லை. எல்லா நடிகர்களும் அஜீத்க்கு சப்போர்ட் பண்ணினால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும். மற்ற நடிகர்கள் அனைவருமே அஜீத்துக்கு பக்கபலமா இல்லை. இந்தப் பிரச்சினை பெருசாகிக்கொண்டே போகுது. பல முனைகளிலிருந்து தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. மன்னிப்பு கேட்க சொல்லி நம்ம "தல" அஜீத்தை வலியுறுத்துறாங்க.

* FEFSI, அஜீத் பேச்சுக்கு ரஜினியின் கைதட்டை "condemn" பண்ணப் போறாங்களாம்.

* இந்த ஜாகுவார் தங்கம்னு ஒருத்தர் இஷ்டத்துக்கு அஜீத், ரஜினியைப் பத்தி விமர்சனம் பண்ண அஜீத் ரசிகர்கள் அவர் வீட்டை தாக்கியுள்ளார்கள். இது நம்ம "தல்"க்கு ஒரு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கு. நம்ம திருமாவளவனும் இந்த ஜாகுவார் தங்கத்திற்கு ஆதரவு.

* தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் "அசல்" சரியாக வசூல் கொடுக்கலைனு புதுசா பிரச்சினையை ஆரம்பிக்கப் போறாங்களாம்.

என்னப்பா "பேச்சுச் சுதந்திரம்", "கைதட்ட சுதந்திரம்" எல்லாம் ஜனநாயகத்தில் கிடையாதானு கேக்குறீங்களா? தனி ஒரு மனிதனுக்கு உண்டு. ஆனால் ஒரு நடிகனுக்கு கிடையாதானு தெரியலை.

ந்ல்லவேளை ரஜினி கைதட்டினார். இல்லைனா தல அஜித்க்கு நெலைமை இதைவிட மோசமாயிருக்கும்.

அனேகமா அஜித் மன்னிப்பு கேட்டே ஆகனும்ங்கிற நிலைமை விரைவில் வந்துவிடும்.

ரஜினியும் மன்னிப்பு கேட்டாலும் அதிசயம் இல்லை.

எதுக்கு? மன்னிச்சுக்கோங்க நான் கைதட்டியதற்காகனா?

Friday, February 19, 2010

கலைத்தாயின் செல்லக்குழந்தை கமலின் ஓவியம்!



கமல்-50ல ரஜினி பேசிய கருத்தைவைத்து ரஜினியின் ஏற்பாட்டின்படி ஒரு ஓவியர்மூலம் மேலே போடப்பட்டுள்ள ஓவியம் வரையப்பட்டு அதை கமலுக்கு பரிசாகக்கொடுத்ததாகவும் இந்த தொடுப்பில் போடப்பட்டுள்ளது.


நான் விகடன் பார்க்கவில்லை.இது விகடனில் வந்த ஆர்ட்டிக்கிள் என்றும் அந்தத் தொடுப்பில் சொல்லப்பட்டுள்ளது.

கமல், கலைத்தாயின் தோளில் இருக்கார். அமிதாப், ரஜினி, விஷ்னுவர்தன், மோஹன்லால், சிரஞ்சீவி எல்லோரும் கீழே கொஞ்சம் பெரிய குழந்தையா இருக்காங்க (வலமிருந்து இடம்).


I hope Rajni talked with them and got their approval :-)

பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக சண்டியர்கள்!

"என்னைக்கேட்டால் பெண் நாட்டை ஆளனும், ஆண் வீட்ட ஆளனும்னு " மன்னன்ல நம்ம விசயசாந்தி அக்கா சொல்வாங்க! இப்படி ஏதாவது படத்துல கதைகள்ல சொல்லி ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான்! ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே? அது போதாதாங்கிறீங்களா? அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள்! அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல! அதிசயங்கள்!

சாதனைகளுடன் அதிசயங்களையும் பிரித்துப்பார்க்க கத்துக்கனும். அதிசயங்களை சாதனைகள் கணக்கில் எடுக்கக்கூடாது!

ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். எங்கே வாங்க? ராமானுசம் போல பல கனித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம்! ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால்? அப்போ அது அதிசயமில்லை. திறமைதான்! நம்ம சாதிக்கிறோம்னு சொல்லலாம்.

பெண்பதிவர்கள் நெறையா எழுதனும்னு டாக்டர் ருத்ரன் சொல்லிட்டாருனு, பெண் பதிவர் யாரும் வாயை திறந்திடாதீங்க! இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க! அதெல்லாம் சும்மா அவர் சொல்றாருனு ஃப்ரியா விடுங்க! அழகா சர்க்காஸ்டிக்கா எழுதுற எழுத்துத் திறமை இருக்கா? நீங்களே எழுதி படிச்சுக்கோங்க! இல்லைனா உங்க பதிவை எழுதி ஒரு சில தோழிகளுக்கு அனுப்புங்கள்! பதிவுலகில் நீங்க என்ன செய்யனும்னா,... ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, கஷ்டப்பட்டாங்க, ஒரு தேவதை வந்து உதவுச்சு அப்புறம் சந்தோஷமாக வாழ்ந்தாங்கனு கதை எழுதுங்க. ..

பின்னூட்டம்? சும்மா அட்டண்டன்ஸ் கொடுங்க! :-) பயன்படுத்துங்க! நல்லா எழுதுறீங்க வாழ்த்துக்கள்னு சொல்லுங்க! உங்களுக்கு அந்த கருத்தில் நம்பிக்கை இல்லையா? அப்போ கஷ்டம்தான்! மனசுக்குள்ளேயே ஒரு பின்னூட்டமெழுதி வாசிச்சுக்கோங்க! அப்போத்தானே பல பதிவுலக சண்டியர்கள்ட்ட இருந்து நீங்க தப்பிக்க முடியும்?

இன்னொரு பெண் பதிவரைக்கூட விமர்சிக்ககூடாதா? அப்படி விமர்சிப்பதால் அவங்களும் "பாப்புளர்" ஆக வாய்ப்பிருக்கே? அப்படினு சொல்றீங்களா? அதெல்லாம் செய்யக்கூடாதுங்க! அதெல்லாம் ஆண் பதிவுலக சண்டியர்கள் கண்ணுக்கு பட்டுச்சுனா? உங்களை மிரட்டுவார்கள்! எப்படி? ஏன் அந்த பதிவருடைய படத்தை போட்டீங்க? சட்டப்படி தப்பு தெரியுமா? அப்படி இப்படினு உங்களை மிரட்டி பதிவுபோட்டு பொழைப்பு நடத்துவார்கள்! ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக! ஆனால் இவனுகள் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக! இவனுக யாருனு கேக்குறீங்களா? பதிவுலக மாஃபியாக்கள்!

அதனால பெண் பதிவர்கள் யாரும் இனிமேல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லக்கூடாது. ஒண்ணுமட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க! உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டுமில்லை! முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட! இந்த மிரட்டல்களுக்கு ஜால்ரா அடிச்சு உங்களை உண்டு இல்லனு பண்ணிடுவாங்க!

அப்புறம் நீங்க என்ன எழுதுறீங்கனு உங்க கருத்தைப் பார்க்க மாட்டார்கள், உங்க சாதி என்னவாயிருக்கும்னு உங்க எழுத்தை வச்சு ஆராய்வார்கள். நமக்கு இதுபோல ஆராச்சியில் இந்த பதிவுலக மாஃபியாக்கள் வாங்கி கொடுத்தாதான் நோபல் பரிசு கிடைக்கும்!

Thursday, February 18, 2010

கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!

சரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிறன வீம்புக்குக் கேட்டால், உடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு சொல்வாங்க.

மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும்.

அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.

உங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா? என்ன ஆளு நீங்க? ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!

அடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறாங்க.

இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.

இப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!

அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?


சமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா? பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க!

சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!

என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?

ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge anybody's intelligence based on their taste!

Wednesday, February 17, 2010

போதைக்கு புது விதமான கஞ்சா (K-2)!


கஞ்சா என்று நாம் சொல்லும் ஒரு போதைபொருளில் போதைகொடுக்கும் வேதிப்பொருள் டெட்ரா ஹைட்ரோ கன்னபினாயில். அதனுடைய ஸ்ட்ரக்ச்சர் (அதெல்லாம் எனக்கு எதுக்குனு சொல்லாதீங்க! ) மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளதான் உங்க வாய்வழியாக உள்ளே போய் உங்க மூளைக்கு போய் போதை கொடுக்குது!

