Friday, April 8, 2011

விஜய்காந்துக்கு டெபாஸிட் போகுமா!!?

"விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது" என்று ரிஷிவந்தியம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கார்.

இன்னைக்கு நிலைமையில் விஜய்காந்து எவ்வளவு தூரம் மக்களை கவர்ந்து இருக்கிறார் என்று தெரியவில்லை! இன்றைய அதிமுக-தேமுதிக வுக்கு பெரிய பலம்னா அது திமுகவை/ கருணாநிதியை பிடிக்காதவர்கள் என்பதுதான்.மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!

விஜய்காந்தை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரா என்னனு தெரியலை.

இங்கு, 30 சதவீதம் வன்னியர், 24 சதவீதம் ஆதிதிராவிடர்,
13 சதவீதம், முதலியார், 12 சதவீதம், கோனார், 7 சதவீதம், நாயுடு, 5 சதவீதம், முஸ்லிம், 3 சதவீதம், கிறிஸ்துவர்கள், 2 சதவீதம், செட்டியார், 4 சதவீதம், இதர பிரிவினரும் உள்ளனர்.

வன்னியர்கள் அதிகமாக இருப்பதால்தானோ என்னவோ, பா ம க தலைவர் ராமதாஸ், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

எல்லாத்தொகுதிகளிலும் திமுகதான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதிமுக/தேமுதிக தொண்டர்களெல்லாம் அதுபோல் எதுவும் செய்வதில்லையா? இல்லை ஓரளவுக்கு பணம் செலவழிப்பார்களா?

நம்ம விஜய்காந்து எப்படி? தான் வெற்றியடைய பணத்தை செலவழிக்கிறாரா? இல்லை, இவர் மொகத்துக்கே ஓட்டு விழுந்திடுமா?

வன்னியர் சமூகம் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் மக்கள் சாதி அடிப்படையில் ஓட்டுப்போட்டால், விஜய்காந்த் கதி அதோகதிதான்! ஒருவேளை காங்கிரஸ் மேலே மக்களுக்கு வெறுப்பு இருந்தா?

அதோடு விஜய்காந்து நெறையா காசு கொடுத்து (செலவுசெய்து) ஓட்டு வாங்கினால் உண்டு! விஜய்காந்து அப்படியெல்லாம் செய்யமாட்டாரா?

இந்தத்தொகுதியில் சீமான் உதவியும், விஜய்காந்துக்கு கிடைக்கும் இல்லையா?

10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

///"விஜய்காந்துக்கு டெபாஸிட் போகுமா!!?"///

போகும்... ஆனா போகாது...

thiyaa said...

போகும்... ஆனா போகாது...

இது நல்லாயிருக்கு

Chitra said...

தேர்தல் பிரச்சாரத்தில், ஒரே குழப்ப நிலைதான். தேர்தல் முடிவுகள் தான், மக்களின் தெளிவான கருத்தை சொல்லும்.

வீராங்கன் said...

அவர் தொகுதியில் மயிரிழையில் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் அது அவர் மாமனாரின் ஊர்

அபி அப்பா said...

\\அதற்கு முக்கிய காரணம் அது அவர் மாமனாரின் ஊர்\\

இது தான் டாப்பு! அப்படின்னா ராஜீவ் இத்தாலில நின்னா ஜெயிப்பாரு. சானியா புருஷன் ஐதராபாத்ல நின்னா ஜெயிப்பாரு(அல்லது விளையாடினா)தனுஷ் படம் போயஸ் கார்டன்ல தியேட்டர்ல 100 நாள் ஓடும்... இப்படியாக நிறைய இருக்கு. டாப்பா யோசிக்கிறீங்கப்பா.... எனக்கு இந்த கெமெண்ட் ரொம்ப பிடிச்சு இருக்கு வருண்:-))

வருண் said...

***தமிழ்வாசி - Prakash said...

///"விஜய்காந்துக்கு டெபாஸிட் போகுமா!!?"///

போகும்... ஆனா போகாது...

8 April 2011 12:56 PM***

அனேகமாக ஜெவிச்சுருவாருனு சொல்றாங்க!

வருண் said...

***தியாவின் பேனா said...

போகும்... ஆனா போகாது...

இது நல்லாயிருக்கு

8 April 2011 1:37 PM***

ஜெவிச்சிருவாராம் :)

வருண் said...

***Chitra said...

தேர்தல் பிரச்சாரத்தில், ஒரே குழப்ப நிலைதான். தேர்தல் முடிவுகள் தான், மக்களின் தெளிவான கருத்தை சொல்லும்.

8 April 2011 2:23 PM***

போறபோக்கிலே "எக்ஸிட் போல்" லையும் இந்த முறை நம்பமுடியாது போல! And there is LONG wait to know the results! :)

வருண் said...

***வீராங்கன் said...

அவர் தொகுதியில் மயிரிழையில் ஜெயிப்பார் என்று தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் அது அவர் மாமனாரின் ஊர்

8 April 2011 7:44 PM***

மாமனாருடைய ஊரா!!! அப்போ ஜெவிச்சாலும் செவிச்சிருவாரு! :)

வருண் said...

***அபி அப்பா said...

\\அதற்கு முக்கிய காரணம் அது அவர் மாமனாரின் ஊர்\\

இது தான் டாப்பு! அப்படின்னா ராஜீவ் இத்தாலில நின்னா ஜெயிப்பாரு. சானியா புருஷன் ஐதராபாத்ல நின்னா ஜெயிப்பாரு(அல்லது விளையாடினா)தனுஷ் படம் போயஸ் கார்டன்ல தியேட்டர்ல 100 நாள் ஓடும்... இப்படியாக நிறைய இருக்கு. டாப்பா யோசிக்கிறீங்கப்பா.... எனக்கு இந்த கெமெண்ட் ரொம்ப பிடிச்சு இருக்கு வருண்:-))

9 April 2011 2:37 AM***

நீங்க செயிக்க மாட்டார்னு சொல்றீங்களா?! :)