Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை நீக்கம்! கமல் விசிறிகள் கொண்டாட்டம்!

இன்றைய செய்திப்படி சென்னை உயர்நீதி மன்றம் கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லியுள்ளது! நீதிமன்ற தீர்ப்பின் படி விஸ்வரூபம் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை, அதனால் படத்தை திரையிடலாம் என்பது!

தமிழ்நாடு அரசாங்கம் இதை எப்படி செய்லபடுத்தப் போகிறது என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்!

 இதற்கிடையில் கமல் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்!!!

எப்படி?

யாரென்று தெரிகிறதா?

இவன் தீயென்று புரிகிறதா?

தடைகளை வென்று சரித்திரம் படைத்தவன் 

ஞாபகம் வருகிறதா?

10 comments:

Jayadev Das said...

தமிழக அரசு அப்பீலுக்கு போய் அடுத்த ஆப்பை வைக்காம இருக்கணும். எதுக்கும் ரசிகர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது.

வருண் said...

வாங்க ஜெயவேல்!

அம்மையார் இதோட முடிச்சுக்கிட்டா அவருக்கு நல்லது. ஆனால், இதில் கமல் ஒண்ணும் பெருசா தடைகளைத் தாண்டி வென்றதாக எனக்குத் தெரியலை.

Unknown said...

சகோ.வருண் ,

ஆரம்பத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு கமலை தவறாக நினைத்துவிட்டோமே என்று முஸ்லிம்கள் வருத்தப்படுவர் என்றார்...முஸ்லிம்களுக்கு எதிரான காட்சியே படத்தில் இல்லை என்றார்..ஆனால் கோர்டில் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்று வாதிட்டது கமல் தரப்பு...நீதிபதி ரொம்ப நல்லவர் அவர் சொல்கிறார் தமிழக முஸ்லிம்களுக்கு எதிராக படத்தில் எந்த காட்சியும் இல்லை என்று (அடேய் !)

கர்நாடகாவில் " எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல." என்கிற வாசகத்துக்டன் தான் திரை இடப்பட்டுள்ளது..இதை ஒரு ஆதாரமாக கமல் தரப்பு காட்டுகிறது என்றால்..? படத்தில் நிச்சயம் முஸ்லிம்களை வில்லன்களாக காட்டும் காட்சிகள் நிறைய உண்டு என்பதை கமல் தரப்பு கூட கோர்டில் மறுக்க இயலவில்லை..!

இங்கு அனைத்தையும் தாண்டி ஒரு வரலாறு திரிப்பை கமல் செய்து உள்ளதை மன்னிக்கவே முடியாது..ஆப்கன் முஸ்லிம்கள் அனைவரும் கெட்டவர்கள் போலவும் அமெரிக்க காரன் நல்லவன் (!!) போலவும் காட்டி இருப்பதை நெஞ்சில் ஈரம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.!

நன்னயம் said...

நாகூர் மீரான் உங்கள் மத வாத வாந்தியை அப்புறம் எடுத்து கொள்ளலாம். (நீங்கள் படம் பார்க்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் )
அதற்க்கு முன் படம் பார்த்த ஒருவரின் சினிமா விமர்சனத்தை படியுங்கள்.

http://karundhel.com/2013/01/viswaroopam-2013-tamil.html

நன்னயம் said...

நாகூர் மீரான் உங்கள் மத வாத வாந்தியை அப்புறம் எடுத்து கொள்ளலாம். (நீங்கள் படம் பார்க்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் )
அதற்க்கு முன் படம் பார்த்த ஒருவரின் சினிமா விமர்சனத்தை படியுங்கள்.

http://karundhel.com/2013/01/viswaroopam-2013-tamil.html

மேற்படி விமர்சகர் கமல் ரசிகர் அல்ல என்பது பலரும் அறிந்த உண்மை. அவரின் பழைய பதிவுகளை படித்தால் புரியும்.

Unknown said...