இப்போ கஞ்சா போலவே போதைகொடுக்கும் ஒரு போதை மருந்து யு எஸ் மற்றும் பல நாடுகளில் உலவுகிறது. இதை K-2 என்கிறார்கள். இதனுடைய கெமிக்கல் ஸ்ட்ரக்ச்சர் என்னனா,





இது கஞ்சாவை விட 4-5 மடங்கு போதை கொடுக்கிறது! இதில் பெரிய அதிசயம் என்னனா கஞ்சாவில் உள்ள ஆக்டிவ் கெமிக்கல் THC வுடைய கெமிக்கல் ஸ்ட்ரக்ச்சருக்கும், இந்த "புது கஞ்சா (K-2) "வுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. மேலும் இந்த K-2வை குடுவையில் தயாரிப்பதும் ரொம்ப எளிது ! இந்த K-2 கஞ்சாவைவிட டாக்ஸிசிட்டி கம்மியாக உள்ளது என்று நம்பப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது இது ஒரு இல்லீகல் ட்ரக்தான். கஞ்சாவில் உள்ள ஆக்டிவ் வேதிப்பொருளை ஸ்டடி பண்ணியதுபோல இதனுடைய டீட்டைல்ட் ஸ்டடீஸ் பண்ணி முடிக்கப்படவில்லை!

பதின்ம வயது பற்றி..

ஒரு சில விசயங்களைப் பற்றி வெளியில் சொல்லப் பிடிக்காது "எம்பாரஸிங்" காக இருக்கும். இதில் ஒவ்வொருவரும் பதின்ம வயதில் "கற்கும்" அனுபவங்கள் பல இடம் பெறும்! இந்த அனுபவத்தை பலர் பேசித்தீர்ப்பதைவிட, தன் அனுபவத்தை வெளியில் சொல்லாமல் தன் குழந்தைகள் பதின்மவயதுக்கு வரும்போது அவர்கள் மனநிலையைப் புரிந்து தன்னுடைய அனுபவத்தை பாஸிடிவாக அவர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்!

நம்முடைய பதின்ம வயதில் வரும் அனுபவத்தை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வது என்பது "இம்பாஸிபில்"!

It is best to use the mistakes you made to educate others, who go through the same phase you went through once. You should use that experience to understand other ignorant minds and tolerate others' mistakes and, to educate them!

It is always embarrassing to discuss how ignorant and stupid you were once or not? It is unnecessary to share such in public, in my humble opinion!

Tuesday, February 16, 2010

My name is Khan - யு கே & யு எஸ் பாக்ஸ் ஆபிஸ்

யு எஸ் பாக்ஸ் ஆஃபிஸ்ல இந்தப்படம் 13 வது இடத்தை பிடிச்சு இருக்கு! கீழே உள்ளது 3-day வீக் எண்ட் கலக்சன்!இதை ரிலீஸ் பண்ணியவர்கள் 20th Century FOX!

13. My Name Is Khan 1st week $ 1, 860 000 (1.86 million US $)

அமெரிக்காவிலே தமிழ்ப்படங்கள் எல்லாம் இப்படி ரிலீஸ் பண்ணுவதில்லை! ஹிந்திப் படங்கள்தான் ஹாலிவுட் படங்களுடன் மோதுகின்றன! காரணம்? ஹிந்தி பேசும் மக்கள் தமிழ் பேசும் மக்களைவிட பலமடங்கு! மோதி 13 இடத்தைப்பெறுவது புதிய சாதனைதான்.

-----------------------------------------


யு கே யை பொறுத்தவரையில் MNIK டாப் 10 ல, 6 வது இடத்தில் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

6. My Name Is Khan 1st week, £936,000

Monday, February 15, 2010

அதிக சம்பளம் ரஜினிக்கா? இது அநியாயம்!


சமீபத்தில் வெளிவந்த மை நேம் இஸ் கான், ஹிந்தி கஜினி, 3- இடியட்ஸ் போன்றபடங்கள் உலக மார்க்கட்டிலும், இந்திய மார்க்கட்டிலும் தமிழ்ப் படங்களைவிட குறைந்தது 2-5 மடங்கு வருவாய் கொண்டு வருகிறது. அப்படி இருக்கும்போது அமீர்கான் கஜினியில் வாங்கிய சம்பளமும், சாருக் கான் மை நேம் இஸ் கானிற்கு வாங்கிய சம்பளமும் ரஜினி, சிவாஜிக்கு வாங்கிய மற்றும் எந்திரனுக்கு வாங்குகிற சம்பளத்தைவிட கம்மியாக இருக்கச் சாண்ஸே இல்லை!

உலக அளவில் மை நேம் இஸ் கான் ஓபெனிங் வீக் எண்ட் கலக்சன் 90 கோடியாம்!

உலக அளவில் அமீர் கான் - அசின் நடித்த கஜினியின் மொத்த கலக்ஷன் 300 கோடிக்கு மேலே இருக்கும்.

சிவாஜியின் கலக்சன் இவர்கள் படங்கள் கலக்சனைவிட அதிகமாக இருக்க சாண்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு.

கஜினியில் அமீர் கான் சம்பளம், மற்றும் மை நேம் இஸ் கான் ல சாருக் கான் சம்பளமும் நிச்சயம் ரஜினியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும். ஆனால், இவங்க ரெண்டு பேரும் பெரிய அளவில் கறுப்புப் பணமா வாங்குறாங்க போல!ஆனால் நம்ம ரஜினி, கறுப்பில் குறைவாக வாங்கி வெள்ளையில் அதிகமாக வாங்குவதால் ரஜினி அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்பதை இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் அழுதுகொண்டே ஏற்றுக்கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது என்பது தெளிவாகிறது!

விஷாலின் தேராத விளையாட்டுப்பிள்ளை?!


விஷால் ஆந்திராவை சேர்ந்த ரெட்டி வைகையறாவாக இருந்தாலும், அந்த “கொல்ட்டி முகம்” இல்லாமல், தமிழனுக்கு உள்ள முகமும், தமிழின கருப்பு நிறத்துடன், தமிழனுக்குள்ள உடல்வாகுடனும் இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த பச்சைத்தமிழன் ரோலுக்கு அழகா ஃபிட் ஆனார். சண்டைக்கோழியிலும் சரி, தாமிரபரணியிலும் சரி, அந்தந்த தென் தமிழ்னாட்டு கம்யுனிட்டியிலிருந்து வந்தவர்போலவே இருந்தார்.

செல்லமே, சண்டைக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி நு வழுக்கிவிழாமல் வெற்றிப்பாதையில் இவர் வண்டி ஓடிக்கொண்டிருந்தது என்னவோ உண்மைதான். திடீர்னு என்ன ஆச்சுனு தெரியலை, அதிர்ஷ்ட தேவதை இவரை கைவிட்டுவிட்டாள். வெற்றிப் பாதையிலிருந்து தடம் மாறி தடுமாறி தொடர்ந்து தோல்விகளை தழுவிக்கொண்டே இருக்கிறார். மலைக்கோட்டை, சத்யம், தோரணை எல்லாமே தோல்விப்படங்கள்!

இப்போ தீராத விளையாட்டுப்பிள்ளை வந்திருக்கு. இது விஷால் அண்ணனுடைய தயாரிப்பு! சம்பளம் வாங்காமலே நடித்து இருக்கலாம்! இப்போ சன் பிக்ச்சர்ஸுடன் இணைந்து இவருடைய தீராத விளையாட்டுப்பிள்ளை வெளிவந்துள்ளது. அதனால் கமர்ஷிலுக்குப் பஞ்சம் இருக்காது.

இந்தப்படத்தில் விஷால், வழக்கம்போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் முயன்றிருக்கிறார். கதை என்னனா இவர் பழகி, காதலிச்சுப் பார்த்து, பிடிக்குதானு பார்த்துட்டு, அடுத்த ஸ்டேஜ்க்கு ரிலேஷன்ஷிப்பை எடுத்துட்டுப் போகலாம்ங்கிற மாதிரி ஒரு “விளையாட்டுப் பிள்ளை”. படத்தில் ஒரு மூன்று பெண்களை பார்த்து இம்ப்ரெஸ் பண்ணி பழகிப்பார்த்து அதில் ஒண்ணை தேத்தலாம்னு ஒரு ஸ்ட்ரேடஜி போட்டு அவர்களை தன் வலையில் விழ வைப்பதுதான் பாதிக்குமேலே படம். நம்ம தமிழ்ப்படம்தானே? அவங்களும் விழுந்து விடுவார்கள். அப்புறம் அதில் இருவரை டம்ப் பண்ணிட்டு ஒருவரை அடுத்த ஸ்டேஜ்க்கு எடுத்துப்போகும்போது...மத்ததை வெள்ளித்திரையில் பாருங்க!

