Wednesday, January 16, 2013

ஜெயமோகனும் சாகித்ய அகாதமி விருதும்!

இந்த வருடம் சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் தானியல் சொல்வராஜ்க்கு வழங்கியுள்ளார்கள். "தோல்" என்ற இவர் எழுதிய நாவலுக்கு இந்த விருதைக் கொடுத்துள்ளார்கள். இதில், இவர் தோல் பதனிடுபவர்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். "பரவாயில்லையே, தேவையான ஒரு புதினம்தான். இதுபோல் வாழும் ஏழை மக்கள் வாழ்க்கையைப் பற்றி சிரத்தையுடன் எழுதியிருக்காரே" னுதான் என்னை மாரி ஆட்களுக்கு எல்லாம் தோன்றியது.

தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும். தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது. இவை அப்பகுதிவாழ் மக்களின் வழங்குமொழியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. 117 கதைமாந்தரைக் கொண்டு 26 அத்தியாயங்களில் இந்த புதினம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பதிப்பிக்காதநிலையில் 2010ஆம் ஆண்டிலேயே இது நண்பரொருவரின் உதவியால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன.
 எழுத்துலக அரசியல் பற்றி தெரியாதவன் நான். அதனால் நான் பார்க்கும் கோணம் மிகவும்  எளிமையானது. ஆனால், இந்த விருது பெற்றவர் தகுதி பற்றி இலக்கிய மேதாவி ஜெயமோவன் என்ன சொல்றார்னு நீங்களே வாசித்துப் பாருங்கள்!

******************************

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலந்தானே?
சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் (நான் எதிர்பார்த்தது வேறாக இருந்தாலும்) முதலில் உங்கள் தளத்தில்தான் தேடினேன்…செல்வராஜ் யாரென்று அறியலாம் என்று. யார் எந்த விருது பெற்றாலும் முதல் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்த முறை மௌனம் சாதித்து விட்டீர்கள். யார் அவர்?
அன்புடன்
இளம்பரிதி


அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு

டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது
இப்போது வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.
அவரது விருதுபெற்ற தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது. இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இச்சூழலில் நான் என்ன சொல்வது? தமிழிலக்கியத்தின் தலைவிதி. இந்த விருதுடன் அவர் எங்காவது ஓய்ந்தால்கூடத் தமிழுக்கு நல்லதுதான். இல்லாவிட்டால் விருதுக்காக மூன்று வருடங்களுக்கு ஒரு படைப்பு எனப் பிதுக்கி வெளியே தள்ளிக்கொண்டே இருப்பார். வயதும் ஆகிறது.
தமிழில் பொதுவாக விழுமியங்கள் அளவுகோல்கள் முக்கியமே இல்லை. நம்மவரா இல்லையா என்பதே எங்கும் செல்லுபடியாகிறது. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு பொது அளவுகோலை நாம் கையாள்வதில்லை. நமக்குத் தெரிந்த ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்கிறோம்.
சாகித்ய அக்காதமியில் விருதுபெற்றவர்கள் மேலும் விருதுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
சாகித்ய அக்காதமி ஆரம்பிக்கப்பட்டபோது ராஜாஜி அதில் செல்வாக்கை செலுத்தினார். அவருக்குப் பிரியமான பேராசிரியர்கள் உள்ளே சென்றார்கள். தங்களுக்கும் தங்களுக்கு உகந்தவர்களுக்கும் விருதுகளை அளித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் சாகித்ய அக்காதமி விருது பெரும்பாலும் பேராசிரியர்களுக்கே கிடைத்தது
பின்னர் பேராசிரியர்கள் அவர்களுக்குப்பிடித்த வணிக எழுத்தாளர்களை விருதுபெறச் செய்தார்கள். அகிலனும் நா.பார்த்தசாரதியும் அவ்வாறு விருது பெற்றார்கள். நா.பார்த்தசாரதி உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதிகளை விருதுக்குள் கொண்டுவர உண்மையாகவே முயன்றார்.
அவ்வாறு அவர் விருதுபெற்றுத் தந்தவர்களில் தவறான தேர்வு என்பது வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணனின் வறுமையே நா.பார்த்தசாரதியை அம்முடிவை எடுக்கச்செய்தது என அவரே சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் வல்லிக்கண்ணன் சக இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்படக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இருந்தார். முற்போக்கு ஆசாமிகளை உள்ளே கொண்டுவருவதே அவரது குறி. அதற்காக அவர் வணிக எழுத்தாளர்களுடன் ஒத்துழைத்து அவர்கள் விருதுபெற வழிவகுத்தார். அவர்கள் இவருக்கு அவ்வப்போது விட்டுக்கொடுத்தார்கள்
விளைவாக அக்காதமியில் கொஞ்சம் கொஞ்சமாக முற்போக்கு கும்பல் உள்ளே புகுந்து இடம் பிடித்தது. விருதுகளை அவர்களுக்கே அளித்துக்கொள்ள ஒரு மாஃபியா மாதிரி செயல்படுகிறார்கள். சரிதான், புரட்சி நடத்தி மத்திய அரசைக் கைப்பற்ற முடியவில்லை. சாகித்ய அக்காதமியையாவது கைப்பற்றினோம் என்ற நிறைவு மிஞ்சட்டும்
ஜெ
*******************


