Friday, February 19, 2010

பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக சண்டியர்கள்!

"என்னைக்கேட்டால் பெண் நாட்டை ஆளனும், ஆண் வீட்ட ஆளனும்னு " மன்னன்ல நம்ம விசயசாந்தி அக்கா சொல்வாங்க! இப்படி ஏதாவது படத்துல கதைகள்ல சொல்லி ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான்! ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே? அது போதாதாங்கிறீங்களா? அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள்! அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல! அதிசயங்கள்!

சாதனைகளுடன் அதிசயங்களையும் பிரித்துப்பார்க்க கத்துக்கனும். அதிசயங்களை சாதனைகள் கணக்கில் எடுக்கக்கூடாது!

ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். எங்கே வாங்க? ராமானுசம் போல பல கனித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம்! ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால்? அப்போ அது அதிசயமில்லை. திறமைதான்! நம்ம சாதிக்கிறோம்னு சொல்லலாம்.

பெண்பதிவர்கள் நெறையா எழுதனும்னு டாக்டர் ருத்ரன் சொல்லிட்டாருனு, பெண் பதிவர் யாரும் வாயை திறந்திடாதீங்க! இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க! அதெல்லாம் சும்மா அவர் சொல்றாருனு ஃப்ரியா விடுங்க! அழகா சர்க்காஸ்டிக்கா எழுதுற எழுத்துத் திறமை இருக்கா? நீங்களே எழுதி படிச்சுக்கோங்க! இல்லைனா உங்க பதிவை எழுதி ஒரு சில தோழிகளுக்கு அனுப்புங்கள்! பதிவுலகில் நீங்க என்ன செய்யனும்னா,... ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, கஷ்டப்பட்டாங்க, ஒரு தேவதை வந்து உதவுச்சு அப்புறம் சந்தோஷமாக வாழ்ந்தாங்கனு கதை எழுதுங்க. ..

பின்னூட்டம்? சும்மா அட்டண்டன்ஸ் கொடுங்க! :-) பயன்படுத்துங்க! நல்லா எழுதுறீங்க வாழ்த்துக்கள்னு சொல்லுங்க! உங்களுக்கு அந்த கருத்தில் நம்பிக்கை இல்லையா? அப்போ கஷ்டம்தான்! மனசுக்குள்ளேயே ஒரு பின்னூட்டமெழுதி வாசிச்சுக்கோங்க! அப்போத்தானே பல பதிவுலக சண்டியர்கள்ட்ட இருந்து நீங்க தப்பிக்க முடியும்?

இன்னொரு பெண் பதிவரைக்கூட விமர்சிக்ககூடாதா? அப்படி விமர்சிப்பதால் அவங்களும் "பாப்புளர்" ஆக வாய்ப்பிருக்கே? அப்படினு சொல்றீங்களா? அதெல்லாம் செய்யக்கூடாதுங்க! அதெல்லாம் ஆண் பதிவுலக சண்டியர்கள் கண்ணுக்கு பட்டுச்சுனா? உங்களை மிரட்டுவார்கள்! எப்படி? ஏன் அந்த பதிவருடைய படத்தை போட்டீங்க? சட்டப்படி தப்பு தெரியுமா? அப்படி இப்படினு உங்களை மிரட்டி பதிவுபோட்டு பொழைப்பு நடத்துவார்கள்! ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக! ஆனால் இவனுகள் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக! இவனுக யாருனு கேக்குறீங்களா? பதிவுலக மாஃபியாக்கள்!

அதனால பெண் பதிவர்கள் யாரும் இனிமேல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லக்கூடாது. ஒண்ணுமட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க! உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டுமில்லை! முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட! இந்த மிரட்டல்களுக்கு ஜால்ரா அடிச்சு உங்களை உண்டு இல்லனு பண்ணிடுவாங்க!

அப்புறம் நீங்க என்ன எழுதுறீங்கனு உங்க கருத்தைப் பார்க்க மாட்டார்கள், உங்க சாதி என்னவாயிருக்கும்னு உங்க எழுத்தை வச்சு ஆராய்வார்கள். நமக்கு இதுபோல ஆராச்சியில் இந்த பதிவுலக மாஃபியாக்கள் வாங்கி கொடுத்தாதான் நோபல் பரிசு கிடைக்கும்!

7 comments:

மதுரை சரவணன் said...

ivalavu kobam en ? karuththu nallathu annal mothal nallathalla .yarum yariyum amukki vida mudiyaathu. ungkal karuththu valimai mikkathu , nanbarkale , tholikale purinthu yaar manamum poon patatha vaaru seiyal patungkal.

அமர பாரதி said...

