2013 பொறந்துருச்சு! பிரகாஷுக்கு ஒரே கில்ட்டி ஃபீலிங்! அவன் அவன் நியு இயர் ரெசொலுஷன்னு "நான் சிகரட்டை விட்டுறப் போறேன்", "நான் நான்வெஜ் சாப்பிடப்போறதில்லை", "நான் தினமும் 5 மைல் ஓடப்போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால் பிரகாஷுக்குமட்டும் இந்த வருடம் அந்தமாரி எதுவும் ஐடியாவே இல்லை.
அதற்கு காரணம் இருந்தது. கடந்த வருடங்களில் அவன் எடுத்த நியூ இயர் ரெரொலுஷன் படி எதையும் அவனால் சில மாதங்களுக்கு மேலே ஒழுங்கா செயல்படுத்த முடியவில்லை! இந்த வருடம் பிரகாஷ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். எப்படியாவது நம்மளால செயல்படுத்த முடிந்த ஒரு நியு இயர் ரெசொலுஷன் தான் இந்த வருடம் கவனமாக எடுக்கணும் என்று. இல்லைனா "உனக்கெல்லாம் எதுக்குய்யா ரெசொலுஷன் மண்ணாங்கட்டி?" னு அவன் மனசாட்சியே அவனை அறையும்!
அப்படி என்ன ஒரு ஈஸியான/உருப்படியான ரெசொலுஷன் எடுக்கலாம்? னு யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். "பிரகாஷு கார்னர்" என்று அவன் ஒரு தளம் வைத்திருந்தான், நம்ம பிரகாஷ். அவன் வலைதளத்தில் எழுதும் பதிவு எவனுக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பதிவெழுதுவதுமட்டும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையைச் சொன்னால் பிரகாஷ், பதிவுகள்னு எதுவும் பெருசா எழுதி நாட்டைத் திருத்தவில்லை! அவனுடைய எழுத்த்துக்குணு அவன் ஒண்ணும் பல விசிறிகளைப் பெறவில்லை! ஏதோ ஏனோ தானோனு தனக்கு தோணுகிற என்னத்தையாவது ஒரு பதிவை எழுதுவான். ஒவ்வொரு சமயம் நம்ம எதுக்கு இப்படி மாஞ்சிக்கிட்டு பதிவெழுதனும்? னு அவனே நினைப்பதுண்டு. இருந்தாலும் பதிவெழுதுறேன்னு எதையாவது தொடர்ந்து கிறுக்காமல் அவனால இருக்க முடியாது. பிரகாஷ், எதையாவது கட்டுரை, கதைனு எழுதிட்டு அதையும் தமிழ் மணம் அது இதுனு எல்லாத் திரட்டியிலும் சேர்த்து விடுவான். அவன் எழுதுறதை ஒரு நாளைக்கு எவனாவது தெரியாமல் அவன் தளத்திற்கு வந்துவிட்ட ஒரு பத்து இருபது பேர் படிப்பார்கள். அப்படிப் படிக்கிறவங்களும் படிச்சுட்டு கருத்துனு எதுவும் பெருசா சொல்ல மாட்டாங்க! ஒவ்வொரு சமயம், உண்மையிலேயே தப்பித் தவறி நல்லா எழுதி இருந்தாலும்கூட இவன் பதிவை வாசிச்சுட்டு எதுவுமே சொல்ல மாட்டாங்க, அவன் வாசகர்கள்! ஆனால் ஏதாவது சொற்குற்றம், பொருள் குற்றம், எழுத்துப் பிழைனு அவன் பதிவில் தப்பு விட்டு இருந்தால், அந்தக் குறையை மட்டும் பொறுப்பா வந்து சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுபோல் குறை சொல்லும்போதுதான் "இவங்க எல்லாம்கூட நம்ம பதிவை வாசிக்கிறாங்க போல?" னு பிரகாஷ் தெரிந்து கொள்வான்.
சரி, இதுதான் சரியான முடிவு!
ஒரு வருடம் ஒரு பதிவுமே எழுதாமல் இருப்பதென்பது பெரிய தியாகம்தான். நமக்கும் நல்லது. நம்ம எழுத்தை அமைதியாக வாசிச்சு ரசிக்கும் விசிறிகளையும் ஒரு மாதிரி எழுத்துத் தீணி போடாமல் பழி வாங்கியதுபோல் இருக்கும்னு தன் முடிவைத் தானே மெச்சிக்கொண்டான். ஆனால் இந்த நியு இயர் ரெசொலுஷனை பதிவுலகில் சொல்லியே ஆகணுமே? இதை சொல்லலைனா எப்படி எல்லாருக்கும் நம்ம ரெசொலுஷன் இதுதான்னு தெரியும்? சரினு வேற வழியில்லாமல் "உங்க நலன் கருதி, 2013 ல் நான் பதிவெழுதப் போவதில்லை! உங்களுக்கெல்லாம் நல்ல காலம் பொறந்திருச்சு" னு ஒரு தலைப்பைப் போட்டு உருக்கமாக தன் முடிவை/நியு இயர் ரெசொலுஷனைத் தெளிவாகச் சொல்லி ஒரு பதிவு எழுதி வெளியிட்டுவிட்டான்! தமிழ்மணத்தில் அதை இணைத்தும் விட்டான், பிரகாஷ்.
