Friday, May 13, 2011

தமிழகத்தின் பொற்காலம் ஆரம்பம்! ஐயோ வடிவேலு!

விசயகாந்து கூட்டணியுடன் வைகோவை காயடித்த "ராஜதந்திரி" ஜெயா தமிழ்நாட்டில் அமோக வெற்றியடைந்துள்ளார்! மூன்றாவது முறையா ஒரு பெண்மணி தமிழக முதல்வராகிறார்! வாழ்த்துக்கள்!

மே 13க்கு அப்புறம் ஏதோ ஆகப்போது வடிவேலு சொன்னது பெரிய காமெடியா முடிந்து போச்சு!

நக்கீரன் மற்றும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பெல்லாம் குப்பை கூடைக்கு போய்விட்டது!

இந்த மாதிரியான சட்டமன்ற தேர்தல் முடிவை ஜெயலலிதாகூட எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை! ஆனா, இந்த எலக்ஷனில் திமுக கூட்டணியை வெல்ல, யாரும் ராஜதந்திரியா இருக்கனும் என்பதெல்லாம் ஒண்ணும் இல்லை! திமுக மேலே உள்ள மக்களின் அதிருப்திதான் அதிமுக வெற்றிக்குக் காரணம் என்பது இந்த அமோக வெற்றியிலிருந்து தெளிவாகிவிட்டது! இந்த முடிவை வைத்து விசய்காந்து மனக்கோட்டை கட்டாமல் இருப்பது நல்லது!

ஆக, தமிழர்களை ஆள, அவர்கள் கண்ணீரை துடைக்க பார்ப்பண வகுப்பை சேர்ந்த ஆரிய வழிவந்த அறிவாளி செல்வி ஜெயாதான் தகுதியானவர் என்று திராவிடர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்! தன் இனத்தை தன்னால் ஆளமுடியாதுனு ஏற்றுக்கொள்வதற்கே ஒரு பெரிய மனது வேண்டும்! திராவிடர்கள் மனதுதான் கடல்போல பரவிக்கிடக்கிறதே! இனிமேல் கொஞ்ச நாளைக்கு கருணாநிதிதான் தமிழின துரோகினு எழவைக்கூட்டாமல் இருப்பானுக!

இப்போ நம்ம ஜெயலலிதா என்ன செய்யப்போகிறாரு தெரியுமா?

* சங்கர் ராமன் கொலைவழக்கை முட்டுக்கட்டை போட்டு வைத்ததே கருணாநிதிதான். சங்கராச்சார்யா கேஸ் விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்! எப்போ? இன்னும் ஒரு வருடத்திற்கு முன்னால் குற்றவாளிக்கு இருக்கு ஆப்பு!

* தமிழக மீனவர்கள் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், படகுல ஏறி "அதோ அந்தப் பறவை போலே வாழ வேண்டும்னு" பாடிக்கிட்டே மீன் பிடித்து சந்தோஷமாக வாழலாம்! மீனெல்லாம் கடல்ல இருந்து பாய்ந்துவந்து படுகுக்குள்ளே படுத்துக்கும்! அப்படி பாய மறுத்துச்சுனா மேலே உள்ள காங்கிரஸை விரலை விட்டு ஆட்டிருவாரே நம்ம தமிழினத் தலைவி!

* ஈழம்? ஈழத்தமிழர்களுக்காக தன் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கொடுத்து அவர்களை தனிநாடு பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பார், தமிழினத்தலைவி!

* ஆமா "பவர்கட்" னா என்ன? அப்படினு ஒரு நிலை தமிழ்நாட்டில் விரைவில் வந்துவிடும்!

* டாஸ்மாக் மது, கருணாநிதி ஆட்சியில்தான் பலகோடிக்கு விற்பனையானது. ஜெயா ஆட்சியில் மது விற்பனை குறையும்! பதிவுலகில்கூட இனிமேல் யாரும் தண்ணியடிக்க மாட்டாங்க! May be alcohol consumption will reach all-time LOW!