வருன்,

அப்போது எதைப் பற்றியும் புரியாமல் எள்ளப் படும் நபரின் பின்புலம் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? பொலிடிகலி கரெக்டாக எழுதுவது வாதத்தில் வெல்ல வேண்டுமானால் உதவலாம். ஆனால் அதற்கான நோக்கம் நேர்மையானதாக ஆகிவிடாது.

வருண் said...

*** Madurai Saravanan said...

ivalavu kobam en ? karuththu nallathu annal mothal nallathalla .yarum yariyum amukki vida mudiyaathu. ungkal karuththu valimai mikkathu , nanbarkale , tholikale purinthu yaar manamum poon patatha vaaru seiyal patungkal.

19 February 2010 10:42 AM***

கோபம்லாம் இல்லங்க, மிரட்டி எல்லோரையும் விரட்டியடித்து விடுவார்களோ என்கிற ஐயம்! தங்கள் கருத்துக்கு நன்றிங்க, சரவணன்! :)

வருண் said...

***அமர பாரதி said...

வருன்,

அப்போது எதைப் பற்றியும் புரியாமல் எள்ளப் படும் நபரின் பின்புலம் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? பொலிடிகலி கரெக்டாக எழுதுவது வாதத்தில் வெல்ல வேண்டுமானால் உதவலாம். ஆனால் அதற்கான நோக்கம் நேர்மையானதாக ஆகிவிடாது.

19 February 2010 11:26 AM**

பின்புலம் தெரியாமல் எழுதியதற்காக பின்னூட்டத்தில் அவர்களுக்கு தெளிவுபடுத்தலாம். அவர்களை "இக்னோர்" பண்ணலாம். மிரட்டல் என்பது தேவையற்றது என்பது என் எண்ணம்ங்க! அவ்ளோதான்! :)

Unknown said...

உங்கள் கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போனாலும் இந்த வரிகள் என்னை இடறுகின்றன.
//இவனுகள் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக!//

அப்போ ரஜினி ரசிகனாயிருந்தா கமல் ரசிகன் சொல்றது எல்லாத்தையும் கண்ணை மூடிக்கிட்டு எதிர்க்கணுமா? அவர் “கிழக்கில் சூரியன் உதிக்கும்” அப்பிடின்னு சொன்னாலும்?

இல்ல இன்னொரு ரஜினி ரசிகன் என்ன சொன்னாலும் கூட சேந்து கும்மியடிக்கணுமா? என்ன நியாயம் சார் இது?

செந்தழல் ரவி எழுதியதில் சில பல அநாகரீகங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அதை மிரட்டல் என்றும் மாஃபியா என்றும் சொல்வது தவறு. அப்படி சொல்வதனால் நீங்களும் அவர் செய்ததைத்தானே செய்திருக்கிறீர்கள்? என்ன அவர் யாரைத் திட்டுகிறேன் (அல்லது உங்கள் வார்த்தைகளில் மிரட்டுகிறேன்) என்று சொல்லிவிட்டு தொடுப்பெல்லாம் கொடுத்துவிட்டு செய்தார். நீங்கள் மொட்டைக் கடுதாசி போல செய்திருக்கிறீர்கள்.

வருண் said...

முகிலன்: சண்டைபோட தில்லு உள்ள ஆட்கள் நெறையாப்பேர் இருக்காங்க.

அவங்கள விட்டுட்டு சும்மா ஒரு அம்மாவப்போட்டு இப்படித் தாக்குறது தப்புங்க!

அப்புறம் இந்த ரஜினி, கமல், ஜெ ஜெ, மு க விசயம் கொஞ்சம் காம்லெக்ஸ் மேட்டர். என்ன சொல்ல வந்தேன்னா இதே கருத்தை இவங்க "buddy" எவனாவது சொல்லியிருந்தா, "ஆமாஆமா"னு போயிடுவாங்க.

எங்க ஊர்ல ஒரு சிலர் முடியாதவனைத்தான் போட்டு அடிச்சு வீரத்தைக் காட்டுவாங்க. உண்ண்மையான அயோக்கியனை நண்பனாக்கிக்குவானுக. அந்த ஞாபகம் வந்துருச்சு.

வருண் said...

***முகிலன் said...
ஆனால் அதை மிரட்டல் என்றும் மாஃபியா என்றும் சொல்வது தவறு***

முகிலன் இந்தப்பின்னூட்டத்தைப் படிங்க! இது போதாதா? இதுக்கப்புறமும் இவரை தொடர்ந்து தாக்குவது தவறென்று நான் நம்புறேன்.


///***On Feb 13, 2010 9:15:00 PM , கிருபாநந்தினி said...
+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு!

கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவுதான்! ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.

ஸாரி! ரொம்ப வருத்தமா இருக்கு!////


These sort of attacks will scare people, imho.

Even I have got threats from some "reputed" bloggers. That is why I dont reveal my PERSONAL matters anywhere.

If they learn more about you personally, THEY WILL attack you personally!