Sify: என்ன சொல்றாங்கனா இது ஒரு சுமாரான பொழுதுபோக்குப் படம். நீளம் கொஞ்சம் ஜாஸ்தி (ரெண்டே முக்கா மணி நேரம்). ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஓரளவுக்கு ஜாலியாக இருக்கும். அப்புறம் சந்தானத்தின் காமெடி நல்லாயிருக்குனு சொல்றாங்க.

Indiaglitz: இவர்களும் அதேபோல்தான் சந்தானம் காமெடி நல்லாயிருக்குனு சொல்லி இருக்காங்க. யுவன் சங்கர் ராஜா இசை சுமார்தான் என்கிறார்கள்!

இந்த ரெண்டு விமர்சனங்கள் படிப் பார்த்தால் படம் சுமார்தான். இது தவிர எந்த விமர்சகர்களும் இது நல்லாயிருக்குனு முழுமனதாய் சொல்லல. சன் பிக்ச்சர்ஸ் அவங்க திறமையைக் காட்டி படத்தை வெற்றிப்படமாக்க வாய்ப்பிருக்கு! அதுவும் அவ்வ்ளவு எளிதல்ல!

எனக்கென்னவோ இந்தப்படம் தேறும்னு தோனலைப்பா!

விஷால்! பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்!

மனுஷியும் தெய்வமாகலாம்!

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியா இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!" என்றான் முனியசாமி.

"நீ சும்மா இருக்க மாட்டியா முனியசாமி?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. தியேட்டர்ல சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க!"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"என்னைப்போட்டு கிழிச்சுடாதே அத்தை! நான் வாயைத் திறக்கல"

******************************

"உங்க அத்தையாடா அது, முனி?"

"இல்லடா சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா ரெண்டு பேரும் திடீர்னு ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டை பார்த்தியாடா, முத்து?"

"இது மாதிரி ஒரு சண்டை நான் வாழ்நாள்ல பார்த்ததே இல்லைடா!"

"ஆமடா அசிங்க அசிங்கமா புழுத்த வார்த்தையா சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அய்யோ போன மாசம் போட்ட சண்டையை நீ பார்த்திருந்தா!"

"முதல் தடவையா? ஆமாடா, வடக்குத் தெருல இருந்து நீ ஆறுமாதம் முன்னாலதான் இங்கே வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதானாக்கும்?"

"உலகத்தில் உள்ள எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தாங்க! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவ்னக்ககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு"


"அதுக்காக இப்படியா? உலகத்தில் உள்ள எல்லாவிதமான அசிங்கமான கெட்டவார்த்தைகளும் அவர்கள் சண்டைபோடும்போது வந்தது"

"அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுவதிலே அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட இத வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்லை?! அது உண்மையா?"

"ஆமா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி ஆடும். மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யனும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது சாமி வரும்."

"இதெல்லாம் உண்மையா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"ஒரு நாள், "ஹோர்", "ஸ்லட்" னு வெளியிலே சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் தெய்வமாயிடுறாங்க!"

"நான் வேணா வள்ளி அத்தைட்ட கூட்டிப்போறேன். நீ வேணா கேளேன் அதுட்ட!"

"என்ன ஆளவிடுப்பா!"

Friday, February 12, 2010

சத்யராஜின் மலையாளப் படம்! & வினவுவின் ஆதங்கம்!


ஆனாலும் நம்ம <வினவு"> வுடைய ஆதங்கம், மலையாளிகளை காப்பாத்துவதுடன் தமிழர்களை ஜெயராமுக்கு ஒரு படி மேலேயே கேவலப்படுத்தியுள்ளது போல இருக்கு. அது தமிழனின் தலையெழுத்து! தன்னைத்தானே திட்டிக்குவான் மற்றவர்களையும் திட்டவிட்டு வேடிக்கையும் பார்ப்பான்! அவன்தான் தமிழன்!

சினிமாவிலும், கதைகளிலும் கேலி பண்ணுவது வேறு! ஒரு நேர்முக ஒளிபரப்பில் செய்வது வேறு என்பதைத் தெளிவாக வினவு வேறுபடுத்தவில்லை! தமிழ் நடிகர் மலையாளிகளை இழிவுபடுத்தி பேசிய நேர்முக ஒளிபரப்பை மட்டும் வினவு மேற்கோள் காட்டியிருக்கலாம்.

சரி, விமர்சனத்துக்கு வருவோம்!

தமிழ்நாட்டு பெண்களை இழிவுபடுத்தி பேசிவிட்டதாக இங்கே பலரும் பல பிரச்சினைகளை கிளப்பிக்கொண்டிருக்கும்போது, நம்ம பச்சைத் தமிழன் சத்யராஜ் நடித்த முதல் மலையாளப்படம், ஆகதன், கேரளாவில் வெளிவந்துள்ளது.

ஆகதன், மலையாளப்பட உலகில் ஒரு பெரிய பட்ஜெட் படமாம். இயக்குனர் கமல் இயக்கத்தில், சத்யராஜ் ஒரு ஆர்மி ஆஃபீஸராக ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் கதாநாயகன் திலீப் என்கிற மலையாள நடிகர்.

இந்தப்படத்தில் நம்ம சத்யராஜ் நடிப்பு பிரம்மாதமாக இருப்பதாக விமர்சகர்கள் புகழ்ந்துள்ளார்கள். ஆனால் சத்யராஜ்க்கு டப்பிங் குரல் கொடுக்கப்பட்டு-ள்ளதாம். பொதுவாத் தமிழனுக்குத்தான் மலையாளம் சுட்டுப்போட்டாலும் வராதே!

கீழே ஒரு விமர்சனத்துக்கு தொடுப்பு கொடுத்திருக்கேன்!

zonekerala : Aagathan review (English)

Thursday, February 11, 2010

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா?


இயக்குனர் கெளதம் மேனன், சிம்புவை வைத்து படம் எடுக்கிறார் என்றதும், சிலம்பரசன் அதிர்ஷ்டசாலி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். காரணம்? இன்றைய சூழ்நிலையில் கெளதம் மேனன் ஒரு வெற்றிப் படங்களைக் கொடுக்கும் திறமையான இயக்குனராக முன்னேறி உள்ளார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வந்த படங்கள் எல்லாமே ஓரளவு வெற்றியடைந்துள்ளன.

* சூர்யா நடித்த * வாரணம் ஆயிரம் மற்றும் * காக்க காக்க இரண்டுமே வெற்றிப்படங்கள்.

* கமலஹாசன் நடித்த * வேட்டையாடு விளையாடுவும் வெற்றிப்படம்.

* சரத்குமார் நடித்த * பச்சைககிளி முத்துச்சரமும் தோல்விப் படம் இல்லை!

ஆனால் சிம்புவுடைய வெற்றிப்படம் வந்து பல வருடங்களாகிவிட்டது! சிம்புவுக்கு திறமை இல்லைனு யாரும் சொல்ல முடியாது. நிச்சயம் சிம்பு ஒரு திறமையான நடிகர்தான். ஆனால் தமிழ் சினிமாவில் திறமை மட்டும் வச்சு பிழைப்பை ஓட்ட முடியாது. அப்பப்போ ஒரு வெற்றிப்படம் கொடுக்கனும்.

* வின்னைத்தாண்டி வருவாயா? வில் த்ரிஷா ஜோடியாக நடிக்கிறார்.

* இன்னொரு முக்கியமான விசயம், இதற்கு இசையமைத்துள்ளவர் ஏ ஆர் ரகுமான். கெளதம் மேனனுக்கும் ஹரிஷ் ஜெயராஜுக்கும் ஏதோ பிரச்சினைனு சொன்னது உண்மை என்பதுபோல இது இருக்கு.

* இந்தப் படத்திற்கு சென்ஸார் UA சர்ட்டிஃபிகேட் வழங்கிவிட்டது!

* இந்த மாதக் கடைசியில் (26 ம் தேதி) படம் வெளி வருகிறது!

Wish you all the best Silambarasan!

ஆள் எப்படி இருந்தாள் அவ?- கடலை கார்னர் (43)

"என்ன கெஸ்ட் எல்லாம் போயாச்சா, கண்ணன்?"

"இப்போத்தான் போறாங்க!"

"சரி நாளைக்கு சண்டேதானே? இப்போ என் வீட்டுக்கு வர்ரீங்களா?"

"வந்தா என்ன கிடைக்கும்?"

"என்ன வேணும் உங்களுக்கு?"

"எனக்கு ஒரு நல்ல காஃபி போட்டு தருவியா?"

"காஃபி மட்டும் போதுமா? நான் வேற எதுவும் வேணுமானு நெனச்சேன்"

"வேற என்ன வச்சிருக்க? எனக்கு கொடுக்க?"

