Monday, April 25, 2011

சாய்பாபா ஒரு பிறவி மனநோயாளி!

சாதனையாளர்கள் சச்சின் டெண்டுல்கர்ல இருந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் வரை தன்னை சாய்பாபா பக்தர்னு சொல்லிக்கிறாங்க! அரசியல்வாதிகள்ல நாத்திகர் ஐயா கருணாநிதியிலிருந்து ஆத்தா ஜெயா வரை சாய்பாபாவை மதிப்பதாகத்தான் இன்னைக்கும் காட்டிக்கிறாங்க! பெரிய பெரிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள், நடிகைகள், வெளிநாட்டவர் என்று கோடிக்கணக்கான பக்தர்கள் இவருக்கு! எனக்குத் தெரிய பெரிய பெரிய பேராசிரியர்களும் சாய்பாபா படத்தை தங்கள் கார்களில் ஒட்டி வைத்து பார்த்து இருக்கேன்! அதனால் என்ன? நம்ம இவரை உயர்ந்தவரா மதிக்கனுமா? இவருடைய அந்த "கரிஷ்மா"வுக்காக இவரை வணங்கனுமா?

பல ஆயிரக்கணக்கான கோடிகள் சாய்பாபாவிடம் கொண்டுவந்து குவிக்கப்பட்டது! ஒரு பக்தர் ஏன் இவருக்கு தன் சொத்தை எழுதிக்கொடுக்கிறான்? ஏன் இவரை கடவுளா வணங்கினான் ? அடிப்படைக் காரணம்? தனக்கு உதவி செய்த "கடவுள்" இவர் என்கிற சுயநலம்! தன் பிரச்சினைகளுக்கு தீர்வு வாங்கிக்கொடுத்தவர் என்கிற சுயநலம்! தன் மனநிலையை சரிசெய்தவர் என்கிற சுயநலம்! தன் துன்பபத்தை போக்கியவர் என்கிற சுயநலம்! சாய்பாபா பக்தர்கள் எல்லாமே வடிகட்டின சுயநலவாதிகள்! தன்னம்பிக்கை இல்லாத கோழைகள்! ஒருவருக்கு மைக்கேல் ஜாக்ஸன், மைக்கேல் ஜார்டன், ரஜினிகாந்த், கமலஹாசன் பிடிப்பதற்கும், சாய்பாபா பிடிப்பதற்கும் நெறைய வித்தியாசம் இருக்கு! விசிறிகள் சுயநலவாதிகள் அல்ல! பக்தர்கள்? தன் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதால்தான் இவர்கள் சாய்பாபாவை கடவுளாக்கினார்கள்!

சாய்பாபா பக்தருக்கெல்லாம் அவர் போய்விட்டதால் இப்போ பரிதாபப்படனுமா? ஏன்? தன்னம்பிக்கை இல்லாத முட்டாள்கள் இல்லையா இவர்கள்? இந்த மாதிரி முட்டாள்களாலேதானே இந்த ஆளைப்போல நித்திபோல பல காவிச்சாமியார்களை நாம் கடவுளாக்கிக் கட்டி அழுகிறோம்? செத்ததுக்கப்புறமும் கோயில் கட்டி கும்பிடுவார்கள் இந்த மடஜென்மங்கள்! இதுகள் இனிமேலாவது திருந்தி வாழட்டுமே? போய் ஒப்பாரி வைக்க சாய்பாபா இல்லைனு இனிமேலாவது மூளைக்கு வேலை கொடுத்து தன் பிரச்சினையை தானே தீர்த்துக்கட்டுமே?

மூளை இருந்தால் கொஞ்சம் யோசிங்க!

சாய்பாபானா யாருங்க?

அவருக்கு என்ன தேவைப்பட்டது?

இந்த ஆளு ஏன் இப்படி மக்களை கவர்ந்து, தன்னைக் கடவுளாக்கிக்கொண்டார்?

ஏன் பொய்களை அடிப்படையாக வைத்து எல்லோரையும் கவர்ந்து அவர்களிடம் பெற்ற பொருள்களை உலகுக்குக்கொடுத்து தன்னைக் கடவுளாக ஆக்கிக்கொண்டார்? அவர்களிடம் பணமோ பொருளோ வாங்காமல் இந்த உதவியை செய்து இருக்கலாமே? இவருக்கு மனசாட்சி இல்லையா? எதுக்கு பொய் சொல்லனும்? எதுக்கு அதை இதை செய்து ஏமாத்தனும்? இவர் எதுக்கு தன்னை மற்றவர்களைவிட உயர்ந்தவனாக காட்டிக்கனும்? எதுக்கு தன்னை அவதாரம், தன்னைக் கடவுள்னு சொல்லிக்கிட்டு அலையனும்? எதுக்கு நான் செத்துப்போன சாய்பாபாவுடைய அவதாரம். நான் இன்னைக்குத்தான் இந்த உலகைவிட்டுப் போவேன் என்று பிதற்றனும்?

சாதாரண மனிதன்னா குறையுள்ளவன்! எல்லா மனிதர்களையும்தான் சொல்றேன்! பிறந்ததிலிருந்து சாகிறவரை தவறு செய்பவந்தான் மனிதன். இதிலே யாருக்கும் சந்தேகம் எதுவும் இருக்கா? மனிதனுக்கு தேவை இருக்கு! உணவு வேணும், செக்ஸ் வேணும், புகழ் வேணும்! அதெப்படி தேவைகள் இல்லாமல் தவறு செய்யாமல் மனிதன் வாழமுடியும்? முடியவே முடியாது!

ஆனால் இந்த சாய்பாபா போல் கடவுளாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆட்கள்? இவர்கள் தவறே செய்யமாட்டார்கள்! என் பார்வையில் தான் தவறே செய்யாதவன்னு ஒருவன் தன்னைக் காட்டிக்கொண்டால் அவனுக்கு மனசாட்சி கெடையாது! அவன் நிச்சயம் ஒரு மனநோயாளிதான்! என்னைப் பொறுத்தவரையில் சத்ய சாய்பாபா ஒரு பிறவி மனநோயாளி! தன்னை எல்லோரும் உயர்வாக நினைக்கனும், தன்னை மதிக்கனும் என்கிற மனநோய் இருந்தது இவருக்கு! மற்றபடி தன்னை கடவுள், தெய்வம், மயிறு மட்டைனு சொல்லிக்கொண்டு திரிந்தால் அப்படி சொல்லிக்கொண்டு திரிகிறவன் மனநோயாளிதான். சாய்பாபா ஒரு வகை, அதாவது, தன்னை உலகிலேயே உயர்ந்தவனாக காட்டிக்கொள்ளும் மனநோய் அவருக்கு! அவரோட பக்தர்கள் இன்னொருவகையான மனநோயாளிகள்!


2 comments:

ramalingam said...

நன்றாக யோசித்திருக்கிறீர்கள். அத்தனையும் உண்மை. இவரிடம் வந்து யாரும் திருந்திய மாதிரி என்க்குத் தெரியவில்லை.

வருண் said...

தன்னை கடவுளா அவர் சித்தரித்துக்கொண்டது நிச்சயம் ஒரு மனநோய்தாங்க, ராமலிங்கம்!

தங்கள் பகிர்வுக்கு நன்றி!