Friday, April 29, 2011

திமுக கூட்டணி தோற்றால் வடிவேலு நடிப்புத்தொழில் அம்புட்டுத்தான்!?

நடிகர் வடிவேலு, நடிப்பில் சிகரம்தான்! அவரோட பாடி லாங்வேஜ், காமெடி எல்லாமே ஒரிஜினல் மற்றும் உலகத்தரம் வாய்ந்தது. தமிழ்ல்ல இப்படி ஒரு நடிகர் கெடச்சது நம்ம எல்லாம் செய்த புண்ணியம்னுகூட சொல்லலாம். ஆனால் இன்னைக்கு வடிவேலு அரசியலில் கொஞ்சம் அதிகமாமே இறங்கி இவரோட நடிப்புத் தொழில் சூதாட்டமாகி, வடிவேலுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

என்னதான் திறமை இருந்தாலும், சினிமாவில் எல்லா ஹீரோக்களும் சேர்ந்து இவரை ஒதுக்கினால் இவர் நிலைமை பரிதாபம்தான். வடிவேலுவை, அஜீத், விஜய்காந்த், கமல் எல்லாம் ஏற்கனவே கழட்டிவிட்டுட்டாங்க! விஜய்யும், ரஜினியும் மற்றும் பலரும் இனிமேல் கழட்டிவிட்டுடுவாங்க போல இருக்கு.

ரஜினியின் ராணாவில் வடிவேலு செய்ய வேண்டிய பகுதியை கஞ்சா கருப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மற்றும் பலரும் இவரை கழட்டிவிட்டால் இவர் முழுநேர அரசியல்வாதி ஆக வேண்டியதுதான்.

இன்றைய நிலையில் திமுக கூட்டணி ஜெயித்து ஆட்சியமைக்க வேண்டியது கலைஞரைவிட வடிவேலுக்குத்தான் மிகவும் இன்றியமையாததாகும். திமுக தோற்று ஆத்தா அமோக வெற்றியடைந்தால் வடிவேலு சினிமா பொழைப்புக்கு சங்கு ஊதிவிடுவார்கள் போல இருக்கு!

வடிவேலு என்ற கலைஞனை நாம் இழக்கக்கூடாது! அதுக்காகவாவது திமுக கூட்டணி வெல்லட்டும்!


3 comments:

அகில் பூங்குன்றன் said...

//வடிவேலு என்ற கலைஞனை நாம் இழக்கக்கூடாது! அதுக்காகவாவது திமுக கூட்டணி வெல்லட்டும்///

ennagna ithuu.... vadivelukkgakga DMK Govt vendumaaa?

வருண் said...

திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதாங்க! யார் ஜெவிச்சாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே நிலைதான் தொடரும்ன் நான் நம்புறேங்க அகில் பூங்குன்றன்.

வடிவேலுவின் அரசியல் நிலைப்பாடு தவறானதாக இருந்தாலும், சினிமா என்கிற வியாபாரத்தில் அவரை ஒரு ப்ரஃபெஸ்னலாகத்தான் பார்க்கனும்னு நான் நெனைக்கிறேன்.

ராவணன் said...

கருணாநிதி கோவணத்தில் தொங்கிய எந்த நடிகனுக்கும் வாய்ப்பு இல்லை.

வேண்டுமானால் கருணாநிதி கும்பல் எடுக்கும் படங்களில் நடிக்கலாம்.ஜோடியாக கனிமொழியும் நடிக்கலாம்.(ஜெயிலில் இருப்பவர்கள் சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்குமா?)