"இங்கே வாங்க, வந்தப்புறம் "ஷோ அண்ட் டெல்" மாதிரி காட்டி சொல்றேன்!"

"இன்னும் ஒரு அரை மணி நேத்தில் வர்றேன். சரியா? ஆமா..."

"என்ன ஆமா?"

"இல்லை, "ஷோ அண்ட் டெல்" எப்படிக் காட்டுவ? "கவர்" பண்ணியா இல்லை "பேர்"ஆவா?"

"அதை யோசிச்சு வைக்கிறேன். நீங்க ரொம்ப கற்பனை பண்ணாமல் கவனமா ட்ரைவ் பண்ணி வாங்க!"

***************************************

"வாங்க கண்ணன்! கிவ் மி எ ஹக்"

" "

"ஹக்னு தானே சொன்னேன்?"

"ஆமா?"

"அப்புறம் எதுக்கு கிஸ் பண்ணினீங்க?"

"கிஸ் இஸ் ஆல்வேஸ் பார்ட் ஆஃப் ஹக்!"

"யார் சொன்னா?"

"ஐ மிஸ்ட் யு எ லாட், பிருந்த்!"

"சோ டிட் ஐ."

"இதைக்கேளு பிருந்த்! ஒரு திமிர்ப்பிடிச்சவ என்னை திட்டிட்டுப்போற!"

"எங்கே?"

"வரும்போது ஃப்ரீவே லதான்."

"எதுக்கு உங்களை திட்டுறா? நீங்க என்ன செஞ்சீங்க?"

" இந்தா பாரு! நான் எக்ஸ்ட்ரீம் லெஃப்ட் லேன்ல வர்றேன். ஸ்பீட்லிமிட் 65. நான் வர்ற ஸ்பீட் 72 ல. அவளுக்கு என் வேகம் பத்தலையாம். என்னை டெய்ல்கேட்டிங் (tailgating) பண்ணினாள், நான் அதே ஸ்பீட்லயே தொடர்ந்து வந்தேன். அப்புறம் ஹை பீம் போட்டு அன்னாய் (annoy) பண்ணினாள். நான் தொடர்ந்து அதே ஸ்பீட்லயே வந்துட்டு இருந்தேன் பிகாஸ் ஐ ஆம் அல்ரெடி ஓவர் த ஸ்பீட்லிமிட். அவளுக்காக வழிவிட்டு ரைட் லேன் போகலை."

"அப்புறம்?"

"ரொம்ப நேரம் உயிரை வாங்கினாள். நான் கண்டுக்கவே இல்லை. கடைசியில வேற வழியில்லாமல் லேன் சேன்ச் பண்ணி ரைட் லேனுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் ஆகியும் என்னை பாஸ் பண்ணலை. எங்கே இன்னும் பாஸ் பண்ணிப்போகலைனு திரும்பிப் பார்த்தேன். விண்டோவை இறக்கிவிட்டுட்டு, மிட்ல் ஃபிங்கரை ஃப்ளிப் பண்ணி (ஃபக் யு) னு சொல்லிட்டுப் போறா பிட்ச்!"

"ஹா ஹா ஹா! நீங்க என்ன பதிலுக்கு செய்ஞ்சீங்க?"

"கோ ஃபக் யுவர்செல்ஃப் பிட்ச் னு மனசுக்குள்ளேயே கத்தினேன். விண்டோவை திறக்காமல்"

"ஆள் எப்படி இருந்தாள் அவ?"

"யங், வைட், ப்ளாண்ட் பிட்ச்! ரொம்ப நல்லாத்தான் இருந்தாள். அதான் திமிரு."

"நீங்களும் மிடில் ஃபிங்கரை ஃப்ளிப் பண்ணலையா, கண்ணன்?"

"பண்ணி இருக்கலாம்தான்.. திடீர்னு ஏதாவது ஹாண்ட் கன்னை எடுத்து சுட்டுட்டாள்னா? அப்படி ஏதாவது க்ரேஸியா பண்ணிட்டாள்னா.. நான் இல்லாமல் நீ ரொம்ப கஷ்டப்படுவியேனுதான் அதெல்லாம் செய்யலை."

"ஆமா, ரொம்ப பொறுப்பா நடந்துக்கிட்டீங்க, கண்ணன்! நீங்க இல்லாமல் என்ன செய்வேன் நான்?"

"ஏய் ஒரு ஜோக்குக்கு சொன்னால் இதையெல்லாம் நீ ரொம்ப செண்ட்டிமெண்டலா எடுத்துக்காதே!"

"இந்த மாதிரி ஜோக் எல்லாம் எனக்குப் பிடிக்காது!"

"சரி விடு, இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் தட் பிட்ச்! ஃபக் ஹெர்!"

"நான் இருக்கும்போது எதுக்கு அவகிட்டலாம் போறீங்க?"

"இதெல்லாம் லிட்டெரல் மீனிங் எடுப்பாங்களா?"

"ஆள் ப்ளாண்ட் வைட் கேர்ள்னு சொல்றீங்க.. அதான் போயிடுவீங்களானு பயம்"

"உன் கால் தூசிக்குக்கூட பெறமாட்டாள்"

"நல்லா ஐஸ் வைக்கிறீங்க"

"நெஜம்மாத்தான். நீதான் பேரழகி, பிருந்த்!"

"நீங்க இப்படி ஐஸ் வைக்கும்போதும் நனையுது!"

"வாட்!!!"

"நெஜம்மாத்தான் சொல்றேன்!"

"ஆமா உன் ட்ராஃபிக் டிக்கெட் என்னாச்சு?"

"சொல்ல மறந்துட்டேனே. நீங்க சொன்ன மாதிரி அந்த "காப்" கோர்ட்ட்க்கு வரலை. கேஸ் டிஸ்மிஸ்ட்!'

"குட்! சரி, இந்த முறை நீ ஆண்ட்டியோட பேசும்போது என்னை இண்ட்ரொட்யூஸ் பண்ணி வை."

"நீங்க யாருனு சொல்ல?"

"என்னோட "அந்த buddy" னு சொல்லேன்?"

"அந்த buddy னா!!!"

"ஆமா"

"அதெல்லாம் சொல்ல முடியாது. ஃப்ரெண்டுனு வேணா சொல்றேன்."

"பாய் ஃப்ரெண்டுனா?"

"இல்லை, குட் ஃப்ரெண்டுனு"

"அப்படினா?"

"சும்மா ஃப்ரெண்டு"

"அதுக்கும் பாய் ஃப்ரெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"குட் ஃப்ரெண்டுனா தே மைட் நாட் ஸ்லீப் வித் ஈச் அதர்! பாய் ஃப்ரெண்டுனா கெட்ட வார்த்தை அவங்களுக்கு. எனக்கும் பிடிக்கலை"

"உனக்கும் பிடிக்கலையா?"

"ஆமா, யு ஆர் மோர் தன் தட்!"

"வாட் டு யு மீன்?"

"யு ஆர் மோர் தன் எ பாய்ஃப்ரெண்ட் டு மி"

"ஏய் புரியுறாப்பில சொல்லேன்?"

"ஐ லவ் யு மோர் தன் மைசெல்ஃப்."

"இதை எல்லாம் எழுதி வச்சுக்கப்போறேன். எப்படி எல்லாம் உளறியிருக்க பாருனு காட்ட!"

"இது உளறல் எல்லாம் இல்லை!"

"சரி சரி எனக்கு காஃபி போட்டுத்தா! நான் போகனும்."

"ஏன்?"

"வீடு ரொம்ப மெஸ்ஸா கெடக்குடா. க்ளீன் பண்ணனும். நெறையா வேலை இருக்கு!"

"சரி இருங்க காஃபி போட்டுட்டு வர்றேன்!"

-தொடரும்

Wednesday, February 10, 2010

பாக்ஸ் ஆபிஸில் கிங் அஜீத்தின் அசல் !!

அஜீத்க்கு நல்ல ஓபெனிங் கிடைப்பதால் அவரை பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்று சொல்வதுண்டு. அப்போ ரஜினி, கமல், விஜய், சூர்யா எல்லாம் என்ன பாக்ஸ் ஆஃபிஸ் Queen ஆ, அப்படினு கேக்காதீங்க! அஜீத்க்கு, பாக்ஸ் ஆபிஸ் கிங் பட்டம் கொடுக்கப்பட்ட காலம் வேற. இப்போ அந்தப்பட்டத்தை திருப்பியா வாங்க முடியும்? இந்தப் பட்டம் கொடுக்கப்பட்ட பிறகு சூர்யா மிகவும் வளர்ந்துவிட்டார். விஜய்க்கு எப்போவுமே அஜீத அளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் ஸ்டேட்டஸ் உண்டு! இருந்தாலும் அஜீத் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஒன் ஆஃப் த கிங்ஸ்னு வேணா நிச்சயம் சொல்லலாம்!

