Tuesday, February 8, 2011

பிடித்த பதிவர்களும் பிடிக்காத நடிகர்களும்! செந்தழல் ரவி!

பதிவர்கள் ரொம்ப மென்மையானாவர்கள்! சொன்னால் நம்ப மாட்டீங்க, நெறையப் பேரு தொட்டால் சிணுங்கி! அவங்க எழுத்துக்கும் அவங்க மனசுக்கும் சம்மந்தமே இருக்காது! அவங்களை புகழலாம் ஆனால் உள்மனதைக் காயம் செய்யுமளவுக்கு அவங்க எழுத்தை, நடையை கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்பது பதிவுலக நாகரிகம்.

பதிவுலகம்னு எடுத்துக்கிட்டா என்னை நெறையப் பதிவர்களுக்குப் பிடிக்காது! எனக்கும் நெறையப் பதிவர்களைப் பிடிக்காது. இது இயற்கைதான். எல்லாருக்கும் எல்லாருடைய எழுத்தும் எப்படிப் பிடிக்கும்? அதுக்காக, நாம் இவங்களை எல்லாம் "நான் பின் தொடருவது இல்லை"னு நாம் தம்பட்டம் அடிப்பதில்லை! என்ன இருந்தாலும் நம்ம எல்லாம் ஒரே எழுத்துக்குடும்பம் இல்லையா? அவங்க எழுத்தைப் பிடிக்கலைனா ஒதுங்கி போயிடனும். இன்னும் சொல்லப்போனா, எனக்குப் பிடித்த பதிவர்கள்னு எழுதுவதுகூட தப்பு! அப்போ நீங்க விட்ட பதிவர்கள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்காதா? நு ஒரு கேள்வி வரும். பல பதிவர்கள் அவங்களை உங்களுக்கு பிடிக்காதுனு தவறா நெனச்சுக்குவாங்க, இல்லையா? பிடித்த பதிவர்கள்னு ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு எழுதுவதுகூட தப்பு! பிடித்த பதிவர்கள்னு எழுத வேணாம்னு நெனச்சாலும் ஒரு சில பதிவர்களைப் பத்தி எழுதியே ஆகனும். என்ன வகை பதிவர்களை? அதை எப்படி சொல்றதுனு தெரியலையே.

அண்ணன் செந்தழல் ரவி பத்தி எழுதுவோமா? அய்யய்யோ, இவருக்கு நான் என்ன எழுதினாலும் பிடிக்காதே! அதனால என்ன? இதெல்லாம் பெரிய குற்றமா? அதுக்காக அவங்களை நாமும் வெறுக்கனுமா என்ன? நம் எழுத்தைப் பிடிச்சவங்களைதான் நமக்கும் பிடிக்கனுமா? கொஞ்சம் வேற மாதிரி இன்னொரு கோணத்தில் யோசித்தால் என்ன? பதிவுலகில் அவர் நெறைய வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட பதிவுகள், பலருக்கும் உதவும் வண்னம் போடுறாரே? மேலும் யாருக்கும் உதவி செய்யனும்னா (சாருக்குகூட) மொதல் ஆளா நிக்கிறாரே? அதை எல்லாம் பாராட்டலாமே? அவரைப் பத்தி இறக்கி ஒரு பின்னூட்டம்போட்டால் ஒரு கூட்டமே வக்காலத்துக்கு வருதே? அது சும்மாவா வரும்? ஏதோ நம்ம அறிவுக்கு எட்டாத நல்லவைகள் அவரிடம் இருக்குமோ? சரி இதோட நிறுத்திக்கிறேன். அப்புறம் அவரு வஞ்சப் புகழ்ச்சினு சொல்லுவாரு! எதுக்கு வம்பு?

பிடிக்காத நடிகர்கள் பத்தி எழுதலாமா? ஏன் அது மட்டும் தப்பு இல்லையா? அவங்க கோடி கோடியா சம்பாரிக்கிறாங்களே? அதுக்காக? பிடிக்கலைனா அவங்க படம் பார்க்காமப் போக வேண்டியதுதானே? சரி சும்மா பெயரை மட்டும் சொல்லிட்டுப் போயிடுறேனே?. *ஜீவன், *எஸ் ஜெ சூர்யா, *விமல். சரி, சரி போதும்! கடைசியா பிடிச்ச நடிகர் ஒருவரைப் பத்தி சொல்லி சுமூகமாக முடிச்சிடுவோம்.



மறைந்த நடிகர் கொச்சின் ஹனீஃபா! என்ன ஒரு நடிகர்! ஒரு எஸ் வி ரங்காராவ், டி எஸ் பாலையா லெவலுக்கு குறையே சொல்ல முடியாத அளவுக்கு எந்த ஒரு ரோலையும் அழகா ரசிக்கத்தக்க செய்பவர். அதுவும் அவருக்கே உரித்தான ஒரு ஆக்ஸண்ட்ல பேசி மனதை கவரும் நடிகர் இவர். அம்புட்டுத்தான்!

