Friday, July 27, 2012

சூர்யாவின் மாமாவா சத்தியராசு?!

அணுஹாசன், சித்தப்பாதான் கமலஹாசன். ஆனால் ஒரு நேர்முக பேட்டியில் அவர் உறவை தூக்கி ஓரமாக வைத்துவிட்டுத்தான் கமலை "அட்ரெஸ்" செய்தார் என்பது என் ஞாபகம்!

எனக்கு சூர்யாவுக்கும் சத்யராசுக்கும் இருந்த "தூரத்து உறவு" சத்யராஜ்-ராதா எபிசோட் பார்க்கிற வரைக்கும் தெரியாது.

பொதுவாக எனக்கு குறைகள்தான் எளிதாகத் தெரியும். குறை சொல்லவில்லையென்றால் அது நிறையா என்னனு தெரியலை.

சத்யராஜ்-ராதா-சூர்யா எப்பிசோடை எல்லாரும் ரசித்ததாகத்தான் தெரிகிறது. ஆனால் ஏனோ எனக்கு அவ்வளவு ருசிக்கவில்லை.

சத்யராஜ் செய்த "காமெடிகளும்" அவர், ராதாவை "வா, போ"னு உரிமையுடன் அழைத்ததும், மேலும் சூர்யா சத்யராஜை மாமா என்றழைத்ததும், மிகவும் "unprofessional" ஆகவும், தரம் குறைந்ததாகவும்தான் எனக்குத் தோன்றியது.

கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது சத்யராஜ் பார்த்த ஒரு சீனை அவர் சொல்லி ரஜினி, சிவக்குமார் மாதிரி வசனம் பேசி கேலி செய்ததும், எல்லோரையும்  அலையலையாக சிரிக்க வைத்தாலும், அவர் அபப்டி செய்தது, ரஜினி ரசிகர்கள், சிவகுமார் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவின் அப்பா சிவகுமார் எல்லோருக்குமே மிகவும் எரிச்சலைத்தான் உண்டாக்கியிருக்கும்.

விஜய் டி வி இதுபோல் ஒரு காமெடியை ஒழுங்காக எடிட் செய்து தவிர்த்து இருக்கலாம்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியால் எவ்வளவோ நல்ல பெயர் எடுத்த சூர்யா இந்த ஒரு இடத்தில் கொஞ்சம் அநாகரிகமாக நடந்து ரொம்பவே சறுக்கி கீழே வந்து விட்டார், பாவம்!

அப்புறம், சூர்யாவின் அடுத்தபடம் மண்ணைக்கவ்வினால் அனேகமாக சந்தோசப்படுவது விஜய் ரசிகர்கள், அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ரஜினி ரசிகர்களும் என்பதே கசப்பான உண்மை!

11 comments:

korangupaiyan said...

//கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது

என்ன அண்ணே இத போய் சீரியஸா எடுத்துட்டு. எனக்கு என்னமோ அத எல்லோரும் sportiveஆ எடுத்துகிடுவாங்க அப்படீன்னு தான் தோணுது.

வருண் said...

எனக்கென்னவோ 70 வயதான சிவக்குமாரு இந்தாளு பண்ணுற கூத்தை ஸ்போர்ட்டிவா எடுத்திருப்பாருனு தோணலை.

மாமா, மண்ணாங்கட்டியெல்லாம் அவங்க ஆத்தோட வச்சிக்கனும்னு சூர்யாவுக்கு தெரியாதா?

Jayadev Das said...

\\கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது சத்யராஜ் பார்த்த ஒரு சீனை அவர் சொல்லி ரஜினி, சிவக்குமார் மாதிரி வசனம் பேசி கேலி செய்தது\\ சும்மா எல்லாவற்றையும் குறை சொல்லிகிட்டே இருக்காதீங்க பாஸ், இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சத்யராஜுக்கு உள்ளே ஒரு மிமிக்கிரி ஆர்டிச்டு கூட இருக்காருன்னு அப்பத்தான் தெரிஞ்சது!!

Jayadev Das said...

\\சூர்யா சத்யராஜை மாமா என்றழைத்தது\\ எனக்கு ஒரு கணக்கு எப்படின்னே புரியலே. சிவக்குமார் அண்ணன் என்று சத்யராஜ் சொல்றாரு, அப்பு அண்ணன் மகன் இவரை சித்தப்பா என்றுதானே அழைக்க வேண்டும், அதென்னது மாமா? ஒரு வேலை ஆங்கிலத்தில் அங்கிள் என்பதை தமிழில் மாமா என்று சொல்லிவிட்டாரோ. ஐயோ.......ஐயோ.........

korangupaiyan said...

//சூர்யாவுக்கு தெரியாதா
program ratinga கூடுறதுக்கு ஏற்கனவே பேசி வச்சிட்டு தான் பண்ணிருபாங்கன்னு தோணுது.

வருண் said...

***Jayadev Das said...

\\கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது சத்யராஜ் பார்த்த ஒரு சீனை அவர் சொல்லி ரஜினி, சிவக்குமார் மாதிரி வசனம் பேசி கேலி செய்தது\\ சும்மா எல்லாவற்றையும் குறை சொல்லிகிட்டே இருக்காதீங்க பாஸ், இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சத்யராஜுக்கு உள்ளே ஒரு மிமிக்கிரி ஆர்டிச்டு கூட இருக்காருன்னு அப்பத்தான் தெரிஞ்சது!!***

ஜெயவேல்: நல்ல பாஸிட்டிவ் அனுகுமுறைங்க உங்களுடையது :)

வருண் said...