சரி, மேலே உள்ள "ஜெயமோவன் பதிலை" வாசிச்சுட்டீங்களா? எத்தனை பேரு தலையை உருட்டுறாரு பாருங்க இந்தாளூ!!!

 * திரு செல்வராஜ்க்கு சாகித்ய அகாதமி பெறத் தகுதி இல்லையாம். ஏன் என்றால் அவருக்கு இலக்கியம் தெரியாதாம்! இன்னைக்கு இந்த விருதுவை பரிந்துரைக்க இருக்கும் குழுவில் உள்ளது ஒரு மாஃபியா முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமாம்!

* ஆக, போன வருடம் சாகித்ய அகாதமி விருது வாங்கிய சு வெங்கடேசனும் இதுபோல் முற்போக்கு மாஃபியா கும்பலை சேர்ந்தவர்தானா? அதனால்தான் "காவல் கோட்டம்" புதினமும் சாகித்ய அகாதமி விருது பெற்றது போலும்!

* அதற்கு முன்னால் விருந்து பெற்ற "நாஞ்சில் நாடன்" னும் இந்த மாஃபியா கும்பலை சேர்ந்தவரா? னு ஜெயமோவன் தான் சொல்லணும்!

ஆமா, எப்படி இந்த மாஃபியா கும்பல் இந்தக் குழுவை ஆக்கிரமிச்சாங்க???

இது சுத்தமான "ஜெயமோவன் தியரி" (ஆரம்பம்)

* சாகித்ய அகாதமி ஆரம்ப காலத்தில் ராஜாஜி, உள்ளே நுழைந்து, தமிழ் பேராசிரியர்களுக்கு மட்டுமே விருதை வாரிவழங்கிபுட்டாராம். அவங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்னனு தெரியலை!

* ஆக, ராஜாஜி ஊக்குவித்த அந்த பேராசியர்கள் எல்லாருக்கும் ஒரு மண்ணும் தெரியாதாம்! அந்த கூமுட்டைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, தகுதியே இல்லாத வணிக எழுத்தாளர்களுக்கு விருதை அள்ளி வழங்கிப்புடுச்சுகளாம். அதனாலதான் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு க்கு சாகித்ய அகாதமி கொடுத்தார்களாம்! அகிலன் ஒரு சாதாரண வணிக எழுத்தாளராம்!!! பாரதீய ஞான பீடப் பரிசு பெற்றிருந்தாலும் அவருக்கும் இலக்கியம் தெரியாது போலும்! ஆக அகிலனுக்குக் கொடுத்ததும் தவறான ஒண்ணு.

* நா பார்த்தசாரதி ஓரளவுக்கு தகுதியுள்ளவராம்! ஆனால் அவருக்கும் அறிவு கெடையாதாம்! ஏழை பாழைனு இரக்கப்பட்டு தகுதியே இல்லாத வல்லிக்கண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருதை கொடுத்து எல்லாத்தையும் நாசம் பண்ணிப்புட்டு போயிட்டாராம், நா பா.

* வல்லிக்கண்ணன், வணிக எழுத்தாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இலக்கியம் தெரியாத முற்போக்கு மாஃபியாக்களை ஒவ்வொருவரா உள்ளே கொண்டு வந்து சேர்த்துவிட்டு அவரும் போயிட்டார் போல!

ஆக, இப்போ இருக்க முற்போக்கு மாஃபியா கும்பல்,  யாருக்கு இலக்கியம் தெரியாதோ அவங்களை தேடிப்பிடிச்சு தகுதியே இல்லாதவங்களுக்கு சாகித்ய அகாடமி விருதைக் கொடுத்துப் புடுறாங்களாம்!