அசல்:
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 211
Average Theatre Occupancy over this weekend: 92%
Collection over this weekend in Chennai: Rs. 62,53,908

சோர்ஸ்: பிஹைண்ட்வுட்ஸ்

* தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அசல், படத்துக்கு நல்ல சிறப்பான ஓப்பனிங்தான்! நான் எதிர்பார்த்தபடியே சென்னையில் முதல் இடத்தில் இருந்த கோவாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது நம்ம அஜீத்தின் அசல். ஆயிரத்தில் ஒருவன் நாலாவது இடத்திற்கு போயி ஒரு 3 கோடி வசூலோட நிக்குது.

* தமிழ்ப்படம் கான்சப்ட் எனக்கு பிடிக்காவிட்டாலும், பொது மக்களால் ரசிக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் நிற்கிறது. தமிழ்ப்படம் 2010 ல மிகப்பெரிய வெற்றிப்படம்- அதன் பட்ஜெட்டையும் கலக்ஷனையும் பார்த்தால்!

* கோவா மக்களால் ஆதரிக்கப்படுவதாக சாரு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கார். கோவாவின் தலையெழுத்து இன்னும் ரெண்டு வாரத்தில் தெளிவாகத் தெரியும்!

சரி, யு கே ல எப்படிப் போகுது, நம்ம பாக்ஸ் ஆஃபிஸ் கிங் படம்? இதுதான் யு கே ல முதல் வார கலக்சன்!

19 Asal Ind £38,809 Ayngaran 0 1 10 £3,881 £38,809

சமீபத்தில் வந்த வேட்டைக்காரன், ஆதவன் ஆயிரத்தில் ஒருவனோட வசூல் யூ கேல என்னனு பார்ப்போம்!

22 Aayirathil Oruvan Ind £29,517 Ayngaran 0 1 7 £4,217 £29517

14 Vettaikaaran Ind £43,608 B4U
0 1 12 £3,634 £43,608


15 Aadhavan Ind £57,582 Ayngaran
1 11 £5,235 £57,582

12 Kuselan Ind £97,015 Ayngaran
1 17 £5,707 £97,015

யு கேல சுமாராத்தான் போயிருக்கு அசல். ஒரு ஸ்க்ரீன்ல எவ்வளவு கலக்சன்னு பார்த்தால் வேட்டைக்காரனைவிட பெட்டர். மொத்த கலக்சன்னு பார்த்தால் வேட்டைக்காரனைவிட சுமார்தான்!

Tuesday, February 9, 2010

அஜீத்துக்கு ரஜினிமட்டும் கைதட்டி பாராட்டு!!

அஜீத்தின் சமீபத்திய மேடைப்பேச்சுக்கு காரணம்? சிகரெட் விசயத்தை பெரிதுபடுத்திய அன்புமணி மேல் உள்ள எரிச்சலா? அப்படித்தான் இருக்கனும். அவரவர் படத்திற்கு பிரச்சினை வரும்போது அவரவர் உணர்ச்சிவசப்படுறாங்க!

அதே சமயத்தில் அதற்கு ரஜினியின் கைதட்டுக்கு காரணம்? சிகரெட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ரஜினியும்கூட என்று சொல்லலாமா? அதெல்லாம் இல்லையா? அஜீத்தின் பேச்சு ஓரளவுக்கு அர்த்தமுள்ள கோபம்தான். அவர் சிகரெட் குடிப்பேன்னு சொன்னதை நான் சொல்லவில்லை! நடிகன், ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்கள் என்பதே அவர்கள் சிகரெட் குடிக்ககூடாது என்று சொல்வதற்கு காரணம். அதே சமயத்தில் நடிகன்னா நடிப்புத் தொழிலைப் பார்த்துட்டு போயிக்கிட்டே இருக்கனும்னு சிலர் விமர்சனம் பண்றாங்க. அதே நடிகன் தமிழர் பிரச்சினையில் வந்து கலந்துக்கலைனா நடக்கிறதே வேற என்பதுபோல் ஒரு சில சூழ்நிலைகளும் உருவாக்கப்படுகிறது.

நடிகன், ஒரு ரோல் மாடல் என்றால், மக்கள் நன்மைக்காக பல பிரச்சினைகளிலும் போராட்டாங்களிலும் கலந்துக்கனும்னு நினைத்தால், அவர்கள் அரசியல் பிரவேசம் தவிர்க்க முடியாத ஒண்ணு என்பதுபோலதான் சொல்லியுள்ளார் அஜீத். அதில் எதுவும் தப்பில்லைனுதான் தோனுது.

நடிகர்களை இவர்கள் இஷ்டபடி இப்படித்தான் வாழனும்னு சொல்ல எவருக்கும் அருகதை இல்லை என்பதே அஜீத்துடைய பேச்சு. என்னைக்கேட்டால் அஜீத்துக்கு ரஜினி மட்டுமல்ல, எல்லா நடிகர்களும் கைதட்டி இருக்கனும். ஆனால் ஏன் மற்ற நடிகர்கள் ஒருவரும் கைதட்டலைனு தெரியலை! நம்ம கைதட்டி அஜீத் பெரியாளாகிவிடுவார்னு அரசியலா? இல்லைனா வேற எதுவும் புரியாத அரசியல்லானு தெரியலை!

Sunday, February 7, 2010

யாகாவாராயினும் நாகாக்க, ஜெயராம்!

எப்போவுமே ஜோக் அடிக்கும்போதுதான் நம்ம அதிகமா உளறுவது. மலையாள நடிகர் திரு. ஜெயராம் இதுக்கு விதிவிலக்கல்ல! என்ன உனக்கே நீ சொல்லிக்க வேண்டிய பழமொழிய ஜெயராமுக்கு சொல்ற வருண்? னு எல்லாரும் கேட்பது கேக்குது.

மக்கள் கவனிக்க வேண்டியவை!

நடிகர் ஜெயராம் ஒரு செலிப்ரிட்டி. தமிழ் மக்களை வைத்து அவர் சினிமா தொழிலை செய்பவர். நான் அப்படி யில்லையே. என் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எதையோ என் மனச்சாந்திக்கு எழுதி திருப்தி அடைபவன். இந்தத் தளத்தில் எந்தவிதமான கமர்சியலும் கிடையாது. அதனால் யாகாவாராயினும் நாகாக்க என்கிற குறள் பொதுவாக ஜெயராம் போன்ற மக்கள் ஆதரவு தேவையான செலிப்ரிட்டிக்கே உரித்தானது. தமிழ்மக்கள் ரசனை, ஆதரவு அவர்களுக்கு ரொம்ப அதிகம் தேவைப்படுபவர்கள்.

இதில் தமிழ் தெலுகு மலையாள பெண்களைப் பத்தி பேசுறார் என்பது பிரச்சினையில்லை. எந்த ஒரு வேலைக்கு வரும் ஏழைப்பெண்ணையும் இதுபோல் சொல்வது மிகவும் அநாகரீகச்செயல்.

அந்த வேலைக்கார அம்மா இதை கேள்விப்படும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும், moron Jeyaram? THINK!

Saturday, February 6, 2010

எனக்கு கோவா-a பிடிக்கலை!


மூனு தருதலைகள் கிராமத்தில் இருந்து திருடிய காசை வைத்துக்கொண்டு கோவால போய் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறதுதான் இந்தப்படம். வெங்கட் பிரபுக்கு சிந்தனையெல்லாம் இந்த மாதிரி கீழ்த்தரமாத்தான் வருது. வெங்கட் பிரபுவை எஸ் ஜே சூர்யாவை அடிச்சு விரட்டியதுபோல தமிழ்சினிமாவை விட்டு அடிச்சு விரட்டனும்!

இதுல சூப்பர் ஸ்டார் ஆசியுடன் இந்தக்குப்பையை சூப்பர் ஸ்டார் பொண்ணு தமிழர்களுக்கு வழங்குறாங்களாம்! ரொம்ப தேவையான கலைத்தொண்டு பாருங்க! இதுக்கு அவரோட ஆசி ரொம்ப அவசியம்! என்ன கொடுமை இது சிவாஜிராவ் ஜீ?

இது மாதிரி கதையும் இல்லாமல், எந்தவிதமான கருத்தையும் அர்த்தமாகச் சொல்லாமல், நம்ம அரைவேக்காடுகளை முழுலூசாக்கும் படங்கள் எடுக்கும் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எல்லோரையும் மண்ணைக் கவ்வ வைக்கனும்! செய்வார்களா தமிழ் மக்கள்?

