Saturday, February 6, 2010

எனக்கு கோவா-a பிடிக்கலை!


மூனு தருதலைகள் கிராமத்தில் இருந்து திருடிய காசை வைத்துக்கொண்டு கோவால போய் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறதுதான் இந்தப்படம். வெங்கட் பிரபுக்கு சிந்தனையெல்லாம் இந்த மாதிரி கீழ்த்தரமாத்தான் வருது. வெங்கட் பிரபுவை எஸ் ஜே சூர்யாவை அடிச்சு விரட்டியதுபோல தமிழ்சினிமாவை விட்டு அடிச்சு விரட்டனும்!

இதுல சூப்பர் ஸ்டார் ஆசியுடன் இந்தக்குப்பையை சூப்பர் ஸ்டார் பொண்ணு தமிழர்களுக்கு வழங்குறாங்களாம்! ரொம்ப தேவையான கலைத்தொண்டு பாருங்க! இதுக்கு அவரோட ஆசி ரொம்ப அவசியம்! என்ன கொடுமை இது சிவாஜிராவ் ஜீ?

இது மாதிரி கதையும் இல்லாமல், எந்தவிதமான கருத்தையும் அர்த்தமாகச் சொல்லாமல், நம்ம அரைவேக்காடுகளை முழுலூசாக்கும் படங்கள் எடுக்கும் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எல்லோரையும் மண்ணைக் கவ்வ வைக்கனும்! செய்வார்களா தமிழ் மக்கள்?

அப்படி செய்யலைனா தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்!

Just like Boys, Goa falls in an "outrageous tamil movie". Yeah, some people certainly enjoy this movie but I could not!

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

//தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்! //

சரியாச் சொன்னீங்க நண்பரே...

Unknown said...

எனக்கும் கோவா பிடிக்கலை... ஆனா கோவா பிடிக்காததுக்கு நீங்க சொல்ற காரணம்தான் எனக்கு ரொம்பவே பிடிக்கலை..

வருண் said...

***Sangkavi said...
//தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்! //

சரியாச் சொன்னீங்க நண்பரே...***

நன்றி, சங்கவி! :)

வருண் said...

***முகிலன் said...
எனக்கும் கோவா பிடிக்கலை... ஆனா கோவா பிடிக்காததுக்கு நீங்க சொல்ற காரணம்தான் எனக்கு ரொம்பவே பிடிக்கலை..

6 February 2010 11:18 AM***

என்ன பண்றது, முகிலன்?

ரொம்ப லிபெரல் பேர்வழிகளைப் பார்த்தால் நான் ரொம்ப கண்சர்வேட்டிவாகிடுவேன்.

க்ரிக்கட் விசிறிகளைப் பார்த்தால் நான் அமெரிக்கன் ஃபுட் பால் விசிறியாகிடுவேன்.

இது என் சுபாவம்! :))

பகிர்தலுக்கு நன்றி, முகிலன்!

இனியா said...

மக்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கடுமையாக ஆதரிக்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். Frontவுட்ஸ் என்ற சினிமா இணையதளம் கோவாவை ‘அருமையானப் படம்’ என்று எழுதியிருக்கிறது. ஆனால் சில விமர்சகர்களின் சினிமா அறிவையும், தமிழ் சினிமாவின் கதியையும் எண்ணி பீதி உண்டாகிறது --- அன்புடன் சாரு

:):):)

வருண் said...

***இனியா said...

மக்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கடுமையாக ஆதரிக்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். Frontவுட்ஸ் என்ற சினிமா இணையதளம் கோவாவை ‘அருமையானப் படம்’ என்று எழுதியிருக்கிறது. ஆனால் சில விமர்சகர்களின் சினிமா அறிவையும், தமிழ் சினிமாவின் கதியையும் எண்ணி பீதி உண்டாகிறது --- அன்புடன் சாரு****

நம்ம சாரு இந்த மாதிரி தருதலைங்க, தண்ணியடிச்சுக்கிட்டு, பொம்பளைங்க பின்னால அலையிறதப் பார்த்தால், இது தான் உலக சினிமா தரம்னு நெனச்சுக்குவாரு! LOL

தமிழ் சினிமாவை நெனச்சு பீதி???

ரொம்ப தேவையான கவலை பாருங்க!
தமிழ் சினிமா நல்லா வாழ்ந்தாலும் நாசமாப்போனாலும் யாருக்கும் எதுவும் ஒண்ணும் ஆகப்போற-தில்லை!