15 comments:

Robin said...

//ஏதோ நம்ம அறிவுக்கு எட்டாத நல்லவைகள் அவரிடம் இருக்குமோ?//

இப்போதெல்லாம் நல்லவைகளைவிட கெட்டதுகளுக்குத்தான் மவுசு அதிகம்.

வருண் said...

ராபின்: சத்தியமா நான் சொன்னதுல எதுவும் "சர்க்காஸம்" இல்லை!

Robin said...

//ராபின்: சத்தியமா நான் சொன்னதுல எதுவும் "சர்க்காஸம்" இல்லை//

சர்க்காசம் இருந்தாகூட தப்பில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

ரவியை எனக்கு பழக்கம் இல்லை. ஆனால் அவர் நல்ல மனம் படைத்தவ்ர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.. அவர் பதிவுகளும் அதிகம் வேலை வாய்ப்பு சார்ந்த தாகவே இருக்கின்றன.

வருண் said...

***Robin said...

//ராபின்: சத்தியமா நான் சொன்னதுல எதுவும் "சர்க்காஸம்" இல்லை//

சர்க்காசம் இருந்தாகூட தப்பில்லை.
8 February 2011 8:13 PM ***

ஒரு பதிவரை பல கோணத்தில் பார்க்கலாம்ங்க! :)

வருண் said...

***சி.பி.செந்தில்குமார் said...

ஆனால் அவர் நல்ல மனம் படைத்தவ்ர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.. அவர் பதிவுகளும் அதிகம் வேலை வாய்ப்பு சார்ந்த தாகவே இருக்கின்றன.

9 February 2011 1:04 AM***

உண்மைதாங்க. நெறையப்பேரு (அவரை நல்லாத் தெரிஞ்சவங்க) அவரு மேலே நல்ல மதிப்பு வச்சிருக்காங்க! :)

உண்மை said...

இப்படி சுத்தி வளைச்சு செந்தழல் ரவி எல்லாம் வம்புக்கு இழுத்து எழுதுரதவிட, நேரவே கொச்சின் ஹனீ·பா தான் எனக்கு புடித்த நடிகர் னு சொல்லிருக்கலாம் :)

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி நல்லவர்னு வருண் சொல்லியாச்சு.

குடுகுடுப்பை said...

அப்படியே என்னைப்பத்தியும் ஒரு பதிவு போடவும்

sriram said...

//குடுகுடுப்பை said...
அப்படியே என்னைப்பத்தியும் ஒரு பதிவு போடவும்//

அடுத்து என்னைப் பத்தியும் எழுதவும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

***உண்மை said...

இப்படி சுத்தி வளைச்சு செந்தழல் ரவி எல்லாம் வம்புக்கு இழுத்து எழுதுரதவிட, நேரவே கொச்சின் ஹனீ·பா தான் எனக்கு புடித்த நடிகர் னு சொல்லிருக்கலாம் :)
9 February 2011 6:50 AM ***

உண்மை,

வம்பெல்லாம் இழுக்கலைங்க. உண்மையைத்தான் சொல்லியிருக்கேன் கொஞ்சம் சுவாரஸ்யமாக :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

அப்படியே என்னைப்பத்தியும் ஒரு பதிவு போடவும்

9 February 2011 11:20 AM**

விரைவில் எழுதிடலாம்ங்க, கு கு! :)

வருண் said...

***sriram said...

//குடுகுடுப்பை said...
அப்படியே என்னைப்பத்தியும் ஒரு பதிவு போடவும்//

அடுத்து என்னைப் பத்தியும் எழுதவும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்***

என்னை வச்சு காமெடி பண்ணுவதற்கா இப்படி சொன்னாலும் பரவாயில்லை. நான் சின்சியராவே பதில் சொல்றேன், நிச்சயம் எழுதிடலாம் ஸ்ரீராம்! :)

sriram said...

//என்னை வச்சு காமெடி பண்ணுவதற்கா இப்படி சொன்னாலும் பரவாயில்லை. நான் சின்சியராவே பதில் சொல்றேன், நிச்சயம் எழுதிடலாம் ஸ்ரீராம்! :)//

அன்பின் வருண், குடுகுடுப்பையின் கமெண்டைப் பார்த்ததும் சும்மா விளையாட்டுக்குச் சொன்னது அது, உங்களை வச்சி காமடி பண்ணும் எண்ணமெல்லாம் இல்லை. அறியாமல் காயப் படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

ஸ்ரீராம்:

டேக் இட் ஈஸி! :)