அப்படி செய்யலைனா தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்!

Just like Boys, Goa falls in an "outrageous tamil movie". Yeah, some people certainly enjoy this movie but I could not!

Friday, February 5, 2010

அசல்- விமர்சனங்கள்!


நம்ம அல்ட்டிமேட் ஸ்டாரோட அசல் வெற்றிகரமாக வெள்ளித்திரையில்! அன்புமணி அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் புகையுடன் அஜீத்! ஏகனுக்கு அப்புறம் நீண்ட இடைவெளியில் வந்திருக்கிறது இந்தப்படம். படத்தைப் பத்தி நம்ம பிரபல விமர்ச்கர்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்!

Rediff : ** (இரண்டே ஸ்டார்கள்) இது அஜீத் விசிறிகளுக்கு நல்லாயிருக்கும். மற்றவர்களுக்கு? உங்க மூளையை வீட்டில் வைத்துவிட்டுப் படம் பார்க்கவும்!

Sify : சுமார். இங்கேயும் அதே பாட்டுத்தான். இது அஜீத் விசிறிகளுக்கு மட்டும் என்பதுபோல எழுதி இருக்காங்க!

இந்தியா க்ளிட்ஸ் : கவர்ச்சிகரமாக உள்ளது! பாஸிட்டிவ் ரிவியூ!


* படம் நீளம் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தானாம்.

* அஜீத் இரட்டை வேடங்கள். அப்பா அஜீத் ஜீவானந்தம். மகன் அஜீத், சிவா.

*இசை: பரத்வாஜ்

* இயக்கம்: சரண்

* கதை என்ன? : ஒண்ணும் புதுக்கதை இல்லையாம்!

2010 ல வந்த தமிழ்ப்படங்களில் "தமிழ்ப்படம்" தவிர எந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியடையவில்லை! அஜீத்தின் அசலும் "ப்ளாக் பஸ்டர்" இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இன்றைய இளம் நடிகர்களில் அஜீத்க்கு விசிறிகள் மிக மிக அதிகம். இருந்தாலும் விசிறிகள் மட்டும் ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றியடைய வைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

Thursday, February 4, 2010

சுஹாஷினி என்கிற மேதாவி! & Shut Up Suhasini!!

தன்னைப்பற்றியும் தன் கற்பைப்பற்றியும் பேசாமல், மற்றவர்களுக்கும் கற்பு கிடையாது, இந்தக்காலத்தில் ப்ரிமாரிட்டல் செக்ஸ்ல இன்வால்வ் ஆகாதவங்க யாரும் இல்லைனு சொன்ன குஷ்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர் இந்த சுஹாஷினி என்கிற மேதாவி. சரி, அந்த விசயத்தில் பாவம் குஷ்பு ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டார்னு பெண்ணுக்குப் பெண் உதவி செய்ய வந்தார் என்று எடுத்துக்கொள்வோம்!

இப்போ நம்ம செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இவர் வக்காலத்து! ஆயிரத்தில் ஒருவன் மலேசியா போன்ற நாடுகளில் நல்லாப் போனாலும் பல விமர்சகர்கள் பார்வையில் பெரிய அடி வாங்கியுள்ளது. காசுக்காக அல்லது வியாபார நோக்கில்லாமல் எழுதும் சாதாரண பதிவர்கள் முதல் சமீபத்தில் வந்த பிரபல வலைபதிவர்கள் பார்வையிலும் மிகப்பெரிய அடி வாங்கியுள்ளது ஆயிரத்தில் ஒருவன்.

ஆனா மேதாவி சுஹாஷினிக்கு இந்தப் படம் ரொம்பப் பிடித்து இருக்குபோல! அவருக்குப் பிடித்து இருந்தால், ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க், அல்லது மெக்கனாஸ் கோல்ட் லெவெலுக்கு இது ஒரு தமிழ்ப்படம் னு இந்த மேதாவி நினைத்தால் அவர் செய்ய வேண்டியது இந்தப்படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்து 95/100 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு போவதுதான் மரியாதை. அதைவிட்டுப்புட்டு விமர்சகர்கள் கமர்சியல் படங்களைத்தான் பாராட்டுவாங்க, இதுபோல் ஹாலிவுட் முயற்சியை எல்லாம் அடித்து நொறுக்கி உள்ளது நியாயமில்லை என்கிறாராம் இந்த பெண் புலி!

Suhashini needs to understand few things!

* There is absolutely no need for everyone to team up against Selvaraghavan! The critics would have appreciated if and only if the movie had quality and came out in a good shape!

* AO just received the reviews of what it really deserves!

* She can think of herself as the only genius and judge a movie but she should not expect others to agree with that! Because she is only half-baked in every way!

===============================

நான் மட்டுமல்ல, என்னை மாதிரி இன்னொருத்தரும் எரிச்சலாகி ஆங்கிலத்தில் திட்டி இருக்கான்.

கீழே வாசியுங்கள்!

Shut Up Suhasini!!

- by Sanjoy Alexander 29 Jul 2008

This story has been read 884 times. Category: Entertainment

Topic: What do you think about the Reality-TV shows

The most irritating breed on the planet is the group of self-proclaimed scholars. Be it any topic, any field, any arena, you’ll find these guys. Just came across a finest example of this genre – actress Suhasini.

The veteran actress is into anchoring TV shows now – from game shows to movie reviews – she is getting her hands on all. Good for her and good for us – as long as she knows what she is doing.

Just happened to catch one of her programmes on Jaya TV the other day. Sounded like a movie review programme to me, where she conducted detailed examination and critical analysis of Hollywood movies. The victims being the slick flick “Wanted” and the current favourite “The Dark Knight”.

She started off with “Wanted” and just like most any other movie critic went on giving positive and negative feedback on the Angelina Jolie starrer. All said and done, Wanted ended up with a 50:50, good-bad ratio. That’s what mediocre critics do. They balance the scores, deliberately.

Now the biggie – The Dark Knight. Well, Suhasini has definitely not watched the movie. She doesn’t know anything at all about the movie or the Batman franchise. Sample these

The Dark Knight is the fourth movie in the series. (Sorry madam, it’s the sixth!!)

She can’t distinguish between the Scarecrow and the Joker. (Wrong info lady!!)

She didn’t mention anything at all about the performance of Heath Ledger. She doesn’t even know how to pronounce his name!!! The one time the actor’s name came up was at the end of the show. Just the name and that’s it.

She thinks Christian Bale is lean. (Open your eyes good woman!!)

According to her Harvey Dent and Commissioner Gordon knows that Batman is Bruce Wayne. (Stop talking!!)

There was much more wrong info that she threw around all over the place.

She can be spared for her comments that the movie does not have much grip, it’s too dark, too violent and all that. Different people, different perspective.

No holds barred, she is one of the finest actresses in Indian cinema, putting in excellent performances in each role that she has handled in movies spanning most of the South Indian languages. But she should stick to what she does best and not anything else. If you have to show off your credentials and knowledge of film making, you are most welcome to do so. We’d love to listen to that. But please don’t talk about topics which you have no idea of. The whole thing will backfire and you’ll end up being on the losing side, degrading the respect others have for you. You just did.
-----------------------------

Wednesday, February 3, 2010

அஜீத்தின் அசலும் அன்புமணியின் கோரிக்கையும்!


"என்னண்ணே! நம்ம அன்புமணி, அஜீத்தை புகைபிடிக்கிற சீன் எல்லாம் எடுக்கச்சொல்லி கேட்டிருக்கார்போல?"

"எனக்கென்ன தோனுதுனா, அன்புமணி இதைவச்சு மனதாற நல்லது செய்ய நெனச்சாலும் இது அவர் சுயநலத்துக்காக செய்கிற அரசியல் நாடகம் என்றுதான் மக்கள் எடுத்துக்குவாங்கனு தோனுது!"

"ரஜினி வெண்திரையில் புகை பிடிப்பதை நிறுத்தியதும் சிவாஜி ஃபிலிம்ஸ் படமான சந்திரமுகியிலிருந்துதான் அண்ணே. இப்போ மறுபடியும் அஜீத் புகைபிடிக்கும் படமும் சிவாஜி ஃபிலிம்ஸ் படம்தான்!"

"இல்லையே அஜீத் இதற்கு முன்பும் சில படங்களில் புகைபிடித்தார்னு நினைக்கிறேன். வரலாறுல புகைபிடிச்சார் இல்லையா?"

"அப்படியாண்ணே?"