* விலைவாசி ஏற்றத்திகு காரணம் கருணாநிதிதான். வந்துகொண்டிருக்கிற ஜெயாவின் ஆட்சியில் விலைவாசி ஏற்றமா? இனிமேல் "விலைவாசி இறக்கம்"தான் போங்கோ!

* பெட்ரோல், குக்கிங் கியாஸ் விலையும் ஜெயா ஆட்சியில் மிகவும் குறையும் என நம்புவோம்! பருப்பு எண்ணெய் விலையெல்லாம் இப்போ இருக்கிறதுல பாதி ஆகிவிடும்.

* "பார்ப்பணர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்" என்கிற "போர்ட்" அல்லது "விளம்பரம்" வந்தால் அவர்களை பிடித்து உள்ளே போடுவார் இந்த திராவிடர்களின் "பார்ப்பணத் தலைவி"!

தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. ஆமா, நம்ம குத்துப் பாட்டு விசய் படமெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கும்! அப்புறம் என்ன? இனிமேல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு எல்லாம் பொற்காலம் தான்.
-----------------

ஐயோ பாவம் வடிவேலு???

* பொதுவாக சினிமா உலகம் வடிவேலுவை மன்னித்து, அவரை முன்புபோல நடத்தும்னு நம்புறேன். ஆனால் வடிவேலு "மனசாட்சி"தான் அவருக்கு எமனா வர வாய்ப்பிருக்கு!

* ரஜினி உடல்நலக்குறைவை சரி செய்து ஓய்வுமுடிந்து , நல்லபடியாக வந்து ராணாவைத்தொடர்ந்தால், அதில் வடிவேலுவுக்கு ஒரு பாத்திரம் கொடுத்தால் நான் அதிசயப்படப்போவதில்லை!

இவ்வளவு பெரிய வெற்றியடைந்த பிறகு வடிவேலுவை பழிவாங்குவதெல்லாம் பெரியமனுஷன் செய்யமாட்டான்! The election result itself a big lesson for Vadivelu!

9 comments:

துளசி கோபால் said...

ஒரேடியா மனக்கோட்டை இப்பவே கட்டவேணாம்.

அவுங்க பண்ணி வச்ச குழறுபடிகளை எல்லாம் ஒழிச்சுக்கட்டவே ரொம்பநாளாகும் போல தெரியுது.

ஆனாலும் நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

Prakash said...

To my knowledge, the primary reasons for DMK’s defeat in spite of good governance are,

1. Power Cut
2. Inclusion of PMK and VC might triggered other community voters like (BCs) Mudaliyars, Udayars, Yadavas, Chettiyar etc to vote against DMK.
3. Not giving tickets to new faces, this has resulted in intra party revelries and the people thought why the same people only contesting for ages. Relatives of MLAs occupied Local Body posts and people and party men thought only few relative family benefited.
4. No Control on district and local level party functionaries. This has triggered anger over party candidates. Example Veerapandi Arumugam, MKK Raja etc..
5. More Seats given to alliance parties beyond their capacity.
6. Back stabbing on Eelam Tamil’s issue and became as slave/puppet of congress.
7. Wide projection by Medias as Monopolization in film industry by MK’s family.
8. Not done counter campaign to defend DMK’s stand on 2G and Price raise etc. DMK only concentrated on saying the achievements. TN people, is always interested in counter attacks and highlighting one’s negatives. This is not done properly

ஜீவன்சிவம் said...

செத்த பாம்பை ஜெயா அடிக்க மாட்டார். வடிவேலு ஒரு செத்த பாம்பு. ஆனால் விஜயகாந்த் எப்படியோ போக போகத்தான் தெரியும். ஆனாலும் வடிவேலுவுக்கு இனி ஏழரையும், ராகுவும் கலந்துகட்டி அடிக்க போகிறது

காமராஜ் said...

2. Inclusion of PMK and VC might triggered othercommunity voters.

மிக மிகத்தெளிவான அலசல்.தமிழனுக்கு இன மானம்,மொழிமானம் கூடவே ஜாதீய பகுமானமும் உண்டும்.