ஜெயமோவன் தியரி இங்கே முடிவடைந்துவிட்டது!

உண்மையான  சாகித்ய அகாமி விருது பெற்வர்கள் லிஸ்ட் கீழே இருக்கு!



எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை, இந்தாளு ஜெயமோவனுக்கு என்னப்பா பிரச்சினை?? என்ன எழவைப் பத்தி பேசினாலும் இந்தாளு அதில் இறங்கி, அதில் புதைந்து கிடக்கும் விசயங்களை இவர் இஷ்டத்துக்கு ஜோடிச்சு அரசியல்தான் பேசுறாரு!

ராஜாஜி தமிழ் பேராசிரியர்களை ஊக்குவிச்சது தப்பு! தமிழ் பேராசிரியர்கள், நா பார்த்தசாரதி, அகிலன், ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது அடி முட்டாள்த்தனம்! அடுத்து நா பா, வல்லிக்கண்ணனுக்கு விருதை வழங்கியது உலகமகா குற்றம்!!! ஒரு சாதாரண transition னை என்னமாரி எல்லாம் குதற்கமா விவரிக்கிறாருனு பாருங்கப்பா!!!

-------------------------

இந்தாளு, ஜெயமோவன், இதே மாரித்தான் லீனா மணிமேகலை விவகாரத்தில் எஸ் வி ராஜதுரைக்கு அங்கேயிருந்து காசு வருது, இவனுக்கு இங்கே இருந்து காசு வருதுனு எதை எதையோ ஆதாரமில்லாமல் பொலம்பி. ஒளறித்தள்ளி  அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவிச்சாரு ! அப்புறம் இவன் என்னை இப்படி திட்டிப்புட்டான் அது இதுனு ஒரே ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சாரு!

இப்போ இன்னைக்கு இருக்க சாகித்ய அகாதமி குழுவை முற்போக்கு மாஃபியா கும்பல்னு சொல்லாமல் சொல்றாரு!!!

ஒருவேளை இந்தமாரி ஒப்பாரி வைத்தால்தான் அடுத்து இவருக்கு விருது ஏதாவது கொடுப்பாங்கணு பார்க்கிறாரோ? 

ஆக, இந்தாளு பொலம்பலை நிறுத்தணும்னா ஒரே வழிதான்!

தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா!  

ஆமா, சாகித்ய அகாடமில இருந்து பாரதிய ஞான பீட விருது வரைக்கும்! 

இல்லைனா, இந்தாளு எதை எடுத்தாலும் அதில் அரசியல்ப் பேசி வைக்கிற ஒப்பாரியை தாங்கவே முடியாது போல!

19 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜெயமோகனோட புலம்பலை நானும் படிச்சேன்.அவர் மேல இருந்த மதிப்பை குறைக்கத்தான் செய்யுது.விருதுகள்ள அரசியல் சகஜம்தான்.எப்படி இருந்தா என்ன? வாழ்த்து சொல்றதுதான் நாகரீகம்.
நீங்க சொன்னது போல அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை

தமிழ்மகன் said...

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -

http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html

Anonymous said...