"ரஜினி இவர் சொன்னதைக்கேட்டு புகைபிடிப்பதை நிறுத்தி விமர்சனத்தை தவிர்த்தார். சந்திரமுகி பயங்கர வெற்றியடைந்ததால் அதைத்தவிர்த்தும் வெற்றியடைந்தார் என்ற பேரு வந்தது. ஆனால் எல்லாராலையும் அது மாதிரி புகைபிடிக்கும் சீன்களை தவிர்க்க முடியாது பாரு!"

"இப்போ அஜீத் அந்த அன்புமணி இ-மெயிலுக்கு என்னண்ணே பதில் எழுதுவார் ?"

"அனேகமா ஜன்க் மெயில்ல தள்ளிவிட்டு பேசாமல் இருப்பார். இல்லைனா படத்திற்கு இது (புகைபிடிப்பது) முக்கியம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம்!'

"எப்படிண்ணே புகைபிடிப்பதை நியாயப்படுத்த முடியும்?"

"எதையும் நியாயப்படுத்தலாம்ப்பா!"

"எப்படினு சொல்லுங்கண்ணே?"

"சப்போஸ் அசல் ல இந்த அஜீத் ஒரு ஆண்ட்டி ஹீரோ மாதிரினு வச்சுக்கோ. சப்போஸ் இந்த அஜீத் பாத்திரம் கடைசியில் நுரையீரலில் கேன்சர் வந்து சாகிறாப்பில படத்தில் முடியுதுனு வச்சுக்கோவேன்.."

"அப்படி வச்சா?"

"அன்புமணியின் இந்த முயற்சி முட்டாள்தனமானதுனு ஆயிடும்!"

"அண்ணே புதுசா இப்படியெல்லாம் கற்பனை பண்ணி ரீல் விடுறீங்களே!"

"நீதானே எப்படி நியாயப்படுத்த முடியும்னு கேட்ட? ஏன் முடியாதுனு ஒரு ஹைப்பாத்திட்டிக்கல் சிச்சுவேஷன் உருவாக்கி சொன்னேன்."

"அன்புமணி வாய்ஸ்க்கு என்ன விளைவுண்ணே ஏற்படும்?'

"சட்டப்படி இதை ஒண்ணும் செய்ய முடியாது. சென்சாரும் எதுவும் செய்ய முடியாது. அன்புமணி ராமதாஸ் மக்களுக்காக உருகிறார்னு எல்லாம் யாரும் நம்பமாட்டாங்கனு தோனுது!"

"நீங்க சொல்றதைப்பார்த்தா அஜீத் படத்துக்கு கொஞ்சம் பேரை ஏற்றிவிட்ட மாதிரித்தான் முடியும்போல இருக்கு!'

"அப்படித்தான் எனக்குத் தோனுதுப்பா!"

Tuesday, February 2, 2010

Toyota கம்பெணிக்கு மிகப்பெரிய சிக்கல்!


ஜப்பானிய கார் கம்பெணியான டொயோட்டா மோட்டார்ஸ், வாகனம் தயாரிப்பில் உலகிலேயே முதல் இடத்தை வகிக்கிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுடைய ஃபேவரைட் கார் கம்பெணியும் பொதுவாக டொயோட்டாதான். சமீபத்தில் டொயோட்டாவின் கமர்சியல்ல “டொயோட்டா மீன்ஸ் ரிலையபிலிட்டி” என்றும் பெருமையாகச் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட உலகத்திலேயே முதல் இடத்தில் இருக்கும் மோட்டார் வாகன கம்பெணிக்கு பெரிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் வெளியான டொயோட்டா மாடல்களில் (கேம்ரி, கரொல்லா மற்றும் பல) போன்ற கார்களில் உள்ள ஆக்ஸலரேட்டர் பெடல்ல ஒரு பெரிய குறைபாடு இருப்பதால் 5 மில்லியன் கார்களை டொயோட்டா ரி-கால் செய்கிறது. இது ஆக்ஸெலெரேட்டர் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்பதால் டொயோட்டா ரிலையபிலிட்டி என்பது பெரிய கேலிக்கூத்தாகிவிட்டது. 5 மில்லியன் கார்களில் ஆக்ஸலேட்டர் பெடலை மாற்றவேண்டி இருக்கிறது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் டொயோட்டா கார் விற்பனையை இந்த மாடல்களில் சஸ்பெண்ட் பண்ணியுள்ளது டொயோட்டா கம்பெணி.

இதனால் இந்த #1 ஜப்பானிய கம்பெணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

டொயோட்டா பற்றி சில விசயங்கள்!

* டொயோட்டா #1 கம்பெணி -உலக அளவில்!

* டொயோட்டா கேம்ரி அமெரிக்காவில் விற்பனையில் #1 ஆக உள்ள மிட்சைஸ் கார்

* டொயோட்டா கரோல்லாவும் அமெரிக்காவில் விற்பனையில் #1 ஆக உள்ள காம்பாக்ட் கார்.

இந்த ஆக்ஸலெரேட்டர் குறையைபாடைச்சொல்லி சமீபத்தில் இந்த கார்களில் ஏற்பட்ட ஆக்ஸிடெண்ட்களுக்குக் காரணம் காரில் உள்ள குறைபாடால்தான் என்று சொல்லி எத்தனை அமெரிக்கர்கள் law-suit பைல் பண்ணப்போறாங்கனு தெரியலை!

டொயோட்டாவிற்கு வந்துள்ள இந்த பிரச்சினையால் எந்தக்கார் கம்பெணிக்கு விற்பனை கூடும் என்று பார்த்தால், ஹாண்டா கார் கம்பெணி என்று சொல்கிறார்கள்!
" Who is most likely the biggest beneficiary of Toyota's accelerator recall? Its longtime rival Honda. "We see Honda as being the best positioned across a broad range of vehicles to gain," write analysts from Deutsche Bank. "Honda competes at or near the top of the market in five impacted segments, models which account for 80% of sales."
Ordinarily, Honda would have a hard time capitalizing on any rival's misfortune, because it maintains some of the smallest inventories in the industry, allowing it little room for an unexpected sales surge.

என் ஒண்ணுவிட்ட அத்தைனு சொல்லவா? கடலை கார்னர் (42)

"ஹாய் கண்ணன்! பேசமுடியுமா?"

"என்ன பிருந்த்? சொல்லுடா."

"என்ன உங்க கெஸ்ட் எல்லாம் போயிட்டாங்களா?"

"இல்லைடா, இன்னும் ரெண்டு மணி நேரம் சென்றுதான் போவாங்க! மை ஃப்ரெண்ட் இஸ் ஆண் ஹிஸ் வே."

"உங்க ஃப்ரெண்டோட பேரண்ட்ஸ் மட்டும்தானா?"

"ஆமா! அது பத்தாதா உனக்கு?"

"அவங்க எப்படி டைப், கண்ணன்?"

"ரொம்ப ஆச்சாரமான குடும்பம் போல இருக்கு! வீட்டிலே பூஜை அறை எங்கேனு கேக்கிறாங்க?"

"அச்சசோ!"

"சாமி கும்பிடனும்னா நான் கோயிலுக்குத்தான் போவேன்னு சொன்னேன்!"

"எந்தக் கோயிலுக்குனு கேக்கலையா?"

"கேக்கலை. நான் போறது பிருந்தா தேவி கோயிலுக்கு!"

"அது யாரு பிருந்தா தேவி?"

"நீ தான்டி! வேற யாரு?"

"நான் என்ன தெய்வமா?"

"உன்னை வணங்கினாலாவது என் மனசு புரிஞ்சி நீ ஏதாவது அருள் புரியுவ. சும்மா கல்லை கும்பிட்டா அதுக்கு என்ன புரியும்?'

"ஏன் நம்ம ஊர்லதான் நெறையா சாமியார் இருக்காங்களே! விழுந்து கும்பிட வேண்டியதுதானே?"

"நான் அவங்க செத்ததும்தான் அவங்களை கும்பிடுவது வழக்கம்!"

"ஏன் அப்படி?"

"செத்ததும் எல்லோரும் தெய்வமாகிடுவாங்க இல்லயா?"

"அது ஏன் அப்படியாம்?'

"ஏன்னா அன்றிலிருந்து எந்தவிதமான அயோக்கியத்தனமும் செய்ய முடியாது பாரு? அதான் அவர்கள் தெய்வம் லெவெலுக்கு போயிடுறாங்க!"

"சரி, உங்க ஃப்ரெண்டோட பேரண்ட்ஸ் வெஜிட்டேரியனா?"

"ஆமா! உன்னோட சொந்தக்காரங்கதான்."

"பாவம் நீங்க! நான் வந்து ஏதாவது ஹெல்ப் பண்ணவா?"

