Tuesday, February 22, 2011

சாருநிவேதிதா ஒரு படிக்காத மேதையா?

முறைப்படி பள்ளி சென்று படித்து பட்டம் வாங்கியவங்க எல்லாருமே பெருசா சாதிக்கவும் இல்லை! கல்லூரி சென்று படிக்காதவங்க மேதையாவும் சாதனையாளர்களாகவும் ஆகியிருப்பதையும் நாம் நெறையவே பார்த்திருக்கோம்!

அரசியல்வாதிகள்/முதல்வர்கள் காமராஜ், கருணாநிதி, எம் ஜி ஆர், எல்லாம் கல்லூரிக்கே போனதில்லைனு எல்லாருக்கும் தெரியும். அதேபோல் நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல், எல்லாம்கூட கல்லூரிக்கே சென்றதில்லை.

கவியரசர் கண்ணதாசன்கூட அப்படி ஒண்ணும் பெருசா படிக்கவில்லைதான்.

எழுத்தாளர்களை எடுத்துக்கிட்டாலும் ஒருவருடைய படிப்புக்கும் அவருடைய எழுத்துத் திறமைக்கும் சம்மந்தம் இருக்கனும்னு அவசியமே இல்லை என்பது உலகமறியும்.

ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் எல்லாம் தமிழ் இலக்கியம் படிச்சு இருப்பாங்கனு நான் நினைப்பதுண்டு. சரி இன்றைய பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் (அப்படினா என்னனு எனக்கு இன்னும் சரியா விளங்கலை) என்ன படிச்சு இருக்காங்கனு அது பற்றி கொஞ்சம் உள்ள இறங்கி பார்ப்போம்னு இன்னைக்கு பெரிய பெரிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் நம்ம சாரு நிவேதிதா, ஜெயமோஹன், எஸ் ராமகிருஷ்ணன் பற்றிக் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.

விக்கில போய்ப் பார்த்தால் அவங்க வயசு, பிறந்த ஊர் போன்றவை மட்டும் அதுவும் ஓரளவுக்குத்தான் இருக்கு. எந்தப் பள்ளி, எந்தக் கல்லூரில படிச்சாங்கனு ஒரு விபரம்கூட இல்லை!

சாரு நிவேதிதா பையோடேட்டாவில் (அவர் தளத்திலும் மற்றும் விக்கியிலும்) சாரு நிவேதிதா படிப்பு பற்றி ஒண்ணுமே தெளிவாகயில்லை! நாகூர்ல பிறந்து வளர்ந்து அதுக்கப்புறம் எந்தப் பள்ளி, எந்தக்கல்லூரில என்ன படிச்சாரு? டெல்லிக்கு எப்போப் போனாரு? அங்கே என்ன படிச்சாரு? எந்த வயதில் தமிழ் எழுத்தில் ஆர்வம் வந்ததுனு ஒண்ணுமே சரியாக தெளிவாகப் போடவில்லை. ஓரளவுக்கு தன்னைப் பற்றி அவர் எழுதனும் இல்லையா?


ஜெயமோஹன்
தன் தளத்தில் தன்னைப்பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே எல்லாம் கொடுத்துள்ளார். ரொம்ப எதார்த்தமாக இருக்கட்டுமே என்று தன் சாதியைக் கூட சொல்லியிருக்கார்னு எடுத்துக்குவோம். தன் படிப்பு (வணிகவியல்), வேலை மற்றும் எல்லா விசயங்களையும் ரொம்ப நேர்மையா தெளிவா எழுதி இருக்க மாதிரித்தான் இருக்கு.

புகுமுக வகுப்பு மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில். வணிகவியல் துறை. 1979ல். ஆர்தர் ஜெ ஹாரீஸ் முதல்வராக இருந்தார். ஐசக் அருமை ராசன் தமிழ்த்துறையில் இருந்தார். இருவரும் அக்கால ஆதர்சங்கள். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்தேன். அப்போது ஆர்தர் டேவிஸ் முதல்வராக இருந்த காலம். டாக்டர் மனோகரன் வணிகவியல் துறைத்தலைவர். 1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எஸ் ராமகிருஷ்ணனும்
அவர் தளத்தில் ஜெயமோஹன் போலவே தன்னைப்பற்றி, தன் படிப்பு எல்லாவற்றையும் ஓரளவுக்குத் தெளிவாகக் கொடுத்து இருக்கிறார். ஆங்கில இலக்கியம் படித்து இருப்பார் போல இருக்கு. அதில் பி எச் டி பண்ண ஆரம்பித்துவிட்டு பாதியில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார்.

கல்லுரி நாட்களில் எழுதத் துவங்கினேன். எழுதிய முதல்கதை கபாடபுரம். அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கபட்டு தொலைந்து போனது. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.

ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். ஆனால் ஊர்சுற்றும் மனது படிப்பைத் தூக்கி எறிய வைத்தது.

வயசுன்னு பார்த்தால் சாருதான் எல்லாருக்கும் அண்ணன் போல இருக்கு! ஹி இஸ் இன் ஹிஸ் பிஃப்டிஸ்லனுதானே சொன்னாங்க? அவருடைய பிறந்த தேதியும் வயதும் விக்கில போடலை!

ஜெயமோஹன் (ஏப்ரல் 22, 1962), வயது வச்சுப் பார்த்தால் சாருக்கு தம்பி, எஸ் ரா வுக்கு அண்ணன்.

எஸ் ராமகிருஷ்ணன் தான் எல்லாருக்கும் தம்பினு தோனுது (ஏப்ரல் 13, 1966)!

பாப்புளாரிட்டியும், வயதும் ஒரு மாதிரி பாரெலெல்லாகத்தான் போகுற மாதிரி இருக்கு!

பின் குறிப்பு: சாரு, படித்துப் பட்டம் வாங்கியவராகவும் இருக்கலாம். விபரம் தெரிந்தவர்கள் பிறந்த தேதி, வயது சொல்லப்பட்டிருக்கிற தொடுப்புக் கொடுக்கவும்! நன்றி.

2 comments:

Robin said...

//சாரு நிவேதிதா பையோடேட்டாவில் (அவர் தளத்திலும் மற்றும் விக்கியிலும்) சாரு நிவேதிதா படிப்பு பற்றி ஒண்ணுமே தெளிவாகயில்லை// அசிங்க அசிங்கமா எழுதுறதற்கு எதற்கு படிச்சு பட்டம் வாங்கணும்?

வருண் said...

Robin:

படிச்சவங்க அசிங்க எழுதுவதை நீங்க பார்த்ததில்லையா?

படிப்புக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க :)