Sunday, February 7, 2010

யாகாவாராயினும் நாகாக்க, ஜெயராம்!

எப்போவுமே ஜோக் அடிக்கும்போதுதான் நம்ம அதிகமா உளறுவது. மலையாள நடிகர் திரு. ஜெயராம் இதுக்கு விதிவிலக்கல்ல! என்ன உனக்கே நீ சொல்லிக்க வேண்டிய பழமொழிய ஜெயராமுக்கு சொல்ற வருண்? னு எல்லாரும் கேட்பது கேக்குது.

மக்கள் கவனிக்க வேண்டியவை!

நடிகர் ஜெயராம் ஒரு செலிப்ரிட்டி. தமிழ் மக்களை வைத்து அவர் சினிமா தொழிலை செய்பவர். நான் அப்படி யில்லையே. என் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எதையோ என் மனச்சாந்திக்கு எழுதி திருப்தி அடைபவன். இந்தத் தளத்தில் எந்தவிதமான கமர்சியலும் கிடையாது. அதனால் யாகாவாராயினும் நாகாக்க என்கிற குறள் பொதுவாக ஜெயராம் போன்ற மக்கள் ஆதரவு தேவையான செலிப்ரிட்டிக்கே உரித்தானது. தமிழ்மக்கள் ரசனை, ஆதரவு அவர்களுக்கு ரொம்ப அதிகம் தேவைப்படுபவர்கள்.

இதில் தமிழ் தெலுகு மலையாள பெண்களைப் பத்தி பேசுறார் என்பது பிரச்சினையில்லை. எந்த ஒரு வேலைக்கு வரும் ஏழைப்பெண்ணையும் இதுபோல் சொல்வது மிகவும் அநாகரீகச்செயல்.

அந்த வேலைக்கார அம்மா இதை கேள்விப்படும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும், moron Jeyaram? THINK!

6 comments:

BADRINATH said...

ஜெயராம் பிரச்சனை தேவையில்லாமல் ஊதிப் பெருக்கப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.. யார் இந்த செயராம்... ஒரு சாதாரண நடிகன்.. ஏதோ டிவியில் உளறினார்.. அதுவும் மலையாள டிவியில்... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியைத் துாக்கி மனையில் வை என்கிற கதையாய் நான்கைந்து நாள் அமளி துமளி.. இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் அதைவிடவா கொடுமை இருக்கப் போகிறது.... கலைஞரை நாம் ஏற்கவில்லை என்பது வேறு விசயம் ஆனால் அந்த நடிகர் வீட்டை அடித்து நொறுக்குவது என்பது சற்றும் ஏற்புடைத்தல்ல அதுவும் அவர் வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கும் போது அப்படி நடப்பது முதலில் நாகரீகமா என்பதை யோசிக்க வேண்டும்.. இந்த விசயத்தில் மட்டும் கலைஞர் சொல்வது சரிதான்...

வருண் said...

***BADRINATH said...

ஜெயராம் பிரச்சனை தேவையில்லாமல் ஊதிப் பெருக்கப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.. யார் இந்த செயராம்... ஒரு சாதாரண நடிகன்.. ஏதோ டிவியில் உளறினார்.. அதுவும் மலையாள டிவியில்... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியைத் துாக்கி மனையில் வை என்கிற கதையாய் நான்கைந்து நாள் அமளி துமளி.. இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் அதைவிடவா கொடுமை இருக்கப் போகிறது.... கலைஞரை நாம் ஏற்கவில்லை என்பது வேறு விசயம் ஆனால் அந்த நடிகர் வீட்டை அடித்து நொறுக்குவது என்பது சற்றும் ஏற்புடைத்தல்ல அதுவும் அவர் வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கும் போது அப்படி நடப்பது முதலில் நாகரீகமா என்பதை யோசிக்க வேண்டும்.. இந்த விசயத்தில் மட்டும் கலைஞர் சொல்வது சரிதான்...***

அவர் வீட்டை அடித்து நொறுக்குவதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்ங்க. யாரும் அதை சரினு சொல்லவில்லை!

ஆனால், ஜெயராம் இப்படியெல்லாம் "ஜோக்" அடிச்சது கண்டனத்துக்குரியது!

பகிர்தலுக்கு நன்றி. பத்ரிநாத்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அந்த வேலைக்கார அம்மா இதை கேள்விப்படும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும்//

இதையே அக் கோமாளி சிந்திக்கத் தவறிவிட்டது.

அதே வேளை அவர் குடும்பத்தினர் தனியே இருந்த போது வீட்டைத் தாக்கியிருக்கக் கூடாது.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//அந்த வேலைக்கார அம்மா இதை கேள்விப்படும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும்//

இதையே அக் கோமாளி சிந்திக்கத் தவறிவிட்டது.

அதே வேளை அவர் குடும்பத்தினர் தனியே இருந்த போது வீட்டைத் தாக்கியிருக்கக் கூடாது.****

பகிர்தலுக்கு நன்றிங்க யோஹன் - பாரிஸ்!

லதானந்த் said...

ஒங்க பதிலகள் மஜாவா இருக்குது

வருண் said...

***லதானந்த் said...

ஒங்க பதிலகள் மஜாவா இருக்குது

9 February 2010 5:42 ***

வாங்க லதானந்த் சார்! அது வாசிக்கிறவங்களைப் பொருத்தது இல்லையா? :)))