​ஜெய​மோக​னைக் குறித்து முற்​​போக்கு மற்றும் இடதுசாரி சிந்த​னையாளர்களிடம் கவனமான பார்​வையில்​லை​யோ என்கிற எண்ணம் எனக்கு எப்​பொழுதும் உண்டு. குறிப்பாக இலக்கிய மற்றும் சமூக எழுத்துக்களில் அவர் இடதுசாரி மற்றும் ​பெரியாரிய சிந்த​னைக​ளோடு எழுதுபவர்க​ளை குறி​வைத்துத் தாக்குவ​தை தன் இலட்சியமாகக் ​கொண்டு ​செயல்படுகிறார். இன்​றைக்கு இடதுசாரி இயக்கங்களி​லே​யே ​கோட்பாட்டுரீதியாக சந்​தேகங்க​ளோடும், முரண்பாடுக​ளோடும் உள்ளவர்க​ளை தனது நண்பர்களாக்கிக் ​கொண்டு அவர்கள் வழியாக பிறரிடம் தனது தாக்கத்​தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரு​டைய ​செயல்பாடுகள் இந்தியா விடுத​லை​பெற்றதிலிருந்து, இந்தியா குறிப்பாக தமிழகத்தின் பல்​வேறு து​றைகளிலும் வளர்ச்சிய​டைந்து வலி​மை ​பெற்று வந்த இடதுசாரி மற்றும் ​பெரியாரிய கண்​ணோட்டங்க​ளை படிப்படியாக நீர்த்து நிர்மூலமாக்குவதுதான் என்ப​தை ​தொடர்ந்து அவரு​டைய எழுத்துக்க​ளை கவனத்​தோடு பின்​தொடர்பவர்களுக்கு ​தெரிந்து ​கொள்ள முடியும் என்று கருதுகி​றேன்.
சில நண்பர்கள் ​சொல்வது​போல "அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை" என்ற பார்​வை கு​றைபாடு​டையதாக​வே கருதுகி​றேன். அவரு​டைய எழுத்துக்கள், கண்​ணோட்டங்கள் குறித்து என் பார்​வைக​ளை என் வ​லைப்பூவில் சில பதிவுகளாக இட்டு ​வைத்துள்​ளேன். அ​வை குறித்த பலருடனான விவாதங்களும் என் வ​லைப்பூவில் படிக்கக் கி​டைக்கும் நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் படித்துப் பார்க்கும்படி ​கேட்டுக் ​கொள்கி​றேன்.

'பரிவை' சே.குமார் said...

//தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா! //

ஹா... ஹா... வாயை அடைங்கப்பா வயித்தெரிச்ச புடிச்சவனுக்கு...

இந்தாளு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இல்லையோ... ஆமா முற்போக்கா எழுத தெரிஞ்சாத்தானே அங்கெல்லாம் போகமுடியும்... பிற்போக்கா சிந்திக்கிறவன் எங்கே அங்க போயி..... சரித்தான்... தவளை கத்துது... விடுங்க...

'பசி'பரமசிவம் said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

//தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா//
எப்படியோ இனிமேல் ஜெமோ விற்கு என்ன விருது கிடைத்தாலும் உங்களின்(இந்த)பரிந்துரையின் பேரில் தான் கிடைக்கப் போகிறது.

ராஜ நடராஜன் said...

எனக்குத் தெரிந்து சாருவை மொத்துற கூட்டம்தான் அதிகமாக இருக்குது.ஆனால் நீங்க மட்டும் ஜெயமோகனை தொடர்ந்து சாத்துவதின் மர்மம் என்ன?ஏதாவது கொடுக்கல் வாங்கலா:)

நமக்கு இலக்கியம் மேல் ஆர்வமிருந்தாலும் கூட காலசூழல்களில் அதனை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.ஜெயமோகன் தமிழகத்தில் இருக்கிறார் என்பதே பதிவர்களின் விளம்பரத்தால்தான்.

எப்படியோ நீங்க கொடுத்த சுட்டியைப் படித்தால் விவேக் தாஸ் நகைச்சுவை மாதிரி இவர் ஜெயமோகனா இல்ல லூஸ்மோகனா என்றுதான் கேட்கத்தோணுது:)

ராஜ நடராஜன் said...

எஸ்.வி.ராஜதுரை விவகாரம் வேற சொல்லியிருக்கீங்களா?அப்ப இவர் லூஸ்மோகன் தான்னு உறுதியாயிடுச்சு:)

ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னது போல அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை //

@முரளி!இப்பத்தானே அவருக்கு கிருதா நரைச்சிருக்குது.கூடவே இன்னும் கொஞ்சம் நரை,அனுபவம்,அவையடக்கம் கற்றுக்கொள்ளும் போது பார்க்கலாமே!

பெரியாரியல் என்பது இமயமலை மாதிரி சிகரம்.ஜெயமோகனின் இந்துத்வா சார்பு எழுத்து ஒரு பாறை மாதிரி.பாறை மோதியா சிகரம் சிதறும்?


Pandian R said...

அரசியல் தெரியாதுன்னு கடைசில நீங்களும் அதத்தானே பேசறீங்க. சரி.. அதென்ன ஜெயமோவன்??

வருண் said...

***T.N.MURALIDHARAN said...

ஜெயமோகனோட புலம்பலை நானும் படிச்சேன்.அவர் மேல இருந்த மதிப்பை குறைக்கத்தான் செய்யுது.விருதுகள்ள அரசியல் சகஜம்தான்.எப்படி இருந்தா என்ன? வாழ்த்து சொல்றதுதான் நாகரீகம்.
நீங்க சொன்னது போல அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை **

என்னவோ போங்க!