ஆனால் என்னைக்கும் இல்லாமல் அவனோட அந்தப் பதிவை வாசகர்கள் ஒரு 100 பேர் வாசகர் பரிந்துரைவில் பரிந்துரை செய்து, தமிழ் மணம் மகுடத்தில் வேற ஏற்றி விட்டு விட்டார்கள்!. ஏன்னு தெரியலை அந்தப் பதிவுக்கு அர்த்தமான பின்னூட்டங்களும் ஒரு 100க்கு மேலே வந்து இருந்தன!
"என்ன பிரகாஷ் இப்படி செஞ்சுட்டீங்க?"னு ஒரு சில இளம் யுவதிகள்
"நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்!"னு மதிக்கத்தக்க பல பதிவர்கள்.
"என்ன பிரகாஷ், இப்போத்தான் உங்களுக்கு நல்லா கோர்வையா எழுத வருது! இப்போ நீங்க நிறுத்தக்கூடாது!" னு உரிமையுடன் சிலர்.
"உங்க எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு, பிரகாஷ்! நான் ரெகுலரா உங்க தளம் வாசிப்பேன். ஆனால் பின்னூட்டமிடுவதில்லை"னு ஒரு இருபது பேர்.
அப்படி இப்படினு ஆளாளுக்கு பின்னூட்டத்தில் புகழ்ந்ததும், பிரகாஷாக்கு நிலை கொள்ளவில்லை! எப்படியும் அவர்களுக்கு தன் நிலைமையை விளக்கி நன்றி சொல்லணும்னு இன்னொரு பதிவை எழுதினான். :))) ஆக, கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் அவன் நியு இயர் ரெசொலுஷன் நாசமாப் போனது! :-)
பாவம் பிரகாஷ், "நம்ம மக்கள், யாரையும் ஒழுங்கா வாழவும் விடமாட்டானுக, நிம்மதியா சாகவும் விடமாட்டானுக" என்கிற உண்மை இப்போக்கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் அதைவிட சோகம்!
12 comments:
எந்த ரெசல்யூஷனும் எடுக்கறதில்லன்னு நான் ஒரு ரெசல்யூஷன் எடுத்திட்டேன்.
வாங்க முரளி! :)
//பாவம் பிரகாஷ், "நம்ம மக்கள், யாரையும் ஒழுங்கா வாழவும் விடமாட்டானுக, நிம்மதியா சாகவும் விடமாட்டானுக" என்கிற உண்மை இப்போக்கூட அவனுக்கு விளங்கவில்லை என்பதுதான் அதைவிட சோகம்! //
:-)
வாங்க சுவனப் பிரியன்!
உங்களைப் பார்த்து கொள்ளை நாளாச்சு!:)
உன்க்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
நான் ரெசல்யூசன் எடுக்காமையே எந்த பதிவும் போடுறதில்லை.. ஒருவேளை இனிமேல் எழுதுறேன்னு உறுதிமொழி எடுத்து எல்லார்த்தையும் பயமுறுத்த வேணா செய்யலாம்...
இருந்தாலும் எனக்கும் இந்த ரெசல்யுசனுக்கும் ரொம்ப தூரம் பாஸ்
வாங்க நிலா!
என்னைக் கேட்டால் ரெசொலுஷன்னு ஒண்ணை செய்வதா சொல்லீட்டு அதை பாதியில் விடுவதற்கு, ரெசொலுஷனே எடுக்காமல் இருப்பது மேல்!
People dont even keep their promise these dsys- of course with "valid explanation" - how can we expect them not breaking the resolution? :)
Happy New Year, nila! :)
நல்ல முடிவுதான்.
வாங்க அருணா செல்வம்!
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
//அதற்கு காரணம் இருந்தது. கடந்த வருடங்களில் அவன் எடுத்த நியூ இயர் ரெரொலுஷன் படி எதையும் //
ரெரொலுஷன் தட்டச்சுப்பிழை?
//ஒரு மாதிரி எழுத்துத் தீணி போடாமல்//
தீணி=தீனி
நாங்களும் பதிவை வாசிக்கிறோம்லெ:-))))
வாங்க டீச்சர்!
டீச்சர்னா டீச்சர்தான்! :)
வருண்!தலைப்பைப் பார்த்துட்டு நீங்க பதிவுலகை விட்டுப் போறீங்களோங்கிற சந்தோசத்தில் வந்தேன்!
Just kidding:)
நீங்க கதை சொல்ற மாதிரியான பதிவுகளில் நான் பின்னூட்டமிட்டதாக நினைவில்லை.இதன் காரணமாகவே நீங்க போட்ட பல 18+ கூட தவிர்த்து வந்துள்ளேன்.
இந்தப்பதிவின் தலைப்பு என்னை ஏமாற்றி விட்டது.
Post a Comment