சபாஷ் ப்ரகாஷ்.

வருண் said...

***துளசி கோபால் said...

ஒரேடியா மனக்கோட்டை இப்பவே கட்டவேணாம்.

அவுங்க பண்ணி வச்ச குழறுபடிகளை எல்லாம் ஒழிச்சுக்கட்டவே ரொம்பநாளாகும் போல தெரியுது.

ஆனாலும் நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.***

* ஒண்ணும் அவசரம் இல்லை டீச்சர். கண்ணகி சிலையை முதலில் தகர்த்தெடுக்கட்டும்!

* விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும் விருந்து கொடுக்கட்டும்!

இது போல் முக்கிய வேலைகளை எல்லாம் முடிச்சபிறகு 5 வருட காலத்துக்குள் இவைகள செய்வார்னு நம்புவோம்.

நான் 5 வருடம் காத்திருக்கத்தயார் :) இன்னொரு 5 வருடம் வேணும்னு சொன்னா கஷ்டம்தான்! :(

வருண் said...

***Prakash said...

To my knowledge, the primary reasons for DMK’s defeat in spite of good governance are,

1. Power Cut
2. Inclusion of PMK and VC might triggered other community voters like (BCs) Mudaliyars, Udayars, Yadavas, Chettiyar etc to vote against DMK.
3. Not giving tickets to new faces, this has resulted in intra party revelries and the people thought why the same people only contesting for ages. Relatives of MLAs occupied Local Body posts and people and party men thought only few relative family benefited.
4. No Control on district and local level party functionaries. This has triggered anger over party candidates. Example Veerapandi Arumugam, MKK Raja etc..
5. More Seats given to alliance parties beyond their capacity.
6. Back stabbing on Eelam Tamil’s issue and became as slave/puppet of congress.
7. Wide projection by Medias as Monopolization in film industry by MK’s family.
8. Not done counter campaign to defend DMK’s stand on 2G and Price raise etc. DMK only concentrated on saying the achievements. TN people, is always interested in counter attacks and highlighting one’s negatives. This is not done properly
14 May 2011 12:48 AM ***

It is always easy to theorize when the RESULTS are out!

People always get tired of any govt in 5 years. Even then, even India today could not predict this kind of victory!

Let us see what comes out in her govt! :)

வருண் said...

***ஜீவன்சிவம் said...

செத்த பாம்பை ஜெயா அடிக்க மாட்டார். வடிவேலு ஒரு செத்த பாம்பு. ***

சிங்க முத்துவை தயார் பண்ணியது யாரு?

***ஆனால் விஜயகாந்த் எப்படியோ போக போகத்தான் தெரியும். ஆனாலும் வடிவேலுவுக்கு இனி ஏழரையும், ராகுவும் கலந்துகட்டி அடிக்க போகிறது

14 May 2011 1:29 AM***

வடிவேலைப் பத்தியெல்லாம் விஜய் காந்து கவலைப்பட மாட்டாரு.

விஜயகாந்து இப்போ எதிர் கட்சி தலைவரா இருக்காரு. அடுத்து அம்மாவை கவுத்தனும்! எப்படி கவுத்துறாருனு பார்ப்போம்! :)))

வருண் said...

***காமராஜ் said...

2. Inclusion of PMK and VC might triggered othercommunity voters.

மிக மிகத்தெளிவான அலசல்.தமிழனுக்கு இன மானம்,மொழிமானம் கூடவே ஜாதீய பகுமானமும் உண்டும்.

சபாஷ் ப்ரகாஷ்.

14 May 2011 10:32 AM***

I bet you, excluding them would not have made any difference! Any clown would have defeated DMK!

கவிதை பூக்கள் பாலா said...

unka pathivu ore comedy thankala paavan piththan thalaikerinaal appadithan , nee kalanjar t.v. vida oru padi super appu ,enna solli enna aaga pothu konja per irukka thane seiyanum ippadiyum naattula ( ரிலாக்ஸ் ப்ளீஸ் ) appa appa sirikka .