இப்போ நீங்களே விருது வாங்கி இருக்கீங்கனு வச்சுக்குவோம்..இவர் கட்டுரையை விருது வாங்கிய நீங்கள் (செல்வராஜ் இடத்தில் இருந்து) வாசித்தால், எப்படி இருக்கும் உங்களுக்கு??

நாகரிகமே தெரியாத காட்டுப்பய இந்த ஜெயவமோவன் னுதான் உங்களுக்குத் தோணும். இல்லையா???

இவரு ஏன் இலக்கியத்தை விட்டுப் புட்டு முழுநேர எழுத்துலக அரசியல் பேசிக்கிட்டுத் திரிகிறார்னு தெரியலை.

வருண் said...

***naatkurippugal said...

​ஜெய​மோக​னைக் குறித்து முற்​​போக்கு மற்றும் இடதுசாரி சிந்த​னையாளர்களிடம் கவனமான பார்​வையில்​லை​யோ என்கிற எண்ணம் எனக்கு எப்​பொழுதும் உண்டு. குறிப்பாக இலக்கிய மற்றும் சமூக எழுத்துக்களில் அவர் இடதுசாரி மற்றும் ​பெரியாரிய சிந்த​னைக​ளோடு எழுதுபவர்க​ளை குறி​வைத்துத் தாக்குவ​தை தன் இலட்சியமாகக் ​கொண்டு ​செயல்படுகிறார். இன்​றைக்கு இடதுசாரி இயக்கங்களி​லே​யே ​கோட்பாட்டுரீதியாக சந்​தேகங்க​ளோடும், முரண்பாடுக​ளோடும் உள்ளவர்க​ளை தனது நண்பர்களாக்கிக் ​கொண்டு அவர்கள் வழியாக பிறரிடம் தனது தாக்கத்​தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரு​டைய ​செயல்பாடுகள் இந்தியா விடுத​லை​பெற்றதிலிருந்து, இந்தியா குறிப்பாக தமிழகத்தின் பல்​வேறு து​றைகளிலும் வளர்ச்சிய​டைந்து வலி​மை ​பெற்று வந்த இடதுசாரி மற்றும் ​பெரியாரிய கண்​ணோட்டங்க​ளை படிப்படியாக நீர்த்து நிர்மூலமாக்குவதுதான் என்ப​தை ​தொடர்ந்து அவரு​டைய எழுத்துக்க​ளை கவனத்​தோடு பின்​தொடர்பவர்களுக்கு ​தெரிந்து ​கொள்ள முடியும் என்று கருதுகி​றேன்.
சில நண்பர்கள் ​சொல்வது​போல "அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை" என்ற பார்​வை கு​றைபாடு​டையதாக​வே கருதுகி​றேன். அவரு​டைய எழுத்துக்கள், கண்​ணோட்டங்கள் குறித்து என் பார்​வைக​ளை என் வ​லைப்பூவில் சில பதிவுகளாக இட்டு ​வைத்துள்​ளேன். அ​வை குறித்த பலருடனான விவாதங்களும் என் வ​லைப்பூவில் படிக்கக் கி​டைக்கும் நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் படித்துப் பார்க்கும்படி ​கேட்டுக் ​கொள்கி​றேன்.***

உங்க கருத்துக்கு நன்றிங்க. உங்க வலைபூவிற்கு நேரம் கிட்டுகையில் வந்து வாசிக்கிறேன்.

செல்வராஜ் நிலையில் என்னை வைத்துப் பார்க்கும்போது இந்தாளு மேலே எரிச்சலும் அருவருப்பும்தான் எனக்கு வருது! அநாகரிகத்தின் உச்சம் இந்தாளுடைய விமர்சனம்!

Sakitya Academy committee should file a law suit on this guy for bad-mouthing about the committee wiht his own "imagination" and half-baked analysis!

வருண் said...

****சே. குமார் said...

//தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா! //

ஹா... ஹா... வாயை அடைங்கப்பா வயித்தெரிச்ச புடிச்சவனுக்கு...