//நாகூர் மீரான் உங்கள் மத வாத வாந்தியை அப்புறம் எடுத்து கொள்ளலாம். (நீங்கள் படம் பார்க்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் )
அதற்க்கு முன் படம் பார்த்த ஒருவரின் சினிமா விமர்சனத்தை படியுங்கள்.//

இதுல எங்க நான் குர் ஆன் ,ஹதீஸ் பற்றி பேசினேன்.. கமலின் பேச்சுக்களில் உள்ள வித்தியாசங்களையும், கர்நாடகாவிலும் அந்த படம் நச்சு தன்மை உள்ளதால்தான் முன்னால் எச்சரிக்கை வாசகம் போடப்படுகிறது என்றும் தானே பேசினேன்..நீங்கள் மறுப்பதாய் இருந்தால் அதை அல்லவா மறுக்க வேண்டும்.. !

இதில் இன்னொரு காமெடி என்றால் " இதய பலகீனமானவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் "என்று வேற முன்னால் போடுகிறார்களாம்..சிகரெட் பாக்ஸில் வெளியில் தெரிவது போல் தான் எச்சரிக்கை வாசகம் இருக்கும்..காசுகொடுத்து வாங்கிய பின் சிகரெட்டில் போட்டால் அது எப்படி அறிவீனமோ.!!.அதுபோல படத்துக்கு டிக்கெட் எல்லாம் எடுத்துட்டு அப்பாடான்னு வந்து உக்காந்த அப்பறம் பார்க்க கூடாதுனா இது என்ன நியாயம்..இதை வெளியிலேயே சொல்ல வேண்டாமா..???

இன்னொரு கேள்வி நீங்கள் கமலிடமே கேளுங்களேன் ! கதையின் களம் ஆப்கனாகவே இருக்கட்டுமே..அதில் முழுக்க முழுக்க் அமெரிக்காவை நல்லவர்கள் போல் காட்ட என்ன அவசியம் வந்தது..? (நீங்கள் தந்த சுட்டியை போல் நானும் தர வேண்டுமா ? )ஆம் அமெரிக்க நல்லவன்தானே என்று நீங்க கூறினால்.... ஐ ஆம் சாரி !!!

Unknown said...

Mr.நாகூர் மீரான் உங்கள் மத வாத வாந்தியை அப்புறம் எடுத்து கொள்ளலாம்..ungal manathai thottu sollungal intha INDIA vil entha vithaththil neengal odukkappatta samoogam? Hindu agiya enaku kidaikum ella salugaikalayum vida athikagamaga than ungaluku kidaikirathu.. Theruvukku theru masoothi ullathu, veru enna vendumena eppothum panja paattu padukireergal? ithai ENGLISH la IMPERIORITY COMPLEX endru solvargal.. AFGHAN il terrorist peyar munisamy, Kandha samy endra irukkum? illai angu terrorism illave illai engireergala? Sagotharargal pola palagi vantha namakkul ippothu thevai illatha virotha manappokku atikariththullathu...plz indian aga iruppom..muslim agavo hinduvaagavo illai.. Siram thaalthi kettu kolgiren ithai tamilil mozhi peyarthu pathivida mudiya en aathangaththai? plz plz any one

Unknown said...

@ சூர்யபிரகாசம் பாபு

இதை அப்படியே தின மலரில் உள்ள கமெண்ட் பாக்ஸில் ஒவ்வொரு வார்த்தையாக அடித்து பின்பு ஸ்பேஸ் அடித்தால் தமிழில் கிடைக்கும் ....இது இன்னும் நிறைய தளத்தில் இருக்கிறது ..இருந்தாலும் உங்களுக்கு எளிது என்பதால் தினமலரின் செய்தி கமெண்ட் பாக்சை சொல்கிறேன்...உபயோகப்படுத்துங்கள் அடுத்தமுறை தமிழில் போடுங்கள் ..வாழ்த்துக்கள்...!

drogba said...
This comment has been removed by the author.
drogba said...

இதற்கு முதல் நான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக பார்த்ததில்லை. ஆனால் இப்போது.........fill in the blanks...

ஜெயலலிதா ஆட்சியில் எதுவுமே நடக்கலாம். அந்த பேயின் சொந்த பிரச்சனையில் பகடைக்காய் முஸ்லிம்கள். இன்னும் உங்களை சகோதரர்களாக பார்ப்பது உங்கள் கைகளில்.. தயவு செய்து உங்களை நீங்களே தரம் தாழ்த வேண்டாம். இது ஒரு இன பிரச்னை அல்ல.