Sunday, April 3, 2011

வடிவேலுவின் நெஜவாழ்வில் வில்லன் சிங்கமுத்து!

சிங்கமுத்துவை வடிவேலு, "என் கூடவே இருந்து என்னை கழுத்தறுத்து, எனக்கு சொத்து வாங்கிக்கொடுக்கிறேன்னு பொய் டாகுமெண்ட்ஸ் கொடுத்து கோடிக்கணக்கில் என் பணத்தை ஏமாத்திப்புட்டான்!" என்றும் "இதைப்பத்தி யாரிடமும் சொன்னால், என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பேன், என்னுடைய வீக்னெஸ் எல்லாத்தையும் வெளியில் சொல்லுவேன்!" என்றும் என்னை மிரட்டினார் என்று சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால, போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின் பண்ணினார்.

இன்னைக்கு அதற்குப் பழிக்குப் பழிவாங்க பொறுப்பா அதிமுக கூட்டணி சார்பில் தன்னை இணைத்து, அவர்கள் ஆதரவுடன் வந்துவிட்டார் வடிவேலுவின் நெஜ வாழ்வில் வில்லன் சிங்கமுத்து!

சிங்கமுத்துவின் பேட்டியில்/பிரச்சாரத்தில் அவர் சொல்லுவது..

* வடிவேலு சட்டையை கழட்டினால் அவன் உடம்பு எஸ் வடிவத்தில் இருக்கும்!

*சென்னைக்கு வரும்போது சாராயம் வாங்கி குடித்தவன் இன்னைக்கு ரெமி மார்டின் Remy Martin குடிக்கிறான்.

*வடிவேலுவின் குழந்தைகள் சென்னைக்கு சிரங்குகளுடன் வந்தன!

சிங்கமுத்து விமர்சனம் இங்கே க்ளிக் செய்யவும்!

வடிவேலுக்கும் விஜய்காந்துக்கும் என்ன பிரச்சினைனு தெரியாது! ஆனால் ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததுக்கு காரணம் திமுக இல்லை! அவர்கள் சண்டையை பயன்படுத்திக்கொண்டது திமுகனு சொல்லலாம்! இந்த அரசியல் கால்ஷீட்க்கு வடிவேலுக்கு எத்தனை கோடி கொடுக்கப்பட்டதும்னு தெரியலை! அதைவிட வடிவேலுவின் அடாவடிப் பேச்சுக்குக்கு தீணி போட்டது ஜெயாவின் குடிகாரன் பட்டம்! மற்றும் விஜய்காந்து பாஸ்கரனை அடிச்சதாக சொல்லப்படும் வீடியோ!

அதேபோலவே, வடிவேலுவை "கவனிக்க" வடிவேலுவின் முன்னாள் நண்பன் இன்றைய எதிரியான சிங்கமுத்துவை வடிவேலுவைவிட பலமடங்கு கேவலமாகப் பேசி பழிக்குப் பழி வாங்க "விலைபேசி, தயார் செய்த" ஜெயா மற்றும் விசயகாந்தின் அரசியல் தந்திரத்தைப் பாராட்டுவோமா?!

வடிவேலு இண்ணொசண்டாக இருந்தால், வடிவேலுவைப் பொறுத்தவரையில், துரோகிகள் பலவகை! தன்னை வஞ்சித்த தன் கடந்தகால வாழ்க்கையைத் தெளிவாகத் தெரிந்த சிங்கமுத்து வடிவேலுவை அசிங்கமாக விமர்சிப்பதால் துரோகிகளிலேயே வடிகட்டின துரோகி! ஆனால் ஒரு வேளை சிங்கமுத்து அப்பாவியாக இருந்தால்? வடிவேலு சிங்கமுத்துமேலே வைத்த குற்றச்சாட்டுக்ள எல்லாம் பொய்யாக இருந்தால்? அபப்டியும் இருக்கலாம்தான். உண்மையிலேயே சிங்கமுத்து பயங்கர மோசமான் ஆளா? இல்லை வடிவேலுதான் வீண் பலி சுமத்தினாரானானு தெரியலை.

எது எப்படியோ, இன்னைக்கு விஜய்காந்துக்கு ஆதரவா வடிவேலைப்பத்தியும், அவர் குடும்பத்தைப் பத்தி சிங்கமுத்து விமர்சிக்கும் வார்த்தைகள் வடிவேலு விஜய்காந்தை விமர்சிக்கும் விமர்சனங்களைவிட ஒரு படி மேலேயே கேவலமா இருக்கு!

சிங்கமுத்துவை இப்போ விலைக்கு வாங்கி இதுபோல் கேவலமாகப் பேச வைத்த விஜய்காந்த்தும் மற்றும் ஜெயாவும் வடிவேலை விலைக்கு வாங்கிய கலைஞரைவிட எந்த வகையில் உயர்வுனு எனக்குத் தெரியலை?

வடிவேலு-சிங்கமுத்து பழைய கதை 1

வடிவேலு சிங்கமுத்து பழைய கதை 2


7 comments:

ஆர்.சண்முகம் said...

உங்க விமர்ச்சனம் படித்தேன். நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வருண்

ஆர்.சண்முகம் said...

...நீங்களும் எந்த கட்சிக்காவது விலைபோய் ஓர வஞ்சனை பன்னிறாதிங்க பாஸ்....

ramalingam said...

ஏங்க அழகிரிக்கு இவ்வளவு இருந்தால், ஜெவுக்கு எவ்வளவு இருக்கும்?

வருண் said...

***ஆர்.சண்முகம் said...

உங்க விமர்ச்சனம் படித்தேன். நடுநிலையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வருண்


...நீங்களும் எந்த கட்சிக்காவது விலைபோய் ஓர வஞ்சனை பன்னிறாதிங்க பாஸ்....

3 April 2011 7:02 PM***

வாங்க, ஷண்முகம்! தங்கள் கருத்துக்கு நன்றிங்க! :)

வருண் said...

***Blogger ramalingam said...

ஏங்க அழகிரிக்கு இவ்வளவு இருந்தால், ஜெவுக்கு எவ்வளவு இருக்கும்?

3 April 2011 9:03 PM***

வாங்க ராமலிங்கம்! :) வடிவேலுவோ, சிங்கமுத்துவோ, யாரையும் வரம்பு மீறி விமர்சிச்சால் அவர்கள் எதிரணிக்குத்தான் ஓட்டு விழும் என்பது என் நம்பிக்கை! :)

ராவணன் said...

ஒரு பன்னாடை, ஒரு பன்னியை வைத்து உங்கள் மீது சேற்றை வாரித்தெளித்தால் சும்மா இருப்பீர்களா?

சும்மா இருங்கப்பு........

சிங்கமுத்து ஏற்கனெவே ஜீரோ.....

நாளை ஆட்சி மாறினால் வடிவேலு கஞ்சா கேஸில் உள்ளாற போகமாட்டாரா?

ஒரு அத்தான் திஹார் சிறையில், ஒரு அத்தான் புழல் சிறையில் என்று ஒரு பேதை புலம்பவேண்டுமா?

Raja=Theking said...

வடிவேலுக்கு ஆப்பு இருக்கு ..(நான் ஆப்புனு தான் சொன்னேன் சன் டிவி போல half னு நினைகதிக )