இந்தாளு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இல்லையோ... ஆமா முற்போக்கா எழுத தெரிஞ்சாத்தானே அங்கெல்லாம் போகமுடியும்... பிற்போக்கா சிந்திக்கிறவன் எங்கே அங்க போயி..... சரித்தான்... தவளை கத்துது... விடுங்க... ***

நம்புனா நம்புங்க, ஒரு விருது வாங்கியவரை இதுபோல் விமர்சிக்கும் இந்தாளு புகைப்படத்தைப் பார்த்தால் எனக்கு அருவருப்பாத்தான் இருக்கு! அநாகரிகத்தின் உச்சம்னா இதுதான்!

Thekkikattan|தெகா said...

நன்றி, வருண்! இது மாதிரி யாராவது ஓர் ஆள் தொடர்ந்து முகமூடி அகற்றி காமித்துக் கொண்டு வருவது மிகவும் அவசியமாகிறது.

இது நிச்சயமாக வயிறு எரிதலின் வெளிப்பாடேதான். Disgusting, behavior!!

வருண் said...

***சேக்காளி said...
//தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா//
எப்படியோ இனிமேல் ஜெமோ விற்கு என்ன விருது கிடைத்தாலும் உங்களின்(இந்த)பரிந்துரையின் பேரில் தான் கிடைக்கப் போகிறது.***

இது வேறயா? இதுபோல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை கேவலப்படுத்தும் இந்தாளுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்தால், அந்த விருத்துக்குத்தான் என்ன மரியாதை இருக்கு?!

அப்படியே கொடுத்தாலும் மானஸ்தன் ஜெயமோவன் "வேணாம்! என் தகுதிக்கு உகந்த பரிசில்லை இது"னு சொல்லிடுவாரு, விடுங்க! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

//நீங்க சொன்னது போல அவருக்கும். குடுத்துடலாம். அவர் எழுத்தும் மோசமில்லை //

@முரளி!இப்பத்தானே அவருக்கு கிருதா நரைச்சிருக்குது.கூடவே இன்னும் கொஞ்சம் நரை,அனுபவம்,அவையடக்கம் கற்றுக்கொள்ளும் போது பார்க்கலாமே!

பெரியாரியல் என்பது இமயமலை மாதிரி சிகரம்.ஜெயமோகனின் இந்துத்வா சார்பு எழுத்து ஒரு பாறை மாதிரி.பாறை மோதியா சிகரம் சிதறும்? ***

வாங்க நடராஜன்!

பெரியாரிஸ்டை இவர் திட்டுவதும், இந்துத்தவாக்களை தட்டிக் கொடுப்பதும்கூட பரவாயில்லை என்ன எழவை எடுத்தாலும் அதில் உள்ள அரசியல்னு சொல்லிப்புட்டு இதுபோல் இஷ்டத்துக்கு உளறுவதை இந்தாளு நிறுத்தினால் போதும்!

இவர் செத்துட்டா தமிழ் இலக்கியம் செத்துடுமா என்ன?? I don't think so! He is thinking of himself "too much" and living in his "own stupid world"!

வருண் said...

*** fundoo said...

அரசியல் தெரியாதுன்னு கடைசில நீங்களும் அதத்தானே பேசறீங்க.***

அந்தக் கடிதத்தை வாசிச்சீங்களா?? அதைப் பத்தி வேற எப்படி விமர்சிக்கிறது??

***சரி.. அதென்ன ஜெயமோவன்??***

என்னைக் கேட்டால்? I guess he earned such an "honor" by bad-mouthing about others! :))))

வருண் said...

***Thekkikattan|தெகா said...

நன்றி, வருண்! இது மாதிரி யாராவது ஓர் ஆள் தொடர்ந்து முகமூடி அகற்றி காமித்துக் கொண்டு வருவது மிகவும் அவசியமாகிறது.

இது நிச்சயமாக வயிறு எரிதலின் வெளிப்பாடேதான். Disgusting, behavior!!***

வாங்க தெகா!

தேவையே இல்லாத அடாவடியான விமர்சனம் இது! தன் தலையிலேயே மண் அள்ளிப் போட்டுக்கிட்டாரு இப்படி கீழ்த்தரமா விமர்சிச்சு!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஜெயமோகன் எழுத்துக்கு விதி தேடுபவர்.அவர்வெகுதூரம் அவர் சென்றுவிட்டார் .ஒரு நிலையில் எல்லாமே தவறாக புரிந்து கொள்ளப்படலாம் .அவரின் முந்தயை நாவல் கூட.ஆனால் சொல்லும் உரிமை அவருக்கு இருக்கிறது.பின் தொடர்வது நம் விருப்பம்.