"உன்னை யாருனு கேட்டா, நீ யாருனு சொல்ல? என் ஒண்ணுவிட்ட அத்தைனா?"

"கொழுப்பா? சொல்ல வேண்டியதுதானே என்னோட ஆத்துக்காரியா வரப்போறவனு!"

"சொல்லலாம்தான்.. இப்போலாம் அமெரிக்கால நம்மதான் ரொம்ப ஸ்லோவாப் போறோம். நம்ம ஊர்ல எல்லாம் ஃபாஸ்ட் பேஸ்லதான் போகுது!"

"வேற என்ன பேசினாங்க?"

"சும்மா இருப்பாங்களா? ஒரு நூறு நன்றி சொன்னாங்க இந்த ஹெல்ப்க்கு. அப்புறம் என்னுடைய ஜாதகம் இருக்கா? நீங்க என்ன குலம்,கோத்ரம்னு ஒரு மாதிரியா கேட்டாங்க!"

"எதுக்கு அதெல்லாம்? உங்களுக்கு பொண்ணு பார்க்கவா?"

"வேற எதுக்கு? நான் ஜாதகம் எல்லாம் பேங்க் லாக்கர்ல இருக்கு னு சும்மா விட்டேன்."

"பொய்யா?"

"வேற என்ன சொல்லச் சொல்ற? எனக்கு ஜாதகம்லாம் எழுதலைனா? அப்புறம் என் ஜாதி , கோத்ரம் எல்லாம் சொல்லி பொண்ணு பார்க்கச் சொல்லவா?"

"அதுக்காகவா கேட்டாங்க?"

"ஆமா அவங்க சொந்தத்திலே மூக்கும் முழியுமா ஒரு அழகி இருக்காலாம், அவளை கட்டிக்கிறயானு அடுத்து கேக்கத்தான் இதெல்லாம்.."

"என்ன தரகர் தொழிலா அவங்களுக்கு?"

"தெரியலையே. நம்ம ஊர் பெரியவங்க எல்லாம் இப்படித்தானே? ஏதாவது உதவி செய்வதாக நெனச்சுக்கிட்டு நம்மலப் போட்டு கொல்லுவாங்க!"

"எனக்கு கல்யாண்ம் ஆயிடுச்சு, செப்பரேட்டெட்டா இருக்கோம்னு சொல்ல வேண்டியதுதானே?"

"அப்படினா?"

"அப்படித்தான். தேவைனா மூடு வந்தா ஒண்ணா சேர்ந்துக்குவோம். மற்றபடி தனித்தனி வீட்டிலேதான் இருப்போம்னு அர்த்தம்."

"ஒண்ணாச்சேர்ந்து என்ன பண்ணுவோம்?"

"பச்சையா சொல்லனுமா?"

"வேணாம் வேணாம்!"

"ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷப்படுத்துவோம்னு சொல்லுங்க! எங்கே இருந்து பேசுறீங்க?"

" சும்மா சின்ன ஷாப்பிங். மில்க்கும் ப்ரெடும் வாங்கி வர்ரேன்னு சொல்லிட்டு க்ராஸரி ஷாப் வந்தேன். இப்போ பார்க்கிங் லாட்ல கார்ல தனியா இருக்கேன்."

"அதானே பார்த்தேன்?"

"என்ன ட்ரெஸ் போட்டு இருக்க?'

"ட்ரெஸ்லாம் ஒண்ணும் போடல!"

"ஏய் என்ன சொல்ற! பாத்ரூம்ல இருக்கியா?"

"ஆமா!'

"பாத்ரூம்ல இருக்கயிலேதா என் ஞாபகம் வருமா உனக்கு? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"

"இப்போத்தான் குளிக்க ரெடியானேன்.."

"நேக்கடாவா இருக்க?"

"ஆமா! அண்டர் கார்மெண்ட்ஸ் கழட்டினதும் உங்க ஞாபகம் வந்துடுச்சு!"

"நெஜம்மா?!"

"நெஜம்மாத்தான்!"

"ஏன் என் ஞாபகம் வந்தது?"

"நீங்கதானே அன்னைக்கு அது ரெண்டையும் எடுத்து பாஸ்கட்ல போடுனு சொன்னீங்க? அது ஞாபகம் வந்துச்சு. சரினு உங்களை கூப்பிட்டேன்."

"ஏய் என் ஃப்ரெண்டு கூப்பிடுறான். ஐ ஹாவ் டு டேக் ஹிஸ் கால்"!

"ஓ கே டார்லிங். லவ் யு!"

"லவ் யு டூ, பிருந்த்!"

-தொடரும்

இயக்குனர்/நடிகர் ஹனிபா மறைந்தார்!


மலையாள இயக்குனர் மற்றும் நடிகரான கொச்சின் ஹனிபா, நெறையப்படங்கள் மலையாளத்திலும் தமிழிலும் இயக்கி இருந்தாலும் இவர் நடிகரான பிறகுதான் பலருக்கு இவரைத்தெரியும். தமிழில் இவர் செய்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அருமையானவை, நம் மனதைவிட்டு என்றுமே போகாதவை. தன்னுடைய 62 வது வயதில் நம்மைவிட்டு போய்விட்டார்!

இவர் நடித்த படங்களில் முக்கியமானவை

* மஹாநதி

* முதல்வன்

* பட்டியல்

* சிவாஜி

இவர் இயக்கிய படங்களில் சில

* பாசப்பறவைகள் (1988)

* பாடாத தேனீக்கள் (1988)

* பாச மழை (1989)

* பகலில் பெளர்னமி (1990)

* பிள்ளைப் பாசம் (1991)

* வாசலிலே ஒரு வெண்ணிலா (1991)

சின்ன ரோல்களில் வந்து நம்மை மிகவும் கவரும் நடிகர்கள் வெகுசிலரே. இதில் மறைந்த நடிகர்கள், எஸ் வி ரங்காராவ், டி எஸ் பாலையா வகையைச் சேர்ந்தவர் நடிகர் ஹனிபா!

மிகவும் அருமையான ஒரு நடிகர்! என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு இவர் நடிப்பு இருக்கும். தமிழ் திரையுலகுக்கு இது ஒரு பேரிழப்புதான்!

Monday, February 1, 2010

கோவா(A) வின் தலைஎழுத்து என்ன?

இன்று பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்ட்ஸ் வந்தாச்சு! தமிழ்ப்படம், ஓரளவுக்கு எல்லோரையும் சிரிக்கவைத்து ரசிக்க வைத்ததால் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல #1 வர வாய்ப்பிருக்கிறது என்று ஆவலோடு இருந்தேன். ஆனால் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல #1 ஆக கோவாவும், தமிழ்ப்படம் இரண்டாவது இடத்தையும், ஆயிரத்தில் ஒருவன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது!

* கோவா வுக்கு ஓப்பனிங் நல்லாத்தான் இருந்து இருக்கு. ஆனால், அடுத்த வாரம் அனேகமாக தமிழ்ப்படம் ரெண்டாவது இடத்திற்கும், கோவா 3 வது இடத்திற்கும் தள்ளப்பட வாய்ப்பிருக்கு! முதலிடத்தில் என்ன் படம்? நம்ம அஜீத்தின் அசல்!

* கோவா, வெங்கட் பிரபுவுவிற்கு ஒரு முக்கியமான படம்! அவரிடம் இருந்து நெறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் க்ரிட்டிக்ஸ் பார்வையிலும், மக்கள் தீர்ப்பிலும், சென்னை-28 >> சரோஜா > கோவா என்று தெளிவாகிவிட்டது! கோவா, ஓரளவுக்கு வெற்றியடைந்தாலும் வெங்கட் பிரபுக்கு இந்தப்படம் ஒரு அடிதான்.

* கோவா வால் செளந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய ரெப்யூட்டேஷனை கெடுத்துக் கொண்டதுபோல ஒரு இமேஜ் உண்டாக்கி இருக்கு! இதற்குக் காரணம் கோவா படத்தின் ப்ளாட் ஒரு மாதிரி மட்டமான ப்ளாட்!

* மற்றபடி, ஓவர்சீஸ்ல தமிழ்ப்படம், கோவாலாம் சரியாகக்கூட ரிலீஸ் பண்ணப்படவில்லை! அதனால் ஓவர்சீஸ்ல இருந்து பெருசா கலக்சன் எதுவும் வராது!

* கோவாவிற்கு போட்ட காசை திருப்பி எடுத்தால் பெரிய விசயம்தான்!

* தமிழ்ப்படம் ஒரு வெற்றிப்படம்தான் என்பது உறுதியாகிவிட்டது!

* ஆயிரத்தில் ஒருவன்? போட்டகாசை எடுத்தாரா செல்வா?