*** \\கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது சத்யராஜ் பார்த்த ஒரு சீனை அவர் சொல்லி ரஜினி, சிவக்குமார் மாதிரி வசனம் பேசி கேலி செய்தது\\ சும்மா எல்லாவற்றையும் குறை சொல்லிகிட்டே இருக்காதீங்க பாஸ், இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சத்யராஜுக்கு உள்ளே ஒரு மிமிக்கிரி ஆர்டிச்டு கூட இருக்காருன்னு அப்பத்தான் தெரிஞ்சது!!

27 July 2012 9:34 PM
Delete
Blogger Jayadev Das said...

\\சூர்யா சத்யராஜை மாமா என்றழைத்தது\\ எனக்கு ஒரு கணக்கு எப்படின்னே புரியலே. சிவக்குமார் அண்ணன் என்று சத்யராஜ் சொல்றாரு, அப்பு அண்ணன் மகன் இவரை சித்தப்பா என்றுதானே அழைக்க வேண்டும், அதென்னது மாமா? ஒரு வேலை ஆங்கிலத்தில் அங்கிள் என்பதை தமிழில் மாமா என்று சொல்லிவிட்டாரோ. ஐயோ.......ஐயோ.........***

சிவகுமார் அண்ணானா, சூர்யாவுக்கு எப்படி மாமாவாவாரு? முறை இடிக்கத்தான் செய்யுது. தலைப்பை "வலுப்படுத்தும்" நல்ல பின்னூட்டம் இதுதான்.
நம்ம "குரங்குப் பையன்" தான் இதுக்கு பதில் சொல்லனும் :)))

korangupaiyan said...

//சிவகுமார் அண்ணானா, சூர்யாவுக்கு எப்படி மாமாவாவாரு?
அதான் சொல்றேன்,program rating கூடுறதுக்கு ஏற்கனவே பேசி வச்சிட்டு தான் பண்ணிருபாங்கன்னு தோணுது.
//நம்ம "குரங்குப் பையன்" தான் இதுக்கு பதில் சொல்லனும் :)))
அட என்னங்க இது. நான் என்ன சத்யராஜ்/சூர்யா சொந்தமா? நான் சொன்னது ப்ரோக்ராம் பத்தி. சிவகுமார் மேல இவ்ளோ பாசமா இருக்குறத பார்த்த உங்களுக்கு வேணும்னா இத பத்தி எதாவது தெரியலாம்னு நினைக்கிறேன்.

korangupaiyan said...

Jayadev Das said...
//எனக்கு ஒரு கணக்கு எப்படின்னே புரியலே.சிவக்குமார் அண்ணன் என்று சத்யராஜ் சொல்றாரு, அப்பு அண்ணன் மகன் இவரை சித்தப்பா என்றுதானே அழைக்க வேண்டும், அதென்னது மாமா?
தமிழ் நாட்டில் சாதாரணமாக வயதில் பெரியவரை அண்ணன்,அண்ணா, அண்ணே, அண்ணாச்சி என்று அழைப்பது நடை முறையில் உள்ளதுதான். இதில் என்ன தவறு உள்ளது? இதற்கு அவர்கள் உறவை ஏன் நீங்கள் கொச்சை படுத்த வேண்டும்?

வருண் said...

குரங்குப்பையன்:

நீங்க சொல்றமாதிரி, சத்யராஜ் சிவகுமார அண்ணானு சொல்றது "முறை"க்காக அல்ல, சும்மா ஒரு மரியாதைக்கு..

அதே மாதிரி சூர்யா சத்யராசை மாமா னு சொல்றது "முறை"க்காக அல்ல, சும்மா ஒரு மரியாதைக்கு..

அதே மாரி சூர்யா சுஹாஷினி, ராதாவையும் "ஆண்ட்டி" இல்லை "அத்தை"னு சொல்லியிருக்கலாம்..

அது ஏன் அப்படி சொல்லல?

Why is he treating sathyaraj as special??

Jayadev Das said...

\\தமிழ் நாட்டில் சாதாரணமாக வயதில் பெரியவரை அண்ணன்,அண்ணா, அண்ணே, அண்ணாச்சி என்று அழைப்பது நடை முறையில் உள்ளதுதான். இதில் என்ன தவறு உள்ளது? இதற்கு அவர்கள் உறவை ஏன் நீங்கள் கொச்சை படுத்த வேண்டும்?\\ அப்படின்னா, சூர்யாவும் சத்தியராஜைப் பார்த்து அண்ணன்,அண்ணா, அண்ணே, அண்ணாச்சி என்று தானே அழைத்திருக்க வேண்டும், அதென்னது மாமா? உங்கள் தந்தையை அண்ணா என்று அழைக்கும் உங்கள் உறவினர்கள் யாரையாவது நீங்கள் மாமா என்று அழைத்திருக்கிறீர்களா? சூர்யா அவரை மாமா என்று அழைத்ததே தவறு என்று சொல்லவில்லை, அவரது அப்பாவின் சகோதரரை [அல்லது அவ்வாறு நினைப்பவரை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!!] அவ்வாறு அழைப்பதை த்தான் ஜீரணிக்க முடியவில்லை, ஏனெனில் அந்த மரபு நாங்கள் பார்த்தவரை தமிழகத்தில் இல்லை. I felt a culture shock when I heard this.

\\நான் என்ன சத்யராஜ்/சூர்யா சொந்தமா?\\ நீங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு பதில் சொல்றதைப் பார்த்தா நிஜமாவே நீங்க அவங்களுக்கு சொந்தமோன்னு தோணுது!!